Wednesday, November 14, 2007
தமிழ்தாய் வாழ்த்திற்கு ரஹ்மானின் இசை!!
ஏற்கனவே தேசிய கீதத்திற்கு இசையமைத்து பெருமை சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்தாய் வாழ்த்திற்கும் இசைவடிவம் தரவேண்டும் என 'கல்லூரி' பட விழாவில் ஒரு வேண்டுகோள் வைத்தார் பாலுமகேந்திரா. பாலுமகேந்திரா வைத்த வேண்டுகோளை விழாவிற்கு வந்த நூற்றுக்கணக்கானோர் தங்களது கரவொலிகளால் வழிமொழிந்தனர். கைகளை உயர்த்தி காட்டியும் விருப்பத்தை தெரியப்படுத்தினர். பாலுமகேந்திரா கொளுத்திப்போட்ட இந்த பொறி இசைப்புயலுக்குள் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன்படி தமிழ்தாய் வாழ்த்துக்கு இசைவடிவம் கொடுப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இதற்கான பணிகளை தொடங்க ரஹ்மான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்பாடா தமிழ்தாய் வாழத்து பற்றிய செய்தியை ஆங்கில வார்த்தையில்லாமல் எழுதியாச்சு. (நன்றி: சினிசவுத்)
Subscribe to:
Post Comments (Atom)
பாலுமகேந்திராவுக்கு என்னைய்யா ஆச்சு ? ஏற்கனவே இருக்கும் மெல்லிசை மன்னர் இசையமைத்த தமிழ்தாய் வாழ்த்துக்கு என்ன குறைச்சல்? ..இந்த ஆளு வந்து உச்சஸ்தாயில பாடி உயிரை வாங்க போறார். ஹும்.
ReplyDeleteஜோ,
ReplyDeleteஎன்ன செய்யறது, இது தமிழ் வாழ்த்துக்கு போறாத காலம் போல!!
ஆனா கண்டிப்பா சின்ன பசங்க நல்லா பாடுவாங்க. இது ஒரு பின்னவீனத்துவ முயற்சி (கட்டுடைத்தல்) எனவே பாலு கேட்டுள்ளார்
ReplyDeleteகட்டுடைக்கிறார்களா? தமிழ்தாய் இடுப்புடைகிறார்களா?னு பார்போமே!!
ReplyDeletehas he completed this?
ReplyDelete