இன்றும் தமிழ்மணத்தில் என்ன பதிவெழுதலாம் என சிந்தித்தவாறு, தன் வாய்நுனியில் வந்தமர்ந்த சிக்ரெட்டுக்குத் தீயிட்டான். கடையில் வேலைபார்க்கும் வேலுவிடம் தேநீர் தயாரிக்கச் சொல்லிவிட்டு மறுபடியும் யோசிக்கலானான். புகை தின்றவாறு செய்தித்தாளைப் புரட்டிய அவன் கண்களில் சிக்கியது அந்தச் செய்தி. "சிறார்கள் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்து மனிதசங்கிலி". கிச்சா தேடியது எதோ கிடைத்தது போலும், அப்படி ஒரு மலர்ச்சி அவன் முகத்தில். செய்தித்தாளின் வரிகளில் லயித்துவிட்ட அவனது உதடுகளின் முணுமுணுப்பு அன்று வரையப்போகும் பதிவின் தலைப்பை "நஞ்சுபட்ட பிஞ்சு உள்ளங்கள்!" என்று ஒருவாறு முடிவு செய்தது.
"அண்ணே! டீ" என்று கொண்டுவந்த தேநீரை நீட்டினான் வேலு. செய்திகளை அசைபோட்டவாறு தேநீரை வாங்கிப் பருகிய கிச்சாவின் முகத்தில் ஓராயிரம் விரிசல்கள். "என்னடா! டீ போடுரே! உங்க மாஸ்டர் எங்கடா? " என்று உருமிய கிச்சா நெற்றிக்கண் இருந்திருந்தால் வேலுவை எரித்திருப்பான். கிலியாகிப்போய், வெறித்தபடி நின்று கொண்டிருந்த வேலு மிகவும் பாவம். நான்கு நாட்களுக்கு முன் தேநீர்க்கடையில் வேலைக்கு சேர்ந்த அவனுக்கு வயது ஒன்பது தான்.
அருமை அருமை. புதுமை புதுமை. நமீதாவுக்கு இணையாக - வாயில் வந்தமர்ந்த சிகரெட்டிற்கு தீயூட்டல் - சிலுவை போல சுமந்து செல்லுதல் - நஞ்சு பட்ட பிஞ்சு உள்ளங்கள் - உடனடித் தலைப்பு - ம்ம்ம்ம்ம்ம்
ReplyDeleteசொல் வேறு செயல் வேறு - அறியுங்கள்
வாழ்த்துகள்
concept old(in some films we saw). presentation style o.k
ReplyDeleteமுரளி, சீனா ஐயா,
ReplyDeleteமிக்க நன்றி!!
கதை நல்லாவே இருக்கு. அது நீங்க இல்லியே
ReplyDeleteவாங்க சின்ன அம்மணி! நான் அப்படி எல்லாம் செய்வேனா?
ReplyDeleteகதை நல்லாயிருக்கு ;))
ReplyDeleteகோபி,
ReplyDeleteவருகைக்கு நன்றி!!
liked it :)
ReplyDelete