பெண்கள் முன்னேற்றம் என்றால் என்ன? இந்திய சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது? இது போன்ற கேள்விகள் நம்மிடையே தோன்றுவதுண்டு. இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்தில் மூன்று பரிமாணம் உள்ளது. அவை படிப்பு, குடும்பம் மற்றும் சமூகம். இத்தகைய முன்னேற்றத்திற்கு தடைக்கல் படிப்பு, குடும்பம், சமூகம் சார்ந்த கொடுமைகள். இன்றைய சூழலில் பல பெண்கள் படித்திருந்தும் வேலையிலிருந்தும் சமூக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். சமூகத்தில் படிப்பறிவை தவிர்த்து குடும்பமும் குடும்பம் சார்ந்த சமூக அறிவும் அவசியம் பெண்களுக்குத் தேவை. பெரும்பாலும் இந்தியவிலுள்ள தாய்மார்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பொறுப்புடன் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் குடும்ப தந்தையின் பொறுப்பின்மையாகவும் இருக்கலாம். (என்னுடைய பார்வையில், இதனால் தான் இந்தியாவில் அதிகப்படியானோர் தந்தையைவிட தாயைத்தான் அதிகமாக நேசிக்கிறார்கள்). ஆகவே இன்னிலை மாற குடும்ப பராமரிப்பிற்கு ஆண்களின் பங்கு அவசியம். குடும்ப பிரச்சனைகளில் வரதட்சனைகொடுமை தலையாயது. 1997-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி ஆண்டிற்கு 5000 பெண்கள் வரதட்சனை கொல்லப்படுகிறார்கள். 1985-லேயே சட்டங்கள் இயற்றப்பட்டும் பயனில்லாமல் இருப்பது போல தோன்றுகிறது. ஒரு பெண் படித்து, வேலையில் இருந்தால் குடும்ப சூழ்னிலை சீராக அமைய வாய்ப்புகள் இருக்கிறது.

முடிவாக, சமுதாயத்தில் மேன்மை பெற முதலில் மகளிருக்கு தன்மானம் விழிப்புண்ர்வு தேவை. தனக்கு நேரும் கொடுமைகளைக்கண்டும் பொறுத்துக்கொண்டும் சும்மா இருக்கக்கூடாது. சட்டத்தின்முன் கொடுமைக்காரர்களின் முகமூடியை கிழிக்கவேண்டும். அப்படிச்செய்யாவிடில், விட்டில் பூச்சி போல தினம்தினம் நெருப்பை நோக்கிய மரணம் தான்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகனேசன்
//சமுதாயத்தில் மேன்மை பெற முதலில் மகளிருக்கு தன்மானம் விழிப்புண்ர்வு தேவை.// தேவைதான் ஆனால் யார் தருவது? நல்லதொரு பதிவு.
ReplyDeleteஜெசிலா,
ReplyDelete//தேவைதான் ஆனால் யார் தருவது? //
விழிப்புணர்வு யாரும் தர முடியாது! ஆனால் அறிமுகப்பத்தலாம்!இந்தியாவில் படித்த பெண்களுக்கே விழிப்புனர்வு குறைவு எனும்பட்சத்தில் படிக்கதவர்கள் நிலைமை சொல்லித்தெரிய தேவை இல்லை!இந்தியாவில் உளவியல்ரீதியாக ஆண்-பெண்(குடும்பத்திற்குள்) நெருக்கம் குறைவு.எனவே பெண்களே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்க வேண்டிய நிலை! தங்கள் போன்ற பெண்கள் முயற்சிக்கலாம், உங்கள் அறிவுரையால் 2 (அ) 3 பெண்கள் திருந்தினால் கூட போதும்!!நாடு நலம் பெறும்! என்னுடைய மகளிர் உடன்பிறப்புகள் நல்ல நிலையை அடையும்!
ஜெசிலா,