Sunday, December 16, 2007

எவனோ ஒருவன்

சங்கர் இதுவரை தனது படத்தில் (அவரு எங்க பட எடுத்தார்! பாப்ஆல்பம் தான் போடுரார்) சொல்லனும் என்று நினைத்து, சொல்ல முடியாத திரைக்கதை. குத்துப்பாட்டு நம்பி படம் எடுக்கும் காலத்தில், பாட்டு இல்லாத ஒரு படம். ர.மாதவனின் (அப்படித்தான் படத்தில் வருகிறது!) அற்புத நடிப்பு. மாதவன் இதுவரை நடிக்காத ஒரு கதை, ஏற்றிராத ஒரு வேடம். சீமான், சங்கீதா என எல்லோரிடமும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு நேர்மையான குடும்பஸ்தனின் வாழ்க்கையில் மனைவி கேட்கும் சில கேள்விகள் புகுந்து அவனின் பாதையை மாற்றிபோடுவதே கதை. குளிர்பானத்திற்கு 2 ரூபாய் அதிகமாக விற்கும் இடத்தில் துவங்கி, காவல்துறையின் ஒழுங்கினம், பாதையில் பைக் நிறுத்துவது, போதைப்பொருள், மருத்துவமனையில் நிகழும் பிரச்சனை என எல்லாவற்றையும் உடைத்தெறிகிறார். பிறகு என்ன? ஒரு பக்கம் காவல்துறை தேடல், மனைவி குழந்தைகளோடு ஒரு பக்கம் புலம்பி அழ, நாயகன் தன் வழியில். எல்லாருக்கும் இருக்கும் சமுதாய சமத்துவ உணர்ச்சி மேலெழும்பி மறுபடியும் நாயகன் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதே முடிவு. முடிவில் சமூக இன்னலுக்கு வன்முறை தீர்வல்ல என்று கூறுவது இது ஒரு மசாலாப்படம் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்துகிறது. கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது, ஆனால் நல்லப்படத்தைப் பார்ப்பதற்கு இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.

காவல்துறை அதிகாரியாக வரும் சீமான் சங்கீதாவிடம் விசாரணை நடத்துவது காவல்துறை பெண்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம். கதாநாயகன் ஒரு பிராமண இளைஞனாகக் காட்டுவதற்கு மாதவன் நாமம் சாத்திக்கொள்வதையோ, சந்தியாவந்தனம் செய்வதையோ (சங்கர் படத்தில் வருவது போல) காண்பிக்காமல் வெறும் பேச்சில் மட்டும் உணர்த்தி சராசரி தமிழனாக உலவவிடுவது சிறப்பு்.

என்னவென்று தெரியவில்லை சமீபத்தில் வந்த எல்லாப்படங்களும் யதார்த்தமான, அருமையான படங்களே தமிழில் வந்துள்ளது. இது தான் தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்கு ஆரோக்கியம். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்களில் வரும் படங்கள் மத்தியில் ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன் படங்கள் அத்திப்பூக்கள் தான். கண்டிப்பாக பார்க்க கூடிய படம். டோண்ட் மிஸ் இட்!!

11 comments:

  1. I did not watch that film yet. But way of view for the film motivates me to watch it. And this film has won awards in another languge. madathavan has re made that. Ok, Thanks...

    ReplyDelete
  2. I did not watch that film yet. But the way of view for the film motivates me to watch it. And this film has won awards in another language. madathavan has re made that. Ok, Thanks...

    ReplyDelete
  3. நிச்சயமாக நல்லதொரு திரைப்படம்.தனக்கு சொல்ல முடியா ஏக்கத்தை காது கேளா,வாய் பேசமுடியா ஏழைச்சிறுவனிடம் குமுறித்தீர்த்து கடவுளுக்குக் கடிதம் எழுதும் இடத்தில் அநாயாசமாக உயர்ந்து நிற்கிறார்கள் மாதவனும்,இயக்குனர் நிஷிகாந்தும்.

    ReplyDelete
  4. puladora (தமிழ்ல இதை எப்படிச் சொல்லுரது, புளியோதரா என்றா?) நன்றி!!

    ReplyDelete
  5. //அவரு எங்க பட எடுத்தார்! பாப்ஆல்பம் தான் போடுரார்) //
    kuttipisasu touch

    ReplyDelete
  6. வாங்க முரளி! வணக்கம்!!

    ReplyDelete
  7. \\கண்டிப்பாக பார்க்க கூடிய படம். டோண்ட் மிஸ் இட்!!\\

    பார்த்துட்டேன்..ராசா உன் விமர்சனமும் நன்றாக இருக்கு படம் போல ;))

    ReplyDelete
  8. சீக்கிரமே பார்த்துவிட்டு பதிலெழுதுகிறேன் - பரிந்துரைக்கு நான்றி

    ReplyDelete
  9. பார்த்து விட்டேன் - அருமையான படம் - யதார்த்தம் - ர.மாதவனின் நடிப்பு - சீமானின் காவல் துறை அதிகாரி நடிப்பு - பேச்சு - இருதலைக் கொள்ளி எறும்பாக படும் பாடு - சங்கீதா - நடுத்தர வர்க்கத்தின் பெண் படும் பாடு - பாடல்களே இல்லாத படம் - வன்முறை இல்லாத படம் - சண்டைக் காட்சிகள் - குத்துப் பாட்டு நடனங்கள் இல்லாமல் ஒரு படம் வெற்றி பெறுகிறது. அருமை அருமை - மனதைப் பாதித்தது. சீமானின் பேச்சு உண்மை. பரிந்துரைக்கு நன்றி - நல்லதொரு படம் பார்த்தேன்.

    ReplyDelete
  10. Isn't this an "uttalakkadi" of Michael Douglas' film "Falling Down"???
    Idhukku poyi yaen ivvlavu pullarippu????

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய