* கதைனு எதுவும் இல்லீங்க!! இரண்டு ரஜினி படம் (படையப்பா, பாட்சா), இரண்டு சங்கர் படம் (முதல்வன், ஜெண்டில்மேன்) ஒரு குண்டால கொட்டி, நல்லா மசாலா கலந்து, அரைவேக்காடுல எடுத்து முடிச்சி இருக்காங்க!!
* படம் முழுக்க தேடினாலும் லாஜிக்னு ஒன்னு இல்லவே இல்ல. ரஜினி, சங்கர் படத்தில் என்னைக்குடா லாஜிக் இருந்து இருக்குனு நீங்க கேட்கலாம். இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் திருந்தி இருக்கிற சமயத்தில், இவங்க ஊடால புகுந்து கெடுக்கிற முயற்சிய ரொம்பவே பாராட்டலாம்.
* தமிழ்சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறேன் என்று ஊரை எமாத்திட்டு இருக்குற டுபாக்கூர் சங்கர் படம் எடுக்கிறதுக்கு பதில் ஆல்பம் எதாவது போட போகலாம். வெயில், இம்சை அரசன் இதுபோல குறைந்த பட்ஜெட்ல நல்ல படம் கொடுத்து லாபமும் பார்க்கும் சங்கர், அரதபழசா போன ஒரு கதைய வச்சிட்டு 30-60 கோடி செலவு செய்து, ஒன்னுதுக்கும் உதவாத படங்களை எடுப்பது ஏனென்று தெரியவில்லை.
* உலக சினிமா பற்றி ஊருக்கு உபதேசம் செய்து வரும் சுஜாதா (இவரு திரைக்கதை எழுதுவது எப்படி?னு வேற நூல் விட்டு இருக்கார்), தான் கற்றதிலிருந்து என்ன பெற்றாரென்று தெரியவில்லை. இந்த படத்தில் அவரோட பங்கு என்னனு தெரியல. அப்படி ஒரு புதுமையான கதைக்களம்.
* விவேக் காமெடினு எதுவும் செய்யல, வெறும் ரஜினியோட புகழ்பாடியாக வர்றார்.
* இதுக்கு சுமனோட வில்லன் ரோல்ல சத்யராஜ் நடிக்க கேட்டாங்களாம். ரகுவரனையே ஒழுங்கா பயன்படுத்தாதவங்க சத்யராஜ்யா பயன்படுத்த போராங்க. கடைசில சுமன் மிதிபட்டு சாகும் போது தெலுங்கு படத்துக்கு இணையான முடிவு.
* ஸ்ரேயா புடவை கட்டினால் மூக்கு சிந்திட்டு இருக்காங்க! சின்னசின்ன டிரஸ் போட்டா எல்லாம் தெரிய ஆடுராங்க!
* ஏ.ஆர்.ரகுமான் இசை பரவாயில்லை ரகம். பாபா-ல வருவது போல, இதுலயும் "லப..லப..லப"னு பின்னணியில கத்துரார். பாடல்கள் ஓகே.
* க்ளைமாக்ஸ்ல ரஜினியைக் க்லோசப்பில் காட்டும்போது, செத்துப்போன எங்க தாத்தா ஞாபகம் தான் வருது. அப்படி ஒரு இளமை முகத்தில். இவரு செய்யற ஸ்டைலப் பார்த்து ஸ்ரேயா ரசிக்கிறது செயற்கையாக இருக்கிறது. தலையில் அடிச்சிகலாம் போல! வெளியே ஆன்மீக அல்டாப்பாகவும், பக்கம்பக்கமாக அறிவுரையும் சொல்லிட்டு அலையும் ரஜினிக்கு ஸ்ரேயாவோட இடுப்ப பிடிச்சிட்டு ஆட சொல்லி எந்த வேதம் சொல்லிதுனு தெரியல!! எங்கே நான் சின்ன வயதில் பார்த்த அந்த பில்டப் இல்லாத பழைய ரஜினினு கேட்கத்தோணுது. படத்தோட நடுவில் கலாய்க்கிற ஸ்டைல் ரசிக்கலாம்.் பழைய ரசிகன் என்கிற முறையில் ரஜினிக்கு ஒரே வேண்டுகோள், "நீங்க நதி இணைப்புக்கு பாக்கெட்ல இருந்து ஒரு கோடி இல்ல..ஒரு பைசா கூட தர வேண்டாம்!! 30 கோடி வாங்கிட்டு இதுபோல ஓட்டகாலணா பெரத படங்களில் நடித்து உங்க ஏழை ரசிகனோட மூளையையும், பாக்கெட்டையும் காலி பண்ணாதீங்கய்யா!!".
* சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.
* கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வித்தியாசமாக தோன்றுவதாக ஊடகங்கள் ஒரு கலக்குகலக்கின. ஆனால் எனக்கு குடைக்குள் மழை படத்தில் பார்த்திபன் சொல்லும் வரிகள் தான் நினைவில் வருகிறது (என்ன கோட் இது!!இங்கிலீஷ் படத்தில் வர இராப்பிச்சைகாரன் மாதிரி).
நீ என்னடா சொல்லுறது! படம் ரொம்ப நல்லா போகுதுனு சிலர் சொல்லலாம். இந்த கேவலமான படத்துக்கு ஆயிரத்தில் காசு வச்சி வித்து இருக்கானுங்க. அதை நினைச்சா, இவனுங்க எப்படிப்பட்ட மொள்ளமாரியா இருக்கணும், 1000 ரூபாய் காசு கொடுத்து பார்த்தவனுங்க எவ்வளவு பெரிய ஏமாளிங்கனு தோணுது "நாங்க எமாளி இல்லை, படம் நல்லாதான் இருக்கு"னு சொல்லி மீசைல மண்ணு படலனு போறவங்க என்னை தயவு செய்து திட்டாதீங்க. உங்களோட கருத்து மட்டும் சொல்லுங்க!!
படம் பார்த்த பிறகு எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் நான் (உபயம்: நெட்) ஓசில பார்த்ததுதான்.
எக்கசக்கசக்கசக்கமா பில்டப் கொடுக்கும் போதே நினைச்சேன்.. இது மாதிரி ஏதாவது ஏடாகூடம் இருக்கும்ன்னு.. அதான் வீட்டிலே டிசைட் பண்ணிட்டோம்ல்லே.. 6 மாதத்துக்கப்புரம்.. பொங்கல் க்கு "சிறப்பு திரைப்படம்ன்னு".. ஒரு 2 வாரம் ரீல் வுட்டு.. " பிரம்மாண்டமான சூப்பர் ஹிட் திரைப்படம்..சிவாஜீஜீஜீஜீ ".. ன்னு வரும் அப்பொ பார்த்துக்கலாம் ( வேறே வேலையெதுவும் இல்லைன்னா...)
ReplyDeleteஇந்த மாதிரி பில்டப் படங்களுக்கெல்லாம் ரிலீஸ்லேர்ந்து குறைந்தது மூணுமாதம் வரை போகிறதில்லைன்னு முடிவு பண்ணிட்டோம்ல!
ReplyDelete@தீபா,
ReplyDeleteநல்ல முடிவு எடுத்து இருக்கிரீர்கள்!! வாழ்த்துக்கள்!!
@சுல்தான்,
ReplyDeleteநன்றி!!
//படம் பார்த்த பிறகு எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் நான் (உபயம்: நெட்) ஓசில பார்த்ததுதான்.//
ReplyDeleteயோசிச்சி பாரு free பாத்த உனக்கே இம்முட்டு கோவம் வருது எங்க நிலைமையை யோசிச்சி பாரு. 16$ டிக்கெட் விலை, 1 மணி நேரம் லைனல நின்னு, மூணாவது rowஜ அடிச்சி புடிச்சி உக்காந்து படம் பாத்த எங்களுக்கு எம்முட்டு கோவம் வரும்.
OC la paathu thaan ippadi ezhuthureengala. ada kanraaviye. Aduthavan kaasula padam paathurathe thappu.
ReplyDeleteSari atha vidunga. Cinema la thaan nallathu sollanumla illa. Evlo book irukku. Padichu methaavi aayitteeengala?
Cinema oru 3 mani nera pozhuthu pokku. Paakuravan paakkuran. Pidikkaathavanga ethukku paathu ippadi ezhutanum. Ithu ellam oru "bandha" kku thaan.
Naatula evlo vizhayam irukku pesa, atha pesaama oru padathaa paathuttu imbuttu neram waste panni type panreenga.
Pongappu... ethavathu nallatha pesunga.
Neenga authorize panna thaan varumnu theriyum. Aaana authorize panna maatteenga. Enna ezhavo. ithu ellam oru pozhappu. hmm
//யோசிச்சி பாரு free பாத்த உனக்கே இம்முட்டு கோவம் வருது எங்க நிலைமையை யோசிச்சி பாரு. 16$ டிக்கெட் விலை, 1 மணி நேரம் லைனல நின்னு, மூணாவது rowஜ அடிச்சி புடிச்சி உக்காந்து படம் பாத்த எங்களுக்கு எம்முட்டு கோவம் வரும்.///
ReplyDeleteதங்கள் இழப்புக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்!!
///Naatula evlo vizhayam irukku pesa, atha pesaama oru padathaa paathuttu imbuttu neram waste panni type panreenga.///
ReplyDeleteநான் ஒன்னும் எழுதாமே தோழரே!! நாட்டுல நடக்குற விஷயத்த எழுதினால் எவன் படிக்கிறான்!! நான் எழுதின இந்த கண்டறாவிய தானே நீங்க படிச்சிட்டு கமெண்ட்ஸ் வேற போட்டு இருக்கீங்க!!
எப்படியோ படித்ததற்கு வாழ்த்துக்கள்!!
தீப்பெட்டிய ரெண்டு பக்கம் உரசனா தான் எரியும்! ஆனா சிவாஜிய எந்தபக்கம் உரசனாலும் எரியும்! எரிஞ்சி சூடாகி போச்சுப்பா!!
ReplyDeleteஇந்த படத்தையும் மதிச்சு போஸ்ட் வேற போட்ருக்கியே பிசாசு குட்டி.. உன்ன என்ன செய்யறது? ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே 20 தடவ பாத்திருப்பாங்க... மத்தவங்க என்ன நல்லா இல்லன்னு தெரிஞ்சுக்கவாச்சும் பாப்பாங்க.. (உன்ன மாதிரி) இப்டியே படம் மாசக்கணக்கா ஓடும். எல்லாம் தெரிஞ்சது தானே? ஒழுங்கா மரத்துல தொங்கிட்ருக்காம உன்ன யாரு படம் பாக்க சொன்னது?
ReplyDelete@ காயத்ரி,
ReplyDeleteஇது பில்டப்க்கு தான்!! மேல இருக்கு பாருங்க பதில்!!
தீப்பெட்டிய ரெண்டு பக்கம் உரசனா தான் எரியும்! ஆனா சிவாஜிய எந்தபக்கம் உரசனாலும் எரியும்!
குட்டி,
ReplyDeleteஉங்கள் கருத்து தான் என் கருத்தும். என் பதிவைப் பாருங்கள்...
http://johnbenedict.blogspot.com/
ஆனால் நாம் சொல்லி எவன் கேட்கப்போறான்?
குட்டி,
ReplyDeleteஉங்கள் கருத்து தான் என் கருத்தும். என் பதிவைப் பாருங்கள்...
http://johnbenedict.blogspot.com/
ஆனால் நாம் சொல்லி எவன் கேட்கப்போறான்?
16$ டிக்கெட் விலை, 1 மணி நேரம் லைனல நின்னு, மூணாவது rowஜ அடிச்சி புடிச்சி உக்காந்து படம் பாத்த எங்களுக்கு எம்முட்டு கோவம் வரும்.//
ReplyDeleteஇல்லியே .. இப்படி பார்த்தவங்களுக்கு அப்படியெல்லாமா கோபம் வரும்?
@ johnbenedict,
ReplyDeleteநன்றி! தங்கள் பதிவை படிக்கிறேன்!
@ தருமி ஐயா,
ReplyDeleteபதிவை சூடாக்க சிறந்த வழி!!
ஆமா சிவாஜி படத்துக்கு ஆஸ்கார் அவார்ட் கிடைக்குமாமே
ReplyDeleteமெய்யாலுமா
//ks said...
ReplyDeleteஆமா சிவாஜி படத்துக்கு ஆஸ்கார் அவார்ட் கிடைக்குமாமே
மெய்யாலுமா //
அடுத்த இடுகையில் வேண்டுமானால் ஆஸ்காருக்கு சிவாஜியை முன்மொழிகிறேன்!!
நானும் தான் சிவாஜி தியெட்டருல போய் பாத்தேன் கம்முனு இல்ல சும்மா சத்தம் போட்டுகிட்டு போ போப்பா போயி பொழப்ப பாரு
ReplyDelete(அவனவன் வயித்தெரிச்சலுல இருக்கான் வந்துடாரு )
நான் இன்னும் பாக்கலியே. ஏன்னா இன்னும் எங்க ஊர்ல இன்னனும் போடல
ReplyDelete@ மின்னல்,
ReplyDeleteநீங்களும் நல்லா ஏமாந்து இருப்பீங்க போல!!
@ சின்ன அம்மணி,
ReplyDeleteஎப்படியோ தப்பிச்சீங்க!!
கிடைக்கணுங்கறது கிடைக்காமப் போகாதுன்னு இருக்கேன்:-))))))
ReplyDeleteபாவம் ரசிகர்கள்.
தெலிச்சிந்தா?
@ துளசி அக்கா,
ReplyDeleteபாக தெலுசு!! நன்றி!!
ட்ராகுலாத் தன வெறியோட ஆராய்ஞ்சிருக்கீங்க ;-)
ReplyDeleteசந்திரமுகி ஆவி வர்ரதுக்கு மின்னாடி எஸ்கேப் ஆயுடுங்க
hehe...neegalum ennai pola oru arivali.oru kaasu selavu illama paarthudinga..best wishes :D
ReplyDeleteசிவாஜி.....
ReplyDeleteஎன்ன கொடுமைய்யா இது ?
@ துர்கா,
ReplyDeleteநன்றி!!
///கானா பிரபா said...
ReplyDeleteட்ராகுலாத் தன வெறியோட ஆராய்ஞ்சிருக்கீங்க ;-)
சந்திரமுகி ஆவி வர்ரதுக்கு மின்னாடி எஸ்கேப் ஆயுடுங்க ///
எப்படியோ என்னோட பதிவுல கால் பதிச்சி புனிதமாக்கிட்டீங்க!! நன்றி!!
enna aatchariyam...yarume NET-le paathathe pathi comment adikele...paditche namele eppadi pirated source thedi pona avanga eppadi than polaikirathu...i will avoid watching movies on pirated CDs/DVDs even if i watch i will compensate by watching it on theatre one more time..but i dont have any concern watching hollywood movies on pirated..(donno why..may be they are not made in india and all movies are not releasing in india)...neenga theatre poyee padam pathu athu kuppai panam waste-na ok..padam wate-nu therinjum...ungalukku NET-le aatchum paakanumnu thonuitche athu than RAJINI-The BOSS...Reel is always reel it is upto u accept it or throw it
ReplyDelete@ தினேஷ்,
ReplyDelete//paditche namele eppadi pirated source thedi pona avanga eppadi than polaikirathu...i will avoid watching movies on pirated CDs/DVDs even if i watch i will compensate by watching it on theatre one more time..but i dont have any concern watching hollywood movies on pirated..//
60 கோடி செலவு செய்துட்டு தான் டிக்கெட் விலை ரொம்ப அதிகமாக இருக்குது. அப்படி 60 கோடி செலவு செய்ய அதுல என்ன இருக்குனு தான் தெரியவில்லை். இந்த படத்தை சிடி/டிவிடி-ல பார்த்ததே பெரிய விஷயம். சினிமால வேறயா, ரொம்ப கஷ்டம்.
நானும் இன்னும் படம் பார்க்கலைங்க. எனக்கும் டிக்கெட் வந்துச்சு. 300 ரூபாய்க்குன்னு. நான் வாங்கலையே. என் பக்கத்தில இருக்கற என் கொலீக் வாங்கறேன்னு போனான். நான் நிறுத்தி பக்கம் பக்கமா ஒரு டயலாக் விட்டேன்.
ReplyDelete"என்ன மச்சான். அவன் 50, 60 கோடி செலவு பண்ணிட்டான்னு Authorized2 ஆ எல்லா தியேட்டர்லயும் 500, 1000 ன்னு ரூபாய்க்குன்னு ப்ளாக்ல வித்துட்டிருக்கான். அதை இந்த கவர்மெண்டும் கண்டும் காணாத மாதிரி இருக்குது. இதுல நீயும் போறங்கற. இந்த மாதிரி தப்பை எல்லாம் நீயும் என்கரேஜ் பண்ணாத மாமூன்னு.இன்னும் ஒரு 2 மாசம் கழிச்சுப் பார்த்தா என்ன குறைஞ்சா போய்டுவோம்னு சொன்னேன்".
இன்னிக்கு வரைக்கும் அவன் என்னை முறைச்சுட்டே இருக்கான்.
பிசாசு, இந்தப் பக்கம் வந்து கொஞ்ச நாளாச்சு.. அதுக்குள்ளாற மாதுளம்பழம், பட்டாம்பூச்சி, பொன்மொழி, ஜோக்குன்னு கலக்கியிருக்கீங்க..
ReplyDelete//தீப்பெட்டிய ரெண்டு பக்கம் உரசனா தான் எரியும்! ஆனா சிவாஜிய எந்தபக்கம் உரசனாலும் எரியும்!//
இத குட்டிபிசாசின் இந்த வார பொன்மொழிக்கு பரிந்துரைக்கிறேன். ;)
yaarume ungalai entha padam paarunganu solli kazhuthu mela katthi vaikele (naan kooda padam paathavan than (IN THEATRE, if u have given $15 thats ur mistake, u shld have waited), enakum padam pidikele bad movie but u see the tech quality of movie all are damn good, colors i havent seen such a clarity of colors other than english movies...rajini a 60yr old man shouldering the whole movie
ReplyDelete@ நந்தா அண்ணே,
ReplyDelete//இன்னிக்கு வரைக்கும் அவன் என்னை முறைச்சுட்டே இருக்கான்.//
பொதுச்சேவை, சமூக நலம்னு வந்துட்டா இதெல்லாம் சாதாரணம். :)))
@ பொன்ஸ் அக்கா,
ReplyDeleteநன்றி!!
//இத குட்டிபிசாசின் இந்த வார பொன்மொழிக்கு பரிந்துரைக்கிறேன். ;)//
கண்டிப்பாக!!
@ தினேஷ் சார்,
ReplyDelete//enakum padam pidikele bad movie but u see the tech quality of movie all are damn good, colors i havent seen such a clarity of colors other than english movies.//
நான் ஒளிப்பதிவு பத்தி நல்லா தான் சொல்லி இருக்கேன். இந்தியாவில் தமிழ் டெக்னீசியன்ஸ் தான் பெஸ்ட், இந்தி படத்தில் கூட நம்ம ஆளுங்க வேலை செய்யறாங்க. ஒரு நல்ல படத்துக்கு இது மட்டும் போதாது. பலமான கூட்டணியில் பலகீனமான வெளிப்பாடு!!
//rajini a 60yr old man shouldering the whole movie//
இது ஒத்துக்கரது கஷ்டம் சார். இதுக்கு ரஜினியை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட (கதையை நம்பாமல்) பாபா ஒரு உதாரணம்.
குட்டி, Free யா டிக்கெட் கிடச்சி இருக்கு.. இன்னைக்கு தான் சத்யம் தியேட்டர் போலாம்னு இருக்கோம். ஆனா இப்படி திகில கிளப்பி விடறியேப்பா ? நிஜமாவே பயமா இருக்கு.. போலாமா வேண்டாம்னு.. :(((((((
ReplyDelete@ கவிதா அம்மா,
ReplyDeleteபோயிட்டு வாங்க!! வந்து ஒரு விமர்சனம் போடுங்க. பதிவும் சூடாகும்/எதாவது எழுதின மாதிரியும் இருக்கும்.
ஏம்பா... நீ குட்டி பிசாசு.. அதனால உண்மைய புட்டு புட்டு வைச்சிட்ட...!
ReplyDelete/க்ளைமாக்ஸ்ல ரஜினியைக் க்லோசப்பில் காட்டும்போது, செத்துப்போன எங்க தாத்தா ஞாபகம் தான் வருது./
இதான் படிச்சிட்டு நான் சிரிக்க...அதே கேட்டு பக்கத்தில உட்காந்து இருக்கிறவரு 'என்னனு' கேட்க ... உங்க கதைய சொன்னேன்... அதுல இருந்து என்னை ஒரு மாதிரியா முறைச்சிகிட்டே இருக்குறாரு... ;(
[ரஜினி ரசிகரா இருப்பாரோ?]
@ தென்றல் அண்ணே,
ReplyDelete//அதுல இருந்து என்னை ஒரு மாதிரியா முறைச்சிகிட்டே இருக்குறாரு... ;(
[ரஜினி ரசிகரா இருப்பாரோ?]//
இருந்தாலும் இருக்கலாம். நன்றி!!
:(
ReplyDelete:(
:(
padma priya madam,
ReplyDeleteneenge yen sogamaa irukkinga? naan ungala thittala padaththu pulambinathu thaan ithu...!! naan sogamaa irukkanum!!
nandraka sonirkal nanbarea "perai keddan enaku vaanthi varuthilla". ayoo enna kodumai sar ithu nalla nadikarana sivajida pera vatchu padatha eduthuddu kadasilea anthalda perukkea kedda per eduthu kuduththuddankal.....intha ulkam endru than thirunthumoe ....intha mary padatha pakkirathuikue kenayanukal irukkura varaikkum avankal ipdi than pilatchuddu iruppankal ......
ReplyDelete