Wednesday, June 20, 2007

காலத்தைக் கட்டுப்படுத்த கடிகாரத்தை நிறுத்திய கந்தசாமி

பருந்துச் சிறகுடைய

பட்டாம்பூச்சி காலயந்திரத்தை

கந்தசாமியின் கொல்லைபுரத்தில்

போட்டுவிட்டுப் போனது

பள்ளியே பார்த்து

அறியாத கந்தசாமிக்கு

காலயந்திரமா புரியப்போகுது,

காயலாங்கடைக்கு சென்றான்

வழியில் என்னைப்பார்த்து,

காலயந்திரம் தருகிறேனென்று

பழைய கடனுக்கு

கணக்குத் தீர்த்தான்

சோதனையோட்டம் பார்க்க

இயந்திரத்தில் ஏறினோம்.

காலத்தை கட்டுப்படுத்த

கந்தசாமி கடிகாரத்தை

நிறுத்தி கொண்டான்

“கடிகாரத்தை நிறுத்தினால்,

காலம் எப்படி நிற்கும்”

என்றேன்! “மூச்சி நின்றால்,

உயிரும் நிற்கும்தானே!”

உளரினான் மடையன்

விசையை இயக்கினேன்

கண்ணிமைக்கும் நேரத்தில்

கட்டற்ற வெளிக்குள்

காலங்கள் தாண்டின

உயிரை உறித்ததுபோல்

காலத்தின் சுழற்சி

சலனமற்ற சஞ்சரிப்பு

சரித்திர சம்பவங்கள்

விரித்தது கண்முன்னே!

‘சாக்ரடீசு விடமுண்டார்’

வரலாற்றைப் புரட்டியது,

‘வயோதிக வால்மீகி

ராமகாதை எழுதினார்’

வயற்றைப் புரட்டியது

‘இயேசு சிலுவையேறினார்’

கண்களை மிரட்டியது

படீரென்று சத்தம்!

பால்காரன் வரும்நேரமென்று

கந்தசாமி விசையைத்திருக

வீட்டுக்கு திரும்பிவிட்டோம்!!

13 comments:

  1. இதை படிச்சிட்டு யாராவது கேள்வி கேட்டால் கடுப்பாகிடுவேன்! பார்த்துக்குங்க!!

    ReplyDelete
  2. சூப்பர் டெம்ப்ளேட்.நல்லாயிருக்கு.நீயும் வர்ரதா இருந்தா நானும் பதிவர் சந்திப்புக்கு வர்ரேன்..

    ReplyDelete
  3. சிரிப்பானக் காணோம் ;(

    ReplyDelete
  4. கண்மணி அக்கா,

    மன்னிக்கவும்.நான் இப்பதானே விடுமுறைல ஊருக்கு வந்தேன். மறுபடியும் வரது கஷ்டம். அடுத்தமுறை வரேன். நான் இங்க கரக்பூர்ல இருக்கேன். நான் ட்ரெய்ன்ல சென்னை வரவே 24-30 மனிநேரம் ஆகும்.

    //சிரிப்பானக் காணோம் ;(//

    நான் சிரிப்பானை போட்டேன். வரலிங்களா?

    ReplyDelete
  5. பழைய போஸ்ட்ல சிரிப்பான் தெரியுது. ஆனா இந்த போஸ்ட்ல தெரியல?

    ReplyDelete
  6. கன்மணி அக்கா,

    உங்க gmail id என்ன?

    என்னோடது arunzen@gmail.com

    ReplyDelete
  7. வந்தேன், தம்பி!

    ReplyDelete
  8. தருமி ஐயா,

    என்னோட கஷ்டத்த புரிஞ்சவர்!!
    அதுக்குனு இப்படி அநியாயதுக்கு இடுகை பத்தி ஒன்னும் சொல்லாம அட்டெடண்ஸ் மட்டும் போட்டா எப்படி சார்!!

    ReplyDelete
  9. Collapse comments


    குட்டிபிசாசு said...
    இதை படிச்சிட்டு யாராவது கேள்வி கேட்டால் கடுப்பாகிடுவேன்! பார்த்துக்குங்க


    கேள்வி அப்படின்னா என்னா??

    ReplyDelete
  10. சின்ன அம்மணி,

    என்ன ஒன்னும் தெரியாதது போல கேட்கிரிங்க! இதபடிச்சிட்டு நீங்க கடுப்பாகல!!

    ReplyDelete
  11. துர்கா,

    //நீங்களுமா?//

    நான் என்ன தவறு செய்தேன்!! இப்படி கேட்கிரீங்க!!

    ReplyDelete
  12. என்ன இதெல்லாம்

    ReplyDelete
  13. அடங்க மாட்டீயா

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய