Saturday, November 08, 2008

எம்.ஜி.ஆர் ரசிகரா...


இந்திய திரையுலகில் சண்டைக் காட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் ரசிகர்கள் இதைப் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். எனக்கு எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சிகள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். என்னோட அப்பா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர், அதனால் நானும் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்த்து வளர்ந்தேன். சண்டைக் காட்சிகளைப் பொருத்தவரை, இந்தியாவில் எம்.ஜி.ஆர் போல எந்தக் கதாநாயகனும் சிறப்பாக திரையில் சண்டை செய்து பார்த்ததில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்ரும் வாலிபன் மிகவும் பிடித்த படம். இருந்தாலும், ரிக்ஷாகாரன் படத்தில் வரும் இறுதிக்காட்சி சண்டை எனக்குப் பிடித்தமானது. சண்டைக் காட்சியில் புரட்சிநடிகர் "சுருள்பட்டை" சுற்றும் ஒளித்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசிக்கவும்.



இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தான், நான் சிலம்பம் கற்றுக் கொள்ள போய் 'வீடு கட்ட' மட்டும் கற்றுக் கொண்டு வந்தேன். பத்தாம் வகுப்பில் படிப்பு, ஹிந்தி டியுசன் என பளு அதிகமானதால், தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்க ஊரு பக்கம் கம்பு சுற்றுவதில் 'சாரபட்டை' சொல்லித் தருவார்கள். நான் ஆசைஆசையாக செய்து வாங்கி வந்த 'பானா கோல்' (சிலம்பம்), இப்போது அரிசி, பருப்பு வெயிலில் காயவைத்தால் காக்கா விரட்டவும், குரங்கு விரட்டவும் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கொசுறு செய்தி:

எம்.ஜி.ஆர் திரைப்படம் பற்றிய அரிய தகவலுக்கு http://mgrroop.blogspot.com போய் பாருங்க!!

பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர், அதை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Friday, November 07, 2008

வில்லியம் வாலஸ்


Brave Heart படம் எல்லாரும் பார்த்திருப்பிங்க. இந்தப் படம் 1995-ல் மெல்கிப்சன் நடித்து வெளிவந்தது. இது William Wallace என்ற போராளியோட கதை. இவனுடைய காலம் 1272-1305 என்று கூறப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் சிதறுண்டு கிடந்த ஸ்காடிஷ் மக்களை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் உடனான போரை முன்நின்று நடத்தி, அதில் வெற்றியும் பெற்றவன். Brave heart படம் வெளிவந்த பிறகு, 1997-ல் வில்லியம் வாலஸுக்கு Stirling எனும் இடத்தில் National Wallace Monument சிலையொன்று அருகே வைக்கப்பட்டது. இந்த சிலை பார்ப்பதற்கு Brave heart மெல்கிப்சன் போலவே வடிவமைக்கப்பட்டது. அந்த சிலை நம்ம ஊரு பெரியார் சிலை போல சில விஷமிகளால் தாக்கப்பட்டதால், அதைச் சுற்றிலும் தடுப்பு வைக்கப்பட்டது. சிலையுடைய மூக்கு சேதப்படுத்தப்பட்ட பின், 2004-ல் அதை 350000 ஸ்டெர்லிங் பவுண்ட் விலைக்கு விற்க முடிவு செய்தனர், ஆனால் யாரும் வாங்க வரவில்லை. இந்த வருடம் அச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது.


ஜக்குபாய் கதை


1994-ல் வெளிவந்த Leon the professional என்ற படத்தை இயக்கியவர் Luc besson. இந்தப் படம் தான் தமிழில் சூரியபார்வை என அர்ஜூன் நடித்து வெளிவந்தது. பிறகு பாபிதியோல், ராணிமுகர்ஜி நடித்து 'பிச்சூ' (தமிழில் தேள் என்று பொருள்) என்று ஹிந்தியிலும் வந்தது. தமிழிலேயே ஓரளவுக்கு நன்றாக இருக்கும், ஹிந்தியில் படத்தின் கருவை குதறியிருப்பார்கள். சூரியபார்வை படத்தில் வரும் "கதவை திறக்கும் காற்றிலே.." என்ற மெலடி அருமையாக இருக்கும்.

Luc besson எடுத்த பல படங்களில் வயதான கதாநாயகன், இளம்வயது பெண் இடையே உள்ள காதல், அன்பு, பாசம் பற்றியதாகவே இருக்கும். இவருடைய திரைக்கதையில் வெளிவந்த Wasabi படமும் இதே கதைக்கரு தான். ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், ரஜினி நடிக்காமல் விட்டு, தற்போது சரத் நடித்துக் கொண்டிருக்கும் 'ஜக்குபாய்' படத்தின் கதையும் இப்படத்தின் தழுவல் தான்.
நான் சமீபத்தில் Besson திரைக்கதையில் வெளிவந்த Taken படம் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து பாரீஸ் சென்று Sex trafficing-ல் கடத்தப்பட்ட மகளை மீட்கப் போராடும் தந்தையின் கதை. படம் முழுக்க அதிரடி காட்சிகள் தான். Schindler's List படத்தில் நடித்த Liam Neeson இப்படி அடிதடியில் கலக்குவார் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதிரடியான படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.

Tuesday, November 04, 2008

காமிக்ஸ் to கார்ட்டூன்


நாம் எல்லோரும் சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்தவர்களாகவோ அல்லது பார்த்து ரசித்தவர்களாகவோ இருப்போம். நம்ம பதிவர் "லக்கிலுக்" கூட அடிக்கடி காமிக்ஸ் வாசிப்பைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார். அவர் பதிவுலக பெயர்கூட காமிக்ஸ் மேல் கொண்ட பாசம் தான் காரணம். நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகம் படிப்பேன். ராணிகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் அப்போது வருவதுண்டு. காமிக்ஸில் வரும் வீரர்கள் என்னை அதிகமாக கவர்ந்துவிடும். அப்படிக் கவர்ந்தவை... துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட், டைகர், குதிரைவீரன் ஜோ, இரும்பு மனிதன் ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர். அப்படி காமிக்ஸ் கேரக்டர்களின் ரசிகனாக இருந்த காலத்தில், என் தந்தையிடம் தினமும் குதிரை, தொப்பி வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பேன். நான் அதிகமாக நேசித்தது குதிரைவீரர்க்ளைத் தான். கட்டிலில் அமர்ந்து காமிக்ஸ் கையில் எடுத்துவிட்டால், எப்போதும் கற்பனைதான். வீட்டில் அம்மா இல்லாவிட்டால், நானும் என் அண்ணனும் காமிக்ஸ் கதையின்படி நடிக்க ஆரம்பித்துவிடுவோம். கட்டிலின் இருபுறமும் இருந்து கையை துப்பாக்கியாக வைத்துக் கொண்டு சுடுவதுண்டு. இவ்வாறு நாங்கள் இருவரும் நடிக்கும் போது, என் அண்ணனுக்கு நான் செவ்விந்தியர் வேடம் தான் கொடுப்பேன். ஒன்றுமில்லை... கோழியிறகோ / காக்கையிறகோ தலையில் சொருகிக்கொள்ளவேண்டும். கல்லூரி நாட்களின்போது குதிரைவீரர்களின் காமிக்ஸ் தாக்கம் காரணமாகவே நிறைய Western gendre படங்கள் தேர்ந்தெடுத்து பார்க்கத் தொடங்கினேன். இப்படியாக சுமார் 50 படங்களுக்கு மேல் பார்த்ததோடல்லாமல், சேமித்தும் வைத்திருந்தேன்.
லயன்காமிக்ஸில் 'ஈகிள்மேன்' என்று வெளிவந்த கதையின் திரைப்படம் தான் "Condorman", அப்படத்தின் ஒரு ஒளித்துண்டு கீழே...



நான் 4-ம் வகுப்பு வந்தபின் ஒரு வழியாக காமிக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. அதன் பின் தொலைக்காட்சியில் வரும் ஹீமேன், ஸ்பைடர்மேன் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 1992-ல் ஸ்டார் சேனல் தொடங்கியபின், தினமும் காலை எழுந்தவுடன் கார்டூன் பார்க்கும் வேலை தான். Oscar wilde தொகுப்பில் வரும் fairytale கதைகள் அதிகமாக வரும். (Happy prince, Selfish giant போன்ற கதைகளைப் பார்த்த ஞாபகம் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது). கிருத்ஸ்மஸ் பண்டிகை மற்றும் கோடைவிடுமுறை வந்துவிட்டால், ஸ்டார் டீவியில் நிறைய குழந்தைகளுக்கான படங்கள் காட்டப்படும், அவற்றை வெகுவாக ரசிப்பதுண்டு. சன் டீவி தொடங்கி வளர்ந்த பிறகு என்னை அப்போது யாரும் கார்டூன் சேனல் பார்க்க அனுமதிப்பதில்லை.
ஆனால் இப்போதுள்ள குழந்தைகள் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டிவி, போகோ என பல சேனல்கள் பார்க்கிறார்கள்.கொடுத்து வைத்தவர்கள். என்னோட அண்ணன் மகன் கார்த்திகேயன் யாரையும் மற்ற சேனல் பார்க்கவே விடுவதில்லை. அந்த அளவுக்கு இப்ப குழந்தைகள் வெறித்தனமாக பார்க்கிறார்கள். ஆனால் எப்படியோ மொக்கையான சீரியல்களும் அரைகுறையான தமிழ்படங்களைப் பார்ப்பதைவிட இந்த காட்டூங்ன் சேனல்கள் நிறைய தகவலும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

Monday, November 03, 2008

சுவாமி ரஜினிகாந்தும் அவரோட சிஷ்யகோடிகளும்

ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சி தொடங்கி விடுவேன். ஆனால் இப்போது நாடு சரியில்லை. அமைதியாக அவரவர் பணிகளில் கவனம் செலுத்துங்கள் பின்னர் பார்க்கலாம் என ரஜினி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு நடந்த்து. காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அது முடிந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்தை ரஜினிகாந்த் வணங்கினார்.

தொடர்ந்து ரசிகர்களை நோக்கி, "உங்களுடைய கேள்விகளை பேப்பரில் எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் கொடுங்கள். அவர் மேடையில் உங்களுடைய கேள்விகளை மைக்கில் வாசிப்பார். அதற்கு நான் பதில் கூறுகிறேன்' என்றார். (கிட்டத்தட்ட ஒரு ஆன்மீக ஞானி போல சூப்பர்ஸ்டார ஆக்கிட்டாங்கப்பா!!)

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி பதில் கூறினார்.

கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதே போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுதான் நோக்கம். (என்ன ஒரு உன்னத நோக்கம்! ரஜினியும் ரசிகர்களும் காதலன் - காதலி போல ஆகிட்டாங்க)

என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. (தலைவா! எதாவது ஒரு சாமியார உதாரணமா சொல்லாம உங்களால இருக்க முடியாதா?)

கே: எதிர்காலம் திட்டம் என்ன?

ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர் காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான். (இதை முதல்லே சொல்லி இருந்தா ஏன் இப்ப கேள்வி கேட்கிறாங்க!)

கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?

ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.

கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா? (விடுதலைப் போராட்டத்தியாகியா நீங்க பஸ் பாஸ், பென்சன் கொடுக்க!)

ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.

கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா? (ரஜினி நெனச்ச சாமி கும்பிட கூட உரிமை இல்லையா?)

ரஜினி: (சிரிக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு) இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.

அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது. அது போன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள்.

கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?

ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள். (நான் கேட்டதுக்கு பைத்தியக்காரட்கள்னு சொன்னாங்கப்பா! ஏனென்றால் நானும் ஒரு ரஜினி விசிறி!)

கே: உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்?.

ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.

சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். (குழப்பவாதியானு கேள்வி தானே கேட்டாங்க! உடனடியாக நிருபிச்சிட்டிங்களே!)

கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்.

ரஜினி: (சிரித்துக் கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி.

முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.

அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிகர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.

ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் மன்னிப்பு கேட்டேன் என்றார்.

தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிய மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினி பின்பு பேசியதாவது:

மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன். (ரசிகமணிகளே! இப்பயாவது உங்களுக்கு புரியலயா?)

நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித்தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள்தனம்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.

சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா?.

நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன். பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கும். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம்.

தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.

தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான் என்றார் ரஜினி. பிற்பகல், ரசிகர்கள் அனைவருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது.

(பாவம்! கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி ரசிகர்கள் ரஜினியை ரொம்ப படுத்தி இருக்காங்க. ரஜினியும் சாய்பாபா ரேங்ஜுக்கு பத்திப்பரவசம் பொங்கி வழிய பதில் சொல்லி இருக்கார். இவரு பேசாம கட்சிக்கு பதில் ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.)

(தட்ஸ்தமிழ்.காம் இருந்து சுடப்பட்டது)

நகைச்சுவை என்று பார்த்தால் சீரியஸா இருக்கு!!


Friday, October 31, 2008

மார்க்ஸ் சாதனையும் டாஸ்மாக் சாதனையும்




#1 மார்க்ஸ் சாதனை:
தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதர சிக்கலுக்குப் பிறகு மறுபடியும் மார்க்சிசம், சோசியலிஸம், கம்புனிஸம் பற்றிய பொதுவான பார்வை மாறியுள்ளது போலும். தேடல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில், ஜெர்மனியில், கார்ல்-டைட்ஸ் வெர்லாஃக் பதிப்பகம் 1500-க்கும் மேற்பட்ட கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூலின் பிரதிகளை விற்றுள்ளது. "1867-ல் எழுதப்பட்ட மூலதனம், ஆண்டிற்கு பொதுவாக விற்பனை இரண்டு இலக்கம் தாண்டுவதே அரிதாக இருக்கும்போது, தற்போது விற்பனை அதிகரித்துள்ளது", என்று அதன் பதிப்பாளர் கூறுகிறார்.

#2 டாஸ்மாக் சாதனை:
தமிழகம் முழுவதும் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளில் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'"ல் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும் எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. எதோ திரையில் விஜயகாந்த் வசனம் பேசுவது போல, ஒரே புள்ளியல் விவரமாக தினமலரில் வந்துள்ளது. அரசுக்கு வருமானம் அதிகமானாலும், இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கீழ்தட்டு மக்கள்தான். மற்ற மாநிலங்களை விட தற்போது, தமிழகத்தில் குடிப்போர் எண்ணிக்கை பெறுமளவில் அதிகரித்துவிட்டது. குடிப்பழக்கம் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு இருந்தால் கூட பரவாயில்லை, அப்படி இருப்பதில்லையே. இது பெருமளவில் தனிமனிதர்களின் பொருளாதாரச் சிக்கலை அதிகரிக்கும், அதன் தொடர்ச்சியாக சமுதாய சிக்கல்கள் உருவாகலாம். தெரியாமலா வள்ளுவர் கள்ளுண்மை அதிகாரத்தை, தனிமனித ஒழுக்கமாக கருதி அறத்துப்பாலில் வைக்காமல், பொருட்பாலில் வைத்தார்.
என்ன நடக்கிறது, எங்கே போகிறது தமிழகம். மக்களைப் போதையில் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த கலைஞர் என்ன கலிகுலாவா? குறளோவியம் படைத்த கலைஞருக்கு இது தெரியாதா என்ன?
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

சாட்சாத் திருமால் தான் கேபல்ஸ் (Goebbels) !



அரசியலிலும் போரிலும் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களை கேபல்ஸ் (Goebbels) என்று சொல்லுவார்கள். ரஷ்யாவில் ஜெர்மனி தர்ம அடி வாங்கும்போது கூட "நாஜிகளுக்கு மாபெரும் வெற்றி" என்று முழங்கிக் கொண்டிருந்தவர். ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் முடிவுரும் தருவாயில், கேபல்ஸ் ஹிட்லர் இறக்கும் வரை தீவிரவிசுவாசியாக இருந்து, தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இது ஒருபக்கம் இருக்க, என்னதான் கேபல்ஸ் கூறியவற்றைப் பொய்ப்பிரச்சாரம் என்று சொன்னாலும், அரசியல்ரீதியாகப் பார்ப்பின் இத்தகைய தகவல்கள் தங்களது ஊர் மக்களுக்கு ஒரு மனரீதியான திடத்தன்மையையும், எதிரிகளுக்கு ஒரு சோர்வையும் அளிக்கக் கூடியவை.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட கார்கில் யுத்தத்தின்போது இந்தியாவில் பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சிகள் தடைசெய்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம்,பாகிஸ்தான் கூறப்போகும் இந்திய இழப்பு பற்றிய புள்ளியல் விவரங்கள் இந்தியர்கள் கேட்காமல் இருக்கவே. இலங்கையில் நிகழும் ஈழப்போராட்டத்தில், இலங்கையரசு எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் "புலிகள் மீது கடும் தாக்குதல், பயிற்சித்தளம் தாக்கியழிப்பு, 50 புலிகள் பலி, 100 புலிகள் காயம்" என்றே அறிவித்து வந்துள்ளது. கருத்துக்கணிப்பு போல இதுவும் ஒரு கண்துடைப்பு விடயம் தான். இதனுடைய தாக்கமும், சமுதாயத்தில் பெறும் மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. இதைப்பற்றி பேசும்போது, இந்திய இதிகாசங்களில் இருந்து ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடக்கும் போது, தேவர்கள் அமுது அருந்துவதால் இறக்கமாட்டார்கள், ஆனால் அசுரர்கள் தொடர்ந்து அழியாமல் போரிடுவார்கள். இதன் காரணம் திருமாலைக் கேட்டால், அவர் "அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், சஞ்சீவி மந்திரம் அறிந்தவர், அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்துவிடுகிறார்" என்று கூறினாராம். (பார்த்தீர்களா! ஒரு எதிர்இனத்தவரின் உண்மையான வீரத்தைக் கடவுளால் கூட ஒத்துக்கொள்ள முடியவில்லை). ஒருவேளை, தேவாசுர போர், உண்மையாக ஆரிய-திராவிட யுத்தமாக நடந்திருப்பின், திருமால் தான் "கேபல்ஸ்".

மழை என் தோழன் !!


பனி முட்டைகளாய்

முற்றத்தில் வீழ்ந்தபோது

வினைப் பின்னமில்லா

விடலைப் பருவத்திலே

முத்துக்களாய் சேகரித்தேன்!

சன்னலில் சாறலாய்

முத்தங்கள் பதித்தபோது

உடைந்த துளிகள்

உலர் உள்ளத்தை

நனைத்தது உணர்ச்சியால்!

தோட்டத்தில் தூறலாய்

பூவிதழில் பொதிந்தபோது

தழுவாத தருணங்கள்

எண்ணிய தவிப்புகளெத்தனை!

சாப்ளின் சொன்னதுபோல்

உன்னோடு உறவாடும்போது

உப்புநீர் உமிழும்

என்றும் என் கண்ணோடு!

Thursday, October 30, 2008

தமிழ்மணப் பதிவுப்பட்டை பிரச்சனை! உதவுங்கள்!

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை!! என்னுடைய பதிவில் தமிழ்மணத் திரட்டியில் சேர்க்க இயலவில்லை, தமிழ்மணப் பதிவுப்பட்டையும் தெரியவில்லை. இடுகைகளைப் புதுப்பித்தால், புதிய இடுகைகள் இல்லை என்று காட்டுகிறது. தெரிந்தவர்கள் கொஞ்சம் உதவி புரியவும். நன்றி!!

Wednesday, October 29, 2008

ஹிந்தி 'கஜினி' படத்தோட முன்னோட்டம்

ஹிந்தி கஜினி படத்தோட முன்னோட்டம் ஒரு வழியாக வெளிவந்துவிட்டது. அமீர்கானுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதமான இப்படம் தீபாவளிக்கு வராமல் போனது. இப்படம் மொத்தம் 93 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகமான விலைக்கு விற்ற இந்தியப்படம் இது தான்!! HTML clipboardவழக்கம் போல, இப்போதே படத்தைப் பற்றி ஹிந்தி சேனல்களில் ஓவரா பில்டப் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.



Wednesday, October 22, 2008

ஈழத்தொடரும் இறையாண்மை இம்சையும்

உடன்பிறப்பு தூயா ஈழம் பற்றிய தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பரிசில்காரன் தவிர யாரும் மற்றவரை அழைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, என்னுடைய சொந்தத்தைப் பற்றி எழுத எனக்கு எதற்கு அழைப்பு. ஆதலால் நானே தொடங்குகிறேன்.


1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?
நான் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது என்னுடன் பள்ளியில் படித்த சில மாணவர்கள் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள். ஆனால் அப்போது அவர்கள் ஏன் தமிழகம் வந்தார்கள் என்பது பற்றிய அறிவு எனக்கு இல்லை. பிறகு நான் முதன்முதலாக தமிழருக்கெதிராக இலங்கையில் ஏற்படும் அவலத்தை என் அப்பா கூறி கேட்டு இருக்கிறேன். நூலகத்தில் தேடிப்பிடித்து ஈழம் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் படித்துள்ளேன். பிறகு ஈழம் பற்றி அதிகம் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டேன். நான் சந்தித்த ஈழத்தமிழர்கள் வெகுசிலர், என் காதலி உட்பட. இவ்வளவு தான் என்னுடைய ஈழப்பரிச்சயம்.

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
100%. 1980-க்கு முன்னால் அறவழியில் இருந்த போராட்டம் விடுதலை இயக்கங்களாக உருவெடுத்ததற்குக் காரணம், சிங்கள அரசின் மதவெறி, இனவெறி...! புள்ளப்பூச்சியைக் புலியாக மாற்றியது சிங்கள அரசு. அமைதியை விரும்பும் சிறுபான்மையினராக இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை இன்று சமராட வைத்தது சிங்கள அரசு. அத்தகைய அரசிடம் இணங்கி, அவர்களின் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்வது சாத்தியம் இல்லாத ஒன்று. சிங்கள அரசு தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஈவிறக்கமின்றி தமிழரைக் கொன்றபோது, பிறந்த நாட்டில் உரிமையில்லாமல் உயிருக்கு பயந்து உடைமையிழந்து உலகமெங்கும் அகதிகளாக சிதறியோடிய ஈழத்தமிழர்களின் விடிவு தமிழீழம் மட்டுமே.

தமிழர் கூட்டத்தில் ஐக்கியம் மற்றும் இறையாண்மை பற்றிப் பேசுபவர்கள், தமிழீழம் என்றால் போதும், உடனே இந்தியாவைப் பாருங்கள். அது போன்றதொரு ஒருங்கிணைந்த இலங்கையில் அரசாட்சி உருவாக்கப் பாடுபடுங்கள் என்று போதிக்கத் தொடங்கிவிடுவார்கள் இந்த நவீன காந்தியடிகள். "உங்கள் பெண்கள் கற்பழிக்கப் பட்டாலும், குழந்தைகள் கொல்லப்பட்டாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு விரல் சூப்புங்கள். ஆயுத ஏந்த வேண்டாம், அறவழியில் போராடுங்கள்" என்பார்கள்.

உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் பிலஹரி மார்தாணம் டைப் கேஸுங்க இதெல்லாம். எவனாவது அடிவாங்கி செத்தால் கூட அறவழி, அகிம்சை, கர்மவினை என்று கடவுள் பெயர்கூறி மணியாட்டிக் கொண்டிருப்பார்கள். சொந்த நாட்டு மக்களை இந்தியா என்னமோ கவுரவமாக நடத்துவது போல இவர்கள் நினைப்பு. காஷ்மீரில் மக்களிடையே இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியம் பல. வடகிழக்கு மாகாணங்களில் ராணுவம் புரியும் அராஜகம் கணக்கிலடங்காது. வடகிழக்கில் நடக்கும் கற்பழிப்புக்கு அகிம்சையாளர்களின், ஐக்கியவாதிகளின் பதில் என்ன? எத்தனை பேர் செத்து மடிந்தாலும், இதே கையாலாகாத போதனை தான். ஈழத்தில் பேசித் தீர்க்க இனி என்ன இருக்கு, பேச்சு வார்த்தை இயலாமல் தானே ஆயுதப் போராட்டம் வந்தது.

(சமீபத்தில் இந்துவில் வந்த ஐக்கிய மசுரு மண்ணாங்கட்டி கட்டுரை படித்த கோபத்தில் நான் எழுதித்தொலைத்தது "இந்துல சந்துல எழுதுரவங்களுக்கு".)

New Page 1

(தனிநாடு உருவாவது பற்றி கருத்து இருந்தால் சொல்லலாம், சொல்ல இயலாவிடில் விட்டுவிடலாம். "அய்யோ! அபிஷ்ட்டு, கண்ணதுல போட்டுக்கோ! நீ தனிநாடு பத்தி பேசலாமோ? எவ்வளவு பெரிய தப்பாக்கும். பகவான் கோபிச்சினுடுவார்" அப்படினு யாரும் சொல்லாதிங்க.)


3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

பள்ளியில் படிக்கும் போது தினமும் ஈழம் பற்றிய செய்திகளைத் தேடிப்படிப்பதுண்டு, ஓயாத அலைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. கல்லூரி வந்த பிறகு, தமிழ் செய்தித்தாள் வாசிக்க இயலாமல் போனது. பிறகு, தமிழ்மணத்தில் வரும் செய்திகளைப் படிப்பதுண்டு. இதைத் தவிர்த்து புதினம், சங்கதி, பதிவு, தமிழ்நாதம் போன்றவற்றை அடிக்கடி படிப்பதுண்டு.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
நல்ல விடயம். தமிழக அரசு தற்போதைய ஆதரவை முழுமையாக செயல்படுத்தினால், தமிழீழப் போராட்டம் மேலும் வலுவடையும். மேலும், தமிழகத்திலுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை சற்றேனும் மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

நம்பிக்கை இழக்காதீர். காலம் மாறும். உள்ளுணர்வு வெல்லும். தமிழீழம் மலரும்.

"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை

நிச்சயம் உலகம் பாராட்டும்"

Tuesday, October 21, 2008

இந்துல , சந்துல எழுதுரவங்களுக்கு....

"History must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது.வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள் (மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள்.


இந்தியன் படத்தில் கவுண்டமணி சொல்லுற மாதிரி நெற்றியில் ஈறுகுச்சியில் கோடு போட்டுகிட்டு இந்துவில் எழுதுரேன், சந்துவில் எழுதுரேனு கெளம்பிடுவானுங்க சிலர். இவனுங்களுக்கு தமிழரின் வரலாறும் தெரியாது. இந்தியாவின் பூர்வீகமும் தெரியாது. எப்பயெல்லாம் தமிழீழம் வேணும் என்கிற வாதம் வலுப்படுதோ? அப்பயெல்லாம் ஒருமைப்பாடு, ஐக்கிய இந்தியா, இந்திய இறையாண்மை அதுஇது என்று சொல்லிக்கொண்டு சாமியாட வந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய வரலாறு ஒரு மண்ணும் தெரிந்திருக்காது.

இவனுங்களுக்கு ஒரு கடிதம்,

வந்தேறிகளுக்கு எதற்கு தனிநாடு என்று பேசுபவர்கள், தனிநாடு கேட்பவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துபவர்கள் என்று பேசுபவர்கள் எல்லாரும் இந்த ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். ஹிலாரி க்ளிங்டன், ஒபாமா போன்றோர்கள் கூட விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக கூற, இப்போதே இலங்கைக்கு புளியைக் கரைக்கிறது. அதனாலத்தான் பத்து நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது அவசரமாக சண்டை போடுகிறார்கள். அமெரிக்காவோட ஜால்ரா தானே நீங்க, இன்னும் திருந்தாம இருக்கிங்க.

காஷ்மீர் பிரச்சனை இரண்டு நாடு தொடர்புடையது. அதையும் இலங்கைப் பிரச்சனையும் ஒன்றுனு சொல்லி வழக்கம் போல இந்திய பாசிஸ்ட் மாறி மிரட்டுரிங்க. இலங்கை பிரச்சனையோடு ஒப்பிடலாமென்றால் இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினையை ஒப்பிடலாம். அமைதியாக பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. பிறகு தான் பிரிவினை முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பிரிவினைக்குக் காரணம் மதம். அகிம்சாமூர்த்தி M.K. காந்தி கூட பிரிவினையை ஒத்துகிட்டாரே? அவரை பின்பற்றுவதாக சொல்லிகிட்டு திரிகிற அகிம்சாவதியான நீங்க ஏன் இந்த அளப்பரைய விடுரீங்க. ஒருவேளை இன்று உங்களைப்போல ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல், இந்தியா பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும். இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. கிழக்குப் பாகிஸ்தான் பங்கலாதேஷ் என்ற தனிநாடாக பிரிந்தது. பிரித்துக் கொடுத்தது இந்தியா. இதற்குக் காரணம் வங்காள மொழி பேசிய வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் தொடுத்த அடக்குமுறை.

இப்படி நீங்க மட்டும் அல்ல! பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). கேட்டால் தேசப்பற்று என்பார்கள்? நீங்க என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, அங்கு நடக்கும் உரிமை மீரலையோ காது கொடுத்து கேட்டதுண்டா? அங்கு சென்று இந்தியர்கள் என்றாலே உதைக்கிறார்களே, இந்திய நாடு என்ன, கொடிய கூட மதிக்காம வேற கொடி வச்சிட்டு இருக்காங்களே, இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? காஷ்மீர மக்களின் துயர்களையோ அங்கு நடக்கும் கொலைகளையோ கணக்கில் கொண்டதுண்டா? இந்தியமக்கள் இந்திய ராணுவத்திடம், காவல்துறையிடம் அவதியுறுவதையே எழுதத்துணியாத நீங்கள் இலங்கையில் நிகழும் அடக்குமுறை, அவலநிலையை ஏன் கண்டுகொள்ளப் போகிறீர்கள். ஈழதமிழர்கள் செத்துமடியரத நீங்க செய்தி பொடுரது இருக்கட்டும், இந்திய மீனவர்கள் செத்தபோனத நீங்க எப்பயாவது செய்தியில போட்டு இருக்கிங்களா? பிரபாகரனை 20-30 தடவை செத்ததா செய்தி போட்டு இருக்கிங்க. சுனாமி வந்து 10000 பேர் செத்தாலும், பிரபாகரன் என்ன ஆனார் என்ற கவலை தான் உங்களுக்கு. ஏ.சி. அறை உட்கார்ந்து கொண்டு, அமெரிக்க பொருளாதாரம் எப்ப சீர்படும், அணுமின் ஒப்பந்தம் போடப்பட்டால் என்ன நன்மைகள், இந்தியா எப்ப உலகக்கோப்பை வாங்கும் என்று வழக்கம் போல எழுதப்பாருங்க.

Saturday, October 18, 2008

எதோ சினிமா கேள்வி-பதில் தொடர் போட்டியாம்!!

என்னடா! கொஞ்சம் நாளாக யாரும் தொடர்விளையாட்டு என்று கூப்பிடலயே என நினைத்தேன். முரளி புண்ணியம் கட்டிக்கிட்டாரு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதலில் பார்த்ததாக நினைவில் உள்ள படம் எம்.ஜி.ஆர் நடித்து, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான "குலேபகாவலி". அப்படத்தில் வரும் புரட்சித்தலைவர் புலியுடன் மோதும் காட்சி இன்றும் நினைவில் உள்ளது. மற்றபடி வேறெந்த காட்சிகளும் நினைவில் இல்லை. பிறகு அப்படத்தை பலமுறை பார்த்துள்ளேன். என்னுடைய தந்தை ஒரு எம்.ஜிஆர் ரசிகர். என்னுடைய சிறிய வயதில் நான் பார்த்த் பெரும்பாலான படங்கள் புரட்சித்தலைவர் நடித்தது தான்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியாக அரங்கில் பார்த்த படம் 'அன்னியன்'. என்னுடைய அண்ணன் மகன் கார்த்தியுடன் பார்த்தேன். படம் முடியும் வேளையில், அம்மா ஞாபகம் வந்து கார்த்தி அழ ஆரம்பிக்க, கடைசி காட்சிகள் பார்க்கமலேயே வந்துவிட்டேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஆண்பாவம். என்னைப் பொருத்தவரை, இப்படம் இன்று வந்திருந்தால் இன்று யதார்த்தம் என்று பலரால் பாராட்டப்படும் பருத்திவீரன், சுப்ரமணியபுரம், மொழி போன்ற படங்களை தின்று ஜீரணித்திருக்கும். அழகான திரைக்கதை, அற்புதமான இசையமைப்பு, மறக்கமுடியாத நகைச்சுவை காட்சிகள்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.
உன்னால் முடியும் தம்பி. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
கன்னத்தில் முத்தமிட்டால், ரோஜா படங்களில் வரும் மொக்கையான அரசியல் சம்பவங்கள். பிரகாஷ்ராஜும், மாதவனும் நடந்தே தமிழீழப் பகுதிக்குச் செல்லும் காட்சி. அப்போது அவர்கள் உதிர்க்கும் அரைவேக்காட்டுத்தனமான கருத்து எரிச்சலூட்டுபவை. நாட்டுப்பற்றைக் காட்ட எரியும் கொடியை அணைக்கனும் அல்லது சேற்றை அள்ளி முகத்தில் பூசிக்கனுமாம். என்னங்கடா உங்க தேசபக்தி.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
இன்றைய நாளில் இந்தியாவில் திரைப்பட தொழில்நுட்பமென்றாலே அது தமிழ்சினிமா தான். உதாரணத்திற்கு, இந்தியாவிலுள்ள தற்போதைய சிறந்த ஒளிப்பதிவாளர்களைப் பட்டியலிட்டால், முதல் 7-8 இடங்கள் நமக்குத்தான். அன்று முதல் இன்று வரை, எந்த காலத்திலும் தொழில்நுட்ப விடயங்களில் தமிழ் சினிமா முன்னோடிதான். அந்த காலத்தில் கடினமாக இருந்த இரட்டை வேட படங்களை, நம்மவர்கள் வெகு சர்வ சாதாரணமாக எடுத்துத் தள்ளி இருப்பார்கள். ஓரளவு தொழில்நுட்பம் முன்னேறிய காலத்திலும், காட்சிகளில் கோணம் அதிகம் மாறாமல் static-காகவே எடுக்கப்பட்டிருந்தது. திரைப்பட கல்லூரி மாணவர்கள் எடுத்த படங்களில் காமேரா இங்கும் அங்குமாக வெவ்வேறு கோணங்களில் அலைபாயும். உதாரணத்திற்கு, ஊமைவிழிகள், இணைந்த கைகள் படங்களைப் பாருங்கள். இந்திக்குக் கிடைக்கும் போதியளவு பணம் நம்மிடம் இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக அசத்துவார்கள் நமது ஆட்கள். நாம் பெரும்பாலும் கோட்டை விடுவதெல்லாம் கதையில் தான்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பெல்லாம் வாசிப்பது குறைவு தான். வாரமலரோடு சரி. இப்போது இணையத்தின் உதவியில் வாசிப்பது அதிகமாகிவிட்டது.

7.தமிழ்ச்சினிமா இசை?
ஜி.ராமநாதன் முதல் இன்றைய இசையமைப்பாளர்கள் வரை அனைத்துப் பாடல்களையும் கேட்பதுண்டு. குறிப்பாக சொல்வதென்றால், இளையராஜாவின் பாடல்களே என்னை அதிகமாக கவர்ந்தவை. தமிழ்த் திரையுலகம் இளையராஜாவை இன்னும் சரிவர பயன்படுத்தவில்லை. இதுவரை அவருக்கு தீனிபோடும்படியான படங்கள் சரிவர கிடைக்கவில்லை. "ஹேராம்" பின்னணி இசையைப் கேட்டால் அவரது பரிமாணம் புரியும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய!! கணக்கில் அடங்காத அளவிற்கு. அதிகம் விரும்பிப் பார்ப்பவை இரானியப்படங்கள். காரணம், படத்தின் களம் இந்தியாவைப் போன்று இருப்பதால். சமீபத்தில் பாதித்த படம் மஜித் மஜிதி இயக்கிய இரானியப்படங்கள். "Baran" படத்தில் ஆணாக நடித்துக் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆப்கானிய இளைஞிமீது காதல் வயப்படும் இரானிய இளைஞனது கதை. அடுத்து "children of heaven"-ல், குழந்தைகளின் உலகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார் இயக்குனர். தற்போது IMDB-ல் உள்ள முதல் 300 படங்களுக்கு மேல் என் சேமிப்பில் உள்ளது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை! (எவ்வளவு சுலபமான பதில் பார்த்திங்களா?)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வழக்கம் போல தான் இருக்கும். உலகத்தரம், யதார்த்தம் என்று சால்ஜாப்பு வேலைகள் வழக்கம் போல நடைபெறும்.
ஆனால் ஒரு விடயம். இப்ப யாரும் production, direction பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. Marketing பற்றிய சிந்தனை தான் படம் எடுக்கும் போதே தொற்றிக்கொள்கிறது. இனிமேல், 10 கோடி படத்திற்கு செலவு செய்யப்பட்டால், 5 கோடி விளம்பரத்திற்காக செலவு செய்யப்படும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழனுடைய எல்லாம் பிரச்சனைக்கும் தீர்வாக இருக்குற சர்வரோக நிவாரணி சினிமா தான். அது இல்லாட்டி, இந்த தலைமுறை பைத்தியகார ஆஸ்பத்திரியில் இருக்கும். ஆனால் அடுத்த தலைமுறை கண்டிப்பாக உருப்படும்.

எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு பேரை, நீங்களே அழைச்சிட்டீங்க!! நான் எங்க போவேன் யாரை கூப்பிடுவேன். எனக்கு யாரைத் தெரியும்.
இருந்தாலும் சில பெருந்தலைகளை கூப்பிட்டு வைக்கிறேன்.

கானாபிரபா
வெட்டிபயல்
தூயா
ஆயில்யன்

Friday, August 29, 2008

அண்ணன் பாலபாரதிக்காக மறக்கமுடியாத ஒரு பாடல்

பாலபாரதி-மலர்வனம் லட்சுமி அவர்களின் இல்லறம் இன்புற்றிருக்க வாழ்த்துக்கள். 'அந்தநாள்' படத்தை இயக்கிய வீணை பாலசந்தர் அவர்கள் நடித்து சந்திரபாபு பாடிய 'பெண்' என்ற படத்தில் இடம்பெறும் பாடல் உங்களுக்காக!



நரிக்கதையும் நம்ம பிரபலங்களும்

நரி மற்றும் திராட்சைக் கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். இதையே நம்ம பிரபலங்கள் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும். சும்மா!! உங்க கற்பனைக் குதிரைய தட்டிவிடுங்க!!


உலகநாயகன் கமல்ஹாசன்:
இன்று உங்களுக்கு சரித்திரத்தின் மடியில் சாகா வரம் பெற்ற ஒரு கதையைக் கூறப்போகிறேன். இது ஒரு நரிக்கதையும் கூட. 10-ம் நூற்றாண்டு. உலகத்தில் இஸ்லாத்துடன் திராட்சையும் அதிகம் விளைந்த காலம். கானகத்தின் வழியே சென்ற ஒரு நரிக்கு அங்கு கனிதிருக்கும் திராட்சைகள் ரொம்பவும் பிடித்துப் போனது. பல கோப்பை ரசம் பருகிய மதம் அதன் மனதினுள் ஏற்பட்டது. பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சியடையாத நரியின் செய்கைகளும், முயற்சிகளும் திராட்சையைப் பெற்றுத் தருவதாயில்லை. எட்டியும் திராட்சை கிடைக்காமல் போனது இயற்கையின் சூழ்ச்சியும் அல்ல, கடவுளைத் துதித்தும் கிடைக்காமல் போனது நரியின் வீழ்ச்சியும் அல்ல. இது வெறும் மனித பரிமாணத்தை எட்டாத நரியின் கையறு நிலை. வாழ்க பாரதம்!! (திருவிளையாடல் தருமி: பேசும்போது அழுத்தம் திருத்தமா பேசு! படம் எடுக்கும் போது கோட்டை விட்டுடு!!!)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்:
இப்ப ஒரு குட்டிகதை சொல்ல போரேன். ஒரு ஊர்லெ ஒரு நரி இருந்துச்சாம். அது ரொம்ப பசியில காட்டுவழியா போறப்ப, திராட்சை பலங்கலெ பார்த்துச்சு. அதெ எப்படியாவது சாப்பிடனும்னு ரொம்ப ட்ரை பண்ணுச்சு. முடியல. எவ்வளவு ட்ரை பண்ணியும் முடியல. கடசியா முயற்சி பண்ணிச்சி அப்பவும் கிடக்கல. பிறகு திராட்சைன்னாலே வெறுத்துப் போச்சி. சுத்தமா பிடிக்கல. இத நான் ஏன் சொல்லுரென்னா, "அதிகமா ஆசைபடுர நரியும், அதிகமான உயரத்தில இருக்கிற திராட்சையும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது". 'கிடைக்கிரது கிடைக்கம இருக்காது; கிடைக்காதது எப்பவும் கிடைக்காது'.

கலைஞர் மு.கருணாநிதி:
உடன்பிறப்புக்குக் கடிதம். உடன்பிறப்பே கேளாய்! உலகத்தின் துயர் துடைக்க 'உளியின் ஓசை' படைத்த எனது கரங்கள், இன்று 'நரியின் ஆசை' என்றொரு மகத்தான காவியம் எழுதிவிட்டது. இக்கதையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் விபீடண நரியொன்று கானகத்தில் திராட்சைகளைக் கண்டு களிப்புற்றது. களிப்பின் விளிம்பில் நின்ற கபட நரியின் கோரப்பற்களுக்கு கிட்டாத திராட்சை ஒரு சீதை. தமிழினிமை கொண்ட திராட்சையை எட்டி எடுக்க முயன்ற தோற்றுப்போன நரி ஒரு குடிகார இராமன்.

வெண்ணிறாடை மூர்த்தி:
ப்ப்ப்ர்ர்ர்ர்! ப்பாப்பா! கதைய கேளு! காட்டுப் பக்கமா ஒரு கட்டுமஸ்தான நரி கமுக்கமா வந்துதான். அங்க கொலகொலயா தொங்குன திராட்சைய பார்த்து, நரியோட கால்கட்டைவிரல்ல இருந்து கபாலம் வரை கபால்னு வேர்த்துப்போச்சி. குபீர்னு கெளம்புன குஷியில குதூகலமான் நரி திராட்சைய லபக்குனு லாவனும்னு மனிஷா கணக்கா மடார்மடார்னு குதிச்சிதான். பல தடவை குதிச்சும் பழம் கிடைக்காத நரி, குப்புற விழுந்ததுல, பலான இடத்துல அடிபட்டு ப்பரபேன்னு கெளம்பிச்சாம்.

கேப்டன் விஜயகாந்த்:
ஏய்! நான் இப்ப சொல்லப்போற கதை, நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு தமிலனும் தெரிஞ்சிக்க வேண்டியது. ஒரு பாக்கிஸ்தான் நரி, காஸ்மீர்ல இருக்கிர திராட்சைக்கு ஆசைப்பட்டு திருட்டுதனமா வந்தது. எவ்வளவு எட்டியும் திராட்சை கிடைக்கம போக, இன்னைக்கு தீவிரவாதியா மாறிடிச்சி. (ஒரு வேளை உங்கள போல சுவத்துலயோ,மரத்துலயோ காலை வச்சி எட்டி இருந்தா நரிக்கு திராட்சை கிடைச்சி இருக்கும்னு நினைக்கிறேன்!!!) இப்படி இந்த வருசத்துல பார்டர கிராஸ் பண்ண நரிங்க 305, திருடப்பட்ட திராட்சைங்க 2077. இதுல தீவிரவாதியா மாறிப்போன நரிங்க 201. இத உடனடியா நிறுத்தனும்னா எமர்ஜன்சி கொண்டுவரனும். இந்த நிலமய மாத்த ஒவ்வொரு தமிலனும் முன்னுக்கு வரனும்.

மேஜர் சுந்தரராஜன்:
ஹா..ஹா...For past 25 years, கடந்த 25 வருஷமா இந்தக் கதைய யார்கிட்டயாவது சொல்லனும்னு துடிச்சிட்டு இருக்கேன். A Fox, ஒரு நரி காட்டுவழியா போறச்சே, grapes அதாவது திராட்சைய பார்த்துச்சாம். எவ்வளவு try பண்ணியும், sorry! அந்த திராட்சை நரியோட கைக்கு கிடைக்கல. இதுக்குக் காரணம், அந்த நரி ரொம்ப short...அதாவது ரொம்ப குட்டை.

முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்!

முரட் ஜஞ்ஜிரா (Murud-Janjira) கோட்டை மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆப்பிராக்காவைச் சார்ந்த சித்திகளால் கட்டப்பட்டது. (சாண்டில்யன் எழுதிய ஜலமோகினி நாவலில் வரும் அதே சித்திகள் தான் இவர்கள்). இக்கோட்டை அமைக்க 22 ஆண்டுகள் ஆனது. மராத்தியர்கள், டச்சுக்கள், கிழக்கிந்தியக் கம்பெனியரும் முயற்சி செய்து கைப்பற்ற முடியாத கோட்டை இது. தவுலாதாபாத் மற்றும் கோல்கொண்டா கோட்டைகள் போல, ஜஞ்ஜிராவும் தன்னுடைய கட்டிடச் சிறப்பினால் கைப்பற்ற முடியாத ஒரு கோட்டையாக திகழ்ந்தது. சிவாஜி ஆறு முறை முயற்சி செய்தும் இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இக்கோட்டைப் பற்றி மேலும் தகவல் அறிய இந்த இணைப்புக் செல்லவும்.

http://en.wikipedia.org/wiki/Janjira

http://www.murudjanjira.com/

சரியாக பதில் கூறிய ஞானசேகர், முயற்சி செய்த உருப்படாதது அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Thursday, August 28, 2008

இது என்ன இடம் என்று சரியாக சொல்லுங்க பார்ப்போம்!

படத்தில் காணப்படும் இது என்ன இடம் என்று சரியாக சொல்லுங்க பார்ப்போம்!
மேலும் தகவல்: இது கடலின் நடுவில் இருக்கும் ஒரு கோட்டை. இது இந்தியாவில் தான் இருக்கிறது.

கலைஞரின் தெளிவான பதில்கள்!

இடம்: டீக்கடை

சிண்டு: அண்ணே! இன்னைக்கு என்ன சேதியா வந்து இருக்கு!

அண்டு: உற்சாகமா Sultan the warrior வருதாம்.

சிண்டு: என்ன இது! சுல்தான் கழுத்துல கொட்டை கட்டிகிட்டு இருக்காரு, விட்டா பட்டையும் நாமத்தயும் போட்டு பண்டாரமாக்கிடுவிங்க போல.

(கலைஞர் டீக்கடைக்கு வரார்!)

அண்டு: உளியின் ஓசை தொபக்கடீர்னு ஊத்திகிச்சாமே?

கலைஞர்:

சுள்ளான் முதல் சுட்டபழம் உள்ளிட்ட

எல்லா மொக்கைக்கும் சூடான பதிவிடும்

கழகத்தின் பதிவுலக போர்வாள் 'லக்கி'

'உளியின் ஓசை' பற்றி பதிவிடாத

காரணத்தால்தான் ஊத்திக்கொண்டது.

சிண்டு: கலைஞர் ஐயா! இலங்கை தமிழர் உரிமை காக்க உங்க கைவசம் எதாச்சும் திட்டம் இருக்கா?

கலைஞர்:

வசனங்கள் மொக்கையாகப் போனாலும்,

அடுத்த வாய்ப்பு தக்கையாகிப் போகாது!

ஈழத்திற்காக என் இன்னலையும் மீறி,

உளியின் ஓசை போன்றதொரு

உன்னதகாவியம் படைக்க உள்ளேன்!

அண்டு: ஈழத்தமிழருக்கு பிரச்சனை தீர்க்கப்போறேனு, உலகத்தமிழர்களையே கொடுமை படுத்த கெளம்பிடுவிங்க போல!

சிண்டு: தமிழ்...தமிழ்...என்று எப்பவும் பேசுற உங்களோட பொண்ணு கவுஜப்புயல் கனிமொழி, காபி வித் அனு என்று ஒரு தமிழ் சானலில் வரும் நிகழ்ச்சியில், இங்கிலிபீசுல மட்டுமே பேசி வெளுத்தாங்களே, அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

கலைஞர்:

ஆங்கிலம் அறியாமல்

மத்திய அமைச்சர் ஆவது எங்ஙனம்

மச்சானுக்கு ஒரு வாய்ப்பு

மருமகனுக்கு ஒரு வாய்ப்பு

மகளுக்கு ஒரு வாய்ப்பு

சிண்டு: நீங்க சமீபத்தில் பழ.நெடுமாறனைப் பற்றி காரசாரமாக கவிதை எழுதி திட்டுரிங்களே! என்ன விடயம்?

கலைஞர்:

உடன்பிறப்பே! கேளாய்!

ஞாநி என்ற கோணி 'ஓ' போட்டு

எழுதிய ஒட்டடைகளை மறுமொழிந்த மடையன் அவன்!

மனைவிகள் ஆயிரமாயிரம் கட்டிய தசரதனை,

மூன்றுமனைவிகள் கட்டிய அடியேனுக்கு ஒப்பிட்டமூடன் அவன்!

தமிழர்குடி கெடுத்த குடிகார இராமனை,

என் குலக்கொழுந்துடன் ஒப்பிட்ட கூற்றுவன் அவன்!

நான் எழுதிய கவிதை ஓர் உறைகல்!

உண்மையைத்தான் கூறும்.

அண்டு: இதுக்கும் கவிதையா! நீங்க சொன்னது உறைகல்லோ கடப்பாகல்லோ தெரியாது. ஆனால் அவர் கூறியது உண்மை தானே! நீங்களும் அக்பர் போல ஆட்சியவிட்டு போக மாட்டீங்க போல... உங்க பசங்களும் ஜஹாங்கீர் போல அப்பன் எப்ப...திண்ணை எப்ப காலியாகும்னு காத்துகிட்டு இருக்காங்க.

கலைஞர்: *****************(Censored)

அண்டு: சிண்டு!!! டோட்டல் பேமிலி டேமேஜ்! இன்னும் பச்சையாக திட்டுரதுக்கு முன்னாடி எஸ்கேப்!!!

Sunday, August 24, 2008

ரஜினி மற்றும் விஜயகாந்தின் அயராத முயற்சிக்கான வெற்றி!!

கமலுடைய முயற்சி வெற்றி பெற்றதோ? இல்லையோ? நமக்கு இப்போது அது பற்றி விடயம் தேவையில்லை. ஆனால் ரஜினி, விஜயகாந்த் அவர்களின் அயராத முயற்சி இன்று வெற்றி பெற்றுவிட்டது. ஹாலிவுட் படங்களில் ஒரு Hellboy தான். தமிழ்படங்களில் ரஜினி, விஜயகாந்த், விஜய்,...என பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. தமிழ் படங்கள் ஹாலிவுட் தரத்திற்கு போகத் தேவையில்லை. ஹாலிவுட் படங்களே தமிழ் தரத்திற்கு பின்னேறி வந்துவிடும். காரணம்! தமிழ் படங்களில் இருக்கும் புதுமை (அ) பின்நவீனத்துவம்(!?). கீழேயுள்ள படத்துண்டு, இதற்கு ஒரு சான்று!


Thursday, August 21, 2008

Hits...Visits...பார்க்க இது பெஸ்ட்!

Icerocket Blog tracker ஹிட்ஸ் தவிர்த்து இன்னும் உங்கள் பதிவு சார்ந்த பல தகவல் தருவதாக உள்ளது. ஒருமுறை பதிப்பித்துக் கொண்டால் போதும், எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். பதிப்பிக்கும் முறை வெகு சுலபம். நீங்கள் பதிப்பிக்க வேண்டிய தளமுகவரி.

Tuesday, August 19, 2008

டீக்கடை: விஜயகாந்த், வினுசக்ரவர்த்தி,வெண்ணிறாடைமூர்த்தி

(இடம்: டீக்கடை இம்சைகள்: வெண்ணிறாடை மூர்த்தி, வினுசக்ரவ்ர்த்தி, விஜயகாந்த்)

வெண்ணிறாடை மூர்த்தி: ப்ர்ர்ர்! குஜால இருந்த ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் ஐஸ் கோயில் பிரச்சனை. அதோட தீர்வுக்காக நம்ம கலைஞர் கபாலத்தில் இருந்து கலக்கலா ஒரு ஐடியாவ தட்டி விட்டாராமே?

வினுசக்ரவர்த்தி: என்னத்த எழவு சொல்லி இருப்பாரு! "சிவன் ஒரு கஞ்சாகுடி; ஆனால் அவர் எனக்கு எதிரியுமல்ல"னு சொல்லி மத்தவன் தலையையும் அவரோட தலை மாதிரி ஆக பிச்சிக்க வைப்பாரு!!

வெ.மூ: ஒலிம்பிக் போட்டியில அஞ்சு பாப்பா, அபாரமா ஆடும்னு பார்த்தா. இப்படி மண் தாண்டுரேனு தொபகட்டீர்னு உழுந்து மண்ணை கவ்விடுச்சே!

வி.ச: அடி செருப்பால! அது என்னய்யா அஞ்சு மேல மட்டும் அப்படி ஒரு அக்கரை. ஒருத்தனைத் தவிர போன இந்தியன் எல்லாரும்தான் மெடலும் வாங்கம கொடலு தள்ள வரப்போறானுவ!பிறகு என்னதுக்கு அந்த கருமம்!

வெ.மூ: சரி அது இருக்கட்டும்! உலகநாயகன் உருவாக்குர மர்மயோகி படத்தில நடிக்க நக்கல் நாயகன் சத்யராஜை கூப்பிட்டாங்களாமே! நெசமாவா?

வி.ச: என்னது உலகநாயகனா? அறுவாளை எடுத்தேன் கொலை விழுகும். முதல்ல தமிழ்நாட்டுக்கு படம் எடுக்கட்டும் அப்புறம் உலகம் அண்டம் பத்தி பேசலாம். வாழும்பெரியாரை கூப்பிட்டு நெப்போலியன் வந்தது போல இரண்டு சீன் நடிக்க சொன்னா எப்படி நடிப்பாரு!நமீதா கூட குத்தாட்டம் போடும்படி ஒரு சீன் வச்சா சரினு சொல்லுவாரு!!

உனக்கும் எதாவது தமிழ் வாத்தியாரு ரோல் இருக்கானு கேட்டியா? அப்படியே எனக்கும் 'எழவு' 'நாசமா போவ' அப்படினு சொல்லுற மாதிரி ஒரு ரோல் கிடைக்குமானு பாரு!

வெ.மூ: இப்படி குபீர்னு கோபம்பட்டா, கொடக்கு இருக்குற என்னோட வேட்டி லொடக்குனு கழண்டுக்கும். கத்தாதிங்க! அமைதியா அடுத்த சேதிய கேளுங்க!

வி.ச: யோவ்! சரிய்யா! அடுத்த எழவை படி!

வெ.மூ: தமிழ்மணத்தில் யாரைப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை தாருமாரா வையராங்களாமே?

வி.ச: பானையில தண்ணி வச்சி குடிக்க சொல்லு, வயித்தெரிச்சல் கொறயும்!

(விஜயகாந்த் டீக்கடைக்கு வேகமா வந்துட்டு இருக்கார்)

வெ.மூ: என்ன புரச்சி கலஞரே! டீசர்ட்டுல வரீங்க!

வி.கா: நான் வெள்ளையும்ஜொள்ளையுமா வந்தேனா... சட்டசபை போறேனு அர்த்தம். காக்கிசட்டையில வந்தேனா... படத்துல நடிக்க போறேனு அர்த்தம். டீசர்ட்டுல வந்தேனா... டீ சாப்பிட போறேனு அர்த்தம்.

வி.ச: என்ன எழவுயா இது! ஒரு கேள்வி கேட்டதுக்கு மூணு பதில் வருது! இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா?

வெ.மூ: படத்துல படப்படனு Dialogue பகிரங்கமா பப்பரபேனு பேசி இப்படி ஆகிட்டாரு! இவருக்கு Accroto Dialogomania-னு ஒரு வியாதி. அது இருந்தா இப்படித்தான். கண்டமேனிக்கு உளருவாங்க!

வி.கா: தமிழனுக்கு ஒரு டீ போடுப்பா! ஆங்ங்ங்!!

(வெ.மூ-வைப் பார்த்து) நியுஸ்பேப்பர்ல பாக்கிஸ்தான் திவிரவாதிகளைப் பத்தி எதாவது போட்டு இருக்கா?

வி.ச: என்னைய்யா? வந்ததும்வராதுமா தீவிரவாதிய பத்தி கேக்குராரு!

வெ.மூ: இவருக்கு இன்னோரு வியாதியும் இருக்கு! Terroristophilia-னு சொல்லுவாங்க!

வி.ச: அது சரி!

வெ.மூ: தீவிரவாதிகளைப் பத்தி திவ்யமா ஒன்னும் இல்லையே!

வி.கா: என்னது ஒன்னும் இல்லையா? இந்தியாவில மொத்தம் 2500 தீவிரவாதிங்க இருக்காங்க. மணிரத்னம் படத்தில் வர தீவிரவாதிங்க 1008. அர்ஜுன் படத்துல வரவங்க 90. என்னோட படத்தில் வரவங்க 1402. திருந்துர தீவிரவாதிங்க 2000. திருந்தாம சாவரங்க 500. Climax-ல itemsong பார்க்கிற தீவிரவாதிங்க 2300. பார்க்கதவங்க 200. நான் ஆச்சிக்கு வந்தேனா, தீவிரவாதிகள முமைத்கான் டான்ஸ் பார்க்கும் கொண்டிருக்கும்போது கண்டிப்பா பிடிச்சிக்காட்டுவேன்.

இப்படித்தான் 1942-ல காமராஜர் கால்ல முள்ளு குத்தினது. அதுக்கு காரணம் இந்தக் கருணாநிதி. 1980-ல் மவுண்ட் ரோட்டில் ஒரு நாய் கொலைச்சது. அதுக்கு காரணம், ஜெயலலிதா. ஆனா நான் ஆச்சிக்கு வந்தேனா எம்ஜிஆர் ஆச்சிய கொடுப்பேன்.

வெ.மூ: (வினுசக்ரவர்த்தியைப் பார்த்து) இதுக்குமேல இங்க நாம இருந்த கபாலம் வெடிச்சி கட்டெரும்பு வெளியவந்துடும். வா! கபால்னு கழண்டுக்குவோம்.

(இரண்டு பேரும் துண்டைக்காணோம், துணியைகாணோம்னு எஸ்கேப்ப்ப்ப்ப்...!! ஆனா இன்னும் நம்ம கேப்டன் நிறுத்தினபாடில்ல)

Monday, August 18, 2008

கொஞ்சம் படம் காட்டுவோம்!!






New Page 1

கீழேயுள்ள படம் 1871-ல் தாமஸ் நாஸ்ட்டால் தீட்டப்பட்ட டார்வின் பற்றிய கேலிப்படம். தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் அரசியல் கேலிசித்திர உலகின் தந்தை எனப் போற்றப் படுபவர் என்பது கூடுதல் தகவல்.

Sunday, August 17, 2008

ரீமேக் எதுக்கு? (அ) ரஜினி vs சிரஞ்சீவி

Page 1HTML clipboard

அண்டு: 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதை இனிமேல் தமிழகத்தின் தாரகமந்திரமாக இருக்கவேண்டும்.

சிண்டு: ஏனெண்ணே! அப்படி சொல்லுரிங்க!!

அண்டு: குசேலன், சத்யம் என சரமாரியாக அறுவைகள் வந்து தமிழர்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து சுனாமியாக வரப்போவது சுந்தர்.சி C/O குஷ்பு நடிப்பில் உலகம் சுற்றும் வாலிபன். தமிழகத்தில் இருக்கும் இதர பஞ்சங்களோடு இப்போது கதைப்பஞ்சமும் வந்துவிட்டது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் இந்த கூத்துகள். இப்படியாக போனால் நல்ல படங்கள் என்று ஒன்று விடாமல் நாறடித்துவிடுவார்கள் போலப்பா!

சிண்டு: இதுக்காக தமிழில் ரீமேக் படமே எடுக்கக்கூடாதா?

அண்டு: நான் அப்படி எதுவும் சொல்ல வரல!! ரீமேக் என்று எடுத்துக்கொண்டால், நல்ல படங்களை தற்போதைய காலத்திற்கேற்றவாறு சிறந்த இயக்குனர்கள் உருவாக்கினால் அற்புதமாக வர வாய்ப்புகள்(!) உண்டு. என்னைப் பொருத்தவரை வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தநாள்' படத்தை மணிரத்னம் இயக்கலாம் (எனோ! மணிரத்னம் தவிர எனக்கு யாரும் தோன்றவில்லை).

சிண்டு: ரீமேக் செய்யவே முடியாத தமிழ்படங்கள் உண்டா?

அண்டு: எனக்குத் தெரிந்து யாராலும் எடுக்க முடியாத தமிழ்படங்களென்றால், ஒன்று வஞ்சிக்கோட்டை வாலிபன் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன். இன்றைய நாளில் இவைபோன்ற படங்களை தமிழில் எடுப்பது மிகவும் கடினம். அப்படி எடுத்தால் தசாவதாரத்தில் முதல் பத்து நிமிடம் என பில்டப் காட்சிகளாகத்தான் இருக்குமே தவிர வேறொரு கருமமும் இருக்காது.

மேலும் ஒரு செய்தி ஆயிரத்தில் ஒருவன் ஆங்கிலத்தில் 1935-ல் வெளிவந்த Captain Blood என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படத்தில் மணிமாறனாக நடித்தவர் 'The Adventures of Robinhood' படத்தில் நடித்த Errol Flynn.

சிண்டு: இவரைப் பார்த்தால் நம்ம வாத்தியார் மாதிரியே இருக்குதுண்ணே!!

அண்டு: இவரோட படத்தைப் பார்த்துத்தான் வாத்தியார் உருவானார்.

Captain Blood பார்க்க..!! youtube link.

சிண்டு: சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சிடாரு, தெரியுமா உங்களுக்கு!

அண்டு: இது தெரியாமலா? போகப்போகத்தான் தெரியும் ஆந்திராவில் எத்தனை டிகிரி ஜுரம் என்று!!

சிண்டு: ரஜினி Vs சிரஞ்சீவி?

அண்டு: இந்த படத்தைப் பார்த்துக்கோ!!

சிண்டு: குசேலன் பத்தி எதாவது சொல்லுங்களேன்!

அண்டு: குசேலனில் ரஜினி பேசி புகழ்மிக்க வசனங்களால் (நான் அரசியலுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன! நீங்க உங்க வேலையைப் பாருங்களேன்) அவருடைய ரசிகமணிகள் கொதித்துப்போய்விட்டார்களாம். இப்போதைக்கு வசனங்களை படத்திலிருந்து நீக்கினாலும், இதனுடைய பாதிப்பு அடுத்து 'ரோபோ'வாக வரவுள்ள ரஜினிக்குத் தான்.

சிண்டு: அண்ணே! நல்ல ஆங்கிலப்படங்கள் எல்லாம் megaupload, rapidshare-ல் இருக்கு. இதை எப்படி தரவிறக்கம் செய்வது. கொஞ்சம் சொல்லுங்களேன்.

அண்டு: www.megadl.info, www.megafast.info, www.megafanatic.com இந்த தளங்களுக்கு போய் உனக்குத் தேவையான free லிங்க்-ஐ premiumlink-ஆக மாற்றிக்கொள்ளலாம். பிறகு சுலபமாக தரவிறக்கம் செய்யலாம்.

Tuesday, August 12, 2008

சாரு நிவேதிதாவின் விமர்சனம் மற்றும் கொஞ்சம் தைமூர்

ew Page 1

குசேலன் படம் பார்த்தேன். பரவாயில்லை! 'கதபறயும்போள்' படம் போல இதுவும் மொக்கையாகத்தான் இருக்கிறது.பசுபதி மற்றும் ரஜினி தவிர யாரும் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. ரஜினியின் இமேஜை நம்பி மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு. இப்படத்தில் ரஜினியைக் குறை சொல்லும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஓவர் ஹைப் கொடுத்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது வாசு. சுமாராக படம் எடுத்துவிட்டு சிவாஜி, தசாவதாரம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறது அவர்களுக்கே ஓவரா படலயா?

இது ஒரு பக்கம் இருக்க. நம்ம சாரு சார், அவரோட தளத்தில் குசேலனை ஒரு பிடி பிடித்துள்ளார். ஆனாலும்,

"ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து? தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்." என்று எழுதி இருந்தார். ஆனால் "ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா?" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்...? அது அவருக்கே புரிந்த விடயம்.

சாரு சார் ஒரு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நூல் எழுதுவதாக சொல்லி இருந்தார். அவருக்கு கவுண்டமணியையே தெரியாதுனு சொல்லிட்டு தமிழ் சினிமாவை பற்றி எப்படி எழுத முடியும் என்று தெரியவில்லை. காமெடியையும் தமிழ் சினிமாவையும் எப்பவும் பிரிக்கமுடியாது. மற்றும் என்னைப் பொருத்தவரை காமெடியன்களுக்குத்தான் சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்புத் திறன் உண்டு. அந்த வகையில் கவுண்டரும் சளைத்தவர் அல்ல. காலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்?

***************

மம்மி படத்தில் வருவது போல ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன். 14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!

**************

Tuesday, August 05, 2008

எம்.ஆர்.ராதா, Zulu, மற்றும் குசேலன்

குசேலன் படத்தில் 25% தான் நான் வருகிறேன் என்று ரஜினி கூறிய பிறகும். பி.வாசு சொன்னத கேட்டு போய், பார்த்து, ஆப்பு வாங்கிவந்து தமிழ்மணத்தில் புலம்பும் அறிவுஜீவிகளே! நீங்கள் ஏமாந்து போனதுக்கு ரஜினியின் டவுசரை எதுக்கு கயட்டனும்!! எதோ போனதுக்கு நயந்தாராவை மீனாவை பார்த்தோமா! வந்தோமானு இருக்கணும்!!

************************

"தொழில்நுட்பத்திலயும் நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறி இருக்கு. ஆனால் சம்ஜெக்ட் தான் அட்வான்ஸ் ஆகல. போட்டி போட்டுகிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப்பார்க்கிறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது? இதுவாமுன்னேற்றம். ஒன்னு சொல்லுரேன் கேளுங்க. நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சி போனாத்தான் தமிழ்படவுலகம் உருப்படும். அப்பத்தான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதையா எடுக்க முன்வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களையே காட்டி ஜனங்களை ஏமாற்ற முடியும்" - இதைக் கூறியது நானில்லை நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தவிகடனில் ராதா அவர்களுடைய பழைய பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். இதில் என்ன வியப்பென்றால், அன்று ராதா அவர்கள் கூறியது இன்று நம் தமிழ்த்திரையுலகிற்கு பொருந்துகிறது. ஆனால் ஒரு வேறுபாடு என்னவென்றால், ராதா கூறிய நாலைந்து பேர்... அப்போது முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் அவர்களைத்தான் குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போது நிலைமை இன்னும் மோசம். ரஜினி, கமல் கூட மாறுபட்ட கதையில் நடிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் நடிகர்களாக வலம் வரும் பெரும்பாலானவர்கள் அரைச்சமாவுக் கதைகளைத் தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். இயக்குனர்களில் கதைக்களம் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் நம்பிக்கையளிப்பது பாலா, சேரன், மிஷ்கின், அமீர். மேலும் புதுவரவுகளான வசந்தபாலன், கற்றதுதமிழ் ராம், சசிகுமார். இருப்பினும் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் போல புதுஇயக்குனர்களும் தமிழ்படவுலகை தன் வசப்படுத்தினால் ஒழிய கதைக்கும், களத்திற்கும் முக்கியத்துவம் ஏற்படாது.

மேலும் ஒழுங்கான தழுவல் படங்கள், குழந்தைகளுக்கான படங்கள், த்ரில்லர் படங்கள் குறைந்துவிட்டன என சொல்லுவதற்கில்லை..வருவதேயில்லை. சற்றுமுன் வந்து தமிழ்மணத்தில் ஏகத்துக்குக் கிழிக்கப்பட்ட குசேலன் போன்ற மொக்கைப்படங்களும், விஜய், ஜெயம்ரவி பாணி மசாலாப் படங்கள் தான், தழுவல் படங்களின் அடையாளங்களாக உள்ளன. 'மூடுபனி', 'ஜுலிகணபதி' போன்ற படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவலாக இருப்பினும், நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும். 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் திரைக்கதையை கௌதம்மேனன் அட்சரம் பிசகாமல் ஆங்கிலப்படத்திருந்து சுட்டுவிட்டு, மற்றவர் படங்களை (பொல்லாதவன்) குறை கூறிக்கொண்டு திரிகிறார். 'அஞ்சலி'க்குப் பிறகு ஒரு படம் கூட குழந்தைகளை மையமாகக் கொண்டு தமிழில் வரவேயில்லை.

********************

நான் சமீபத்தில் பார்த்த மற்றொரு ஆங்கிலப்படம் "Zulu". ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர் காலனிஆதிக்கம் செலுத்தியபோது, ஜுலு என்ற ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் ஏற்படும் போர் குறித்த உண்மைச் சம்பவம் தான் கதை. இதோ இப்படத்திற்கான youtube இணைப்பு. தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

Zulu Trailer



திகில் படவரிசையில் சாகாவரம் பெற்ற 'Rosemary's baby' படத்தையும், Sergio leone இயக்கத்தில் வெளிவந்த "A fistful of Dynamite" என்ற western genre படத்தையும் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது, அது பற்றிய எண்ணங்களை பகிர்ந்துகொள்வோம்.

New Page 1

புரட்சி பற்றி 'A fistful of dynamite' படத்தில் வரும் ஒரு வசனம். பின்னணியில் Ennio morricone-ன் இசை தவழ்ந்து கொண்டிருக்கிறது.




***********************

Saturday, June 21, 2008

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை!!

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. சுருங்கச்சொன்னால், இப்படம் மைக்கெல் மதன காமராஜன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் ஒரு மணிநேரம் க்ளாசிக் பட ரசிகர்களை கவரும் விதமாகவும், அடுத்த இரண்டு மணிநேரம் அசல் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கிரேஸிமோகன் படமாக மாறிப்போகிறது. நிச்சயம் இந்தக் கலவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணம். பொழுது போக்கிற்கான நல்ல படம். ஒரு சராசரி தமிழனுக்கு என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்துவிடப் போகிறது. சில பாத்திரங்களுக்கு மேக்கப் சற்று உறுத்தல்தான். அப்பாத்திரங்களை கமலால் மேக்கப் இல்லாமலேயே வெகு அழகாக நடித்திருக்க முடியும். பத்து பாத்திரங்கள் நடிக்க வேண்டி, ஒரு திரைக்கதையை தயாரித்தார் கமல். ஆனால் திரைக்கதையின் பலம், பத்து வேடங்களை ஏன் கமலே நடித்தார், வேறு யாராவது நடித்திருக்கலாமோ? என்று யோசிக்க வைக்கிறது. இவ்வகையில் எழுத்தாளர் கமல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். படம் முழுக்க வரலாற்றுத் தகவல்களையும், விஞ்ஞானத் தகவல்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஏனோ நம் தமிழ்மண பதிவாளர்கள் சிலர், வழக்கம் போல... பில்லாவிற்கு விமர்சனம் எழுதியது போல இது சரியில்லை, அது சரியில்லை என்று எழுதியுள்ளார்கள். நெப்போலியன் தமிழ் சரியில்லை என்றொரு கருத்து. (ஆங்கிலம் பேசும் வெள்ளையரிடம் கட்டபொம்மன் பேசிய தமிழ்வசனங்களைப் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் இவர்கள்!!) நெப்போலியன் நன்றாகவே பேச முயற்சித்துள்ளார். நெப்போலியன் தவிர்த்து, சரத்குமார் நடித்திருக்கலாம். "என்றா பேசுரே!! கட்டிவச்சி, தொலை உரிச்சிபோடுவேன்!!" என்று பேசி இருப்பார். அல்லது கமலே ஒரு வேடமாக ஏற்று நடித்திருக்கலாம்.

உடல்மொழி விஷயங்களில் கமல் பின்னிப்பெடல் எடுக்கிறார். அப்படி வேடத்திற்கு வேடம் வேறுபாடு. உலகில் எந்தக் கலைஞனாலும் இவ்வளவு அழகாக உடல்மொழி, பேச்சு, செயல் வேறுபாடு காட்டி நடிக்க இயலாது. கமலின் கடினமான உழைப்பு கட்டாயம் தெரிகிறது.

அன்பேசிவம் போன்ற கிளாசிக் படத்திற்கு சென்று காமெடி சரியில்லை என்பவர்கள், வசூல்ராஜா படத்திற்கு சென்று நாயகன், மூன்றாம்பிறை கமலைத் தேடுபவர்கள் அனைவருக்கும் ஒரு செய்தி. ஹேராம், குணா, அன்பேசிவம் போன்ற படங்களை எடுத்ததன் மூலம் நட்டம் மட்டுமே சந்தித்த கமல், மேற்கண்ட படங்களையே எடுத்துக்கொண்டிருந்தால் பிச்சைதான் எடுக்க வேண்டிவரும். இப்படங்களுக்கு கமலுக்கு தேசியவிருதுகூட கிடைக்கவில்லை. மசாலா படங்களில் நடித்தாலும் கமலின் நடிப்பை மட்டுமே ரசிப்பவர்களில் நானும் ஒருவன். அவ்வகையில் பார்க்கக்கூடிய படம்.

Saturday, May 10, 2008

கமலின் தசாவதாரம், இளையராஜா மற்றும் கொஞ்சம் ஹாலிவுட்

கமலோட ரசிகனான எனக்கு எப்பவும் ஒரு பயம் உண்டு. மிகவும் ஆர்பாட்டமாக வந்த சமீபத்திய கமலுடைய படங்கள் அவ்வளவு சொல்லும்படியாக இருந்ததில்லை. உதாரணம் சொல்லவே தேவையில்லை. ஆளவந்தான், விருமாண்டி அந்த வகையைச் சேர்ந்ததுதான். அன்பேசிவம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து மனதில் நிலைத்துவிட்டது. எப்போதும் வித்தியாசமாக முயற்சி செய்யும் கமல், தற்போது தசாவதாரத்திலும் முயற்சி செய்துள்ளார் என்பது என் எண்ணம். அந்த முயற்சி எந்த அளவிற்கு சிறந்ததாக இருக்கும் என்பது படம் திரைக்கு வந்த பிறகே சொல்ல இயலும். ஏனென்றால் பெரியளவிலான விளம்பரத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. ஆளவந்தான் படத்தில் வந்ததுபோல இங்கொன்றும் அங்கொன்றுமாக பிரம்மாண்ட காட்சிகள் வந்துபோகுமோ என்று தோன்றுகிறது.

கமல் பத்து வேடத்தில் நடிப்பது, நம்ம இளையராஜாவோட திருவாசகம் சிம்போனி மாதிரி தான். யாரும் நம்மை கண்டுகொள்ளாவிட்டால், எதாவது செய்து ஒரு கவனயீர்ப்பு முயற்சி. இளையராஜா ஜீனியஸ் தான். ஆனால் திருவாசக சிம்போனி பொதுவாக யாரையும் கவரவில்லை என்றே நினைக்கிறேன். உதாரணத்திற்கு 60களில் வெளிவந்த The good, the bad, and the ugly படத்திற்கு Ectasy of gold என்றொரு BGM, Enniomorricone இசையமைப்பில் இருக்கும், Hollywood-ல் இன்றும் இப்படம் மைல்கல்லாக இருப்பது அதனுடைய இயக்கம் தவிர்த்து இசையும் ஒரு முக்கியமான காரணம். ஒரு western மசாலா படத்திற்கு போடப்பட்ட இசையின் தாக்கம் கூட திருவாசக சிம்போனியில் இல்லை என்பதே நான் சொல்ல வருவது.




தசாவதாரம் படத்தில் "உலகநாயகனே!" என்றொரு பாடல். உலகநாயகன், ஆஸ்கார்நாயகன், உலகஞானி என்றெல்லாம் புகழ்வது ஒருபக்கம் இருந்தாலும், ஆஸ்கார் விருது ஒன்றும் நம்ம ஊரு தேசியவிருது போல பாரபட்சம் பார்த்துகொடுப்பது போல தோன்றவில்லை. பிதாமகன் படத்திற்கு விக்ரமிற்கு தேசியவிருது கொடுப்பதற்கு முதல் 'கொய் மில் கயா' படத்தில் ஹிர்த்திக்ரோஷனுக்கு கொடுக்க இருந்தார்களாம். தேர்வுக்குழுவில் சிலருடைய கடுமையான முயற்சியால் தான் விக்ரமிற்கு விருது கிடைத்தது. தகுதியானவர்களுக்கே கொடுக்கப்படுவதாக நினைக்கிறேன். அப்படி life achievement award எதாவது கமலுக்கு கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேககேஸ் தான். கமல் அதற்குண்டான பாதையில் தான் பயணிக்கிறாரா என்பதே யோசிக்கவேண்டிய விஷயம். இதற்கு பதில் தசாவதாரம் வெளிவந்த உடனே தெரிந்துவிடும்.

Castaway படத்திற்கு Tom hanks ஆஸ்கார்விருதிற்காக வெறும் முன்மொழியப்பட்டார். Americanhistory X படத்திற்கு Edward norton-னும் முன்மொழியப்பட்டார். The machinist படத்திற்காக Christian bale-வுக்கு (Batman begins படத்தில் நடித்தவர்) அந்த பாக்கியமும் கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, சிவாஜிக்கு தேசியவிருது கிடைக்கவில்லை! இளையராஜாவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை! என்று சொல்லுவது வருத்ததில் சொல்லுவது. ஆனால் கமலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை! என்பது அர்த்தமே இல்லாத ஒன்று.

Saturday, April 26, 2008

தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள்

தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள். கீழேயுள்ள படத்துண்டு "அதிசியப்பிறவி" படத்தில் வருவது ஆகும்.



இது வெளிநாட்டினரின் உருவாக்கிய படத்துண்டு (முடியும் வரைபாக்கவும்! நிச்சயம் சிரிப்பீர்கள்!)


Thursday, April 24, 2008

தசாவதாரம் ட்ரெய்லர்

தசாவதாரத்திற்கு தணிக்கை அதிகாரிகள் U சான்றிதழ் வழங்கியுள்ளனர். தணிக்கைக் குழு படத்தையும் வெகுவாக பாரட்டித் தீர்த்துள்ளதாக செய்திகள் உலவுகின்றன. தசாவதாரம் ட்ரெய்லர் பார்த்த பிறகு கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருக்கு!!



Sunday, April 20, 2008

சந்திரலேகா படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய பாடல்!!

ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ். வாசன் அவர்கள் தயாரித்த 'சந்திரலேகா' படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பாடிய வித்தியாசமான மேற்கத்திய இசைப்பாடல்.




Sunday, January 06, 2008

படம் பார்க்கலாம் வாங்க! - Hana-bi (ஜப்பானிய திரைப்படம்)

டாகேஷி கிடனோவின் எழுத்து, நடிப்பு, இயக்கம், மற்றும் தொகுப்பில் 1997-ல் வெளிவந்த Hana-bi (ஜப்பானிய மொழியில் வானவேடிக்கை) சமீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று. வெனிஸ் திரைவிழாவில் Golden lion விருது பெற்று, எல்லாராலும் நல்லமுறையில் விமர்சிக்கப்பட்ட படம்.

காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள கிடனோ, தன்னுடைய சக ஊழியருக்கு விபத்தின் காரணமாக கால்கள் ஊனமான பாதிப்பில் பதவி விலகுகிறார். லெக்குமியாவால் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியுடன் அதிக நேரத்தை அவளுக்காக செலவிடுகிறார். கொள்ளையில் மற்றும் கடனாக பெற்ற பணத்தால் மற்றவர்களின் தேடுதல், தன் மனைவியுடனான பயணம் என கதை நகர்கிறது. நீளமான- மெதுவான நகர்வுகள், வசனமற்ற- இயக்கமற்ற காட்சிகள் என வழக்கமான கிடனோ படம். கணவன் மனைவிக்கான உறவு, சோகத்தின் நடுவே சில புன்னகை, திடீர் அடிதடியோடு கூடிய குரூரம், கவித்துமான ஓவிய இயல்புகளோடு சஞ்சலமில்லாத ஒரு நீர் ஓடை போல திரைப்படம் பயணிக்கிறது.

படத்தில் கிடனோவின் நண்பர் ஊனமாக இருக்கும்போது வரையும் ஓவியங்கள், உண்மையாக பரலிசிஸ் காரணமாக பாதிக்கப்பட்டு் ஓய்வில் இருந்தபோது கிடனோவால் வரையப்பட்டவை. இப்படத்தைப் பார்க்கும் முன்னர் கிடனோ இயக்கத்தில் Zatoichi என்ற அதிரடி படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான் கிடனோனின் இயக்கம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. உங்கள் பார்வைக்காக youtube-லிருந்து 9 பாகங்களாக இருக்கும் Hana-bi படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும். நன்றி!!

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

Wednesday, January 02, 2008

ரஜினி படத்தின் புனிதத்தன்மையும் தற்போதைய ரீமேக்குகளும்

பில்லா வெற்றிக்குப் பிறகு ரஜினி படங்களை ரீமேக் செய்யும் ஆர்வம் எல்லாருக்கும் வந்துவிட்டது. சமீபகாலமாக ஹிட்டான பழைய படங்களை ரீமேக் செய்வதும், அதே டைட்டில்களை பயன்படுத்துவதும் தொடர் கதையாகிவிட்டது. அஜித்தின் 'பில்லா'வின் வெற்றியைத் தொடர்ந்து பல நடிகர்கள் ரீமேக் கதைகளை விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ரஜினி பட தலைப்புக்கு அநேகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். எல்லாரும் ஏன் ரஜினி படத்தையே குறிவைத்து ரீமேக் செய்ய விழைகிறார்கள். வேறென்ன? எதிர்பார்ப்பை உருவாக்கத்தான். இந்த நேரத்தைப் பயன்படுத்திக் காசு பண்ண ஆசைபடும் சிலர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரஜினி படத்தின் டைட்டில்களை பதிவு செய்து வைத்துள்ளனர் என செய்திகளும் வெளிவந்துள்ளது. 'பாயும்புலி', 'மூன்றுமுகம்', 'முரட்டுகாளை', 'நல்லவனுக்கு நல்லவன்', 'மனிதன்', 'வேலைக்காரன்', 'குரு சிஷ்யன்' போன்ற 30 ரஜினி படத்தின் டைட்டில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரிய நடிகர்களை வைத்து ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் கம்பெனிகளிடம் பதிவு செய்த டைட்டில்களை கணிசமான விலைக்கு விற்கலாம் என்பதே சிலரது கணக்காக இருக்கிறதாம்.
'பில்லா' ரீமேக் செய்யப்பட்ட போதும், தற்போது வெளிவந்த பிறகும் பலர் பழைய ரஜினி நடித்த பில்லா நன்றாக இருப்பதாகவும், புதிய பில்லா படம் சொதப்பல் எனவும் கருத்து வெளியிட்டனர். (தமிழ்மணத்தில் ஒருவர், ஸ்ரீபிரியாவின் வசீகரம்(?) இதில் மிஸிங் என்று ஒருபடி மேலே சென்று அலம்பினார்!). பெரிய எதிர்பார்ப்பு இல்லாதவர்கள் அல்லது ஹிந்தி டான் படம் பார்க்காதவர்கள் அஜித் நடித்த பில்லாவை சிறப்பாகவே புகழ்ந்தார்கள். என்னைப் பொருத்தவரை ரீமேக் படங்கள் தமிழில் வருவதில் ஒரு தவறும் இல்லை. அப்படி ரீமேக் படம் செய்வது ஒரு பெரிய சவால். பழைய கதையை தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுப்பதென்பது சதாரண காரியமல்ல. இரண்டாவது பழைய படம் வெளிவந்தபோது இருந்த தலைமுறை ரசிகர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குமேல் எதோ கதைக்கு பஞ்சம் வந்துவிட்டதா? என குறை சொல்லுவது சரியில்லை. மேற்கத்திய வெற்றிப்படங்களான பென்ஹர், டைட்டானிக், கிங்காங்,டென் கமெண்ட்மெண்ட்ஸ் என நீளும் பல படங்கள் ரீமேக் படங்கள் தான். ரீமேக் என்பது ஒன்றும் தமிழுக்கு புதிதல்ல. அம்பிகாபதி, காத்தவராயன், பூம்புகார், நீரும்நெருப்பும், உத்தமபுத்திரன் என சில படங்கள் தமிழில் பழைய படங்களின் ரீமேக்குகளாக வெளிவந்தன. இப்படங்களில் நடித்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர் போன்ற முன்னணி நடிகர்கள் தான். இவர்கள் கதையில்லாமல் ஒன்றும் இப்படங்களில் நடிக்கவில்லை. வெற்றிப்படத்தின் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் தான் காரனம்.

இப்படி ரீமேக் செய்வதின் மூலம் பெரிய எதிர்பார்ப்புகள் கிடைப்பதைத் தவிர்த்து, வேறொரு பிரச்சனையும் உண்டு. பழைய படத்தில் வந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற காட்சிகளை எடுக்கும்போது ஒன்று அதை சிறப்பாக எடுக்கவேண்டும், இல்லாவிடில் அந்தக் காட்சியை எடுக்காமலே இருக்கலாம்.

அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமான 'சோலே' படத்தை 'ஆஃக்' என்று ரீமேக் செய்து ராம்கோபால்வர்மா கையை சுட்டுக்கொண்டார். அதற்குக் காரணம், அதிகமாக ரசிக்கப்பட்ட முக்கிய காட்சிகளில் கனமில்லாமல் சொதப்பியது தான்.

தற்போது விக்ரம் கூட ரஜினி நடித்த 'மூன்றுமுகம்' படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அஜித் எதிர்கொண்ட சவாலை விட மிகவும் சிரமமானதொரு சவாலை விக்ரம் ஏற்கவுள்ளார். ஏனென்றால், பில்லாவை விட மூன்று முகத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் பாத்திரம் இதுவரை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுவாக எல்லாருக்கும் மறக்க முடியாத ஸ்டைலான பாத்திரம்.
விக்ரமால் அலெக்ஸ் பாண்டியன் வேடத்தின் மெஜஸ்டிக்கைக் கொடுக்க முடியுமா? ரஜினியும், செந்தாமரையும் இடையே வரும் காட்சி எப்படி எடுப்பார்கள்? செந்தாமரை சிறப்பாக நடித்த வில்லன் வேடத்தை யார் ஏற்கப்போகிறார்? என நமக்கே கேள்வி எழும். எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் கடந்து படத்தின் பழைய செல்வாக்கைச் சிதைக்காமல் நல்லதொரு புதிய படைப்பைக் கொடுத்தால் யார் தான் வேண்டாமென்பார்கள்!!

மூன்றுமுகம் படத்தில் ஒரு காட்சி