Thursday, July 12, 2007

எம்.ஜி.ஆரை கைவிட்ட விஜயகாந்த்

சொந்தமாக சொல்லிக் கொள்ள விஜயகாந்திடம் எதுவுமில்லை. பூகம்ப நிவாரணத்துக்கு பணம் கொடுத்ததையும், அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில்கள் கொடுத்ததையும் கூறி (//மண்டபம் இடிச்சத விட்டுபோட்டீங்க//) ஓரளவுக்குதான் அரசியல் பண்ண முடியும் என்பது கேப்டனுக்கு புரிந்து விட்டது. இதனால் கறுப்பு எம்.ஜி. ஆர்., கறைபடாத எம்.ஜி. ஆர். என்றெல்லாம் எம்.ஜி.ஆர். பெயரில் சவாரி செய்ய ஆசைப்பட்டார். அதன் எதிரொலியாக தனது நூற்றைம்பதாவது படத்துக்கு 'எம்.ஜி.ஆர்.' என்று பெயர் வைத்தார்.(//பேசாம 150-ன்னே படத்துக்கு பெயர் வைக்கலாம், இப்ப இது தான் பேஸன்//) 'மதுர' படத்தை (//மதுர படத்துல தானே விஜய் கலெக்டரா நடிச்சாரு, ஆனா கோயம்பேடு குத்தாட்டம் போடுவாரு//)இயக்கிய மாதேஷ் 'எம்.ஜி.ஆரின்' இயக்குனர். இப்படியொரு பெயர் வைத்திருக்கிறீர்களே என்று விஜயகாந்திடம் கேட்டதற்கு, "பெயரை தேர்வு செய்தது மாதேஷ்" என நழுவிக் கொண்டார். இப்படத்துக்கான போட்டோசெஷன் சமீபத்தில் நடந்தது (//என்ன பெரிய போட்டோசெசன் எப்படி எடுத்தாலும் விஜயகாந்த் அப்படித்தான் இருப்பாரு, தலைவர பேசம பழைய போட்டோ இருந்தா கொடுக்க சொல்லுங்க//).

இதனிடையில் 'சிவாஜி' கிளைமாக்ஸில் 'நான் சிவாஜி இல்ல, எம்.ஜி.ஆர்.' என்று கூறி ரஜினி கைத்தட்டல் வாங்க, இனியும் இந்த பெயர் சரிப்படாது (//நான் சிவாஜியும் இல்ல! எம்.ஜி.ஆரும் இல்ல! புரச்சி தமிலன்...ஆங்!//) என 'புரட்சிதலைவன்' என்று மாற்றினார்கள். இப்போது இதையும் தவிர்த்து 'வித்தகன்' என புதுப்பெயர் சூட்டி அதனை சேம்பரில் பதிவும் செய்து விட்டனர். இந்தப் படத்தின் கதை லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூரிலும் சில காட்சிகள் உண்டு. விஜயகாந்துக்கு படத்தில் இரண்டு ஜோடிகள். தொடர் தோல்வியில் இருக்கும் விஜயகாந்தை 'வித்தகன்' காப்பாற்றினால்தான் உண்டு!(//விளங்காதவன்... இந்த டைட்டில் ஓகேவா!!//)

நன்றி: JBR (For www.cinesouth.com)

21 comments:

  1. நாங்க எல்லாம் அரசியலுக்கு மாறிட்டோம் அப்ப நீங்க????

    ReplyDelete
  2. காலையில் நான், மாலையில் அபி அப்பா, இப்பொழுது நீங்க வாங்க வாங்க

    ReplyDelete
  3. டேய் மக்கா குட்டி பிசாசுவ புடிச்சு கட்டி போட்டு நரசிம்மாவ 10 தடவ போட்டு காட்டுங்கடா.

    ReplyDelete
  4. என் புருசனுக்கும் விஜயகாந்த் ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
  5. எனக்கும் ஜனகண மண ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. // குசும்பன் said...

    நாங்க எல்லாம் அரசியலுக்கு மாறிட்டோம் அப்ப நீங்க???? //

    நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்!(அதான் வெள்ளை சட்டைய போட்டுட்டேன்)

    ReplyDelete
  8. // குசும்பன் said...

    காலையில் நான், மாலையில் அபி அப்பா, இப்பொழுது நீங்க வாங்க வாங்க //

    என்னய யாராவது அடிச்ச வந்து காப்பத்த மாட்டீங்களா? அந்த தைரியத்துல தான்

    ReplyDelete
  9. // விஜகாந் ரசிகர் மன்றம் said...

    டேய் மக்கா குட்டி பிசாசுவ புடிச்சு கட்டி போட்டு நரசிம்மாவ 10 தடவ போட்டு காட்டுங்கடா. //

    சாமி! இனிமேல இப்படி செய்ய மாட்டேன். மறுபடியும் அந்த படத்த போடாதீங்க!

    ReplyDelete
  10. என் புருசன் தொல்லை தாங்க முடியல
    என் நம்பர் தரேன் யாராவது என்னை காப்பாத்துங்கோ ப்ளீஸ்

    ReplyDelete
  11. சாரி! நீங்க அட்ரஸ் மாறி வந்துடீங்க! நீங்க குசும்பர கன்சல்ட் பண்ணுங்க!!

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. யோவ் குட்டிபிசாசு யாரு அந்த விசாலாட்சி உனக்கு அதுக்கும் என்னய்யா
    சம்பந்தம் ஏன் உன்னய தொரத்தோ தொரத்துனு தொரத்துது என்ன மேட்டரு??? உண்மைய சொல்லிடு

    ReplyDelete
  15. // Anonymous said...

    யோவ் குட்டிபிசாசு யாரு அந்த விசாலாட்சி உனக்கு அதுக்கும் என்னய்யா
    சம்பந்தம் ஏன் உன்னய தொரத்தோ தொரத்துனு தொரத்துது என்ன மேட்டரு??? உண்மைய சொல்லிடு //

    விஜயகாந்த் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாதுங்க!

    ReplyDelete
  16. எனக்கும் குட்டிபிசாசுக்கும்....

    ReplyDelete
  17. yaarum yennaya kapatha vendam

    ReplyDelete
  18. ஷங்கர்க்கு ரோபோ கதை போட்ட மாதிரி இவருக்கும் ஒன்னு போடுங்க

    ReplyDelete
  19. நல்லாயிருந்தது.
    நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

    ReplyDelete
  20. **not to publish**
    pisaasu kutti...enga aala kanoam... busyaa...niyabgam irukkaa

    **not to publish**

    ReplyDelete
  21. hey what's happening?. where are you? when is your next post? I am eagerly waiting for your posts.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய