பாடாய் படுத்ததின்று
பாழாய்போன கற்பொன்று
இல்லையேல் படுத்திருப்பேன்
அவனோடு” என்றாள் கனலி!
“கற்பொன்று இல்லை!
இதுகாறும் தமிழ்நாட்டில்,
சொற்போர் புரியவில்லை
நின்னுடன் -- காமன்
விற்போர் வென்றிட
எவருண்டு இங்கே!
மானமும் பெண்மையும்
மனதின் இலக்கணம்
மற்றவளுக்கே உபதேசம்
பெற்றவளுக்கு இல்லை,
என் உற்றவரோ
உடம்பை விற்றவரோ,
மனதிற்கு தேவை
தூய்மை!” என்றேன்
நல்ல ஒரு கவிதை..
ReplyDeleteஆராதனா,
ReplyDeleteமிக்க நன்றி!!
delphine maam,
ReplyDeleteThank you for ur encouragement!!
"கனலி" போன்ற நல்ல வார்த்தைப் பிரயோகம் - ரசிக்க வைத்தது. ஆனால், "மற்றவளுக்கே உபதேசம், பெற்றவளுக்கு இல்லை" என்பது எனக்குப் புரியலை :-(
ReplyDeleteம்ம்... :-)
ReplyDeleteகதிரவன்,
ReplyDelete//"மற்றவளுக்கே உபதேசம், பெற்றவளுக்கு இல்லை" என்பது எனக்குப் புரியலை //
கற்பு பற்றி பேசும்போது, மற்றவர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுவோம்! நம்முடைய தாயை கருத்தில் வைக்கமாட்டோம்! அதனுடைய பொருள் ஒருவருக்கொருவர் மாறுபடும். மனத்தூய்மை தான் கற்பு! கற்பழிப்பு என்ற வார்த்தை அபத்தமானது. உடம்பினால் யாரும் கெட்டுவிடுவதில்லை!
காயத்ரி,
ReplyDeleteஎன்னங்க "ம்ம்.." சொல்லிட்டு போய்டீங்க!!
பின்னூட்டம் அவ்வளவுதானா?... இருப்பினும் நன்றி!!
நல்ல பதிவு...
ReplyDeleteஆழமான சிந்தனைகள்
வள்ளி,
ReplyDeleteநன்றி!!