Wednesday, November 14, 2007

ஈழமும் இந்துதேசியமும்


வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள்(மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள். "history must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது. இதனை நாம் உணர்ந்து கொள்ளாவிடில் படித்தும் அறிவில்லாதவர்களாகவே இருக்க வேண்டி இருக்கும். சமீபத்தில் என் நண்பருடைய விவாதிக்கும்போது, ஈழப்பிரச்சனைப் பற்றியும், இந்தியாவின் இந்து-முஸ்லீம் பிரச்சனை பற்றியும் பேச்சு வந்தது. விவாதத்தின் தொகுப்பு இது தான்.

1. தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் தான் ஈழத்தமிழர்கள்?

பாண்டியர்களும், சோழர்களும் பலம் பொருந்திய அரசர்களாக இருந்த காலத்தில், இவ்வாறான குடிபெயர்தல்கள் படையெடுப்பு மூலம் நடந்தன. ஆனால் அதற்கு முன்னரே, அங்கு ஈழத்து தமிழ்குடிகள் இருந்தன. தற்போது, சிறிலங்கா அரசின் வாதமொன்றில், தமிழர்பகுதியில் காணப்படும் பௌத்த சின்னங்களைக் கொண்டு தமிழர்கள் வந்தேறிகள் என்கிறார்கள். நாம் என்ன முதலில் இருந்தே இந்துவாக இருந்தோமா? நமது ஐம்பெரும் காப்பியங்கள் அனைத்தும் சமண, பௌத்த மதம் சார்ந்தவை. தமிழகத்தில் கூட நிறைய சமண, பௌத்த சின்னகளின் மிச்சங்கள் உண்டு. இவை பெரும்பாலும் இந்துமன்னர்களால் அழிக்கப்பட்டன. திருமங்கையாழ்வார் கூட சமண மடங்களையும், சிலைகளையும் அழித்ததாக நண்பர் ஒருவர் கூறக்கேட்டேன். இவை வரலாற்றுரீதியாக உண்மை். ஆனால் அவை (சின்னங்கள்) இன்று சிங்கள அரசால் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இவை நமது வரலாற்றை திரித்து கூறுவதற்காகவே.

நம்முடைய சமண-பௌத்திற்கு முந்தைய நிலை இன்னும் தெளிவாக தெரியவில்லை. வள்ளுவரை கூட சமணர்-பௌத்தர் என வாதங்கள் உண்டு.


16-ம் நூற்றாண்டுகளில் அநுராதபுரத்திலும், கண்டியிலும் இருந்த விஜயநகர நாயக்கர்கள் கூட இன்று சிங்களவர்களாக அடையாளம் காணப்படும்போது. ஏன் 2000-2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பௌத்த தமிழர்கள் சிங்களவர்களாக அடையாளம் காணப்படக்கூடாது. (800 ஆண்டுகளுக்கு முன் நம்முடன் சேரநாட்டு தமிழர்களாக இருந்தவர்கள், இன்று மலையாளிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளவில்லையா?) இந்துக்களாக மாறிய பிறகு நாமே கூட பௌத்த தமிழர்களுடன் போரிட்டு இருக்கலாம். அவர்களின் விகாரைகளை உடைத்திருக்கலாம். ஆனால் சிங்களவர் சற்றும் சிந்தியாமல் 'மகாவம்சம்" போன்ற பழைய பஞ்சாங்கங்களில் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

சில தமிழக மற்றும் ஈழ தமிழர்கள் கூட நாம் பௌத்தர்களாக வாழ்ந்தோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தாங்கள் ஒரு தூய இந்து பின்னனி கொண்டவராகவே பறைசாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். சிறிதாவது மேல்கூறியதை சற்று சிந்திக்க வேண்டும்.

2. தமிழீழம் சிறிலங்காவின் ஐக்கியத்தை சீர்குலைகிறதா? ஐக்கிய இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது தவறா?

இரண்டு கேள்விக்கு பதில் ஒன்றுதான். முன்பு இந்தியா-பாக்கிஸ்தான் பிரியும் போது, முஸ்லீம்கள் மனநிலை எப்படி இருந்ததோ? அதே மனநிலையில் தான் இப்போது ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். சிறுபாண்மையினராக இருந்த முஸ்லீம்களுக்கு போதிய சலுகை வழங்கததாலும், இந்துக்கள் பெரும்பாலான வேலைகளை ஆக்கிரமித்ததாலும் தான் பிரிவு ஏற்பட்டது. முஸ்லீம் பெரும்பாண்மைப் பகுதிகள் பாக்கிஸ்தானுன் சேர்க்க முடிவெடுத்த தருவாயில், லாகூர் இந்தியாவில் சென்றுவிடுமோ என்ற எண்ணத்தில் 1000-க்கும் அதிகமான இந்துக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்(பிரிவினையின் போது லாகூரில் இந்துக்கள் அதிகம்).அதேபோல, இந்தியாவிலும் எல்லையிலுள்ள நகரங்களில் இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டன. பல இந்து-முஸ்லீம் உடன்பிறப்புகள் கொல்லப்பட்டனர். 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. இவையெல்லாம் எவற்றால் சற்று சிந்திக்க வேண்டும். வெளியிருந்து வ்ந்த முஸ்லீம்களுக்கு எதற்கு பாக்கிஸ்தான் என்று பேசுபவர்கள் எல்லாரும் ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். இந்தியாவிலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் வீடுகளையும் நிலங்களையும் பொருட்களையும் விட்டுவிட்டு வெளியேறும். அவலம் நிகழாதிருக்க முஸ்லீம்களுக்கு போதிய இடஒதுக்கீடு வழ்ங்கியிருக்க வேண்டும் அல்லது முறையாக உடனடியாக பாக்கிஸ்தானை அமைதியாக பிரித்திருக்க வேண்டும். அப்படி பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. ஒருவேளை இன்று ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல, இந்தியா பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.

நண்பர் ஒவ்வொரு கேள்விகளாக அடுக்கிச்செல்ல நானும் பொறுமையுடன் பதில் கூறினேன். அவருடைய விவாதத்தில் ஒன்று புரிந்தது, அவருக்கு தமிழரின் வரலாறு தெரியாது. இந்தியாவின் பூர்வீகம் தெரியாது. இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய ஞானம் என்ன இருக்கும் என ஊகிக்க இயலவில்லை. இப்படி ஒருவர் அல்ல பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). படத்திலுள்ள பாரதமாதா உருவத்தை முஸ்லீம் மக்கள் வழிபட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கேட்டால் தேசியம் என்பார்கள்? இவர்கள் என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, காஷ்மீர மக்களின் துயர்களையோ கணக்கில் கொண்டதுண்டா? தெரியவில்லை. இவ்வளவு வாய்கிழிய மனிதவுரிமை, மக்களாட்சி, பண்பாடு பற்றி பேசும் இந்தியா கூட திபெத் பிரச்சனையில் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டுதான் இருக்கிறது. கேட்டால் உதைவிழும் என்ற பயம் தானே? இவர்கள் என்னடா என்றால், ஐக்கிய இந்தியா பற்றி அளந்து கொட்டுகிறார்கள். (தொடரும்)

8 comments:

  1. ?!?!?!?!?!?!?!?!?!?!

    நாங்களும் ஆப்ட்டிடூட் டெஸ்ட் எழுதியிருக்கோம் இல்ல...அதனால அடுத்து இதுதான்...

    ReplyDelete
  2. தலைவா!

    இதெல்லாம் ஓவரு!!

    ReplyDelete
  3. ஏதும் வழிமாறி வந்திட்டேனோ!

    //பண்பாடு பற்றி பேசும் இந்தியா கூட திபெத் பிரச்சனையில் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டுதான் இருக்கிறது. கேட்டால் உதைவிழும் என்ற பயம் தானே?//

    இந்த வாதத்தை எதிர்த்தரப்பு கவனத்தில் எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்

    ஆடேர்! ஆடேர்! ஏதுவாக இருந்தாலும் கூண்டுக்குள் வந்து சொல்லவும் கக்கூசுக்குள் ஒழிந்திருந்து சொல்ல வேண்டாம்

    பித்தன்! எக்ஸ'கேப்

    ReplyDelete
  4. பித்தா,

    ரஜினி சொன்னதுகூட விளங்கும் போல, நீ சொன்னது உனக்காவது புரியுதா?

    ReplyDelete
  5. சம்பந்தம் இல்லாத இரண்டு விஷ்யங்களுக்கு (ஈழம், பாகிஸ்தான்)ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய