Saturday, May 19, 2007

கற்பு என்பதை பொதுவில் வைப்போம்

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் தான் என்ற மடத்தனம் மாறவேண்டும். பாரதி சொன்னதுபோல கற்பு என்பதை பொதுவில் வைப்போம். கோவலன் செய்த வேலைக்கு அவனை துறந்து செல்வதை விட்டு தொடந்து சென்ற கண்ணகிக்கு memory loss என்று நினைக்கிறேன். சீதையை அக்னிகரிக்ஷை செய்த இராமன் புருஷோத்தமன் என்று புராணங்கள் திரிக்கும் சங்கதி எத்தனைஎத்தனை! சந்திரமதி, நளாயினி, சாவித்திரி என்று புராணபுளுகுகளில் இவர்கள் கதை நீளும். வேதகாலத்திலும் சங்ககாலத்திலும் பெண்கள் சமுதாயப்பணியாற்றியதாகக் கூறினாலும், ஒன்றிரண்டு சான்றுகள் வைத்து ஒரு இனத்தின் பெண்கள் நிலையை கூறிவிட இயலாது. இந்தியத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், பொதுவாக ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. அரிதாஸ் காலம் முதல் இன்றைய சில்லென்று ஒரு காதல் வரை பெண்டிரை மூடர்களாகவும் அலங்கார பொம்மைகளாகவும் காட்டிவந்துள்ளன. ஆண்கள் எவ்வித தவறு வேண்டுமானாலும் செய்யலாம். பெண்கள் செய்யகூடாது என்பது ஒருதலைபட்சம். ஆண்கள் பெண்கள் இருவருமே அப்படி செய்யலாம் என்ற வாதம் நம்மை விலங்குகளாக்குவது. வாழ்க்கைக்கு துணைவன் துணைவியின் புரிதல் அவசியம். அப்படி புரிதல் இல்லாத வாழ்வு தேவையற்றது. ஒரு செழுமையான வருங்கால சந்ததி உருவாக, தற்கால சந்ததி ஒரு எடுத்துக்காட்டான வாழ்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

'திருவருட்செல்வர்' படத்தில் ஒரு காட்சி. அரசராக சிவாஜியும் நாட்டியமங்கையாக பத்மினியும் நடித்திருப்பார்கள். நாட்டியமங்கையின் அழகில் மயங்கிய அரசன் அவளை கட்டியணைக்க எத்தனிப்பான். அவள் என்ன கூரியும் கேட்காத அவனை தடுத்து நிறுத்தி சில பலகாரங்களைக் காட்டி உண்ணச் சொல்வாள். அப்பலகாரங்கள் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் இருக்கும். அவற்றை சுவைத்த அரசனை பார்த்து, ‘பலகாரம் எப்படி இருந்தது’ என்று நாட்டிய மங்கை கேட்பாள். ‘அனைத்திற்கும் சுவை ஒன்றுதான் ஆனால் நிறம்தான் வேறு’ என்று அரசன் கூறுவான். உடனே ‘நானும் பெண்தான் அரசியும் பெண்தான், உருவம் மட்டுமேவேறு தாங்கள் காணும் சுகம் ஒன்றுதான்’ என்று நாட்டியமங்கை கூறுவாள். இதனைக்கேட்ட அரசன் திருந்துவான்.

இது கதையோ? கற்பனையோ? சிலருக்கு இது ஆபாசமாககூட தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. இதை உணர்ந்தால் ஆண்களின் ஜொள்ளும் செயல் முடிவுக்கு வரும்.

7 comments:

  1. தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆக்கப்பூர்வமான பதிவு...

    ReplyDelete
  3. ஜெசிலா,

    ஊக்கத்திற்கு நன்றி!!

    இது மாதிரி பதிவுக்கு வரவேற்பு எப்பவுமே குறைவுதான்!!
    பின்னூட்டமே வருவது இல்லை!

    அதனாலதான் நானே இப்ப அதிகமாக மொக்கை பதிவுகள்தான் எழுதுரேன்!!

    ReplyDelete
  4. ஜெசிலா,

    ஊக்கத்திற்கு நன்றி!!

    இது மாதிரி பதிவுக்கு வரவேற்பு எப்பவுமே குறைவுதான்!!
    பின்னூட்டமே வருவது இல்லை!

    அதனாலதான் நானே இப்ப அதிகமாக மொக்கை பதிவுகள்தான் எழுதுரேன்!!

    ReplyDelete
  5. //இது மாதிரி பதிவுக்கு வரவேற்பு எப்பவுமே குறைவுதான்!!
    பின்னூட்டமே வருவது இல்லை! //

    தொடர்பில்லா இரு விஷயங்களைப் - தரம், பின்னூட்ட எண்ணிக்கை -போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்

    ReplyDelete
  6. தருமி சார்,

    நன்றி!! தங்கள் கருத்து உண்மை தான்! என்னோட பதிவே திறக்க சில மொக்கைகள் தேவைப்படுகிறது! பின்னூட்டம் இருந்தால் தானே தமிழ்மணம் ரொம்ப நேரம் காட்டுகிறது!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய