Wednesday, July 11, 2007

நாத்திகனும் ஆட்கொல்லியும்

நாத்திகன் ஒருவன்

நகரத்திற்குச் சென்றான்

கருமைகவ்விய காட்டுவழி

பொழுதும் சாய்ந்தது

நிலவுக்கதிர்களை வடிகட்டியபடி

வழிநெடுகிலும் வானளாவிய

மரங்களின் கிளைகள்

தனிமையான இருள்

பூச்சிகளின் கிறீச்சலுடன்

இதயத்துடிப்பு தடவிச்செல்லும்

இவனை பயமுறுத்தியது

திடீரென்று சீறல்சத்தம்

திரும்பிப் பார்த்தான்

நெடிய சிங்கமொன்று

வந்தது இவந்திசைநோக்கி

புரியாமல் திகைத்தவன்

யத்தனித்தான் ஓட

அசுரவேகத்தில் அவன்

புகைதின்றது போல்

கண்கள் கனந்தது

கோரப் பற்களுடன்

நகங்கள் நெருங்கியது

அருகாமையில் மரணம்

வீறிடலுடன் மண்ணில்

தடுமாறி வீழ்ந்தான்

சிங்கம் தன்கரத்தை

ஓங்கியது மேலே

வானிலே வெளிச்சம்

"ஆன்மீகவாதி ஆகிவிடு

ஆட் கொள்கிறேன்"

என்றொரு அபயக்குரல்

கனைத்தது கடவுளா?

என்றெண்ணிய கொள்கைவீரன்

"ஆட்கொள்வது இருக்கட்டும்

ஆட்கொல்லியான சிங்கத்தை

ஆன்மீகவாதி ஆக்குக!"

என்று கதைத்தான்

உயர்ந்திருந்த சிங்கத்தின்

கரங்கள் இறங்கியது

ஆன்மீகவாதியான சிங்கம்

"கடவுளே! கருணையுடன்

உணவளித்த உங்களுக்கு

நன்றி!" என தியானித்து

நாத்திகனை நறநறவென

நரம்புகளைக் குதறியது

(இது ஆன்மீக சிங்கம் தான் சிந்திச்சி சிந்திச்சி பிடரி எல்லாம் கொட்டி போச்சி)

(இந்த நினைப்பலயும் சில சிங்கங்கள் சுத்துரது உண்டு)




பி.கு.:

நாத்திகன்: இந்த கதையில் இருந்து என்ன தெரியுது.

குட்டிபிசாசு: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-னு தெரியுது

நாத்திகன்: ஏய்! குட்டிபிசாசு! நீ மூடிட்டு சும்மா இருக்கியா! நான் உன்னை கேட்கல, வாசகர்களைத்தான் கேட்கிறேன்

வாசகர்கள்: எங்களுக்கு புரியரது இருக்கட்டும். உனக்கு என்னடா புரியுது லூசு! இப்படி எழுதுரே!

நாத்திகன்: நல்ல புரிதல்! அதனால தான் இந்த இடுகைய லூசுவேலை என்ற தொகுப்பில் சேர்த்து இருக்கேன்.

ஐயா சாமிகளா! இது என்னோட 50வது பதிவு!! என்ன செய்யறது. 50வது இடுகை மொக்கையாக போடணும்னு நெனச்சேன். முடியல!! லூசுவேலையத்தான் போட முடிஞ்சது.

14 comments:

  1. 50 அடித்த குட்டி பிசாசுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. குப்பி,
    50-க்கு வாழ்த்துக்கள்

    கவிஜயில என்னமோ உள்ள இருக்கும் போல...

    ReplyDelete
  3. மொக்கை லூசுன்னு சொல்லிப்புட்டு, எவ்ளோவ் பெரிய்ய தத்துவத்தை சிம்பிளா சொல்லிட்டு அமைதியா உக்காந்திட்டு இருக்கிறியே கு.பி.

    ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு திங்க் பண்றீங்களே.

    ReplyDelete
  4. //கவிஜயில என்னமோ உள்ள இருக்கும் போல...//

    தருமி ஐயா,

    இதில் எந்தவித உள்குத்தும் இல்லை!!

    ReplyDelete
  5. //ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு திங்க் பண்றீங்களே.//

    தானா வருதுங்க!!

    ReplyDelete
  6. //மொக்கை லூசுன்னு சொல்லிப்புட்டு, எவ்ளோவ் பெரிய்ய தத்துவத்தை சிம்பிளா சொல்லிட்டு அமைதியா உக்காந்திட்டு இருக்கிறியே கு.பி.//

    என்னை வச்சி காமெடி எதுவும் பண்ணலயே!!

    ReplyDelete
  7. பல நடிகர்களின் 100 வது படம் போல இருந்தது (விஜய்காந்த் தவிர) இந்த 50 வது பதிவு

    ReplyDelete
  8. குட்டிப்பிசாசு இன்னும் வேகமாக (50 நூறுஆக, 1000ஆக) பெரியபிசாசாக வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. நாகரீகம் தெரிஞ்சவர். கேவலமா இருக்குனு சொல்லாம சொல்லிட்டீங்க!!
    இது வெறும் 50வது பதிவு தானுங்க!! 100வது நல்லதா போடுரேன்!!

    ReplyDelete
  10. // Anonymous said...

    குட்டிப்பிசாசு இன்னும் வேகமாக (50 நூறுஆக, 1000ஆக) பெரியபிசாசாக வாழ்த்துக்கள்.... //

    அனானியாருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. நல்ல முயற்சி ஆனால் மிக சிறப்பாக இல்லை என்ற அர்த்தத்தில் சொன்னதே தவிர வேரொன்றும் இல்லை

    ReplyDelete
  12. // vathilai murali said...

    நல்ல முயற்சி ஆனால் மிக சிறப்பாக இல்லை என்ற அர்த்தத்தில் சொன்னதே தவிர வேரொன்றும் இல்லை //

    இதெல்லாம் ஒரு அவசர் இடுகை தான். நல்லதாக போட முயற்சிக்கிறேன். நன்றி!!

    ReplyDelete
  13. அதுக்குள்ள அம்பதா? வாழ்த்துக்கள்.
    வித்தியாசமான மொக்கை.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய