Saturday, August 25, 2012

'ஆப்கான்' மகன்


 Killing each other over imaginary friends

 'ஆப்கான்மகன்' படத்திலிருந்து நெஞ்சை நக்கர மாதிரி ஒரு சீன். 


சிவாஜி கணேசன் : 1400 வருஷமா வேல்கம்பையும் கத்தியையும் தூக்கிட்டு மதம் மதம்னு  சுத்திகிட்டு இருந்த பயக! ஒசாமா பின்லாடன் மனித வெடிகுண்டுக்கு ஆள் வேணுனு கேட்டப்ப ஓடிப்போய் முதல்வரிசையில  நின்ன முக்காவாசி பயக  நம்ம பயகதேன். இப்ப திடீர்னு ஆயுதத்தை தூக்கிபோட்டு அவன விஞ்ஞானம் பேச கூப்பிட எப்படி வருவேன். நீ படிச்சவனாச்சே! கூட்டிகிட்டுவா! ஆனா அவன் நிதானமாதேன் வருவேன்.

 


உட்டாலக்கடி ஒபாமா: எம்புட்டு மெதுவாய்யா! அதுக்குள்ள நான் பதவில இருந்து போயிடுவனே!

சிவாஜி கணேசன் : பதவிய விட்டு போ! எல்லாபயபுள்ளயும் ஒரு நாளைக்கு பதவியில இருந்து போகவேண்டியவந்தேன். பணத்தை போட்ட உடனே பலனை எதிர்பார்க்கலாமா! ஈமு திட்டதுல காசு போடுரேன்! இன்னைக்கு அவன் ஏமாத்துவேன் ! பிறகு கோகோ திட்டமுனு ஏமாத்துவேன்! பிறகு பொடலங்கா திட்டமுனு ஏமாத்துவேன்! ஆனா பணம், நான் போட்டது! ஏமாறது என்ன பெருமையா  ஒருத்தனோட கடம!

…உட்டாலக்கடி ஒபாமா : ஐயா! இல்லயா! விடுங்கயா! நான் அமெரிகா போறன்யா!

 சிவாஜி கணேசன் : நீ பெரிசா எலக்ஷன்ல ஜெயிக்கரதுக்காக …பெரிய ஏரோப்ளேன்  வச்சி ட்வின் டவர் எல்லாம் இடிச்ச அந்த காட்டுமிராண்டிபயலுகளுக்கு என்ன பண்ண நீ! எதாச்சும் பண்ணு! பிறகு இன்னொருமுறை நோபல் பரிசு வாங்கு! அந்த மிஷைல் சக்களத்திய கட்டிகிட்டு ஊரெல்லாம் சுத்து. என்ன இப்ப! போயேன்.


உட்டாலக்கடி ஒபாமா : இல்லயா! நான் எதாவது செய்வன்யா! என்னை நம்புங்கயா!

சிவாஜி கணேசன் : உன்னதானய்யா நம்ப முடியும் ! உங்க அண்ணன் புஷ்யா நம்ப முடியும். வேற யார் இருக்கா!


**********************************************************************************

Prometheus


Chariots of god என்ற புத்தகம்  வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து போனதையும், அவர்கள் இங்கு விட்டுச் சென்ற அடையாளங்களையும் பற்றி கூறுகிறது. அதாவது நாம் கடவுள்களாக, தேவர்களாக நினைப்பது இவ்வாறு வந்துபோன வேற்றுகிரகவாசிகளே என்பதை உறுதிசெய்வது போல புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு உலகில் வெவ்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட அதிசயங்களையும், கட்டிட சிறப்புகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், புராணங்களையும் எடுத்துக்காட்டாக்கி நூலாசிரியர் விவரிக்கிறார். ஆனால் இவையனைத்தும் பொய் என நிருபனமாகிவிட்டது.இதேபோன்ற மையக்கருத்தைக் கொண்டு ப்ரோமெதீயஸ் (Prometheus) திரைப்படம் வெளியாகியுள்ளது. ஏலியன் (Alien) தொடர்களின் ரசிகர்களுக்கு இப்படம் பெருத்த ஏமாற்றம். தொழிற்நுட்ப விடயங்களைத் தவிர்த்து படத்தில் சொல்லும்படி ஒன்றும் இல்லை.


ஏலியன் திரைப்படத்திற்கு பக்காவான திரைக்கதை, ஏலியனின் உருவ அமைப்பு (நீளமான தலை கொண்ட ஏலியன் - சுவீஸ் ஓவியர் H.R.Giger உருவாக்கியது, ஸ்பேஸ் ஜாக்கி), திரைக்கதையில் வரும் திருப்பங்கள் (அண்ட்ரொஐட், நெஞ்சை கிழித்துக்கொண்டு ஏலியன் வருவது) உட்பட  எல்லாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு ரிட்லி ஸ்காட் கையில் கொடுக்கப்பட்டது. அவரும் நோகாமல் படம் எடுத்து பெயர் வாங்கிவிட்டார். மாறாக ப்ரோமெதீஸில் இவற்றில் இருந்த எதுவுமே இல்லை.

படத்தின் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் எலியன் படத்தின் சாயலை தவிர்க்க எண்ணி, வேறொரு கிறுக்குத்தனமான ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை சுவாரசியமில்லாமல் தேமே என படம் நகர்கிறது இல்லை ஊர்ந்து செல்கிறது. 

**********************************************************************************

கொசுவர்த்தி சுத்தலாம் வாங்க 

கரகாட்டக்காரன் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடி வரும் முன்னாடியே, இது போன்ற ஒரு அனுபவம் நேர்ந்தது. நான் அப்போது 2வது படிக்கிறேன். என் தந்தை என்னை அழைத்து ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னார். அப்போது நேரம் இரவு 9 மணி இருக்கும். நான் வீட்டின் அருகே இருக்கும் கடைக்குச் சென்று, ஒரு சீப்பு வாழைபழம் கேட்டேன். கடைக்கார பாட்டியும் 6 - 7 பழங்கள் இருக்கும் ஒரு சீப்பைக் கொடுத்தார். நான் உடனே பாட்டியிடம் எதற்கு இவ்வளவு பழம், ஒரு சீப்பும் ஒரு வாழைப்பழமும் போதும் என்றேன். அந்தப்பாட்டியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டது. நான் கேட்பதாக இல்லை. கடைசியில் ஒரு சீப்பையும் ஒரு வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். நான் கொண்டு வந்த சீப்பையும் வாழைப்பழத்தையும் பார்த்து  சிரிக்கத்தொடங்கிய என் தந்தை ஒரு முப்பது நிமிடம் ஓயாமல் சிரித்தார்.  

***********************************************************************************

11 comments:


  1. Chariots of god என்ற புத்தகம் வாசித்தேன். ஆசிரியர் Eric von Daniken-ன் வேறு சில புத்தகங்களையும் வாசித்தேன். ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். சமீபத்தில் இந்த ஆசிரியர் எழுதியவைகள் பல பொய்யென்று வாசித்தேன். அடச் சே என்றாயிற்று.

    ReplyDelete
  2. \\நெஞ்சை நக்கர மாதிரி ஒரு சீன்\\ நல்லாயிருக்கு, சீப்பு வாங்கினதை எழுதிப் போட்டா விகடன்ல வரும்.....சினிமாவா கூட எடுத்திடுவாங்க .....!!

    ReplyDelete
    Replies
    1. ஜயதேவ்,

      கருத்துக்கு நன்றி!

      Delete
  3. சிவாஜி மேலயும் தேவர்மகன் மேலயும் ஏன் இந்தக் கொலவெறி நண்பா?
    :))

    ஆனாலும் ரசிக்கும்படி இருந்தது..

    ReplyDelete
    Replies
    1. கொலவெறி எல்லாம் இல்லைங்க. பிடித்த விடயத்தை தானே பகடி செய்யமுடியும்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய