Thursday, August 23, 2012

குடிய பற்றி...!

 மேலே பெர்னாட்ஷா சொன்னது போல, மதநம்பிக்கை ஒருவனுக்கு எவ்வாறு சந்தோஷத்தை அளிக்கிறதோ! குடியும் ஒருவனுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது!  இரண்டும் ஒன்றே!  வேறில்லை! மதவாதிகள் தன்னுடைய நம்பிக்கைகளை தூக்கியெறிந்தால் மட்டுமே,  குடிப்பவர்களுக்கு அறிவுரை வழங்க தகுதி உடைவராகிறார்கள்.

…ஜனகராஜ்: என்னா கண்ணு! அப்படி பாக்கிற! குடிச்சிட்டு ஒலரினுகிறானேனு பாக்கிறியா! அதான் இல்ல! குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சிங்கிறது அந்தக்காலம்... சரக்கை தொட்டுட்டா நாக்கு தவறினாலும் வாக்கு தவறமாட்டோம். என்னா சொல்லுறே! நீ மதத்தை வுடு நாங்க சரக்கை விடுறோம்.  நீ மதத்தை புடிச்சி தொங்கிக்கினு என்னைய கேள்வி கேக்காத! ஸோ! நீங்க அதுக்கு ரெடின்னா! நாங்க இதுக்கு ரெடி! புரிஞ்சிதா இல்ல இன்னும் மப்புல தான் கீறியா?



 பி...ஏ....பி...ஏ... பாபா...

…பாபா: நீ என்ன குடிப்பே?

…நபர் 1: Beer ங்க !

…பாபா: சீ..சீ .. தூ... வெளியே போ!

…பாபா: நீ என்ன குடிப்பே?

…நபர் 2: Halal Beer ங்க! …(கவுண்டமணி: ஊஸ் தட் ப்லாக் ஷீப் ! )

…பாபா: சீ..சீ... ஆ..தூ... வெளியே போ!

……பாபா: நீ என்ன குடிப்பே?


……நபர் 3: Whisky ங்க!

…பாபா: நீ இரு!

***********************************************************

…கேப்டன் சொல்லுறத கொஞ்சம் கேட்டுட்டுப் போங்க!!!


13 comments:

  1. வள வள என எழுதாமல் - நறுக் என எழுதிவிட்டீர்கள் . இனியும் புரியவில்லை என்றால் அவர்கள் பொய்யர்கள் என்பதில் ஐயமில்லை !!!

    மதம் ஒரு அபின் என எத்தனை முறை சொல்லியும் கேட்பாரில்லை !!!

    குடிகாரனுக்குக் கூட மறுவாழ்வுக் கொடுத்துவிடலாம், ஆனால் மறுமையில் சுகம் காணும் மதக்காரனுக்கு ஒரு மண்ணும் இல்லை !

    ReplyDelete
    Replies
    1. சொல்லி யாரும் திருந்தப் போவதில்லை. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குறது போல நடிக்கிறவனை எழுப்ப முடியாது.

      Delete
  2. குட்டிப்பிசாசு,

    அவன நிப்பாட்ட ச்சொல்லு நான் நிப்ப்பாட்டுறேன்னு டைப்பில் முதல் பின்னூட்டமா நான் நீங்க சொன்னதை தான் சொல்லி இருந்தேன்.

    நாகரீகமாக சொன்னால் மஞ்ச மாக்கான்னு நினைச்சுக்கிறாங்க அதனால அப்போ அப்போ தூங்கிட்டு இருக்க மிருகத்த தட்டி எழுப்ப வேண்டியதா இருக்கு.


    பல இடத்தில சொன்னது தான், அமெரிக்கா போன்ற நாட்டில் காப்பி மேக்கர் போல பீர் மேக்கர் மெஷின் எல்லாம் விக்குறாங்க, வாங்கி வீட்டில தயாரிச்சுக்கலாம்.

    அதே போல விஸ்கியும் தான்.


    சுவிஸ்ல எல்லாம் குடிசைத்தொழில் போல எல்லாம் வீட்டில் விஸ்கி ,சாக்கலேட் தயாரித்து வீட்டுக்கு முன்னரே விற்பாங்க, ஹோம் மேட் சரக்குன்னு ஃபேமஸ், டூரிஸ்ட் போறவங்க எல்லாம் கண்டிப்பாக இதை வாங்குவாங்க.

    அங்கே எல்லாம் மதுவால் என்ன பிரச்சினை வந்துச்சு?

    இந்தியாவிலும் மதுவிலக்கு செய்யாமல் பெரிய நிறுவனங்கள் மட்டும் தயாரிக்க அனுமதி கொடுப்பது தான் தப்பு, தயாரிக்கும் உரிமை அனைவருக்கும் கொடுக்கணும்.

    home brewing is a hobby 14 நாட்களுக்கு முன்னர் ஊரல் வச்சா தான் சரக்கு கிடைக்கும், எனவே அமெரிக்காவில் அனுமதி இருந்தாலும் , செய்ய சோம்பேறிப்பட்டுக்கிட்டு கடைக்கு தான் மக்கள் போகுது.

    நம்ம நாட்டிலும் விருப்பப்பட்டவங்க தயாரித்துக்கொள்ள அனுமதி தரணும் ஆனால் முதலாளித்துவ அர்சியல்வாதிகள் அப்படி செய்ய மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பிரான்ஸில் இருக்கும் என்னுடைய மச்சானும் வீட்டு தோட்டத்தில் விளையும் பழங்களில் வைன்கள், ஜாம்கள் செய்வார். அது தோட்டவேலை செய்வது போல ஒரு பொழுதுபோக்கு. வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பார்கள்.

      Delete
  3. மேற்கண்ட பின்னூட்டம் எதுக்கு சொன்னேன் என்றால், அமெரிக்காவில் ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் இருக்காங்க அவங்க எல்லாம் இதனை கண்டித்தார்களா, இல்லை கெட்ட பழக்கம் விடனும்னு அறிவுறை சொன்னாங்களா, அங்கே போனால் மட்டும் பொத்துனாப்போல இருக்கிறது, இங்கே ஊரு நாயம் பேச வேண்டியது ,அதற்காகவே இவ்வுதாரணம்.

    ReplyDelete
  4. Don't know when will people stop quoting US, Europe, X,Y,Z for anything and everything. Liquor consumption is something that MUST NOT BE ENCOURAGED. But in our country, the Govt is selling it , so no advice will have any effect on the common man.
    1. Alcohol consumption is not necessary for our climatic conditions.
    2. How many consumers show constraint in consumption?. How many people know their limit?
    3. Most of the consumers in India do not have any social responsibility, Do people avoid driving if they had a drink too many?
    4. Does the seller have any responsibility socially?. Do they refuse to sell liquor to the under aged?.
    None of us realise the consequences of what is happening now. We are creating a whole generation of drunkards. Think how beneficial it will be to the future of the nation.
    Well you have compared religious faith and liquor,to say the least, both are detrimental to the society when it exceeds the limit.

    ReplyDelete
    Replies
    1. point 2, read "restraint" in place of constraint

      Delete
    2. //Well you have compared religious faith and liquor,to say the least, both are detrimental to the society when it exceeds the limit.//

      …புரிதலுக்கு நன்றி!

      Delete
    3. குடி என்பது கேடு தான் என்பதில் ஐயமில்லை !

      பலர் நினைப்பது போல தமிழர்களில் குடி என்பது ஆரியர் . வெள்ளையர் போன்றோராலும் ஏற்பட்டது என. உண்மை அதுவல்ல. தமிழர்களின் கலாச்சாரத்தில் குடி என்பது ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பௌத்தமும் / சமணமும் போராடி போராடி தோற்றது தான் மிச்சம் ---

      கள் பருகுதல் காலம் காலமாகவே இருந்திருக்கின்றது. அவற்றை தடை செய்வதால் ஒழியும் என நம்பி தடை செய்தும் பார்த்தார்கள் - கலாச்சார மயக்கம் அதன் தாக்கம் நம்மில் இருந்து போகவில்லை என்பதைத் தான் கள்ளச்சாராய சம்பவங்கள் உணர்த்தின .. என்பதால் கள்ளை தடை செய்துவிட்டு சாராயக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன.

      குடி கேடு - ஆனால் குடிப்பவர்கள் குடியை நிறுத்த முடியவில்லை - அப்போ என்னதான் தீர்வு - அளவறிந்து குடிப்பது மட்டுமே !!!

      கலாச்சார பரிணாமத்தால் அது இல்லாமல் போனால் மட்டுமே குடி இல்லாமல் போகும்.
      மதுவிலக்கு கொண்டு வந்தாலும் கூட --- இரகசியமாக மேன்வர்க்கம் இறக்குமதி சாராயம் குடித்துவிட்டுப் போகும், கீழ்வர்க்கம் கள்ளச்சாராயம் பருகி சாவும் !!!

      வரன்முறையோடு மதுவை அனுமதிப்பது மட்டுமே முடிந்தவரை தீர்வாக அமையும் ...

      அழகன் சொல்வது போல வரன்முறைகள் ஏற்படுத்துவது தான் சாலச் சிறந்தது ...

      கடைதிறக்கும் நேரத்தை குறைப்பது ! வயது வராதோருக்கு விற்பதை தடுப்பது !

      நிறைய கடைகள் திறப்பதை தடுப்பது ! குடித்துவிட்டு வாகனம் செலுத்துவதை தடுப்பது !
      ஒருவர் எந்தளவு வாங்க வேண்டும் என உச்சவரம்புக் கொண்டு வருவது !

      இப்படித் தான் செய்ய வேண்டி இருக்கும் ... !!!

      Delete
  5. வவ்வால்!மேற்கத்திய நாடுகளுக்கு கலாச்சாரம்,புவியியல்,பொருளாதாரம் என்ற காரணங்கள் இருக்கின்றன.நமக்கு இந்த மூன்றுமே பிரச்சினை.நீங்க் சொல்ற மாதிரி முதலாளிகளுக்கு எதுக்கு சம்பாதிச்சு கொடுக்கனும்.வேணுமின்னா காய்ச்சுக்கோன்னு விட்டுப்பாருங்க.நீங்க சொல்லும் அமெரிக்க சோம்பேறித்தனம்தான் அப்பவும் ஜெயிக்கும்.

    ReplyDelete
  6. Azhagan சொன்னத அப்படியே ரிபீட்டு......... சாரயக்கடைகளால் தமிழ் நாடு எவ்வளவு சீர்கெட்டுப் போச்சுன்னு புள்ளி விவரத்தோட பாத்ததுக்கப்புரமும் இந்த நிலை சரியா பிசாசு? திருவள்ளுவர் ஏன் குடி வேண்டாம்னு சொன்னார்னு யோசிக்க மாட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஒன்று நான் குடிப்பதில்லை. இன்னொன்று குடிப்பது என்னுடைய உடலுக்கு ஒத்துப்போவதில்லை. ஆதலால் குடிப்பது, புகைபிடிப்பது அரவே இல்லை. இதுவரை தொட்டதே இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். கல்லூரி படிக்கும் காலத்தில் குடிப்பதுண்டு. ஆனால் பழக்கமாக வைத்துக் கொண்டதில்லை. வேலைக்கு வந்த சமயம் சிலர் சும்மா கம்பெனி கொடு என்பார்கள், காசு கூட அவர்கள் தருவதாக சொன்னாலும் குடிப்பதில்லை.

      வெறும் பீர் குடிச்சா தப்பு, ஹலால் பீர் குடிச்சா ரொம்ப நல்லது என்று டுபாக்கூர் சொல்லிகிட்டு இருக்கு. அதற்கான பதில் தான் இது. மற்றபடி நான் மேலே பதிவில் சொன்னவற்றை, பதிவுலகில் நடந்த சில நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்தி தான் புரிந்து கொள்ளவேண்டும்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய