Saturday, December 22, 2007

டான்ஸஸ் வித் உல்வ்ஸ் - செவ்விந்தியர் பற்றிய பார்வை

Dances with wolves என்ற நாவல் Kevin Costner இயக்கி நடித்து 1990-ல் திரைப்படமாக வெளிவந்து ஏழு அக்கெடமி விருதுகளை வென்றது. வட அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், குடியேற்றப்பகுதியின் எல்லைப் பகுதியை ஒட்டிய செவ்விந்திய கிராமத்தின் அருகில் தங்கியிருந்த அமெரிக்காவின் குதிரைப்படை அதிகாரியின் அனுபவமே கதை. பொதுவாக, அமெரிக்க Cowboy படங்களில் செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகளாகவும், கோழைகளாகவும் காட்டுவார்கள். இப்படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, செவ்விந்தியரின் உண்மையான பக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கதை முழுவதும், நாயகன் டன்பரின் பார்வையில் சொல்லப்படுகிறது. முற்றுப்பெறாத ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், காலில் அடிபட்டு படுத்திருக்கும் நாயகன் லெப்டினட் ஜான் டன்பர் கால் அகற்றப்பட்டு விடுமோ என தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். அவனுடைய தற்கொலை முயற்சி ஸ்பானியர்களை திசைத்திருப்ப அமெரிக்கப்படை வெற்றி பெறுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து டன்பர் தன்னுடைய சிஸ்கோ என்கிற குதிரையுடன் எல்லைப் புறத்திற்கு அனுப்பப்படுகிறான். டன்பருக்கு ஆளரவமில்லாத செட்விக் என்னும் இடத்தில் தனியாளாக பொழுதைக் கழிக்கவேண்டி இருக்கிறது. அவ்விடத்தில் சுற்றித்திரியும் ஒரு ஓநாயை டூசாக்ஸ் என்று பெயரிட்டு நட்பு பாராட்டுகிறான் டன்பர். இத்தகைய சூழ்நிலையில், டன்பர் சில சியோக்ஸ் செவ்விந்தியர்களை சந்திக்க நேரிடுகிறது. பிறகு சில சியோக்ஸ் செவ்விந்தியர்கள் சிஸ்கோவைக் கடத்திச் செல்ல முயல, சிஸ்கோ தப்பித்து வந்துவிடுகிறது. டன்பர் செவ்விந்தியர்களை தானே சந்திக்க முடிவு செய்து, சியோக்ஸ் கிராமத்திற்குச் போகும்வழியில் செவ்விந்திய உடையில் லக்கோடா மொழி பேசும் வித்பிஸ்ட் என்கிற மேற்கத்திய பெண் அடிபட்டுக் கிடப்பதைக் காண்கிறான். அவளை எடுத்துக் கொண்டு செவ்விந்தியரின் குடியிறுப்புக்குக் கொண்டு செல்கிறான். முதலில் எதிரியாக பாவிக்கப்படும் டன்பரை, பிறகு தொடரும் உரையாடல்கள் மூலம் நம்பிக்கைக்குரியவனாக ஏற்றுக்கொள்கிறார்கள் சியோக்ஸ் மக்கள். கிக்கிங்பர்ட் மற்றும் விண்ட் இன்ஹிஸ்ஹேர் போன்ற செவ்விந்தியர்கள் டன்பருக்கு நெருங்கிய தோழர்களாகிறார்கள்.

டன்பர் செவ்விந்திய வாழ்க்கைமுறை, வழக்கங்களுக்குப் பெரிய ரசிகனாகிவிடுகிறான். டன்பரை சியோக்ஸ் மக்கள் டான்ஸஸ் வித் உல்வ்ஸ் என்று செல்லமாக அழைக்கிறார்கள். உணவு, உடைக்காக தேவைப்படும் எருமைகளை வேட்டையாடச் செவ்விந்தியர்களுக்கு டன்பர் உதவுகிறான். பவ்னீ என்னும் வேறொரு செவ்விந்திய குழுவின் முற்றுகையிலிருந்து சியோக்ஸ் குடியிறுப்புகளை காப்பாற்ற மேலும் உதவ, முற்றிலும் சியோக்ஸ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செவ்விந்தியனாகவே மாறிப்போகிறான். பிறகு செவ்விந்திய முறைப்படி வித்பிஸ்ட்டை மணந்துகொண்ட பிறகு, சியோக்ஸ் குடியிறுப்பிலேயே டன்பரின் வாழ்க்கை நகர்கிறது. எதிர்காலத்தில் பாரிய அமெரிக்கப்படை வருவதால், குளிர்கால குடியேற்றத்தைத் தற்போதே நடத்துமாறு கூறிவிட்டு, டன்பர் தன்னுடைய கேம்பிற்குச் செல்கிறான். ஏற்கனவே கேம்பிற்கு வந்திருக்கும் அமெரிக்கப்படை சிப்பாய்கள் படையைவிட்டு ஓடிய deserter (absent without official leave) என நினைத்து டன்பரை அடித்து சிறைபிடிக்கிறார்கள்.

விசாரனைக்குக் கொண்டு செல்லும் வழியில், சியோக்ஸ் டன்பரை மீட்டுச்செல்கிறார்கள். தான் மேலும் செவ்விந்தியர்களுடன் இருந்தால் அவர்களுக்குத் தான் ஆபத்து என்று எண்ணி, கிக்கிங்பர்டிடம் விடைபெற்றுக் கொண்டு டன்பர் தன் மனைவியுடன் தனியே செல்கிறான். அவர்கள் செல்லும் வழியில், "டான்ஸஸ் வித் உல்வ்ஸ் என்றும் என் நண்பன்" என்ற விண்ட் இன்ஹிஸ்ஹேரின் கூவல் கேட்பதோடு படம் நிறைவடைகிறது.

  • டன்பர் பார்வையில், படத்தில் கதை அழகாக சொல்லப்படுகிறது.

  • எருமைகளை வேட்டையாடும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கும்.

  • சாதாரண ஹாலிவுட் படங்களைப் போலல்லாமல், செவ்விந்தியர்களை வேறொரு நல்ல கோணத்தில் அனுகியதால், பெரிதும் இப்படம் பாராட்டப்பட்டது.

  • Dances with wolves படம் தான் Western genre (cowboy movies) படங்களில் அதிகஅளவு ($184 மில்லியன்) விற்ற படம்.

  • சிறந்தபடம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, சிறப்புஒலி, படத்தொகுப்பு, திரைக்கதை போன்றவற்றிற்கு அக்கெடமி விருதுகள் பெற்றது.



எருமைகளை வேட்டையாடும் காட்சி


6 comments:

  1. விமர்சனத்திற்கு தங்ஸ் சார்... படத்த இனிமேலதான் பார்க்கனும்...

    ReplyDelete
  2. குட்டி நன்றாக விமர்சனம் செய்திருக்கிங்க...படத்தை நோட் பண்ணியாச்சி ;)

    ReplyDelete
  3. விக்னேஸ், கோபிநாத்...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  4. இந்த படத்தை சில வருடங்களுக்கு முன் ஸ்டார்-மூவீஸில் பார்த்தேன், அருமையான படைப்பு, செவ்விந்தியர்களை அழித்துத்தான் அமேரிக்கர்கள் அங்கு குடியேறினார்கள் என்ற விஷயம் அந்த படம் பார்த்த பின் தான் தெரிந்து கொண்டேன் ( படம் முடியும் தருவாயில் எஞ்சிய செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டார்கள் என பிண்ணனியில் குரல் வரும்!) , நியாபகப்படுத்தியதற்கு நன்றி, டிவிடி வாங்க வேண்டும்!

    ReplyDelete
  5. i saw this movie. very nice one.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய