Monday, November 19, 2007

ராமர் பிறந்தநாள் கி.மு., 5114, ஜன.10 - விஜயகாந்த் என்ன சொல்லிட போறாரு?

ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி.


சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது.

பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூலமும், புஷ்கர் பட்நாகர் எழுதிய, "கடவுள் ராமரின் காலத்தை நாளிடுதல்"் என்ற புத்தகத்தின் அடிப்படையிலும், ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையிலும், இந்த தேதிகளை ஹரி கண்டுபிடித்துள் ளார்.

ஹரியின் கணக்குப்படி, ராமருக்கு ஒரு நாள் பிறகு பிறந்தவர் பரதர். ஹரி கூறுகிறார். ராமர் கி.மு., 5114ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியும், பரதன் அதே ஆண்டு ஜனவரி 11ம் தேதியும் பிறந்துள்ளனர். பரதனுக்கு கி.மு. 5089ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. பரதனுக்கு முடிசூட்டு விழா முடிந்ததும் ராமர் தனது 25வது வயதில் மனைவி சீதாதேவி மற்றும் லட்சுமணனோடு வனவாசம் சென்றார். ராவணனுடன் போருக்கு முன்பாக, இலங்கைக்கு அனுமன் கி.மு., 5076ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்று, அங்கிருந்து இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா திரும்பி உள்ளார். (கள்ளதோணியிலா வந்தாரு, 2 நாள் ஆகுது??) இதை கண்டுபிடிப்பதற்காக, 27 நட்சத்திரங்கள் மற்றும் ஏழு கோள்களின் அமைப்புகள் ஆராயப் பட்டன. அவை இருந்த இடம், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. ராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். நாசா மையமும் கோள்களின் அமைப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறது. (இந்த தகவலை பத்தி நாசாவுக்கு தெரியுமா? ஐ!!! அமெரிக்காவில் இருக்கும் தமிழ்மண அன்பர்கள் ஜாதகம், ஜோசியம், கைரேகை எல்லாம் இனிமேல நாசாவுலயே பார்த்துகலாம்). ராமர் குறித்த எங்களது ஆராய்ச்சி, முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையிலானது. இவ்வாறு ஹரி கூறினார். (நன்றி: தினமலர்).


இந்த செய்தி பத்தி நம்ம கேப்டன் என்ன சொல்லியிருப்பாருனு யோசிச்சா.....!!!????!!!!????

//நாட்டுல எவ்வளவோ ஜனங்க கஸ்டப்படும்போது, நீங்க இராமருக்கு பொறந்தநாள கண்டுபிடிச்சிட்டு இருக்கீங்க. இதெல்லாம் தெரிஞ்சிகிட்டு நாளைக்கு இராமர்க்கு காவெண்ட்ல சீட்டா வாங்க போறாரு. இந்தியாவுல மொத்தம் 2038 கடவுள் இருக்கு, அதுல பூமியில பொறந்த கடவுள் 832. சாகாத கடவுள் 543. செத்துபோன கடவுள் 113, கல்யாணம் செய்துகிட்ட கடவுள் 1002, சாமியாரா போன கடவுள் 885. இதுகெல்லாம் பிறந்தநாள் கண்டுபிடிக்கத்தான் முடியுமா? அப்படி கண்டு பிடிச்சாலும் கேக் வெட்டி கொண்டாடத்தான் முடியுமா? அவனவன் இருக்கிற கஷ்டத்துல ஏன் பொறந்தோம்னு யோசிட்டு இருக்கான். ஆனா நீங்க இராமருக்கு பிறப்புச்சான்றிதழும், நபிகள்நாயகத்துக்கு சாதிச்சான்றிதழ் கொடுத்துட்டு இருக்கீங்க. இத ஒவ்வொரு தமிலனும் யோசிக்கனும். இவங்கள அடிச்சா உத்தரபிரதேஸ்ல இருக்கிற இராமர் இல்ல, உடுமலைபேட்டை இராமர் கூட வரமாட்டான்். பாகிஸ்தான் தீவிரவாதிகளை புடிக்க என்னய பர்வேஸ்முஸ்ரப் குபுட்டு இருக்காரு. நான் வரட்டுமா? ஆங்...//

16 comments:

  1. ha ha ha

    கேபுடன் comment சூப்பர்!!!!

    ReplyDelete
  2. aaha........
    captain ippa musharaff kitta pooi ithe paaniyila tamilla statistics pesuna...
    musharappu pakistana vitte odiyiruvaare...
    benazir namma kutti pisasu kitta solli panna erpadaa ithu?

    ReplyDelete
  3. arunmozhi, raj,

    nandri!!

    ReplyDelete
  4. செய்திய விட உங்க கமெண்ட் ரொம்பவே சூப்பருங்க குட்டிப்பிசாசு..

    ReplyDelete
  5. அது எரிதழல் குட்டி... விஜேந்த் பிட்டு சூப்பர். நீங்க வேற... ராவணன் சூப்பர்சானிக் வச்சிருந்தப்போ அனுமர் ஒரு சப்மரைனாவது வச்சிருந்திருக்க மாட்டார...இந்த தொல்லையியல் நிபுணனுங்க தொல்ல தாங்கலடா சாமியோவ்...

    ReplyDelete
  6. ரசிகன்,

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  7. //ராவணன் சூப்பர்சானிக் வச்சிருந்தப்போ அனுமர் ஒரு சப்மரைனாவது வச்சிருந்திருக்க மாட்டார...//
    அதானே!!

    //இந்த தொல்லையியல் நிபுணனுங்க தொல்ல தாங்கலடா சாமியோவ்...//

    இப்ப எல்லாம் நிறைய காவியாடைகள் தொல்லியல் ஆராய்ச்சி செய்து தொல்லை பண்ணுதுகெள். அதன் விளைவு தான் இது.

    ReplyDelete
  8. there is no use of knowing sriramar birthdate and vijaykants so called comments. instead u can suggest a solution to sethu project

    ReplyDelete
  9. அனானி,
    நான் தீர்வு சொல்லி என்ன ஆகப் போகுது. சும்மா காமெடி பண்ணலாம்னு முயற்சி செய்தா, சீரியச் பதிவாக்கிடுவிங்க போல!!

    ReplyDelete
  10. குட்டி...பிசாசே! குட்டி... பிசாசே! உங்க பிளாகைப் படிச்சேன் பர்வா....யில்...ல்ல்ல்லே , உங்க சேது பாலம் ராமர் வரலாறு எல்லாமே ரொம்பவே ஆழ்ந்து மூழ்கி யோசிச்சு கண்டு பிடிச்சு எழுதியிருக்கிறேங்க ....அதுவும் நம்ம கேப்டன் உரைக்கு ஒரு சல்யூட்...[தெருவோரம் பார்த்தேனுங்கோ யாரைப் பார்த்தாலும் குட்டிப் பிசாசாத்தான் தெரியுது அதிலே நிங்க எந்த பிசாசுங்க?]

    ReplyDelete
  11. காப்டன் கலக்கிட்டாரு :)

    ReplyDelete
  12. நல்லா இருக்கு,

    விஜய்காந்த் இதுபோல் பேசமாட்டார். ஆனால் அவர் பாணி வசனம் போல் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. கோமா,
    //தெருவோரம் பார்த்தேனுங்கோ யாரைப் பார்த்தாலும் குட்டிப் பிசாசாத்தான் தெரியுது அதிலே நிங்க எந்த பிசாசுங்க?]//

    கோடு போட்ட அரைக்கை சட்டையும், கட்டம்போட்ட அரைக்கால் ட்ரவுசரும் அணிந்திருப்பவர்.

    ReplyDelete
  14. //தஞ்சாவூரான் said...

    காப்டன் கலக்கிட்டாரு :)//

    தஞ்சாவூரான், நன்றி!!

    //கோவி.கண்ணன் said...

    நல்லா இருக்கு,

    விஜய்காந்த் இதுபோல் பேசமாட்டார். ஆனால் அவர் பாணி வசனம் போல் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.//

    கோ.க,

    நன்றி!!

    ReplyDelete
  15. //சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது.//
    அண்ணே! புராணங்களில் இருப்பதை அறிவியலட பூர்வமாக ஆராய்வதற்கு முன்பாக, ஜனங்களை ஏமாற்றும் ஜாதகம் என்பது பகுத்தறிவானதா? என்பதை முதலில் ஆராய்ச்சி செய்ய சொல்லுங்க அண்ணே!

    ReplyDelete
  16. நீதிவான்,

    நீங்க சமீபத்திய ஜாலிஜம்பர் பதிவ படிங்க! அதுல ஜாதகம் பற்றிய விவாதம் வந்தது.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய