Thursday, November 15, 2007

குணசித்திரநடிகர் எஸ்.வி.சுப்பைய்யா - அறிமுகம்

தமிழ்த்திரை உலகின் சிறந்த குணசித்திர நடிகர்களில் எஸ்.வி.சுப்பையா மிகவும் முக்கியமான ஒருவர். எம்.ஆர்.ராதா, நாகைய்யா, பாலைய்யா போன்ற குணசித்திர நடிகர்களின் வரிசையில் இவரும் மறக்க முடியாதவர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் பாரதியாராகவே வாழ்ந்திருப்பார். இன்றும் பலருக்கு, பாரதியார் என்றால் சுப்பைய்யா தான் கவனத்திற்கு வருவார்.




கலைத்துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பைய்யா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1950-க்கு பிறகு சிறுசிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். மாயாவதி என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் அருமையாக நடித்திருப்பார். அப்படத்தில் "காமரூபன்" என்ற தெத்துப்பல உடைய நாவிதனாக அவரது சிறப்பான நடிப்பு, எஸ்.வி.சுப்பைய்யா தானா? அவர் என்ற சந்தேகம் ஏற்படுத்தும். அவர் ஜெமினிகணேசன், அஞ்சலிதேவி நடித்த "காலம் மாறிப்போச்சு" என்ற படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.



சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்தார். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, இரும்புத்திரை, பொன்னூஞ்சல்,நீதி, அரங்கேற்றம் போன்றவை மறக்க முடியாத சிறந்த படங்கள். ஜெமினிகணேசனுடன் மணாளனே மங்கையின் பாக்கியம், சவ்பாக்கியவதி, வஞ்சிக்கோட்டை வாலிபன், ராமு, பார்த்திபன் கனவு ஆகிய படங்கள் சிறந்தவை. பார்த்திபன் கனவு படத்தில் ஓடக்கார பொன்னனாக வருவார். "ஆதிபராசக்தி" படத்தில் அபிராமிபட்டராக அற்புதமாக நடித்திருப்பார். அந்த நடிப்பை சொல்லால் கூறயியலாது. "சொல்லடி அபிராமி" என்ற பாடலில் நடிக்கும்போது, பக்திப் பிழம்பாக மாறிவிடுவார். எம்.ஜி.ஆருடன் இதயக்கனி என்ற படத்தில் நடித்தார். இவர் சொந்தமாக தயாரித்த படம் "காவல்தெய்வம்". இப்படத்தில் ஜெயிலராக வந்து வெகு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் அவர் பேச்சும் நடிப்பும் மிகையில்லாமல் சிறப்பாக இருக்கும். கவுரவ வேடத்தில் சிவாஜிகணேசன் பனைமரமேறும் சாமுண்டியாக நடித்தார். இப்படத்தின் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார். சிறந்த குணச்சித்திர வேடங்களில் தமிழ்மனங்களில் பதிந்த எஸ்.வி.சுப்பைய்யா அவர்கள் ் 29-1-1980-ல் காலமானார்். என்னதான் பல நடிகர்கள் தமிழ்த்திரையுலகில் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துக்கொண்டவர் இவர்.

10 comments:

  1. நல்ல தொகுப்பு, மறக்க முடியாத நடிகர். unsung heroes என்பார்கள் அப்படிப்பட்ட வகையை சேர்ந்தவர்

    ReplyDelete
  2. முரளி,

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  3. முத்துராமன் ,எஸ்.வி.சுப்பையா..இவர்களெல்லாம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்கள்.இன்று அப்படிப் பட்டவர்களை வலை போட்டு தேடினாலும் ஒன்றிரண்டு பேர் கிடைப்பார்கள் ஆனால் அடுத்த படத்திலேயே ..நழுவி விடுவார்கள்

    ReplyDelete
  4. // goma said...

    முத்துராமன் ,எஸ்.வி.சுப்பையா..இவர்களெல்லாம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்கள்.இன்று அப்படிப் பட்டவர்களை வலை போட்டு தேடினாலும் ஒன்றிரண்டு பேர் கிடைப்பார்கள் ஆனால் அடுத்த படத்திலேயே ..நழுவி விடுவார்கள்//

    ஒருத்தர், இரண்டு பேர் வராங்க! வந்து ஒரு பட்ம் நடிச்சிட்டு சின்னத்திரை பக்கமா போயிடுராங்க!!

    ReplyDelete
  5. பழம்பெரும் குணச்சித்திர நடிகர் திரு எஸ்.வி.சுப்பையா அவர்கள். அவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பும், அமைதியாகவே நடிக்கும் குணமும், முகத்திலே உணர்ச்சிகளைக் காட்டும் விதமும், தமிழைப் பேசும் அழகும், கணீர்க்குரலும், தேர்ந்தெடுத்த பாத்திரங்களும் காலத்தால் அழியாதவை. இளைய தலைமுறைக்கு இம்மாதிரி நடிகர்களை காணக் கிடைக்காதது துரதிர்ஷ்டமே !

    ReplyDelete
  6. இவரைப் போல் நடிகர்கள் உருவாக இன்றைய தமிழ் படங்களின் கதை, இயக்குநர்கள் விடவே மாட்டார்கள்.

    ReplyDelete
  7. // யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    இவரைப் போல் நடிகர்கள் உருவாக இன்றைய தமிழ் படங்களின் கதை, இயக்குநர்கள் விடவே மாட்டார்கள்.//

    தங்கள் கருத்து உண்மைதான்!

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  8. குட்டிபிசாசு!!
    ஆர்ப்பாட்டமில்லாத திறமையான நடிகரான எஸ்.வி.சுப்பையாவுக்கு நிறைவான் ஓர் அஞ்சலி.அவர் நடித்த ஜெமினியின் 'போர்ட்டர் கந்தன்' சுந்தரிபாயோடு சேர்ந்து அருமையான நடிப்பை கொடுத்திருப்பார்.

    ReplyDelete
  9. நானானி அக்கா,

    போர்ட்டர் கந்தன் படம் நான் பார்த்ததில்லை. தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி!!

    ReplyDelete
  10. நல்ல நடிகர்....... ஆனா அதிகம் அழுகாச்சி சீனுக்கே இவரைப் போடுவாங்க.............

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய