இந்தியாவிற்கு விடுதலை கிடைப்பதற்கு முன் நாட்டில் நடக்கும் வெள்ளையர்களின் அநீதியை எதிர்த்துப்போராடுகிறான் ஒரு போராளி. நாட்டின் விடுதலைக்குப் பின் தன் மகனே நாட்டிற்கு துரோகம் செய்வது தெரிய வரும்போது வயது முதிர்ந்த காலத்திலும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு அவனை பிடித்துவர புறப்படுகிறான். தப்பிக்க நினைக்கும் மகனை சுட்டுவீழ்த்துகிறான். இந்தப் படத்தின் பெயர் 'இந்தியன் ' என்று தானே சொல்ல வருகிறீர்கள். அதுதான் இல்லை. படத்தின் பெயர் நாம் பிறந்த மண். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்து 1977ல் வெளிவந்தது. படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக கமல் தான் நடித்திருந்தார். என்ன தான் இந்தியன் படம் எடுத்த விதத்தில் வித்யாசமாக இருந்தாலும், படத்தினுடைய மூலக்கதை தழுவப்பட்டதே. சங்கரும் வழக்கம்போல லஞ்சம், ஊழல் என்று மேல்பூச்சு பூசிவிட்டு கதையை தன்னுடையதாகவே போட்டுக்கொண்டார். உண்மையில் இந்தியன் படத்தில் சுவாரசியமாக சொல்லப்பட்ட விடயம் கொலை செய்யப்படும்முறை. விதவிதமான கொலைகள். அவற்றை நாம் ரசிக்கவேறு செய்கிறோம். (அன்னியன் படத்திலும் இதேபோலத் தான் பல வித கொலைகள்). சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட வயதான கமல் செய்யும் சீரியல் கொலைகள். நாட்டில் நடக்கும் ஊழலைக் கண்டு கொலை செய்யத் தொடங்கியிருந்தால், தேசவுணர்வு என்று எதாவது சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தனக்கு நிகழும் ஒரு அசம்பாவிதம் காரணமாக சுயனலமாக கொலை செய்யத்தொடங்குவது, இறகு ஊழலுக்குத் தீர்வு கொலை என முடிவுசெய்வதெல்லாம் வயதான கமல் ஒரு சைக்கோபாதிக் சீரியல் கொலையாளி என்பதை உறுதிபடுத்துகிறது.ஆனால் ரசிகனுக்கு அவ்வுணர்வே வராத வண்ணம் தேசபக்தி, ஊழலுக்கான தண்டனை என மூடி மறைக்கப்பட்டிருக்கும்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியால் அரசன் ஒருவன் இறந்து போகிறான். அவன் தன்னுடைய காதலிக்காக ஜென்மம் ஜென்மமாக காத்திருக்கிறான். இது நாசர் இயக்கி வெளிவந்த 'தேவதை' படத்தின் கதை. இப்படம் 1992ல் கப்போலா இயக்கிய 'ட்ராக்குலா' படத்தின் அரைகுறை தழுவல். இந்தப் படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே "ஒரு நாள் அந்த ஒருநாள்" பாடல் மிகவும் பிரச்சிதம். இப்பாடலும் ஒரு தழுவல் என்றால் நம்புவீர்களா? 'டோட்டல் ரீகால்' என 1990ல் வெளிவந்த படத்தின் தீம் இசையின் பாதிப்பு இதில் இருக்கும். நீங்களே ஒப்பிட்டு கேளுங்கள்!
டோடல் ரீகால் படத்திற்காக ஜெரால்ட் கிங் கோல்ட்ஸ்மிதின் இசை
தேவதை படத்திற்கு இளையராஜாவின் இசை
நான் பள்ளிபடிக்கும் வயதில் அதிகம் விரும்பிப் பார்த்த படம் 'இணைந்த கைகள்'. இப்படத்தில் வரும் தீம் இசை மிகவும் பிரபலம். இது கூட 'ப்ரேக்கார்ட் பாஸ்' எனும் பியர்ஸ் ப்ரொன்சன் நடித்த படத்தில் வரும் இசையின் அப்பட்டமான தழுவல்.
இப்படத்துண்டில் இறுதியில் வரும் இசை
குட்டி பிசாசு,
ReplyDeleteகமல் இது பற்றி ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். ஷங்கர் இந்தியன் கதையைச் சொன்ன போது,
நீங்கல் நாம் பிறந்த மண் படம் பார்த்து இருக்கீங்களா? என்று கேட்டாராம்.
ஆனால் ஷங்கர் பார்க்கவில்லை என்று சொன்னாராம்.
முரளி
Deleteசுகமா? கருத்துக்கு நன்றி! சங்கர் உண்மை மட்டுமே பேசுவார்னு நான் நினைக்கவில்லை.
இந்தியன் படத்தை பத்தி ரொம்பவே வித்தியாசமான பார்வை, நீங்கள் சொல்லுற சைக்கோபாதிக் சீரியல் கில்லர் எண்ணமே யாருக்கும் வரவில்லை, எனக்கும் தான்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Deleteகுட்டிப்பிசாசு,
ReplyDeleteஜென்டில் மேன் படமே கமலின் குருவின் தழுவல் தான்.ஷங்கர் ஒரு ஹிட் கதை எடுத்து கூட கொஞம் சேர்த்துப்பார்.
காதலன் வழக்கமான ஏழைக்காதலன், பணக்காரக்காதலி ஃபார்மேட். ஆனால் இதில் காதலியோட அப்பா தீவிரவாதமும் செய்வதா பிட்டு சேர்ப்பாரே அது கூட ஒரிஜினல் இல்லை, நாகார்ஜுன் நடிச்ச தெலுகு படம் டிராக்(காதலன் போலவே)இதில் காமெடி என்னனா அதிலும் வெடிகுண்டு ,ஆயுதக்கடத்தல் செய்யும் ,ஆனால் நல்லவராக நடிக்கும் அப்பா கிரிஷ் கர்னாட் தான் :-))
பின்னர் அதையே உல்டா அடிச்சு ரட்சகன் எடுத்தாங்க அதிலும் அப்பா கிரிஷ் கர்நாட் தான் :-))
தமிழ் சினிமாவில் கதை என்பதே பழைய படங்களை பட்டி ,டிங்கரிங் பார்ப்பது அல்லது உலகப்பட டிவிடி தான் :-))
துள்ளாத மனமும் துள்ளும் விஜய் படம் விக்ரமனின் நான் பேச நினைப்பதெல்லாம்,இதில் என்ன குறிப்பிட வேண்டியது என்றால் அப்போ எழில் விக்ரமன் அசிஸ்டெண்ட் ,எனவே கதை விவாதத்தின் போது நிறைய சொல்லி இருக்கலாம், பின்னர் அதையே எழில் எடுத்து இருக்கலாம்.
தமிழ் சினிமாவை ஆராய்ந்தால் எல்லாம் காப்பியாவே இருக்கும்.
எம்ஜிஆர் நடித்த 1000 இல் ஒருவன் "captain blood" என்ற 1935 ஆம் ஆண்டு ஆங்கிலப்படத்தின் தழுவல் தான் :-))
உத்தமப்புத்திரன்(சிவாஜி) மேன் பிஹைன்ட் அயர்ன் மாஸ்க்.
எனவே கருப்பு வெள்ளைக்காலத்தில் இருந்து இந்தக்காப்பி அடிக்கும் கலாச்சாரம் உண்டு.
வவ்வால்,
Deleteமேலே சொன்னவை நானே (மண்டபத்தில் யாரும் எழுத்தித்தரவில்லை) கண்டுபிடித்தவை.
நீங்கள் சொல்வது போல சொன்னால் நிறைய சொல்லலாம். அவையெல்லாம் ஏற்கனவே பல தளங்களில் விவாதித்தாகிவிட்டது. பழைய படங்கள் நிறைய ஆங்கிலம், இந்திப் படங்களை தழுவியே எடுக்கப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தர், ஸ்ரிதர் சில படங்கள் சொந்தமாக எடுத்தாலும் பல படங்கள் காப்பியடித்தார்கள். இந்த விடயத்தில் மகேந்திரன் கொஞ்சம் சுத்தம் என்று நினைக்கிறேன்.
//ஜென்டில் மேன் படமே கமலின் குருவின் தழுவல் தான்.ஷங்கர் ஒரு ஹிட் கதை எடுத்து கூட கொஞம் சேர்த்துப்பார்.
Delete//
அப்படிப் பார்த்தால், இவை எல்லாவற்றுக்கும் பூர்வீகம் ராபின்கோட் கதைதான். (கமல் நடித்த குரு ப்டம் கூட ரீமேக் தான். தர்மேந்திரா நடித்து இந்தியில் வந்தது.)
//காதலன் வழக்கமான ஏழைக்காதலன், பணக்காரக்காதலி ஃபார்மேட். ஆனால் இதில் காதலியோட அப்பா தீவிரவாதமும் செய்வதா பிட்டு சேர்ப்பாரே அது கூட ஒரிஜினல் இல்லை, நாகார்ஜுன் நடிச்ச தெலுகு படம் டிராக்(காதலன் போலவே)இதில் காமெடி என்னனா அதிலும் வெடிகுண்டு ,ஆயுதக்கடத்தல் செய்யும் ,ஆனால் நல்லவராக நடிக்கும் அப்பா கிரிஷ் கர்னாட் தான் :-))//
ஏழைக்காதலன், பணக்கார காதலி அரதபழசான பார்மெட் தான். பழைய படங்களில் காதலியோட அப்பா ஊருக்கு நல்லவனாக நடிக்கும் பண்ணையாராக (கதாநாயகன் விவசாயியாக இருந்தால்), முதலாளியாக (கதாநாயகன் பாக்டெரி தொழிலாளியாக இருந்தால்) இருப்பார். மிஞ்சிபோனால் இறுதியில் மாட்டுவண்டி சேஸிங் இருக்கும். சங்கர் படத்தின் பட்ஜெட்டுக்கு எற்ப திரைக்கதை செய்பவர். அதனால் தான் காதலியோட அப்பா வெடிகுண்டு, ஆயுதக்கடத்தல் செய்பவர். இறுதியில் எலிகாப்டர் சேஸிங் இருக்கும்.
//ஜென்டில் மேன் படமே கமலின் குருவின் தழுவல் தான்//
Deleteகவிஞர் கண்ணதாசன் கதாநாயகனாக நடித்த கருப்புப்பணம் என்ற படத்தி மறு பிரதி
பிசாசு,
ReplyDelete\\நாம் பிறந்த மண்.\\ கதை எந்த படத்தோட தழுவலும் இல்லியா??!!
\\சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட வயதான கமல் செய்யும் சீரியல் கொலைகள். நாட்டில் நடக்கும் ஊழலைக் கண்டு கொலை செய்யத் தொடங்கியிருந்தால், தேசவுணர்வு என்று எதாவது சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தனக்கு நிகழும் ஒரு அசம்பாவிதம் காரணமாக சுயனலமாக கொலை செய்யத்தொடங்குவது, இறகு ஊழலுக்குத் தீர்வு கொலை என முடிவுசெய்வதெல்லாம் வயதான கமல் ஒரு சைக்கோபாதிக் சீரியல் கொலையாளி என்பதை உறுதிபடுத்துகிறது.ஆனால் ரசிகனுக்கு அவ்வுணர்வே வராத வண்ணம் தேசபக்தி, ஊழலுக்கான தண்டனை என மூடி மறைக்கப்பட்டிருக்கும்.\\ அட ஆமாம், சமுதாய நோக்கமில்லாம, தான் பாதிக்கப் பட்டதால அவரு பொங்கி எழராறு!! ஒரு விஷயம், இப்படியெல்லாம் ஊழல் எதிர்ப்ப், கருப்பு பணம் அது இதுன்னு படமெடுக்கும் ஷங்கர் கருப்பு பணம் பன்னாமியா இருப்பாரு!! #டவுட்டு. ஆனாலும், அந்தப் படம் பிராக்டிகலா இல்லை, குழந்தைங்க உயிர் என்னும்போது எப்படியாவது காப்பாத்திட்டு அதுக்கப்புறம் உன்னை வச்சிகிரண்டா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
Total Recall வீடியோ ஓடவில்லை பிசாசு, என்னன்னு பாரு. அப்படினா இளையராஜாவும் காப்பியடிச்சிருக்கலாம்னு சொல்றியா? எனகென்னமோ ஒரே சிந்தனை ரெண்டு பேருக்கு வந்திருக்கலாம்னு தோணுது. ஹி ..........ஹி ..........ஹி ..........
இணைந்த கைகள்- பிசாசு, எப்படி இவ்வளவு நுணுக்கமா கண்டுபிடிச்சே? அதுவும் இரண்டு படத்தையும் கனெக்ட் பண்ணியதே பெரிய விஷயமாச்சே!!
total recall முழுமையாக கேட்டால் புரியும். தேவதை இசையில் கொஞ்சம் சாயல் இருக்கு.
Delete// அப்படினா இளையராஜாவும் காப்பியடிச்சிருக்கலாம்னு சொல்றியா? எனகென்னமோ ஒரே சிந்தனை ரெண்டு பேருக்கு வந்திருக்கலாம்னு தோணுது.//
Deleteநான் காப்பி அடிச்சதாக சொல்லவில்லை. நீங்கள் சொல்வது போல இருக்கலாம்.