Friday, July 06, 2007

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா?

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா? நான் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது, எங்க ரூம்மேட் ஒருத்தன். கார்த்தினு பேரு.தினமும் மூணு வேளை சாப்பிடுரானோ இல்லயோ, மேக்கப் போட்டுப்பான். பொண்ணுகளோட கடலை ரொம்ப வறுப்பான். இதைப்பார்த்தா எங்க வயறு சும்மா இருக்குமா கும்மிட்டி அடுப்பு மாதிரி எரிய ஆரம்பிச்சது. அவனை பல்ப் ஆக்க சமயம் பார்த்துட்டு இருந்தோம். வழக்கம் போல அன்னைக்கு இரவு 8:00 மணிக்கு மேக்கப் போட்டுட்டு இருந்தான். நான் "டேய் கார்த்தி மீசை உனக்கு ஏண்டா சரியா வளரல" என்று வாய கிளரினேன். "தெரியல மச்சான்! அது எப்பவும் அப்படித்தான் இருக்கு!" என்றான் கார்த்தி. இதைகேட்ட நம்ம பசங்க நான் போட்ட கோட்டுல ரோடு போட ஆரம்பிச்சாணுங்க."அசிங்கம்டா! ஒரு ஆம்பளைன்னா மீசை நல்லா இருக்கணும்!" என்று சொல்லி அவனை உசுப்பேத்தினானுங்க. அந்த அப்பாவி கார்த்தி என்ன செய்தா மீசை நல்லா வளரும்னு இந்த மடப்பசங்களையே ஐடியா கேட்டான். இவனுங்க குஷி ஆகிட்டானுங்க. "மஞ்சள் தடவினா மீசை நல்லா வரும். மீசை மழிச்சிட்டு தடவினா இன்னும் நல்லா வரும்" என்று கூட்டாளி ஒருத்தன் சொன்னான். "பாருடா நம்ம சீனியோட மீசைய கம்பிகட்டு போல, எல்லாம் மங்சளோட மகிமை" என்று இன்னொருத்தன் கொளுத்தி போட்டான். இவனுங்க அள்ளி விட்டத எல்லாம் அந்த லூசும் நம்பிட்டு இருந்தான். நிலைமை புரியாம "சரி நான் இப்பவே மீசைய மழிச்சிக்கிரேன்" என்று சொல்லிட்டு போய், மீசைய எடுத்துட்டான். மீசையில்லாத அந்த திருமுகத்த பார்த்த சிரிப்பு தாங்கம நான் வெளியே ஓடிட்டேன். கோபுரம் பூசுமஞ்சள் வாங்கி வந்து கொஞ்சம் தடவிட்டு படுத்துட்டான். எங்களுக்கு சிரிப்பு ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் ( எங்க இவனுக்கு சுத்தமா மீசை வரம போயிடுமோ என்று).

மறுநாள் காலை மஞ்சள் போட்டது, முகத்தை கழுவின பிறகும் நல்லா தெரிஞ்சது. காலேஜ்க்கு போனான். இன்னைக்கு சாயுங்காலம் கொலை விழ்ப்போகுதுனு நெனச்சேன். சாயுங்காலம் எல்லாரும் அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். யாரோடும் பேசம இருந்தான். ஒருத்தன் ஆரம்பிச்சான் "என்ன மாமு! நம்ம கார்த்திக்கு மீசை வந்துடுமா?". சும்மா இருந்த சன்கை ஊதி கெடுத்த மாதிரி, கார்த்தி எழுந்து வந்து எல்லாரையும் சபிக்க ஆரம்பிச்சான். பொரம்போக்கு, நீங்க உறுப்படுவிங்கலா,... இப்படி அவனுக்கு தெரிந்த வார்த்தைல அர்ச்சனை செய்தான். எப்படியோ யாரையும் அடிக்கல. அப்ப 'என்னம்மா கண்ணு' படத்தில் வடிவேலு மஞ்சள் பூசினதால மீசை இல்லாம சுத்துவார். அந்த படத்தில் அவரோட பேரு "டெலக்ஸ் பாண்டியன்". இந்த பேர எங்க கார்த்திக்கு வச்சிட்டோம். பொண்ணுகளோட பேசிட்டு இருந்தா, டெலக்ஸ்்னு கூப்பிட்டா போதும், சும்மா கன்னுகுட்டி போல துள்ளி ஓடிவருவான். அப்படி ஒரு பாசம் அவனுக்கு எங்க மேல. இல்லாட்டி நாங்க பக்கத்தில் விலாவரியா சொல்லி மானத்தை வாங்குவோம். இது தான் சதாரண கார்த்தி டெலக்ஸ் பாண்டியன் ஆன கதை.

பி.கு.: இதை பார்த்து அன்பர்கள் யாரும்் மீசை எடுத்து மஞ்சள் தடவி சாருக், சல்மான் ஆக முயற்சி செய்யாதீங்க. டெலக்ஸ்க்கு மீசையெல்லாம் வந்தது, வரம போகல. இதை தெரிஞ்சி தான் இந்த விளையாட்டுல நாங்க இறங்கினோம்.

8 comments:

  1. ஹஹஹ...காலேஜ் நியாபகம் வந்துடுச்சி..

    ReplyDelete
  2. //சந்தோஷ் said...

    ஹஹஹ...காலேஜ் நியாபகம் வந்துடுச்சி.. //

    வாங்க சந்தோஷ் அண்ணே! ஞாபகம் வராதா பின்ன..!!

    ReplyDelete
  3. அப்பாலிக்கா வந்து படிக்கிறேன் [பாதிதான் படிச்சேன் பசிக்குது வாரேன்]

    ReplyDelete
  4. மீசை எடுக்க வச்சதும் இல்லாம விளம்பரம் வேறயா!

    ReplyDelete
  5. உறுப்படுவயா நீ!!

    ReplyDelete
  6. //[பாதிதான் படிச்சேன் பசிக்குது வாரேன்]//

    இன்னும் சாப்பிடலயா!! முதல்ல அத செய்யுங்க!!

    ReplyDelete
  7. மலரும் நினைவுகளாக கல்லூரி கலாட்டாக்கள் நினைத்து நினைத்து மகிழ வேண்டியவைகள். அசை போட வைத்ததற்கு நன்றி

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய