Sunday, June 17, 2007

நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து!!

ஒருத்தன் படிச்சத மறக்கலாம், ஆனா குடிச்சத மறக்க முடியுமா?

அதுக்குதான் இந்த இடுகை!


தண்ணியடிக்கிறது கூட ஒரு கலை தான். இதை நல்ல ஒரு குடிமகன் கண்டிப்பாக ஒத்துக்குவான். என்ன சரக்கு, எந்த காலத்துல, என்ன மிக்சிங்கோட, என்ன சைட்டிஷோட, எந்த நண்பனோட, யாரோட காசுல, எங்க அடிக்கணும்னு இந்த பட்டியல் நீளும்.நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது தான் இந்த பழக்கமெல்லாம் இருந்தது. இப்ப இல்ல! (உண்மையா! திருப்பதி லட்டு சத்தியமா! திருனெல்வேலி அல்வா சத்தியமா! இப்ப அடிக்கிறது இல்ல அன்பு மிக்கவரின் வேண்டுகோளுக்கினங்க விட்டுட்டேன்). ஆனா அந்த அனுபவம் ஒரு கல்வெட்டு மாதிரி.நாங்கெல்லாம் அப்ப இந்த சொல்லொன்னாகலையில் கிங். நானும் என்னோட அறைதோழன் சின்னாவும் தான் அடிப்போம்.அப்ப பீர் 60 ரூபாய். விஸ்கி பிபி கோல்ட் (இது என்னோட உள்ளங்கவர்ந்த பிராண்ட்) 80 ரூபாய் இருந்தது. பெரும்பாலும் ரம் தான், ஏனென்றால் அது புல் 120 ரூபாய் தான். இரவு 7 மணிக்கு மேல தான் சரக்கு வாங்குவோம். எங்களுக்கு தெரிஞ்ச ஒரு மிலிட்டரி மாமா, அவரிடம் தான் வாங்குரது.அவர் தேசத்துக்கு சேவை செய்தாரோ இல்லயோ எங்களுக்கு செய்தார். எங்க வார்டன்க்கு நாங்க வச்ச பேரு ஸ்கெலிட்டன் (ஆள் சும்மா கம்பிகட்டு கணக்கா இருப்பாருஅதனாலதான்). பாட்டீல் எந்த படுபாவியாவது பார்த்தால், வார்டனிடம் போட்டுகொடுத்துவிடுவான். அதனால அதை உடனே பக்கெட் போட்டு மூடி வச்சிடுவோம். ஹாஸ்டல் மெஸ் சாப்பாடு கொண்டு வந்து ரூம்ல கரெக்டா வச்சிப்போம். 10 மணி ஆன பிறகு கொஞ்சம் ஆள்நடமாட்டம் குறையும், அப்பதான் அரங்கேற்றம் வச்சிப்போம்.

எங்க அரங்கேற்றம் பத்தி ஒரு விளக்கம்:

தேவையான பொருட்கள்:

1. பக்கெட்(Bucket)

2. 2 கிளாஸ் (குடிக்கும் நபர்களைப்பொருத்து)

3. சரியான அளவு சோடா (அ) தண்ணீர் (பெப்ஸி, கோக், ஸ்ப்ரைட் வசதியகேற்றபடி)

4. 5 (அ) 6 ஊதுபத்தி (இல்லாட்டி அக்கம்பக்கம் இருக்கிரவணுங்க மோப்பம் பிடிச்சி வந்து ஒரு கிளாஸ் ஊத்த சொல்லுவான். பிறகு முதலுக்கே மோசமாகிடும்)

5. சைட்டிஷ் (இதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது! நாங்க ஊறுகாய் விரும்பிகள்)

செய்முறை:

பாட்டீல் திறந்து பக்கெட்ல ஊத்தனும். பிறகு சரியான அளவு சோடா (அ) தன்ணீர் விட்டு கலக்கவும். குடிக்க சரக்கு தயார்.தயாரான சரக்கை பக்கெட்ல இருந்து கிளாஸ்ல மொண்டு குடிக்க வேண்டியதுதான். அப்ப அப்ப ஊறுகாய கொஞ்சம் சுவைக்கனும், இல்லாட்டி கிளப்பிக்கும் அப்புறம் மட்டம் ஆகுவிங்க (அ) ஆம்லேட் தான். எலுமிச்ச ஊறுகாய் இந்த விஷயங்களுக்கு உகந்தது. இப்படியே தொடர்ந்தால் நீங்க வெகுவிரைவில் சிறந்த குடிமகனாக வாய்ப்பிருக்கிறது.

இது எங்க ரம் அடிக்கிற ஸ்டைல்!!

எப்பவும் சனிக்கிழமை தான் அடிப்போம்,அப்பதான் மறுநாள் நல்லா தூங்கலாம். நாங்க குடிச்சி முடிச்ச பிறகு, உடனே தூங்க மாட்டோம். வாட்ச்மேன தாஜா பண்ணி வெளிய மேய போய்டுவோம். நல்லா சுத்திட்டு லேட்டா வந்து மெலந்துப்போம்.பிறந்தநாள் பார்ட்டில அலப்பர தாங்காது குடிச்சா பாட்டு தான், குத்தாட்டம் தான். பட்டய கிளப்புவோம்.

ஆனா இப்ப பாருங்க எல்லாம் மல ரும் நினைவுகள் ஆகிப்போச்சு!

30 comments:

  1. என்னடா இவன் இந்த கண்டராவி எல்லாம் எழுதரானேனு நெனக்கதீங்க! நிறைய பேரு பின்னவீனத்துவம்னு ஏதேதோ எழுதுராங்க, அதுக்கு இத நீங்க பொறுத்துக்கலாம். இது சாதாரண ஒரு மொக்கை இடுகை தான்!

    ReplyDelete
  2. //என்னடா இவன் இந்த கண்டராவி எல்லாம் எழுதரானேனு நெனக்கதீங்க! நிறைய பேரு பின்னவீனத்துவம்னு ஏதேதோ எழுதுராங்க, அதுக்கு இத நீங்க பொறுத்துக்கலாம். இது சாதாரண ஒரு மொக்கை இடுகை தான்!

    //

    அப்படியா?நல்ல குடிமகன் குட்டி பிசாசு வாழ்க

    ReplyDelete
  3. நன்றி!!

    சிறந்த குடிமகன்னு சொல்லுங்க!!

    ReplyDelete
  4. என்னடா தம்பி இவ்ளோ நல்லவனான்னு டவுட் ஆனேன் ..இப்ப பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சி.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்;(

    ReplyDelete
  5. குடிக்கிறதுதான் கெட்டபழக்கமே ஒழிய குடிப்பவனெல்லாம் கெட்டவனில்ல.
    ஆங்ங்

    ReplyDelete
  6. இந்த குட்டிப்பிசாசு எங்க இருந்தாலும் பிடிச்சி தைலாபுர தோட்டத்துக்கு இழுத்து வாங்கடா..

    ReplyDelete
  7. இங்கே விஸ்கி, ரம், பீர் போன்ற வார்த்தைகள் எந்த மொழியை சேர்ந்தது அதுக்கு என்ன அர்த்தம்னு யாராச்சும் விளக்க முடியுமா?

    ReplyDelete
  8. மின்னலு இங்க வாய்யா இங்க ஒருத்தன் மாட்டிகிட்டான்.

    ReplyDelete
  9. @கண்மணி அக்கா,

    //என்னடா தம்பி இவ்ளோ நல்லவனான்னு டவுட் ஆனேன் //

    எனக்கு பதில் விடை சொன்ன கேப்டன் விஜயகாந்திற்கு நன்றி!!

    ReplyDelete
  10. // ராம்தாஸ் said...

    இந்த குட்டிப்பிசாசு எங்க இருந்தாலும் பிடிச்சி தைலாபுர தோட்டத்துக்கு இழுத்து வாங்கடா.. //

    வேற என்னென்ன ஐடியா வச்சிட்டு இருக்கேனு பார்க்கவா?

    ReplyDelete
  11. //இங்கே விஸ்கி, ரம், பீர் போன்ற வார்த்தைகள் எந்த மொழியை சேர்ந்தது//

    திருக்குறள் எப்படியோ! அதுபோல இதெல்லாம் உலகப்பொதுமறை(மொழி)யில் வரும்்!

    ReplyDelete
  12. மின்னல யாராவது பார்த்த உடனே கூப்பிடுங்க, பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!!

    ReplyDelete
  13. @கண்மணி அக்கா,

    நான் கெட்டவன் ஒன்னும் இல்ல! இப்பதான் விட்டுட்டனே, அப்புறம் என்ன?

    ReplyDelete
  14. தம்பி said...
    மின்னலு இங்க வாய்யா இங்க ஒருத்தன் மாட்டிகிட்டான்.
    ///

    பாவம் விட்டுடுவோம்...:)

    ReplyDelete
  15. //இங்கே விஸ்கி, ரம், பீர் போன்ற வார்த்தைகள் எந்த மொழியை சேர்ந்தது//

    திருக்குறள் எப்படியோ! அதுபோல இதெல்லாம் உலகப்பொதுமறை(மொழி)யில் வரும்்!//

    உலகக் குடி மொழி ன்னு சொன்னாங்களே.
    ச்சீ உலகத்துல இருக்க எல்லா ஆண்களும் இப்படித்தானா?[ரங்கமணி தவிர்த்து]

    ReplyDelete
  16. மின்னல் ,

    எப்படி இருக்கே!! பார்க்கவே முடியல...ரொம்ப ஆணி பிடுங்கிற வேலையா!

    ReplyDelete
  17. குட்டிபிசாசு said...
    மின்னல யாராவது பார்த்த உடனே கூப்பிடுங்க, பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!!
    //

    மின்னலுனா அப்படிதான் தீடீரெண்று மின்னும் நல்லா பாத்துக்கப்பூ

    அலக்ஸாண்டர கேட்டதா சொல்லு..:)

    ReplyDelete
  18. மின்னலு,

    கண்ணு கூசுதுபா...
    அலெக்ஸாண்டர் என்ன.. அவங்க ஆயாவையும் நீ கேட்டதா சொல்லுரேன்!

    ReplyDelete
  19. குட்டிபிசாசு said...
    மின்னல் ,

    எப்படி இருக்கே!! பார்க்கவே முடியல...ரொம்ப ஆணி பிடுங்கிற வேலையா!
    ///

    ஆணியே இல்ல அதான் எங்கஎங்கயோ போயிகிட்டு இருக்கேன் வலையில்...எல்லாத்தையும்
    படிச்சிகிட்டு இருக்கேன் டோண்ட் ஓரீ

    :)

    ReplyDelete
  20. எல்லாத்தையும்
    படிச்சிகிட்டு இருக்கேன் டோண்ட் ஓரீ///

    ஆணி இல்லாட்டி என்ன...படிச்சது போதும் எதாவது ஒரு இடுகை போடு!!(கும்மிப்பதிவு)

    ReplyDelete
  21. @கண்மணி அக்கா,
    பெரியவங்க சொல்லுவாங்க!
    குடியும் கற்று மற... கேள்வி பட்டதில்லையா!

    நீங்களும் "வித் லெமன்கார்டியல்" னு சொல்லுரிங்க! நாங்க எலுமிச்ச ஊறுகாய்.

    ReplyDelete
  22. ஆணி இல்லாட்டி என்ன...படிச்சது போதும் எதாவது ஒரு இடுகை போடு!!(கும்மிப்பதிவு)
    //

    நான் போடுவது எல்லாம் அப்படிதானே

    இடுகைனு சொன்ன பத்தாதா இதுக்கு எதுக்கு கும்மிப்பதிவுனு தனியா வேற சொல்லனுமா.... :)

    ReplyDelete
  23. மின்னல்,

    பொறுத்தது போதும் போடுங்க!!

    ReplyDelete
  24. கடவுளே!
    எப்படித்தான் இந்த "இது" களையெல்லாம் குடிக்கிறாங்களோ! ச்ச்ச்சே ..! ஆய்..!

    ReplyDelete
  25. @ தருமி சார்,

    "பொய் சொல்லுற வாய்க்கு பட்டை சரக்கு கூட் கிடைக்காது!"

    ReplyDelete
  26. ஓ.. இதான் நீங்க ஹாஸ்டல்ல தண்ணியடிச்ச கதையா? ஆமா உங்கள நல்ல்ல்லவனா மாத்தின அந்த அன்புக்குரியவங்க யார் னு சொல்லலயே? என்னப்பா யாரும் இத கேக்காம விட்ருக்கீங்க?

    ReplyDelete
  27. //உங்கள நல்ல்ல்லவனா மாத்தின அந்த அன்புக்குரியவங்க யார் னு சொல்லலயே? //

    அஸ்க்புஸ்கு...இதெல்லாம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  28. இப்ப நீங்களா சொல்றீங்களா? மின்னல விட்டு தானா ஒரு பேர் வெச்சி தாளிக்க சொல்லவா? எனக்கு மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்.. நான் ரகசியமா வெச்சிக்கிறேன்!

    ReplyDelete
  29. வேற யாருமில்ல எங்க பக்கத்து வீட்டு பாட்டி சாகும்போது சத்தியம் வாங்கிட்டு செத்துபோச்சு!! பரமரகசியமா வச்சிக்குங்க..வெளிய யாருக்கும் சொல்லிடாதீங்க!

    ReplyDelete
  30. கல்லூரியிலே தண்ணி அடிக்காதவனே கிடையாது. நல்லவனா மாறுறதும் ( தண்ணி அடிச்சா கெட்டவனா ??) உண்டு - தொடர்ந்து அடிக்கறதும் உண்டு. ஆனா பக்கெட்லே ஊத்திக் குடிக்கிற மொடாக் குடியனுங்களே இப்பத்தான்பா பாக்குறேன். ( பக்கெட் ரம்முக்கு எழுமிச்சை ஊறுகா மட்டுமா )

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய