மாசுபடுதல் தெற்காசியாவின் நெல்சாகுபடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஆராய்ச்சி குழுவொன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபடுதலில் பெட்ரோலிய எரிபொருள்களால் உண்டாகும் வாயுக்களே முக்கிய காரணியாக அமைகிறது. 1980 முதல் இந்தியாவில் முக்கிய உணவுப்பொருட்களின் சாகுபடி குறைந்து வருகிறது. உலகில் இதுபோன்ற பிரச்சனையால் தெற்காசியாவும் அதிகம் பாதிப்படையவுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வானத்தை ஆக்கிரமிக்கும் மாசுப்பொருள்களான பசுமையில்ல வாயுக்கள், சிறுதுகள்கள் மற்றும் புகை பெட்ரொலிய பொருட்கள் எரிவதால் பெரும்பாலும் உண்டாகின்றன. இவை சூரிய கதிர்கள் பூமியடைவதையும் வெகுவாக தடுக்கின்றன மழைபெய்தலையும் குறைக்கின்றன.
தற்போது, வரலாற்று நெல்சாகுபடி தகவல்கள் மற்றும் காலனிலை அமைப்பின் மூலம் நெல்சாகுபடி குறைவில் மாசுபடுதலின் பெரும்பங்கை தெளிவாக ஆராயப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. வானிலுள்ள “பழுப்பு மேகம்” எனப்படும் மாசுமண்டலம் 1985 முதல் 1998 வரை இல்லாதிருந்தால், நெல்சாகுபடி 11%-ஆக உயர வாய்ப்பிருப்பதாக கலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆரய்ச்சியாளர் கூறியுள்ளார். மேலும் அவ்வறிக்கையில், இத்தகைய மாசுமண்டலம் குறைவதால் நெல்சாகுபடி அதிகரிக்கும் என மேலும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, க்ளோபல் வார்மிங் மற்றும் காற்று மாசுபடுதல் வெறும் ஒரு தனிநாட்டிற்கானதல்ல, உலகிற்கானது. அடுத்ததாக இவ்வாராய்ச்சிக்குழு சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆய்வை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மீது படர்ந்துள்ள பழுப்புமேகத்தின் நாசா செயற்கைக்கோள் படம்
மாசுக்காட்டுப்பாடு பத்தி இனிமேல அடிக்கடி நல்ல தகவல்களைப்பற்றி எழுதலாம்னு இருக்கேன்!!
ReplyDeleteஉருப்படியான தகவல்!!
ReplyDelete//மாசுக்காட்டுப்பாடு பத்தி இனிமேல அடிக்கடி நல்ல தகவல்களைப்பற்றி எழுதலாம்னு இருக்கேன்!!//
அப்பிடியே கும்மி கட்டுப்பாடு பத்தியும் எழுதப்படாதா? :)
காயத்ரி கட்டுப்பாடு பத்தி வேண்டும்னா எழுதுரேன்! ஊஊஊஊ..,..
ReplyDeleteகாயத்ரி சொன்னதை நான் repeatuuu
ReplyDeleteசேசே...என்னாது ரிப்பீட்டு!!
ReplyDelete//காயத்ரி கட்டுப்பாடு பத்தி வேண்டும்னா எழுதுரேன்//
ReplyDeleteஹா! காற்றுக்கேது கட்டுப்பாடு?
காயத்ரி,
ReplyDeleteவளி மண்டலம் தாண்டினால் காற்று இல்லீங்க! ஆனா அங்கயும் நீங்க இருப்பீங்கனு நினைக்கிறேன்...(சொல்லமுடியாது இந்த பொன்ணப்பத்தி)!!
யோவ் பிசாசு மொதல்ல பின்னூட்டம் மாசுபடுதலை சரி செய்.
ReplyDeleteகும்மிய நிறுத்து...
இப்படிக்கு
கொள்ளி கருப்பன்
சரிமா கொள்ளி
ReplyDelete