Monday, August 27, 2012

ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை

மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் 'மணிசித்ரதாழ்' என்றொரு படம் வந்தது. அதுவே பிறகு சந்திரமுகியாக தமிழிலும் கன்னடத்திலும் ரீமேக் ஆனது.  அந்தப் படத்தில் கதாநாயகிக்கு பேய் பிடித்திருப்பதாக காண்பிக்கப்படும், பிறகு அது personality disorder என தெரியவரும். நம்ம சரவணனாக ரஜினி வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 'ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை'. அது மட்டுமில்லை, 'இன்னொருவராக வாழும்தன்மையும் கூட'.

நான் துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் உஷா என்றொரு பெண் படித்தாள். கொஞ்சம் கருமையான நிறம். சுருட்டையான முடி.  எங்கள் வகுப்பில் உள்ளவர்களைவிட இரண்டு வயது அதிகம். சரியாக படிக்காமல் மிகவும் மந்தமாக படித்ததால் அவளை 4ம் வகுப்பு அனுமதிக்காமல் எங்கள் வகுப்பிலேயே நிறுத்தி வைத்திந்தனர். வகுப்பில் எப்போதும் அமைதியாக இருக்கும் அவள் ஒருநாள் திடீரென சத்தமாக கத்த துவங்கிவிட்டாள். கண்களை உருட்டுவதும், சத்தமாக சிரிப்பதும் பார்க்க மிகவும் பயமாக இருந்தது. தன் கையில் இருக்கும் பல்பத்தினால் தரையில் ஒரு கோரமான உருவத்தை கீறி, 'இது நான் தான்' என சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். சுற்றியிருந்த அனைத்து சிறுவசிறுமிகள் எழுந்து பக்கத்து வகுப்பிற்கு ஓடிவிட்டனர். நானும் எனது நண்பன் நந்தனும் சுவற்றோரமாக ஒட்டிக் கொண்டு நின்றோம். எங்களின் ஆசிரியை அவர்களுக்கும் என்ன செய்வதென்பது அறியாமல் திகைத்து நின்றார். உஷா தன் நிலை மறந்து, கண்களை உருட்டியும், நாக்கை வெளியே நீட்டிக் கொண்டும்  தொடர்ந்து சிரித்த வண்ணம் இருந்தாள். சிறிது நேரம் கழித்து உஷா மயங்கிவிட்டாள். அவளுடைய வீட்டிற்கு நடந்தவை தெரிவிக்கப்பட்டது. அவளுடைய மாமா வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அன்று நடந்த சம்பவம் என் வாழ்வில் நான் எப்போதும் மறக்கவியலாது. அந்த உருண்ட விழிகள், கலைந்த கேசம் கொஞ்சம் திகில் தான். அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு வாரம் கழித்து என் அம்மாவிடம் அன்று வகுப்பில் இருந்த ஆசிரியை உஷாவைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார். உஷாவின் தாய்-தந்தை இறந்துவிட்டனர். அவள் அவளின் மாமா வீட்டில் தங்கி இருந்தாள். தாயற்ற அவளை அவ்வீட்டிலுள்ளோர் அடித்து கொடுமைபடுத்திக் கொண்டு இருந்தார்கள். ஏன் அவள் அப்படிச் செய்தாள்? எதற்காக அவளுக்குப் பேய் வருகிறது? அது உண்மைதானா? இப்படி பல கேள்விகள் எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. பேய் பிடித்தது போல அவள் அன்று செய்தது, அவளுடைய வேதனையின் வெளிப்பாடாக இருக்கலாம். சில சமயம் மனிதன் தன்னை மற்றவர்களிடம் இருந்து காத்துக் கொள்ள அல்லது மற்றவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க, இவ்வாறு வேறொரு வியக்தித்வத்தை உருவாக்குகிறான். ஆனால் காலப்போக்கில் இவனால் உருவாக்கப்பட்ட வியக்தித்வம் முழுமையடைந்து இவனையே ஆட்கொள்கிறது. அவ்வாறு ஆட்கொள்ளப்படும்போது, தன்னை ஆளும் வியக்தித்வத்திற்கேற்ப வெவ்வேறாக செயல்படுகிறான். உஷா தன்னை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள உருவாக்கிய அந்த கோரமான உருவம் மனதளவில் முழுமையாக அவளை ஆட்கொண்டுவிட்டது.அவள் நிலை இப்போது என்ன என்று எனக்குத் தெரியாது. அவளை அப்போதே ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காண்பித்திருந்தால் அவள் குணமாக வாய்ப்பிருந்திருக்கும்.

இன்று பேய் பிசாசு போன்ற நம்பிக்கை எனக்கு இல்லாவிடினும், அன்று நடந்தவற்றை நினைத்தால், நினைத்த மாத்திரம் லேசான பயம் வந்துவிடும். 

**********************************************************************************

Saturday, August 25, 2012

'ஆப்கான்' மகன்


 Killing each other over imaginary friends

 'ஆப்கான்மகன்' படத்திலிருந்து நெஞ்சை நக்கர மாதிரி ஒரு சீன். 


சிவாஜி கணேசன் : 1400 வருஷமா வேல்கம்பையும் கத்தியையும் தூக்கிட்டு மதம் மதம்னு  சுத்திகிட்டு இருந்த பயக! ஒசாமா பின்லாடன் மனித வெடிகுண்டுக்கு ஆள் வேணுனு கேட்டப்ப ஓடிப்போய் முதல்வரிசையில  நின்ன முக்காவாசி பயக  நம்ம பயகதேன். இப்ப திடீர்னு ஆயுதத்தை தூக்கிபோட்டு அவன விஞ்ஞானம் பேச கூப்பிட எப்படி வருவேன். நீ படிச்சவனாச்சே! கூட்டிகிட்டுவா! ஆனா அவன் நிதானமாதேன் வருவேன்.

 


உட்டாலக்கடி ஒபாமா: எம்புட்டு மெதுவாய்யா! அதுக்குள்ள நான் பதவில இருந்து போயிடுவனே!

சிவாஜி கணேசன் : பதவிய விட்டு போ! எல்லாபயபுள்ளயும் ஒரு நாளைக்கு பதவியில இருந்து போகவேண்டியவந்தேன். பணத்தை போட்ட உடனே பலனை எதிர்பார்க்கலாமா! ஈமு திட்டதுல காசு போடுரேன்! இன்னைக்கு அவன் ஏமாத்துவேன் ! பிறகு கோகோ திட்டமுனு ஏமாத்துவேன்! பிறகு பொடலங்கா திட்டமுனு ஏமாத்துவேன்! ஆனா பணம், நான் போட்டது! ஏமாறது என்ன பெருமையா  ஒருத்தனோட கடம!

…உட்டாலக்கடி ஒபாமா : ஐயா! இல்லயா! விடுங்கயா! நான் அமெரிகா போறன்யா!

 சிவாஜி கணேசன் : நீ பெரிசா எலக்ஷன்ல ஜெயிக்கரதுக்காக …பெரிய ஏரோப்ளேன்  வச்சி ட்வின் டவர் எல்லாம் இடிச்ச அந்த காட்டுமிராண்டிபயலுகளுக்கு என்ன பண்ண நீ! எதாச்சும் பண்ணு! பிறகு இன்னொருமுறை நோபல் பரிசு வாங்கு! அந்த மிஷைல் சக்களத்திய கட்டிகிட்டு ஊரெல்லாம் சுத்து. என்ன இப்ப! போயேன்.


உட்டாலக்கடி ஒபாமா : இல்லயா! நான் எதாவது செய்வன்யா! என்னை நம்புங்கயா!

சிவாஜி கணேசன் : உன்னதானய்யா நம்ப முடியும் ! உங்க அண்ணன் புஷ்யா நம்ப முடியும். வேற யார் இருக்கா!


**********************************************************************************

Prometheus


Chariots of god என்ற புத்தகம்  வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து போனதையும், அவர்கள் இங்கு விட்டுச் சென்ற அடையாளங்களையும் பற்றி கூறுகிறது. அதாவது நாம் கடவுள்களாக, தேவர்களாக நினைப்பது இவ்வாறு வந்துபோன வேற்றுகிரகவாசிகளே என்பதை உறுதிசெய்வது போல புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு உலகில் வெவ்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட அதிசயங்களையும், கட்டிட சிறப்புகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், புராணங்களையும் எடுத்துக்காட்டாக்கி நூலாசிரியர் விவரிக்கிறார். ஆனால் இவையனைத்தும் பொய் என நிருபனமாகிவிட்டது.இதேபோன்ற மையக்கருத்தைக் கொண்டு ப்ரோமெதீயஸ் (Prometheus) திரைப்படம் வெளியாகியுள்ளது. ஏலியன் (Alien) தொடர்களின் ரசிகர்களுக்கு இப்படம் பெருத்த ஏமாற்றம். தொழிற்நுட்ப விடயங்களைத் தவிர்த்து படத்தில் சொல்லும்படி ஒன்றும் இல்லை.


ஏலியன் திரைப்படத்திற்கு பக்காவான திரைக்கதை, ஏலியனின் உருவ அமைப்பு (நீளமான தலை கொண்ட ஏலியன் - சுவீஸ் ஓவியர் H.R.Giger உருவாக்கியது, ஸ்பேஸ் ஜாக்கி), திரைக்கதையில் வரும் திருப்பங்கள் (அண்ட்ரொஐட், நெஞ்சை கிழித்துக்கொண்டு ஏலியன் வருவது) உட்பட  எல்லாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு ரிட்லி ஸ்காட் கையில் கொடுக்கப்பட்டது. அவரும் நோகாமல் படம் எடுத்து பெயர் வாங்கிவிட்டார். மாறாக ப்ரோமெதீஸில் இவற்றில் இருந்த எதுவுமே இல்லை.

படத்தின் இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் எலியன் படத்தின் சாயலை தவிர்க்க எண்ணி, வேறொரு கிறுக்குத்தனமான ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை சுவாரசியமில்லாமல் தேமே என படம் நகர்கிறது இல்லை ஊர்ந்து செல்கிறது. 

**********************************************************************************

கொசுவர்த்தி சுத்தலாம் வாங்க 

கரகாட்டக்காரன் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடி வரும் முன்னாடியே, இது போன்ற ஒரு அனுபவம் நேர்ந்தது. நான் அப்போது 2வது படிக்கிறேன். என் தந்தை என்னை அழைத்து ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி வரச்சொன்னார். அப்போது நேரம் இரவு 9 மணி இருக்கும். நான் வீட்டின் அருகே இருக்கும் கடைக்குச் சென்று, ஒரு சீப்பு வாழைபழம் கேட்டேன். கடைக்கார பாட்டியும் 6 - 7 பழங்கள் இருக்கும் ஒரு சீப்பைக் கொடுத்தார். நான் உடனே பாட்டியிடம் எதற்கு இவ்வளவு பழம், ஒரு சீப்பும் ஒரு வாழைப்பழமும் போதும் என்றேன். அந்தப்பாட்டியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டது. நான் கேட்பதாக இல்லை. கடைசியில் ஒரு சீப்பையும் ஒரு வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். நான் கொண்டு வந்த சீப்பையும் வாழைப்பழத்தையும் பார்த்து  சிரிக்கத்தொடங்கிய என் தந்தை ஒரு முப்பது நிமிடம் ஓயாமல் சிரித்தார்.  

***********************************************************************************

தொடரும் மாணவர் தற்கொலைகள்

ஐ.ஐ.டி சென்னையில் ஒரு மாணவி தற்கொலை, போன வாரம் படித்திருப்பீர்கள். இந்த வாரம் மறுபடியும் ஐ.ஐ.டி கான்பூரில் ஒரு மாணவன் விஷம் குடித்துத் தற்கொலை.

…நான் ஏற்கனவே பதிவிட்ட ஒரு பதிவை மீள்பதிவு செய்கிறேன். 

3 idiots திரைப்படம் தொடங்கிய நான்காவது நாளில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாம். அப்படி ஒரு வரவேற்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில். படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி (முன்னாபாய் MBBS-ன் இயக்குனர்). மேலும் இப்படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். Chetan bhagat எழுதிய Five point something கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், சிலக் கல்லூரிக் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. சரி இப்போது விடயத்துக்கு வருவோம். இந்தப் பதிவு படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. இப்படத்தில் கதை தொட்டுச்செல்லும் இந்திய மாணவ சமுதாயம் எதிர்நோக்கும் சில பிரச்சனைகள். 1.மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்துறையைத் தேர்ந்தெடுக்காமல், பெற்றோரின் விருப்பத்தின் பேரில் சுயவிருப்பமின்றி  பாடத்துறையை தேர்ந்தெடுப்பது, 2. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தங்கள், 3. இவ்வாறான மன அழுத்தங்களால் எற்படும் மாணவத் தற்கொலைகள்.


மருத்துவதுறை கிடைக்காத பெண்ணை வீட்டில் உள்ளோர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை. இது என் நண்பன் வீட்டில் நடந்த ஒரு சம்பவம். இதற்குக் காரணம் என்ன? விருப்பமில்லாத பாடத்தைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது, அப்படி படிக்கமுடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்தால் திட்டுவது. முடிவு தற்கொலை. இதுபோல ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் தேர்வுமுடிவுகள் வரும் மாதங்களில் வருவதுண்டு. பெரும்பாலான பெற்றோர்கள் “நீ டாக்டராக வேண்டும். இஞ்னியராக வேண்டும்” என்று பிள்ளையின் சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொண்டு வருவார்கள். இப்படி இவர்களால் கட்டமைக்கப்பட்ட கோட்டை ஒருவேளை சரிந்துவிட்டால், மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக தானாகவே தற்கொலைக்குத் தயாராகிறார்கள். போதிய படிப்பறிவோ, விழிப்புணர்ச்சியோ இல்லாத பெற்றோர்கள் எப்படியாவது பணத்தை செலவழித்து தன் பிள்ளையை ஒரு பொறியியல் பட்டப்படிப்பையோ, ஒரு மருத்துவப்பட்டப் படிப்பையோ படிக்க வைத்து விடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை. தொடர்வண்டியில் செல்லும் போது என்னிடம் ஒரு பெரியவர் சொன்னது “என்னோட மகளை என்னுடைய நாலு ஏக்கர் நிலத்தை அடகு வைத்து இஞ்னியரிங் படிப்புக்கு …….. காலேஜில் சேர்த்து இருக்கிறேன்.”. இன்றைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், மந்திரிகளாலும், பினாமிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுள் சரியான கல்வி, கட்டுமான வசதிகள் இல்லாவிடினும் மத்திய அங்கீகாரம் பெற்று மக்களை ஏமாற்றி பணத்தைக் கரந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்விகற்க போதிய வசதியற்றக் கல்லூரியைத் தான் பெரியவர் குறிப்பிட்டார். கிராமத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் வரும் சராசரி மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. அவர்களுக்கு என்ன பாடத்துறையைத் தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிராக்டிகலாக  தேர்ந்தெடுக்கவும் தெரியாது, தங்களுக்கு எது விருப்பப் பாடம் என்று விவரிக்கவும் தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடக்கும்போது அங்கு கவுன்சிலிங் வரும் சில மாணவர்கள் அவ்வழியே செல்லும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் என்ன பாடத்துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கேட்பதை பலமுறைப் பார்த்திருக்கிறேன். போகிறபோக்கில் அவர்களும் எதாவது தோன்றுவதைச் சொல்லிவிட்டுப் போவதுண்டு.

இந்தியாவின் கல்வித்தரமோ அதளபாதாளத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.IIT, மற்றைய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. IITகளும் அதிகப்படுத்தப்படவுள்ளன. நல்ல விடயம் தான். ஆனால் அதற்கான infrastructure வசதிகள் தயாராக உள்ளனவா என்றால்? இல்லை. இப்படி கட்டுமான வசதியில்லாமல் மாணவர் சேர்க்கை மட்டும் அதிகரித்தால், கல்வித்தரம் குறையும், விடுதி மாட்டுக் கொட்டகை போல் இருக்கும். இப்போதே விடுதியில் ஒரு அறைக்கு 2 அல்லது 3 ஆட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது IIT எனும் இந்தியாவின் கார்போரேட் நிறுவனங்கள். இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் பொறியியல் மாணவர்கள் மலிவாக Microsoft, Google, Texas instruments, Cisco…. என பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். (ஆனால் வெட்கமே இல்லாமல் Dedicated to the Service of the Nation என்று போடுக்கொள்ளத் தெரியும் ) குறிப்பாக சொல்ல வேண்டுமானால் IIT மாணவர்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.



சரி ஒரு வழியாக மாணவன் தன்னுடைய விருப்பமான அல்லது விருப்பமற்ற பாடத்தையோ தேர்ந்தெடுத்துவிடுகிறான். அடுத்து அவன் சந்திக்கும் பிரச்சனைகள் அவனுடைய ஆசிரியர்கள் மூலமாக. இந்தியாவில் IITகள் தான் உயர்தர பொறியியல் கல்வியை வழங்குகிறது. அப்படி வழங்கிய கல்வியால் இந்தியாவிற்கும் இந்தியமக்களுக்கும் லாபம் வெகு குறைவே. இதற்கு பெரும்பாலானவர்கள் மாணவர்களைக் குறைகூறுவார்கள். ஏனென்றால் IIT-ல் படிக்கும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் இது தவறான கூற்று. வெளிநாட்டு நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது யார்? கல்வி நிறுவனமா அல்லது கார்பரேட் நிறுவனமா என்று எண்ணும் அளவிற்கு ப்ரோஜக்ட்களை வாங்கிக் குவித்துப் பணம் சம்பாதிப்பது யார்? கார்பரேட் நிறுவனம் கூட செய்த வேலைக்கு காசுகொடுக்கும் ஆனால் project work என்ற பெயரில் மாணவர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் ஓசியில் வேலை வாங்கவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் (research journals, conference papers) எழுதவும், அதிலும் தன் பெயரை முதன்மையாக போட்டுக்கொள்ளும் அளவிற்கு கசக்கிப் பிழிகிறார்கள். அப்படி மாணவர்கள் மேற்சொன்ன வேலைகள் செய்யவில்லையா? கிரேட்(மதிப்பெண்) குறைக்கப்படும். மாணவனின் CGPA பொருத்து பெரும்பாலும் ப்ரோஜக்ட் ஆசிரியர்கள் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட ஆசிரியரின் கீழ் பணிபுரியும் மாணவன் அவரின் விருப்பப்பாடத்தில் தான் ப்ரோஜக்ட் செய்ய வேண்டும். இது தான் பொதுவாக எழுதப்படாத விதி. நிலைமை இப்படி இருப்பின் மாணவனைப் பெரும்பாலும் புதிதாக சிந்திக்க விடமாட்டார்கள். இந்திய அரசாங்கம் வெளியிடும் ப்ரோஜக்ட்களை முடிக்க கல்விநிறுவனங்களுக்கு முதலிடம் தரப்படுகிறது. இவற்றைப் பெரும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் காசில்லாமல் வேலை வாங்கிக் கொண்டு நிறைய பணம் பார்க்கிறார்கள். உதாரணமாக இந்திய அரசு நிறுவனத்திற்காக ஒரு சாப்ட்வேர் தயார்செய்ய 20 லட்சம் மதிப்பிலான ஒரு ப்ரொஜெக்ட் விளம்பரம் செய்யப்படுகிறது. கல்விநிறுவனத்திற்கு முதலிடம் என்ற வகையில் அந்த ப்ரோஜக்ட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு பேராசிரியர், தனக்குத் தொடர்புள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் (TCS, CTS…..) மூலமாக சில முக்கிய moduleகளை முடித்துக் கொண்டு, மற்றவற்றை தன் கீழ் ப்ரோஜெக்ட் செய்யும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்த வேலைக்கான பணம் போக மற்றவற்றை அவரே சுருட்டியும் விடுவார்.

IIT-ல் ஒரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு. முதல் வருடம் சரியாகப் படிக்காத Btech மாணவர்களை இரண்டாம் வருடம் performance சரியில்லை என்று அனுப்பியுள்ளார்கள். (குறிப்பாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் பெரும்பாலும் Hindiயில் படித்தவர்கள், கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள். தன்னுடைய பிரச்சனையை ஆசிரியரிடம் முறையாக தெரிவிக்கத் தெரியாத பக்குவம் உள்ளவர்கள்)  தரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று இந்த விடயம் கடந்த ஆண்டுகளில் நடந்தன. ஆனால் அதுபோல விதிமுறைகள் எதுவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோல நீக்கப்பட்ட மாணவர்கள் வழக்குத் தொடர, IIT வழக்குத் தொடர்ந்த மாணவர்களை மறுபடியும் சேர்த்துக் கொண்டது. முன்பு இந்த விதிமுறையால் பாதிக்கப்பட்ட மாணவகள் கதி என்னவென்று தெரியவில்லை.

IIT-ல் கடந்த நான்கு ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் google-ல் IIT suicide என்று தேடிப்பாருங்கள்.
 மேலும் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று படிக்கவும்.
http://iitsuicides.blogspot.com/

இந்தியாவில், 2006-ல் மட்டும் சுமார் 5897 மாணவர்கள் தேர்வுபளு காரணமாக (16 மாணவர்கள் /ஒரு நாள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் அதிகாரப்பூர்வமான தகவல். அப்படியாயின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை. தற்போது இதைவிட அதிகமாகக் கூட இருக்கலாம். இவற்றிற்கு காரணம், காதல் தோல்வி, தேர்வினால் மன அழுத்தம் என்று கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதையும் தாண்டி பெற்றோரின் புரிந்துகொள்ளாத மனப்பக்குவம், ஆசிரியர்களின் சுயநலம், வருங்காலத் தூண்களை துரும்புகளாக மதிக்கும் அரசு என பல முக்கிய காரணிகள் உள்ளன. மாணவர்கள் படிப்பிலும், வாழ்க்கையிலும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க அவர்களிடம் ஒரு நண்பனைப் போல பழகி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தகுந்தவர்கள் (பிரச்சனைக்கேற்றவாறு) மூலம் கவுன்சிலிங் தேவை. அதை விடுத்து ஜோதிடரிடமும், சாமியாரிடமும் சென்று “என் மகனுக்கு எப்படி இருக்கும், என்ன ஆகும் என்று விசாரிப்பது”, மூடத்தனம் மட்டுமல்ல, பிள்ளைகளின் வேதனைக்கேற்ற மருந்தாக அமையாது. கீழ்தட்டு மக்களுக்கு மனநல மருத்துவம்,கவுன்சிலிங் எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் அணுக முடியாதவை தான். நம்முடைய சகபதிவாளர்கள் தம்மை இப்படி ஒரு உதவிகேட்டு வருபவர்களை கைவிடாமல் சரியான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கூறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது சம்பந்தப்பட்ட பெற்றோரும், ஆசிரியரும், மாணவனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டுமேயன்றி நாம் இதில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மேலும் இந்திய மக்கள் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனைப் போல் நடந்து கொள்ளுங்கள்.


Don't try to fix the students, fix ourselves first. The good teacher makes the poor student good and the good student superior. When our students fail, we, as teachers, too, have failed.
- Marva Collins

Thursday, August 23, 2012

குடிய பற்றி...!

 மேலே பெர்னாட்ஷா சொன்னது போல, மதநம்பிக்கை ஒருவனுக்கு எவ்வாறு சந்தோஷத்தை அளிக்கிறதோ! குடியும் ஒருவனுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது!  இரண்டும் ஒன்றே!  வேறில்லை! மதவாதிகள் தன்னுடைய நம்பிக்கைகளை தூக்கியெறிந்தால் மட்டுமே,  குடிப்பவர்களுக்கு அறிவுரை வழங்க தகுதி உடைவராகிறார்கள்.

…ஜனகராஜ்: என்னா கண்ணு! அப்படி பாக்கிற! குடிச்சிட்டு ஒலரினுகிறானேனு பாக்கிறியா! அதான் இல்ல! குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சிங்கிறது அந்தக்காலம்... சரக்கை தொட்டுட்டா நாக்கு தவறினாலும் வாக்கு தவறமாட்டோம். என்னா சொல்லுறே! நீ மதத்தை வுடு நாங்க சரக்கை விடுறோம்.  நீ மதத்தை புடிச்சி தொங்கிக்கினு என்னைய கேள்வி கேக்காத! ஸோ! நீங்க அதுக்கு ரெடின்னா! நாங்க இதுக்கு ரெடி! புரிஞ்சிதா இல்ல இன்னும் மப்புல தான் கீறியா?



 பி...ஏ....பி...ஏ... பாபா...

…பாபா: நீ என்ன குடிப்பே?

…நபர் 1: Beer ங்க !

…பாபா: சீ..சீ .. தூ... வெளியே போ!

…பாபா: நீ என்ன குடிப்பே?

…நபர் 2: Halal Beer ங்க! …(கவுண்டமணி: ஊஸ் தட் ப்லாக் ஷீப் ! )

…பாபா: சீ..சீ... ஆ..தூ... வெளியே போ!

……பாபா: நீ என்ன குடிப்பே?


……நபர் 3: Whisky ங்க!

…பாபா: நீ இரு!

***********************************************************

…கேப்டன் சொல்லுறத கொஞ்சம் கேட்டுட்டுப் போங்க!!!


Saturday, August 18, 2012

இந்தியன், தேவதை, இணைந்த கைகள் படங்கள் பற்றி

இந்தியாவிற்கு  விடுதலை கிடைப்பதற்கு முன் நாட்டில் நடக்கும் வெள்ளையர்களின் அநீதியை எதிர்த்துப்போராடுகிறான் ஒரு போராளி. நாட்டின் விடுதலைக்குப் பின் தன் மகனே நாட்டிற்கு துரோகம் செய்வது தெரிய வரும்போது  வயது முதிர்ந்த காலத்திலும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு அவனை பிடித்துவர புறப்படுகிறான். தப்பிக்க நினைக்கும் மகனை சுட்டுவீழ்த்துகிறான். இந்தப் படத்தின் பெயர் 'இந்தியன் ' என்று தானே சொல்ல வருகிறீர்கள். அதுதான் இல்லை. படத்தின் பெயர் நாம் பிறந்த மண். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்து 1977ல் வெளிவந்தது. படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக கமல் தான் நடித்திருந்தார். என்ன தான் இந்தியன் படம் எடுத்த விதத்தில் வித்யாசமாக இருந்தாலும், படத்தினுடைய மூலக்கதை தழுவப்பட்டதே. சங்கரும் வழக்கம்போல லஞ்சம், ஊழல் என்று மேல்பூச்சு பூசிவிட்டு கதையை தன்னுடையதாகவே போட்டுக்கொண்டார். உண்மையில் இந்தியன் படத்தில் சுவாரசியமாக சொல்லப்பட்ட விடயம் கொலை செய்யப்படும்முறை. விதவிதமான கொலைகள். அவற்றை நாம் ரசிக்கவேறு செய்கிறோம். (அன்னியன் படத்திலும் இதேபோலத் தான் பல வித கொலைகள்). சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட  வயதான கமல் செய்யும்  சீரியல் கொலைகள். நாட்டில் நடக்கும் ஊழலைக் கண்டு கொலை செய்யத் தொடங்கியிருந்தால், தேசவுணர்வு என்று எதாவது சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தனக்கு நிகழும் ஒரு அசம்பாவிதம் காரணமாக சுயனலமாக கொலை செய்யத்தொடங்குவது, இறகு ஊழலுக்குத் தீர்வு கொலை என முடிவுசெய்வதெல்லாம் வயதான கமல் ஒரு சைக்கோபாதிக் சீரியல் கொலையாளி என்பதை உறுதிபடுத்துகிறது.ஆனால் ரசிகனுக்கு அவ்வுணர்வே வராத வண்ணம் தேசபக்தி, ஊழலுக்கான தண்டனை என மூடி மறைக்கப்பட்டிருக்கும்.



நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியால் அரசன் ஒருவன் இறந்து போகிறான். அவன் தன்னுடைய காதலிக்காக ஜென்மம் ஜென்மமாக காத்திருக்கிறான். இது நாசர் இயக்கி வெளிவந்த 'தேவதை' படத்தின் கதை. இப்படம் 1992ல் கப்போலா இயக்கிய  'ட்ராக்குலா' படத்தின் அரைகுறை தழுவல். இந்தப் படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே "ஒரு நாள் அந்த ஒருநாள்" பாடல் மிகவும் பிரச்சிதம். இப்பாடலும் ஒரு தழுவல் என்றால் நம்புவீர்களா? 'டோட்டல் ரீகால்' என 1990ல் வெளிவந்த படத்தின் தீம் இசையின் பாதிப்பு இதில் இருக்கும். நீங்களே ஒப்பிட்டு கேளுங்கள்! 

டோடல் ரீகால் படத்திற்காக ஜெரால்ட் கிங் கோல்ட்ஸ்மிதின் இசை 


தேவதை படத்திற்கு இளையராஜாவின் இசை 


நான் பள்ளிபடிக்கும் வயதில் அதிகம் விரும்பிப் பார்த்த படம் 'இணைந்த கைகள்'. இப்படத்தில் வரும் தீம் இசை மிகவும் பிரபலம். இது கூட 'ப்ரேக்கார்ட் பாஸ்' எனும் பியர்ஸ் ப்ரொன்சன் நடித்த படத்தில் வரும் இசையின் அப்பட்டமான தழுவல். 
இப்படத்துண்டில் இறுதியில் வரும் இசை 






Friday, August 17, 2012

நரிக்கதையும் நம்ம பிரபலங்களும்

நரி மற்றும் திராட்சைக் கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். இதையே நம்ம பிரபலங்கள் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும். சும்மா!! உங்க கற்பனைக் குதிரைய தட்டிவிடுங்க!!


உலகநாயகன் கமல்ஹாசன்:
இன்று உங்களுக்கு சரித்திரத்தின் மடியில் சாகா வரம் பெற்ற ஒரு கதையைக் கூறப்போகிறேன். இது ஒரு நரிக்கதையும் கூட. 10-ம் நூற்றாண்டு. உலகத்தில் இஸ்லாத்துடன் திராட்சையும் அதிகம் விளைந்த காலம். கானகத்தின் வழியே சென்ற ஒரு நரிக்கு அங்கு கனிதிருக்கும் திராட்சைகள் ரொம்பவும் பிடித்துப் போனது. பல கோப்பை ரசம் பருகிய மதம் அதன் மனதினுள் ஏற்பட்டது. பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சியடையாத நரியின் செய்கைகளும், முயற்சிகளும் திராட்சையைப் பெற்றுத் தருவதாயில்லை. எட்டியும் திராட்சை கிடைக்காமல் போனது இயற்கையின் சூழ்ச்சியும் அல்ல, கடவுளைத் துதித்தும் கிடைக்காமல் போனது நரியின் வீழ்ச்சியும் அல்ல. இது வெறும் மனித பரிமாணத்தை எட்டாத நரியின் கையறு நிலை. வாழ்க பாரதம்!! (திருவிளையாடல் தருமி: பேசும்போது அழுத்தம் திருத்தமா பேசு! படம் எடுக்கும் போது கோட்டை விட்டுடு!!!)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்:
இப்ப ஒரு குட்டிகதை சொல்ல போரேன். ஒரு ஊர்லெ ஒரு நரி இருந்துச்சாம். அது ரொம்ப பசியில காட்டுவழியா போறப்ப, திராட்சை பலங்கலெ பார்த்துச்சு. அதெ எப்படியாவது சாப்பிடனும்னு ரொம்ப ட்ரை பண்ணுச்சு. முடியல. எவ்வளவு ட்ரை பண்ணியும் முடியல. கடசியா முயற்சி பண்ணிச்சி அப்பவும் கிடக்கல. பிறகு திராட்சைன்னாலே வெறுத்துப் போச்சி. சுத்தமா பிடிக்கல. இத நான் ஏன் சொல்லுரென்னா, "அதிகமா ஆசைபடுர நரியும், அதிகமான உயரத்தில இருக்கிற திராட்சையும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது". 'கிடைக்கிரது கிடைக்கம இருக்காது; கிடைக்காதது எப்பவும் கிடைக்காது'.

கலைஞர் மு.கருணாநிதி:
உடன்பிறப்புக்குக் கடிதம். உடன்பிறப்பே கேளாய்! உலகத்தின் துயர் துடைக்க 'உளியின் ஓசை' படைத்த எனது கரங்கள், இன்று 'நரியின் ஆசை' என்றொரு மகத்தான காவியம் எழுதிவிட்டது. இக்கதையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் விபீடண நரியொன்று கானகத்தில் திராட்சைகளைக் கண்டு களிப்புற்றது. களிப்பின் விளிம்பில் நின்ற கபட நரியின் கோரப்பற்களுக்கு கிட்டாத திராட்சை ஒரு சீதை. தமிழினிமை கொண்ட திராட்சையை எட்டி எடுக்க முயன்ற தோற்றுப்போன நரி ஒரு குடிகார இராமன்.

வெண்ணிறாடை மூர்த்தி:
ப்ப்ப்ர்ர்ர்ர்! ப்பாப்பா! கதைய கேளு! காட்டுப் பக்கமா ஒரு கட்டுமஸ்தான நரி கமுக்கமா வந்துதான். அங்க கொலகொலயா தொங்குன திராட்சைய பார்த்து, நரியோட கால்கட்டைவிரல்ல இருந்து கபாலம் வரை கபால்னு வேர்த்துப்போச்சி. குபீர்னு கெளம்புன குஷியில குதூகலமான் நரி திராட்சைய லபக்குனு லாவனும்னு மனிஷா கணக்கா மடார்மடார்னு குதிச்சிதான். பல தடவை குதிச்சும் பழம் கிடைக்காத நரி, குப்புற விழுந்ததுல, பலான இடத்துல அடிபட்டு ப்பரபேன்னு கெளம்பிச்சாம்.

கேப்டன் விஜயகாந்த்:
ஏய்! நான் இப்ப சொல்லப்போற கதை, நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு தமிலனும் தெரிஞ்சிக்க வேண்டியது. ஒரு பாக்கிஸ்தான் நரி, காஸ்மீர்ல இருக்கிர திராட்சைக்கு ஆசைப்பட்டு திருட்டுதனமா வந்தது. எவ்வளவு எட்டியும் திராட்சை கிடைக்கம போக, இன்னைக்கு தீவிரவாதியா மாறிடிச்சி. (ஒரு வேளை உங்கள போல சுவத்துலயோ,மரத்துலயோ காலை வச்சி எட்டி இருந்தா நரிக்கு திராட்சை கிடைச்சி இருக்கும்னு நினைக்கிறேன்!!!) இப்படி இந்த வருசத்துல பார்டர கிராஸ் பண்ண நரிங்க 305, திருடப்பட்ட திராட்சைங்க 2077. இதுல தீவிரவாதியா மாறிப்போன நரிங்க 201. இத உடனடியா நிறுத்தனும்னா எமர்ஜன்சி கொண்டுவரனும். இந்த நிலமய மாத்த ஒவ்வொரு தமிலனும் முன்னுக்கு வரனும்.

மேஜர் சுந்தரராஜன்:
ஹா..ஹா...For past 25 years, கடந்த 25 வருஷமா இந்தக் கதைய யார்கிட்டயாவது சொல்லனும்னு துடிச்சிட்டு இருக்கேன். A Fox, ஒரு நரி காட்டுவழியா போறச்சே, grapes அதாவது திராட்சைய பார்த்துச்சாம். எவ்வளவு try பண்ணியும், sorry! அந்த திராட்சை நரியோட கைக்கு கிடைக்கல. இதுக்குக் காரணம், அந்த நரி ரொம்ப short...I mean ரொம்ப குட்டை.

Wednesday, August 15, 2012

பாட்டி வடை சுட்ட கதையும் நம்ம பிரபலங்களும்



வெண்ணிறாடை மூர்த்தி:
கலக்கலான ஒரு ஊருல கட்டுமஸ்தா ஒரு ஆயா இருந்துசான். ஒருநாள் அந்த ஆயா கலர்கலரா வடை சுட்டுகிட்டு இருந்தப்போ! கபால்னு வந்த ஒரு காக்கா ஆயா வடைய கவ்விகிட்டு போயிடுச்சாம். ஆயாகிட்ட இருந்து வடைய லபக்குனு லவட்டிகிட்டு வந்த காக்கா, மரத்துமேல குந்திகிச்சான்.அந்தப் பக்கம் பப்ரபேனு வந்த காட்டுநரிக்கு காக்கா வச்சிட்டு இருந்த வடைய பார்த்து குஜாலாயிடுச்சி. „ப்ப்ப்ப்ருரு! காக்கா! குதுகலமா இருக்கிர நீ! இப்படி குந்தவச்சி உட்காரலாமா! குத்துமதிப்பா ஒரு பாட்டு பாடு“ னு சொல்லுச்சாம். கபாலத்துல கட்டெரும்பு புகுந்த மாதிரி வெட்கத்துல வெடவெடத்துப் போன காக்கா மடமடனு பாட்டு பாட, லொடக்குனு விழுந்த வடைய மடக்கு நரி எடுத்துகிட்டு ஓடிபோச்சாம். காக்கா சொல்லுச்சாம் „ வடை போச்சே!“.

மேஜர் சுந்தராஜன்:
For the past 15 years கிட்டதட்ட பதினஞ்சி வருஷமா இந்த கதைய யாருகிட்டயாவது சொல்லனும்னு நெனச்சிட்டு இருந்தேன். Today I got it. இன்னைக்குத் தான் அந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. Sorry! நீங்க கேட்டுதான் ஆகணும். ஒரு விலேஜ்ல a old lady ஒரு வயசான பாட்டி (பாட்டின்னாவே வயசானவங்க தான்ய்யா!) இருந்தாங்களாம். அவங்க வடை சுட்டு பிஸ்னஸ் பண்ணிகிட்டு இருந்தாங்க. அந்தப் பக்கம் வந்த Crow  ஒரு காக்கா வடைய திருடுகிட்டு போயிடுச்சு. வடைய கொண்டு போன காக்கா ஒரு மரத்துல உட்காந்துச்சு. அந்தப் பக்கம் வந்த Jackle அதாவது நரி “ you damit! படவா ராஸ்கல்! நீ எப்படா திருடன் ஆனே!”னு கேட்டது. அதுக்கு அந்த காக்கா “எசமான்! என்ன மன்னிச்சிடுங்க எசமான்! இனிமே இந்த வடை மேல சத்தியமா திருடமாட்டேன்” னு சொல்லி கதறியழுச்சு. Then they became very good friends. yes. நல்ல நண்பர்களாகிட்டாங்க.

உலகமகாநாயகன் கமலஹாசன்:
சரித்திரக் கதைகேட்டு சலித்துப் போன உங்களுக்கு சாகாவரம் பெற்ற கதை ஒன்று சொல்லப் போகிறேன். இது கலைஞர் சொல்லிக் கொடுத்த வேதம். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்து கற்ற பாடம். மக்களும், மாக்களும் பரிணாம வளர்ச்சியின் பாதையில் நீர் அருந்திக் கொண்டிருந்த போது, தென்னிந்திய பகுதியில் ஒரு தமிழ் கிழத்தி வடை சுட்டு விற்றுக் கொண்டு வந்தாள். கண்மையின் கருமை கொண்ட காகம் ஒன்று, ஒரு வடையை அபகரித்துச் சென்றது. அபகரிப்பு அதிகரிக்கும் பூமியில் புரட்சி பிறந்தே தீரும். புரட்சியின் வடிவில் புத்திசாலி நரியொன்று, காகத்தினிடம் கடவுள் வாழ்த்து பாடச் சொன்னது. வாழ்த்துப் பாடிய காகம் இழந்தது வடை மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையையும் தான்.

கலைஞர் கருணாநிதி:
ஈழத்தின் துயரை நெஞ்சில் சுமந்தபடி ரஷ்யாவின் “தாய்காவியம்” போல ஒரு “ஆயாகாவியம்” (ஆய்காவியம் அல்ல!) எழுத புறப்பட்டுவிட்டது எனது கரங்கள். வாழ்வைத் தொலைத்த ஒரு மூதாட்டியின் வடை திருடிய காகத்திடம் இருந்து வடையை அபகரித்த நரி குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறது.
இடம்: நீதிமன்றம்
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
காகத்தைப் பாடச் சொன்னேன். வடையைத் களவாடினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. காகத்தைப் பாடச் சொன்னேன். பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தி பரிசு கொடுப்பதற்காக அல்ல. கோவில் காகம் கோவிந்தா என்று கத்தாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக. வடையைத் களவாடினேன். சரக்குக்கு சைட்டிஷ் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. வயதான மூதாட்டியின் வடை திருடிய வன்மையைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. பிரியாணியும், சரக்கும் வாங்கிக் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்களே அரசியல்வாதிகள் – அதைப் போல.

என்னைக் Cunning Jackle, Cunning Jackle என்கிறார்களே, இந்தக் Cunning Jackle ன் வாழ்க்கைப் பாதையிலே aboutturn அடித்துப் பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காகங்கள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். ஆயா சுட்ட வடை இல்லை என் பாதையில், காக்கா சுட்ட குறவர்கள் நிறைந்திருந்தனர். வடையைத் தீண்டியதில்லை நான். ஆனால் வடை சுட்ட கடாயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு காடு பிழைக்க ஒரு காடு. செய்யாற்றில் பிறந்த நான், வடை தின்ன சென்னைக்கு ஓடோடி வந்தேன். நாய் என்று நினைத்து என்னை வாலாட்டச் சொன்னார்கள். ஓடினேன். ஆண்நாய்கள் ஒரு பக்கம் துரத்தின. ஓடினேன். என் முகத்தில் விழித்தால் நல்லதென்று மஞ்சள் துண்டணியும் ஒரு கூட்டம் விரட்டியது. ஓடினேன். ஓடினேன். வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என்னை?

நாய் என்று நினைத்து என்னை வாலாட்ட சொன்னது யார் குற்றம்? டிஸ்கவரி சேனல் பார்க்காமல் சீரியல் பார்க்கும் சென்னைவாசிகள் குற்றம். ஆண்நாய்கள் துரத்தியது யார் குற்றம்? மார்கழி மாசம் வந்ததின் குற்றம். என் முகத்தில் விழித்தால் நல்லதென்று மஞ்சள் துண்டணியும் ஒரு கூட்டம் விரட்டியது யார் குற்றம்? அவர்கள் முகத்தில் நான் விழித்தால் என் கதி என்ன ஆகுமென்று யோசிக்காத வீணர்களின் குற்றம். இக்குற்றங்கள் களையப்படும் வரை நரிகளும் காகங்களும் குறையப்போவதில்லை. இதுதான் என் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.

உரைநடையின் உவகையில் உரைந்து கரைந்து போன என் உடன்பிறப்பே!என் கவிதையையும் சற்றுகனிந்துருகி கேளாய்!

ஈழத்துடன் கவிதை பகிர்ந்து கொல்ல ஒரு திட்டம்
தமிழகத்தில் காங்கிரசுடன் தொகுதி பகிர்ந்துகொள்ள ஒரு திட்டம்
ஈழத்தில் சகோதரயுத்ததை நிறுத்த ஒரு திட்டம்
தமிழகத்தில் சகோதர அரசியல் வளர்க்க ஒரு திட்டம்
ஈழத்தில் ஒரு வாய்க்கரிசி திட்டம்
தமிழகத்தில்  ஒரு கிலோ அரிசி திட்டம்
திட்டங்கள் எத்தனை எத்தனை! அத்தனையும் திகட்டாதவை!
இரந்துகேட்ட தமிழீழித்தால் வந்தது சுடுகாடு
இறந்துகெட்ட மக்களுக்கான கூப்பாட்டுக்கு ஒரு மாநாடு
வாழ்க அண்ணா நாமம்! வாழ்தமிழ் மக்கட்கு பட்டை நாமம்!

Tuesday, August 14, 2012

தொழுகை செய்யாமலே 88 வயதிலும் அயராத தாத்தா

எனக்கு தெரிந்து ஒரு தாத்தா இருக்கார்.  அவருடைய புகழைப் பற்றி சொல்லி மாளாது. தள்ளாத வயதிலும் சோம்பல் இல்லாமல் டெல்லிக்கு சொம்பு தூக்குபவர். அவர் பஞ்சமா பாதகத்திற்கே பல்பு கொடுப்பவர். அவர் தொழுகை எதுவும் செய்ததில்லை. ஆனால் எவன் காலில் தினமும் விழுகிறார் என்பது எனக்கு தெரியாது. ஏனென்றால் தினமும் விழுந்து எழுந்தால் உடலுக்கு நல்லது. உடம்பு சும்மா கின்னு இருக்கும். இந்த வயதிலும் மானாட மயிலாட நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறார் என்றால் பாருங்களேன். இவர் நாட்கணக்கில் நோன்பு இருப்பதில்லை. மணிக்கணக்கில் எப்பயாவது இருப்பார். அதுக்கே ஓவர் பில்டப் கொடுப்பார். சாமி எல்லாம் கும்பிடாத நாத்திகர். எவனாவது மாயம் மந்திரம் என்று சொல்லி மோதிரம் வரவழைத்துக் கொடுத்தால், வாங்கி உரசிப் பார்த்து ஜேபியில் போட்டுக்கொள்வார். தமிழ்நாட்டிற்கே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோவில் அரிசி போட்டவர். (அது  ஈழத்தமிழர் வாயில் போடத்தான் என்பது பிறகு தான் தெரியவந்தது.)  இருந்தாலும் அதையும் எங்க ஆளுங்க பாதி விலைக்கு கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் வித்துகிட்டு இருக்காங்க. 

இந்த வயதிலும் கட்சித்தலைவராகவே இருப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.எப்படியாவது மறுபடியும் ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் ஆகியே தீருவேன் என்று இருக்கிறார். நாங்க முடிவு பண்ணிட்டோம் இவரை அனுப்புரதுனு... டெல்லிக்கு...பிரதமராக... 

எங்க தாத்தாவுக்கு இருக்கும் ஒரே கவலை என்ன தெரியுமா? பீச்சுல இடம் கிடைக்குமா கிடைக்காதா? இல்லை கண்ணம்மாபேட்டை தானா! 

தூக்குல போடுரவன், கை காலை வெட்டுரவன், ஏசு அழைக்கிறார் கூட்டம் நடத்துரவன் எல்லாரும் கேட்டுக்குங்க. நீங்க சனங்களுக்கு கொடுக்கிறதெல்லாம் ஒரு தண்டனையா? தமிழ் மக்களை பாடுபடுத்த விதவிதமான தண்டனைகளைக் கையாள்பவர் எங்க தாத்ஸ். எதோ உலக்கையின் ஓசை, பொன்னர் புடுங்கர்  இப்படி சில படங்களுக்கு வசனம் என்ற பெயரில் எதையோ எழுதி தியேட்டர்களில் ஈயாட வைத்தவர். (தியேட்டர்காரர்கள் சிந்திச்சி பார்க்கணும் உண்மையாக தியேட்டர் பக்கம் எவனும் வராமல் போனதற்கு திருட்டு விசிடி மட்டும் தான் காரணமா, இல்லை எங்க தாத்ஸ் படம் பார்த்தவனுக்கெல்லாம் சினிமாபோபியா வந்து சீக்காகிட்டாங்களா என்று) இப்ப கூட பாருங்க ரொம்ப பொறுப்பாக எல்லாரையும் கூட்டி டெசோ என்ற பெயரில் ஈழமக்களுக்கு  ஈமகிரியை  கூட செய்து இருக்கார். இதைக் கேட்டால் உங்களுக்கு புல், செடி, மரம், ம... எல்லாம் அரிக்குமே! இப்படி சுறுசுறுப்பு சுந்திரமணியாகவும், எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமாக இருக்கும் எங்க தாத்தா யார் தெரியுமா சொல்லுங்க பார்ப்போம். அவரை தமிழ்சனங்க மு.கூ.கருணாநிதி என்று அழைப்பாங்க. நாங்க அன்பாக எப்பவும் "மஞ்ச துண்டு தாத்தா ! மஞ்ச துண்டு தாத்தா" என்று தான் அழைப்போம்.

எப்படி போஸு! நல்ல இருக்கா!
 இது!
 இது!

 வாவ்!
 மார்வலஸ்!
  உங்களுக்கு இன்னும் வயசே ஆகலை!
 பி.கு.: ஒருத்தன் எவ்வளவு நாள் வாழ்ந்தான் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம். எங்க தாத்தாவைப் பார்த்தாலாவது இதைத்  தெரிந்து கொள்ளுங்கள். 

வந்ததுதான் வந்திங்க அப்படியே ஒரு பாட்டைக்  கேட்டுட்டு போங்க!  



Monday, August 13, 2012

எங்கே யூதர்கள் ?


இஸ்ரேலைச் சேர்ந்த பேராசிரியர் ஷ்லொமோ  சண்ட் 2008-ல் கிப்ரூ மொழியில் ஒரு நூலை எழுதினார். அதன் பெயர் "யூதர்கள் எங்கு எப்படி கண்டுபிடிக்கப்பட்டார்கள்". அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு "The invention of Jewish people" என்ற பெயரில் வெளியானது. இந்த வெளியானவுடன் ஷ்லொமோவிற்கு ஒரு பக்கம் சொந்த நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பும், வேறொரு பக்கம் நன்மதிப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. அதிகப் பிரதிகள் விற்று மக்களிடமும் சென்றடந்துள்ளது.  ஷ்லொமோவை பாலஸ்தீனத்தின் பல்கலைக்கழகம் அழைத்து, அவருடைய நூலைப்பற்றி மாணவர்களிடையே பேசவைத்தது. அப்படி என்ன அந்த நூலில் உள்ளது. யூதமதவாதிகளுக்கு எரிச்சலையும், பாலஸ்தீனத்தை ஈர்ப்பையும் கொடுத்துள்ளது. நூலின் சுருக்கத்தை முழுமையாக பார்ப்பதைவிட, அதில் நூலாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ள சில முக்கிய கருத்துகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

…2000 வருடங்களுக்கு முன் ரோமானியர்களால் ஜுடாவைவிட்டு யூதமக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது ஒரு கட்டுககதை. மாறாக யூதர்களை ரோமானியர்கள் வெளியேற்றவில்லை. இரண்டாவது கோவில் மட்டும் இடிக்கப்பட்டது. புரட்சியால் விளைந்த போரில் சிலர் மாண்டுவிட்டனர், சிலர் போர் முடிந்தபின் வழமைக்குத் திரும்பிவிட்ட்னர், இஸ்லாமிய படையெடுப்பின் போது சிலர் மதம்மாறிவிட்டனர். ஆனால் யூதவரலாற்றாசிரியர்கள் கூறுவது போல உலகில் உள்ள அனைத்து யூதர்களும் இஸ்ரேலில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது மாபெரும் பொய். இஸ்ரேலை யூதர்களின் பூர்வீக பூமியாக உலகிற்கு காட்டவும், யூதர்களை நம்பவைக்கவும் இந்தக் கட்டுகதை புனையப்பட்டுள்ளது.

…ஒருவன் யூதனாக பிறக்கவே முடியும், மாற முடியாது என்பதும் முழுபொய். 100 வருடங்களுக்கு முன் உலகின் பல்வேறு பகுதியில் இருந்த யூதர்கள், மதம் மாற்றப்பட்ட அப்பகுதி மக்களே ஆவார்கள்.

…யூதயினம் என்ற ஒன்று இல்லவேயில்லை.  யூதர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் தேசியயினம் இல்லை. யூதர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அவ்வளவே. உதாரணமாக இத்தாலியர்கள் , ஆங்கிலேயர்கள் , ஜெர்மனியர்கள் . இவர்களிடம் இன அடையாளமாக பல விடயங்கள் உண்டு. உணவு, விழா, இசை, நடனம் எனப் பல உண்டு. ஆனால் இது போன்ற இன அடையாளம் யூதர்களிடம் இல்லை. உலகில் உள்ள யூதர்களிடம் மதவிடயங்கள் தவிர்த்து வேறு ஒற்றுமை எதுவும் இல்லை.

…இஸ்ரேல் தன்னை ஒரு ஜனநாயக நாடாக கூறிக்கொண்டாலும், இஸ்ரேலை யூதர்களுக்கான நாடாகவே அறிவிக்கின்றது. அங்கு வாழும் மற்ற மதத்தினரை அன்னியப்படுத்துகிறது. யூத இஸ்ரேலியர்கள் மற்ற மதத்தினரை மணப்பதைத் தடுக்கிறது. தான் குடியுரிமை பெற்று வாழும் ஒரு நாடு தனக்கானது என்ற எண்ணத்தைக் கூட மற்ற மதத்தினருக்கு வழங்க மறுக்கிறது.


யூதர்களும் பாலஸ்தீனியர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். இஸ்ரேலிய இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்பதே நூல் ஆசிரியரின் தீர்வு.

…பாலஸ்தீனம் சென்று பேசியபோது (யூத மதம் சார்ந்த) இஸ்ரேலிய  ஷ்லொமோவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது "பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்கள் இஸ்ரேலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா?" என்பது. அதற்கு ஷ்லொமோ சொன்னது என்னவென்றால் "யூதர்கள் பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேலை உருவாக்கி இருப்பது தவறு, அதற்காக இரண்டு தலைமுறை கண்ட அவர்களை வெளியெறச்சொல்வது முறையல்ல. கற்பழிப்பின் மூலமாக பிறந்த குழந்தைக்கும் சமுதாயத்தில் வாழ உரிமை உண்டு தானே!". ஷ்லொமோ சொன்ன வார்த்தைகளின் உண்மை பாலஸ்தீனியருக்கு புரிந்திருக்க வேண்டும். அன்றைய மறுநாள் பாலஸ்தீனிய நாளேட்டின் தலைப்புச் செய்தி "கற்பழிப்பின் மூலமாக பிறந்த குழந்தைக்கும் சமுதாயத்தில் வாழ உரிமை உண்டு தானே".