பாசக்கார குடும்பத்தோட அடாவடி சந்திப்பு எங்கே? எங்கே? என்று எல்லாரும் கேட்கிறாங்க? ஆனால் எங்கே சந்திப்புனு இன்னும் சொல்லாம கண்மணி அக்கா ரகசியமா வச்சிட்டு இருக்காங்க. சரி அத விடுவோம்!! நமக்கு எதுக்கு மேலிடத்து பொல்லாப்பு. கண்மணி அக்கா கலந்துகிட்டா மங்கை கட்டவுட், பேனர் செலவு ஏத்துகிறதா சொல்லி இருக்காங்க. குட்டிபிசாசு சோறு ஓசில சோறு போட்டா வரேனு சொல்லி இருக்காம். அய்யனார் காந்திசிலை பக்கத்தில் சந்திப்ப வச்சிக்கலாம்னு சொல்லி இருக்கார். அதுமட்டுமில்லாமல், அங்க சந்திப்பு நடத்த ‘பில்லா, ரங்கா’ படத்துல வர மாதிரி கோட்வர்ட் இருக்காம். காந்தி சிலை பக்கத்தில் போய் “எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்”னு கேட்கனுமாம். அதுக்கு பதிலா மத்தவங்க “செருப்ப கால்ல தான் போடணும்”னு சொல்லுவாங்களாம். இப்படி நிறைய பில்டப்போட சென்னை சந்திப்பு நடக்கவிருக்கிறது.
இடம்: காந்திசிலை
இம்சைகள்: பாசக்கார குடும்பம்
(சோத்துக்கு ஆசைப்பட்டு குட்டிபிசாசு இரவே வந்து பீச்சுல படுத்துட்டு, காந்திசிலை பக்கத்தில் பசியோட நின்னுட்டு, போறவன்..வரவன்..எல்லாரையும் கோட்வேர்டு சொல்லி இம்சை பன்ணிட்டு இருக்கு)
கு.பி.: எட்டுகால் பூச்சிக்கு எத்தனைகால்?
சுண்டல் விக்கிரவன்: மூஞ்ச பாரு! சாவுகிராக்கி! காலங்காத்தால ஏண்டா என் உயிர வாங்குர. போவும்போதும் வரும் போதும் சும்மா இதே கேள்விய கேட்டு கடுப்பேத்தினு கீற! மவனே இன்னோரு தபா கேட்ட, கேக்கிர வாய கீச்சி புடுவேன்!
குட்டிபிசாசு திட்டு வாங்கி முடித்த பிறகு, அந்த பக்கம் வந்த ஒரு பொண்ணப்பார்த்து குட்டிபிசாசு இதே கேள்விய கேட்க, அந்த பொண்ணு “கோழிக்கு ரெண்டு கால்”னு பதில் சொன்னது. யாருனு உங்களுக்கு தெரிஞ்சி இருக்குமே! சாட்ஷாத் நம்ம காயத்ரி தான்! மன்னிக்கவும்... கவிதாயினி காயத்ரி. கொஞ்சநேரத்துல பாசமலர் ஒருத்தர் வந்தாங்க. குட்டிபிசாசு உடன்பிறப்ப பார்த்து மலைத்துப்போய் நின்னுட்டு இருந்தது. நடுவுல புகுந்த காயத்ரி “மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறுவேறு பாதையில் போய்விட்டன! அவை ஒன்ரோடொன்று பார்த்துக்கொள்ளும்போது பேசமுடியவில்லையே!”னு ஒரு டயலாக் விட, ஒரே ஆனந்தகண்ணீர்!! வந்தது யாருமில்ல நம்ம கண்மணி அக்கா தான்.
சிறிதுநேரம் கழித்து பஜனைப்பாட்டோட காவி தறித்து ஒரு சாமியார் வந்தார்.
கு.பி.: காசு எதுவும் இல்ல, வேற எங்கயாச்சும் போங்க!!
சாமி: குழந்தாய் குட்டி பிசாசு!
கு.பி.: என்னோட பேரு உங்களுக்கு எப்படி தெரியும்
சாமி: என்னை யாரென்று தெரியவில்லையா! நான் தான் சென்னை சந்திப்பின் சிறப்பு விருந்தினன் தவத்திரு ஸ்ரீஸ்ரீ அபிஅப்பா சுவாமிகள்
சாமி: இந்தா பிரசாதம்!!
கு.பி.: என்ன சாமி! பிரசாதம்னு சொல்லிட்டு விபூதி தரீங்க! பொங்கல், புளியோதரை எல்லாம் தர மாட்டிங்களா?
சாமி: நீ ஓசியில் உண்டகட்டி வாங்கி சாப்பிடுரன் போல, உனக்கு விபூதியே அதிகம்! பொங்கல், புளியோதரை வேண்டுமென்றால் சரவணபவனுக்கு போய் சாப்பிடு, இப்படி ஓசி சோத்துக்கு அலைவது இழுக்கு!!
அந்த சமயம் பார்த்து பாசக்கார கொலைவெறி கொள்கை வீரர்கள் கும்பலாக வந்தனர். முத்துலக்ஷ்மி, சென்ஷி, இராம், கோபி, இம்சையரசி, ஜி என எல்லோரும் வந்தனர். இந்த கூட்டத்தைப்பார்த்து எதோ உத்தரவு வாங்கம மாநாடு நடத்தப்போரங்கனு உடனே போலிஸ் வந்துவிட்டது. குட்டிபிசாசும் அபிஅப்பாவும் திருதிருவென்று விழிக்க, ரெண்டு பேரயும் சந்தேகத்தின் பேரில் போலிஸ் அழைத்துச்சென்றது. மறுநாள் காலை தினத்தந்தியில் “சந்தேகத்திற்குரிய சாமியரும் சீடனும் காந்திசிலையருகே கைது” என்று போடப்பட்டு, பருத்திவீரன் படத்தில் வருவதுபோல, கீழே சாமிஜியும், குட்டிபிசாசும் குத்துகால் போட்டு அமர்ந்து இருந்தனர்.
கண்மணி அக்கா,
ReplyDeleteதலைப்பு உங்க டிப்ஸ் தான்!! மன்னிக்கவும்!!
இது என்ன எங்கனால படிக்க முடியுமானு டெஸ்ட் பண்ணவா இப்படி ஃபாண் ட் அண்ட் கலர்..
ReplyDeleteநாங்க எல்லாம் படிச்சிட்டோம்....
இதுக்கு சின்னதா வேற ஃபாண்ட் இல்லையா பிசாசு குட்டி
இப்ப மாத்திட்டேன்!! பாருங்க சரியில்லாட்டி சொல்லுங்க!!
ReplyDeleteஉயர்திரு.அனானி,
ReplyDeleteதுணிச்சலுடன் பெயருடன் வரவும், அதைவிடுத்து அனானியாக வருவது தமிழ்மரபன்று!!
intha pathivu saamiyaarukku arpanikkapadukirathu
ReplyDeleteஅப்போ பதிவர் சந்திப்பு சிறையிலதானா.சரி அங்கே சாப்பாடு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க
ReplyDeleteசின்ன அம்மணி,
ReplyDeleteஅச்சு சோறு, கீரை குழம்பு!
அட்டகாசம் யா குட்டி பிசாசு
ReplyDeleteஅய்யனார்,
ReplyDeleteசந்திப்புக்கு வரதான் முடியல!! அட்லீஸ்ட் ஒரு போஸ்ட் போடுறேன்
குட்டி! கலக்கிட்ட போ! இப்டிதான்யா இருக்கனும்....குடும்ப பெருமைய இப்டிதான்யா காப்பாத்தனும் சபாஷ்:-))
ReplyDeleteabiappaa,
ReplyDeletenandri!! vaazththukkal!! kandippa naan kudumba manathe kaappaththuren. payappadathinge.
நீங்க எல்லாம் நிஜமாவே எங்க எப்ப சந்திச்சிக்க போறீங்க..ஒரு பதிவுல 24 ந்தேதி காந்திசிலை ன்னு போட்டு இருக்கு.. நீங்க 23ந்தேதி காந்திசிலை ன்னு சொல்றீங்க..
ReplyDeleteதலைய இப்பவே சுத்துது. .இது எந்த காந்திசிலை..??
kavitha akka,
ReplyDeletenaan eppa sonnen June,23-nu. enakku idamum theriyathu, neramum theriyathu, ennale varavum mudiyale.
pesame palaya central jail pakkathil vachchi irukkalaam. pasakkaara kudumbaththukku nichchayam therinji irukkum.
ReplyDeleteநடைபெறாத ஒரு சந்திப்பைப் பற்றி பதிவிட்டதற்காக குட்டிபிசாசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...
ReplyDeleteமேலும் காந்திக்கு அடுத்தப்படியாக இருக்கும் தமிழினச் சிங்கம், இந்தியச் செம்மல், துபாய் துரோகி.. ச்சே.. தியாகி அபிஅப்பாவை சிறைக் கம்பி எண்ண வைத்த குட்டிபிசாசை பெங்களூர் பாசகார குடும்பம் சார்பாக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்...
(ஸ்மைலி போடவில்லை...:)))
@ ஜி,
ReplyDeleteகண்டிங்க! கண்டிங்க! நல்லா கண்டிங்க!!
பதிவு நல்லாருக்கு.ஆனா சந்திப்புக்கு முன்னமே ஜெயிலுன்னா மக்கா ஓடிடப் போறாங்க.எதுக்கும் அபிஅப்பா பாஸ்போர்ட்ட வங்கி வச்சிடுங்க.
ReplyDeleteபிசாசே.. அடங்க மாட்டே நீயி? :)))
ReplyDeleteஏங்க இந்த பிசாசுக்குட்டிய கலாய்க்க நம்ம குடும்பத்துல யாருமே இல்லியா? கண்மணி அக்காஆஆஆஆ...
@ கன்மணி அக்கா,
ReplyDeleteமிக்க நன்றி!! கவலை படாதிங்க. ஜாமிங்ல எடுக்க நீங்க இருக்கீங்க தானே!!
@ காயத்ரி,
ReplyDeleteஏன் கோபம் படுரீங்க!! சரி, உங்களுக்கு கோழிகால் பிடிக்காது போதுமா! உங்களுக்கு எட்டுபூச்சிகால் தான் பிடிக்கும்.
குட்டி பிசாசு சூப்பர், சும்மா பேயாட்டம் போட்டு இருக்கே.
ReplyDelete