Wednesday, May 30, 2007

கற்பின் கனலி

“காதல் என்றொன்று

பாடாய் படுத்ததின்று

பாழாய்போன கற்பொன்று

இல்லையேல் படுத்திருப்பேன்

அவனோடு” என்றாள் கனலி!

“கற்பொன்று இல்லை!

இதுகாறும் தமிழ்நாட்டில்,

சொற்போர் புரியவில்லை

நின்னுடன் -- காமன்

விற்போர் வென்றிட

எவருண்டு இங்கே!

மானமும் பெண்மையும்

மனதின் இலக்கணம்

மற்றவளுக்கே உபதேசம்

பெற்றவளுக்கு இல்லை,

என் உற்றவரோ

உடம்பை விற்றவரோ,

மனதிற்கு தேவை

தூய்மை!” என்றேன்

Tuesday, May 29, 2007

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-2

பொதுவாக அணுசக்தி சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களில் தினமும் ஒவ்வொருவர் வாங்கிய கதிர்வீச்சைக்கொண்டே விபத்து அல்லது கசிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என கண்கானிப்பார்கள். 2003ல் நான் கல்பாக்கத்தில் என்னுடைய முதுனிலை இறுதியாண்டு படிப்பிற்காக இருக்க நேர்ந்தது. அப்போது, மேற்கூறியது போன்றதொரு விபத்தைப் அறிந்தேன். தினமும் அணு உலையின் செயல்பாடுகளின் சில பகுதிகளை கண்கானிக்கச்செல்லும் விஞ்ஞானிகள் வழக்கம்போல தங்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். சில மணிநேரங்களில் அவர்கள் அளவுக்கு மீறிய கதிர்வீச்சுக்குட்பட்டு இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. இதுபோன்ற சில பாதுகாப்பின்மை காரணமாக விபத்துகளும் கசிவுகளும் நடந்தவண்ணம்தான் உள்ளது. ஆனால் சுற்றுப்புறசூழல் பாதுகாப்பையும் சீர்கேட்டையும் உயிரிழப்பையும் இந்திய அணுசக்தித்துறை கருத்தில் கொள்கிறார்களா என்பது கேள்விக்கிறியே! போதிய பாதுகாப்புகள் மற்றும் வசதிகள் இல்லாமல் அணு உலைகளை இந்திய நிறுவ முயல்கிறது. இந்திய வழக்கம் போல ஆணிவேர் பிரச்சனைகளை அணுகாமல் நுனிக்கிளைகளை மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்தி எமாற்றுவேலை தான் செய்கிறது. அரசியல் லாபம் தனிக்கட்சி விளம்பரத்திற்காக அணுபரிசோதனை நடத்தப்பட்டது எல்லாருக்கும் தெரியும். கல்பாக்கத்தில் 20 வருடங்களாக இயங்கி வருவது வெறும் சோதனை அணு உலையே. தற்பொழுது, இந்திய அரசு கூடங்குளத்தில் அதிக உற்பத்திதிறனுடைய உலையைக் நிர்மானிக்க உள்ளது. இதிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் நிச்சயமாக சரிவர கையாளப்படப்போவதில்லை. இதன் விளைவு தெந்தமிழகத்தையே ஒரு சுடுகாடாக மாற்றி அமைக்கும். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதரப்போவதாக அரசு ஏமாற்றுவேலையில் இறங்கியுள்ளது. மேத்தாபட்கரும் இது சார்ந்த போரட்டத்தில் குதித்துள்ளார். ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் பணப்பை நிறைந்தால் போதும் என இதுகுறித்து யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இத்தகையதொரு அணுவுலை தமிழகத்தில் அமைவது பயனைவிட பலமடங்கு விளைவுகள் மிக அதிகம்.

அணுவுலை இன்றியமையாமைக்கு காரணம் கூறுபவர்கள், முன்னிறுத்தும் கருத்துக்கள்:

1. வருங்காலத்தில் அணுமின் ஆற்றல் மூலமாகவே நடைமுறையில் அதிகபட்ச ஆற்றல் உற்பத்தி செய்ய இயலும்? சரி. அவ்வாறு செய்வதெனில் போதிய பாதுகாப்பு தேவை. அததச் செய்தோமா என்றால்? இல்லை. திரு.கோபாலகிருஷ்ணன் (இவர் 1993-1996 இந்திய அணுசக்தி கண்கானிப்பகத்தின் தலைவராக பணிபுரிந்தவர்) அவர்கள் சர்வதேச அணுசக்தி கண்கானிப்பகத்தின் தரத்திற்கு இந்தியாவின் பாதுகாப்பு தரம் இல்லை என்று ‘ப்ரண்ட் லைன்’ இதழில் கூறியுள்ளார்.

2. புளுட்டொனியம் இந்தியாவே தயாரிப்பதின் மூலம் அணுஆயுத உற்பத்தியில் சுயதேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்?

இந்தியாவில் பல்வேறு அடிப்படைப் பிரச்சனை இருக்கும்போது அதைவிடுத்து, ஏன் இப்படி பல கோடி பணத்தை புளுடொனியம் தயாரிப்பில் கொட்டுவது இப்போதைக்கு அவசியமற்றது. (தற்போதைய அமெரிக்காவுடனான ஒப்பந்தம் புளுடோனியம் தயாரிப்பிற்கும் ஆப்பு வைத்துவிட்டது).

பல்வேறு ஆதாரப்பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்க முடியாத இந்திய அரசு, புளுடொனியம் தயாரிப்பு என்றும் அணுமின் உற்பத்தி என்றும் ஜல்லியடிப்பது ஏன்? மக்களின் பாதுகாப்பு பற்றி கருதாமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மக்களுக்காக பயன்படுத்தப்படுமா? சில முதலாளிகளின் நன்மைக்காக மக்களை இந்திய அரசு சுரண்டுகிறதா? மாற்றானை அடக்க புளுடொனியம் தயாரிக்கிறேன் என்று சொந்த மக்களையே கொல்கிறதா? இவைதான் இந்திய அணுமின் உற்பத்தியின் முன் நிற்கும் கேள்விகள். நாட்டினுடைய கௌரவத்தை உயர்த்த, நாட்டின் ஆராய்ச்சியை, நாட்டின் அறிவியலைவிட நாட்டு மக்கள் வாழ்க்கைத்தரம் முதலில் உயர வேண்டும். இந்திய அரசு இதை உணருமா ??

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-1

ஷெர்னொபில், த்ரிமைல் தீவு, டொகிமோரா அணுகரு விபத்துகள் எல்லோரும் அறிந்ததே! குறிப்பாக ஷர்னோபில்விபத்து உக்ரைன்(முந்தய சோவியத் ரஷ்யாவில்)1986ம் ஆண்டு 2000க்கும் மேற்ப்பட்ட மக்களை செறித்தது. இந்திய அணுசக்திப்பயணம் இது போன்ற ஓர் இலக்கு நோக்கியே செல்கிறது. எந்தவித தொழிற்சாலையானாலும் பாதுகாப்பு அவசியமானது. குறிப்பாக, அணுமின் மற்றும் அணுமின் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மிக மிக அவசியம். ஏனென்றால், இத்தகைய அணுமின் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து, பாரதூரமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை. அடுத்த தலைமுறைகளையும் தாக்கக்கூடியவை. மரபணு சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை.

பொதுவாக, அணுசக்தி மற்றும் அணுஆயுதங்கள் உற்பத்திக்கு முக்கியமான மூலப்பொருள் யுரேனியம், தோரியம் போன்றவற்றின் தாதுப்பொருட்களாகும். இத்தகைய தாதுக்களின் சுரங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் கதிர்வீச்சுடைய தாதுக்களின் துகள்களை சுவாசித்தபடி வேலைசெய்கிறார்கள். இதுவும் ஒரு வகை உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் போக்குதான். ஆனால் மேலைநாடுகளில் இத்தகைய சுரங்கங்களுக்கு அதிகமாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ‘ஜடிகுடாவில் புத்தர் அழுகிறார்’ என்றொரு ஒளிப்பதிவு வெளியானது. “தி வீக்” இதழும் அதைப்பற்றி விரிவாக எழுதி இருந்தார்கள். இது போன்ற சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் கதிரியக்கப்பொருட்கள் மிகையாக உள்ளன. இத்தகைய கழிவுகள் போதிய அளவு சுத்திகரிப்படாமல் வெளியேற்றப்படுகின்றன. ஜடிகுடாவின் சுரங்கத்தில் தாதுபொருட்கள் தவிர்த்தவை கட்டுமான பணிகளுக்கும் சாலையிடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் கதிரியக்கம் சுற்றுப்புற்ச்சூழலை வெகுவாக பாதிக்கிறது. கடந்த நூற்றாண்டில் இந்திய அணுமின் சார்ந்த நிலையங்கள் சில விபத்துக்களை சந்தித்தன.இவை மற்ற தொழிற்சாலைகளோடு ஒத்துநோக்கும் போது எண்ணிக்கை குறைவு எனினும் விளைவுகள் மிகக்கடுமையானவை. அகில உலக கதிரியக்க ஆணையத்தின் அறிக்கைப்படி 20mSv (milli Sievert) கதிர்வீச்சு ஆயிரத்தில் ஒருவருக்கு கதிரியக்க புற்றுநோயை உருவாக்கவல்லது. ஆனால் இந்தியாவின் அணுசக்தி கண்கானிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், 1986 முதல் 1990 வரை அணுசக்தித்துறையில் உள்ள 3-5 சதவிகித தொழிலாளர்கள் 20mSv கதிர்வீச்சைவிட அதிகமாக பெற்றுள்ளனர். அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் உபபொருட்கள் புளுடொனியம் (புளுடொனியம் அணுஆயுதங்கள் தயாரிப்பின் மூலப்பொருள்) தயாரிக்கப்பயன்படுகிறது. புளுடொனியம் யுரேனியத்தைவிட 30000 மடங்கு கதிர்வீச்சு கொண்டது. புளுடொனியத்தைப் பிரித்தெடுக்கும்முறை அதிக கதிர்வீச்சும் அதிக மில்லியன் பணச்செலவும் உடையது. கல்பாக்கத்தில் இப்பிரிவு kalpakkam reprocessing plant (KARP) என இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

திரு.எம்.வி.ரமணா அவர்கள் பாஸ்ட் ப்ரீட் உலைகள்(fast breed rector - FBR) குறித்து சில கட்டுரைகளை ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியிட்டுள்ளார். அவர் கூறுவது என்னவெனில் FBR மிகுந்த வெப்பத்தை வெளியிடக்கூடியவை, பெரிய விபத்து ஏற்படுத்தக்கூடியவை, ஆதலின் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது. FBTR (fast breed test reactor) மற்றும் PFBR (prototype fast breed reactor) அதிக விபத்துகளை உண்டாக்கக்கூடியவை. பிரான்சில் உள்ள ஸுப்பெர்னிக்ஸ் அணுவுலை FBR வகையைச் சார்ந்தது. இது கடந்த 10 வருடத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பயனில் இருந்து வந்துள்ளது.

பி.கு.: இந்த கட்டுரையை நான் முதலிலேயே எழுதிவிட்டேன். ஆனால் சில மொக்கை பதிவுகளால், இதனுடைய இடுகை தள்ளிப்போடப்பட்டு, இப்போது இதன் பாகம்-2-வுடன் வெளிவரும் நிலை.

Sunday, May 27, 2007

கம்மங்கூழு with கவுண்டமணி -- குட்டிபிசாசு

என்னோட பேட்டிக்கு “கேப்பகஞ்சி with கவிதா” புகழ் கவிதா அக்காவ தான் முதல்ல கேட்டேன். அவங்க ரொம்ப பிஸினு சொல்லிடாங்க! அதுமட்டும் இல்லாம என்னை பேட்டி எடுக்க சுடுகாட்டுக்கு எல்லாம் வரமுடியாதுனு வேற சொல்லிடாங்க!

இப்படியே விட்டுட்டா, பிறகு எப்படி என்னோட உலகத்தரம் வாய்ந்த உப்புமாக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். நம்ம கண்மணி அக்காவ இந்த ப்ரொகிராம் செய்ய சொன்னேன். அவங்களும் டைம் இல்ல, எக்ஸாமுக்கு படிக்கனும்னு சொல்லிடாங்க!

ஜாக்ஸன் பேட்டி கொடுக்க மறுத்த போது, கட்டபொம்முக்கு இருந்த கோபம் எனக்கும் வந்துவிட்டது (கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம்). உடனே இந்த ப்ரோகிராம் செய்ய நம்ம கவுண்டமணி அண்ணனுக்கு ஒரு போன்கால் செய்தேன்! அவரும் வேற வேலை இல்லாததுனால ஓகேனு சொல்லிட்டார். எங்க ப்ரொகிராம் வச்சிகலாம்னு கேட்டார். ஓட்டல் லீ மெரிடின்ல தான் வைக்கலாம்னு நெனச்சோம், பணம் ரொம்ப அதிகம்! அதனால அதுக்கு பக்கத்தில் இருக்கும் ப்ளாட்பாரத்தில வச்சிடோம்.

இடம்: ஓட்டல் லீ மெரிடின் பக்கத்தில் இருக்கும் ப்ளாட்பாரம்

இம்சைகள்: கவுண்டமணி, குட்டிபிசாசு

(ப்ளாட்பாரத்துல குட்டிபிசாசுவ கவுண்டமணி தேடிட்டு இருக்கார்)

கவுண்டமணி: டேய் குட்டிபிசாசு! குட்டிபிசாசு!

நான் இங்க கோடையிடியா குமுரிக்கிட்டு இருக்கேன், இந்த கூறுக்கெட்ட குட்டிபிசாசு எங்க போய்ட்டான்! இங்க தானே வரசொன்னான்.

(ரோட்டு ஓரமா ஒருத்தன் ஒக்காந்து இருக்கான், அவனை கேட்கிறார்)

டேய் தம்பி! இந்த பக்கமாக குரங்கு மாதிரி ஒருத்தன பார்த்தயா?

(அது வேற யாருமில்ல, நம்ம குட்டிபிசாசு தான்)

டேய் பிசாசு மண்டையா! இங்க என்னடா செய்யற!

குட்டிபிசாசு: ஒன்னும் இல்லனே மைக் ஒர்க் ஆகுதானு ஓரமா ஒக்காந்து செக் பண்ணிட்டு இருந்தேன்

கவுண்டமணி: நான் எவனோ சிட்டுகுருவி லேகியம் விக்குரவனு நெனச்சேன்

குட்டிபிசாசு: சரி அப்ப பேட்டி எடுக்கலாமா அண்ணே!

கவுண்டமணி: நான் மட்டும் வயத்துல இருந்து போட்டி எடுக்கலாம்னா சொன்னேன்!

(இரண்டு பேரும் ப்ளாட்பாரத்துல ஒரு துணி போட்டு, அதுமேல ஒக்காந்து பேட்டிய ஆரம்பிக்கிராங்க! காபி, ஜூஸ் என எதுவும் இல்லாததுனால, சட்டில கொஞ்சம் கம்ம்ங்கூழும் ஊறுகாயோட, கவுண்டமணி அவரோட ஸ்டைல பேட்டி எடுக்கிறார்)

கவுண்டமணி: நீ ஏன் குட்டிபிசாசுனு பேரு வச்சே?

குட்டிபிசாசு: ‘அர்னால்ட்’ அதான் ஹாலிவுட் அக்டர்! அவரோட அம்மா அவரை செல்லம்மா குட்டிபிசாசுனு தான் கூப்பிடுவாங்கலாம்

கவுண்டமணி: அர்னால்ட்...குட்டிபிசாசு...

குட்டிபிசாசு: ஆமாங்கண்ணே!

கவுண்டமணி: (டென்சன் பண்ணரானே) அடங்கொக்கமாக்கா! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லயாடா! சிங்கில் டீக்கு டிங்கி அடிக்கிற மொன்னநாய் என்ன பேச்சு பேசுது பார்! ஒழுங்கா மரியாதையா உண்மைய சொல்லிடு! (குட்டிபிசாசுவை அடிக்க மைக் எடுக்கிறார்)

குட்டிபிசாசு: (தயங்கியபடி) அண்ணே! ஒரு விளம்பரத்துக்கு தான் குட்டிபிசாசுனு வச்சேன்!

கவுண்டமணி: விளம்பரமா? விளக்குமாருக்கு என்னடா விளம்பரம்! ஏன் குட்டிபிசாசுனு வச்சே, குட்டிசுவர்னு வச்சுக்கேன், இன்னும் விளம்பரம் அதிகமா இருக்கும்.

(அடுத்த கேள்வி)

சரி! இன்னைக்கு நியுஸ்பேப்பர்ல என்ன படிச்சே?

குட்டிபிசாசு: வாலிப வயோதிக அன்பர்களே...

கவுண்டமணி: டேய் பேரிக்கா தலையா! நிறுத்துடா! நான் என்ன இங்க “புதிரா?புனிதமா?” நடத்தவந்து இருக்கேன்! நியுஸ்பேப்பர்ல என்ன படிச்சேனு தான் கேட்டேன்!


குட்டிபிசாசு: எலிசாமி சித்தரோட ராஜவைத்தியம் பத்தி படிச்சேன்


கவுண்டமணி: நீ என்ன வந்ததில் இருந்து வெவகார பேசிட்டு இருக்கியே! இதெல்லாம் நல்லது இல்லயே! நான் பொல்லாதவன்..கெட்டவன்.. ஒழுங்கா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!! ஓவரா எதாவது லந்து பண்ண மைக்காலயே அடிப்பேன்!

(அடுத்த கேள்வி)

கவுண்டமணி: சரி அடுத்த கேள்வி! மைபிரண்டையும் மங்கையையும் காளான்னு சொன்னயாமே!

குட்டிபிசாசு: காளான் தான் ரொம்ப காஸ்ட்லியான காய்கறி! அவங்கள புகழத்தான் அப்படி சொன்னேன்! ஆனா அவங்க தப்பா நெனச்சிட்டு ரவுண்டு கட்டி என்னை அடிச்சிட்டாங்க!

கவுண்டமணி: அடியும் வாங்கிட்டு வெட்கம் இல்லாம சொல்லிட்டு வேற திரியற! இதெல்லாம் ஒரு பொழப்பு!

(அடுத்த கேள்வி)

நீ என்னமோ கவிதையெல்லாம் எழுதரயாமே!

குட்டிபிசாசு: ஆமாண்ணே!


கவுண்டமணி: ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை! அதைதான் எவனும் படிக்கிறது இல்லயே, பிறகு ஏன் நீ எழுதிட்டு இருக்கே! தெரிஞ்சத எழுதுங்கடா! தமிழ்மணத்துல இருக்கிறவங்கல இப்படி கொடுமைபடுத்த எத்தனை பேருடா கெளம்பி இருக்கீங்க!

(அடுத்த கேள்வி)

கவுண்டமணி: உனக்கு “காக்கா புடிக்கிறதுல மன்னன்”னு பட்டம் குடுத்து இருக்காங்கலாம்!

குட்டிபிசாசு: Actually..(ரோட்டுல போற ஒரு பொண்ண பார்த்த உடனே நம்ம குட்டிபிசாசு கஷ்டப்பட்டு (வராத) இங்கிலீஷ்ல பேச முயற்சி பண்ணுது!!)

கவுண்டமணி: டேய் தேங்கா தலையா! இவ்வளவு நேரம் தமிழ்ல தானே பேசிட்டு இருந்தே! வேண்டாம் மகனே! நீ எந்தெந்த சமயத்துக்கு எப்பயெல்லாம் பேச்ச மாத்துவேனு எனக்கு தெரியும்! அடங்கு! மரியாதையா தமிழ்ல பேசு!

குட்டிபிசாசு: “காக்கா புடிக்கிறதுல மன்னன்”, அதாவது நான் ‘வானளவுக்கு உயர்ந்தவன்’ அப்படினு சொல்ல வராங்க!

கவுண்டமணி: உண்மைய சொல்லிடு! என்னை கொலைகாரன் ஆக்காதே!

குட்டிபிசாசு: சொல்லுரேனண்ணே! பயமறியா பாவையர் சங்க மாநாட்டுக்கு “காக்கா பிரியாணி” வேணும்னு கண்மணி டீச்சர் கேட்டாங்க! நான்தான் தேடி புடிச்சி வாங்கி வந்தேன்! அதனால தான் அந்த பட்டம் குடுத்தாங்க!

கவுண்டமணி: “காக்கா பிரியாணி” வாங்கிட்டு வர கம்மிநாட்டி, உனக்கெல்லாம் ஒரு பேட்டி! அதுக்கு ஒரு மைக்செட்டு!

(கவுண்டமணி மைக் எடுத்து குட்டிபிசாசு மேலே அடிக்கிறார், குட்டிபிசாசு எஸ்கேபாகி துண்டைகாணோம்துணியைகாணோம்னு ஓட...)

கவுண்டமணி: ஒங்கப்பன் மகனே! நீ எங்க போனாலும் விடமாட்டண்டா! டேய்!!!!!!

(கவுண்டமணியும் கோபமாக அடிக்கத் துறத்துகிறார்)


பி.கு.:

1. நம்ம குட்டிபிசாசுவே இதோட கலாய்த்து விட்டுவிடக்கூடாது! தொடர்ந்து எல்லோரும் வரும் வாரங்களில் குட்டிபிசாசுவை கஞ்சி காய்ச்சப்போவதை இப்போதே அறிவிக்கிறேன்!!

கேப்பசீனு with கண்மணி டீச்சர் -- குட்டிபிசாசு

தர்பூசனி ஜூஸ் with தருமி சார் -- குட்டிபிசாசு

ஹார்லிக்ஸ் with அபி அப்பா -- குட்டிபிசாசு

ஆப்பிள் ஜூஸ் with அய்யனார் -- குட்டிபிசாசு

மால்டோவா with மைபிரண்ட் -- குட்டிபிசாசு

மிக்ஸட் ஜூஸ் with மின்னல் -- குட்டிபிசாசு

ராகிமால்ட் with ராம் -- குட்டிபிசாசு

பாசக்கார குடும்ப சுற்றுலா தொடர் - நன்றி

பாசக்காரகுடும்பத்துக்கு,
கண்மணி டீச்சர் ஆரம்பிச்ச சுற்றுலாத்தொடர் நல்லபடியாக முடிந்தது!!

இந்தத்தொடர் முழுக்க(வேறவழி இல்லம) படித்த பாசக்காரகுடும்பத்துக்கும், மற்ற தமிழ்மண அன்பர்களுக்கும் நன்றி!!

தண்டரில் பாசக்கார குடும்பம் - 1-
பாகம்
நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - 2-
பாகம்
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர் - 3-
பாகம்
டூர் திலகத்திற்கு - 4-
பாகம்
சுற்றுலா சென்று வந்த சுனாமி (அ) வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா - 5-
பாகம்

வாழ்த்துக்கள்!!

சுற்றுலா சென்று வந்த சுனாமி (அ) வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா


மு.கு: கண்மணி டீச்சரோட விருப்பப்படி, அவருக்கு வழங்க வேண்டிய பட்டத்தையே தலைப்பாக வச்சிட்டேன்!!

***********************************************************************************************

குட்டிபிசாசு said:
தருமி ஐயா,கலக்கல் பதிவு!! நீங்க இப்ப டூர் திலகத்திற்கு பதிவ 4-பாகத்துக்கு கொண்டுவந்து இருக்கிங்க!!
பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பம் - 1-பாகம்
நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - 2-பாகம்
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர் - 3-பாகம்
டூர் திலகத்திற்கு - 4-பாகம்
மேலும் கொண்டு போக முடியுமானு தெரியல!! வாழ்த்துக்கள்!!

*******************************************************************
தருமி said:
குட்டிப் பிசாசு,
என்ன அப்படி சொல்லீட்டீங்க. பாசக்காரக் குடும்பம் அப்படியா உட்டுட்டு போயிடும். இப்பவே அடுத்த பதிவு எங்கேயோ ரெடியாகாமலா இருக்கப் போகுது. இன்னும் வரும் ..ரும் .. ம் ..

*******************************************************************

நம்ம தருமி சார், பார்த்திபன் கிறுக்கல் கவிதை போல! குணா கமல் போல! (இரண்டும் ஒன்று தான்) இறுதி பாகம் வரும்..ரும்..ம்..னு சொல்லிட்டார்! யாரும் இன்னும் இந்த பதிவ போடுற மாதிரி தெரியல(பாசக்கார குடும்பத்துக்கே கதை மறந்துடும் போல)!! அபி அப்பா சொன்னது (நாங்கெல்லாம் இலக்கிய ஆர்வலர்கள் ஆக்கும்) கவனத்தில் வந்தது, உடனே ஆறாவதுவிரல் முளைத்தது, அறிஞர் அண்ணாதுரை ஓர் இரவுல “ஓர் இரவு” எழுதினதுபோல (தாங்கலடா சாமி!!) ஒரு மணிநேரத்தில் ஒரு மொக்கைப்பதிவு தயார்!! (உண்மை என்னவென்றால் வெள்ளிக்கிழமை மாலை குட்டிபிசாசுக்கு வேலைவெட்டி எதுவும் இல்ல!!)

**********************************************************************************

இடம்: பாசக்காரகுடும்ப பயன்படா கழக அலுவலகம் இம்சைகள்: அபிஅப்பா, கோபி, அய்யனார், குட்டிபிசாசு, மின்னுதுமின்னல்

அபிஅப்பா: டேய்! நம்மல போட்டுதள்ள கெளம்பிடங்கயா! கெளம்பிடங்கயா!

மின்னுதுமின்னல்: என்னப்பா ஆச்சு!

அபிஅப்பா: இந்த குட்டிபிசாசு செய்த வேலைக்கு நம்ம எல்லாருக்கும் சேத்து வச்சாங்க ஆப்பு!!

மின்னுதுமின்னல்: கஞ்சாகருப்பு மாதிரி புலம்பம தெளிவா சொல்லு!

அபிஅப்பா: கண்மணி டீச்சருக்கு கண்டன அறிக்கைனு சொல்லி யார் கலாட்டா செய்தாங்கனு எல்லாரையும் கூப்பிட்டு வச்சி விசாரனை நடத்த போராங்களாம்!! எல்லாரும் நல்லா மாட்டிகிட்டோம்!!

குட்டிபிசாசு: இப்ப எதுக்கு முடிஞ்சி போன கல்யாணத்துக்கு மோளம் அடிக்கிறீங்க, எல்லாரும் சேர்ந்துதானே செய்தோம்!

அபிஅப்பா: ஆமா! நீ ஏன் சொல்லமாட்ட!! நீ அடிவாங்கியதால அனுதாப அலைல எஸ்கேப்பு அகிட்டே!! மகளிரணி கண்மணி டீச்சர் ஆதரவு அலைல எஸ்கேப்பு!! நாங்க இல்லடா மாட்டிகிட்டோம்!!

கோபி: நான் அப்பவே சொன்னேன்!! இந்த பிசாசுவே பேசவிடாதீங்கனு, இப்ப பாரு இவன் வாய்க்கு வந்த மாதிரி பேசி, இப்ப எல்லாரும் கூண்டோட கைலாசம்!!

அய்யனார்: இப்ப என்ன செய்யறது!!

குட்டிபிசாசு: அப்ப ஒரு ஐடியா! “வீரர்களுக்கு விசாரணையா! வீணர்களே!” அப்படினு சொல்லி போஸ்டரடிப்போம்!

கோபி: நீ தேரவே மாட்டே!!

அய்யனார்: பேசம கண்மணி டீச்சரிடத்தில் மன்னிப்பு கேட்போம் அபிஅப்பா: மன்னிப்பு! தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...ஆங்..(விஜயகாந்த் செய்யற மாதிரி)...!!

மின்னுதுமின்னல்: மன்னிப்பு கேட்காட்டி, உங்களோட AHM..BHM..கனவுல மண்ணுதான்!! பிறகு அடுத்த வருடமும் 9ம் வகுப்புலதான் குப்பை கொட்டனும்!

அபிஅப்பா: ராசா! ஐயா குட்டிபிசாசு! நீ பேசம HM (தருமி சார்) இடத்தில் போய், நீதான் கண்டன அறிக்கை தயார் செய்தனு ஒத்துக்கயேன்!

குட்டிபிசாசு: நான் தான் செய்தேன்னு தெரிஞ்சா, அவரு டின்னு மட்டும் கட்ட மாட்டாரு! டப்பா டர்ர்ர்ர்னு கிழிஞ்சிடும்!

அபிஅப்பா: அப்ப வேற என்ன வழி!

மின்னுது மின்னல்: மன்னிப்பு!!

(எல்லாரும் கண்மணி டீச்சர பார்த்து மன்னிப்பு கேட்க கிளம்புராங்க...)

இடம்: கிடேசன் பார்க் உயர்னிலைப்பள்ளி இம்சைகள்: கண்மணி டீச்சர், அபிஅப்பா, கோபி, அய்யனார், குட்டிபிசாசு, மின்னுதுமின்னல்

(குட்டிபிசாசு மட்டும் முன்னாடி ஓடிபோய் கண்மணி டீச்சர் கால்ல விழுந்து பாசமழைய பொழிஞ்சி, பக்திபழம்மாதிரி, பாவ்யமா நின்னுட்டு இருக்கு)

கோபி: இந்த பிசாசு கொஞ்சம் முதல் நம்மளோட தானே இருந்தான்! இங்க எப்படி வந்தான்!

அய்யனார்: இந்த பிசாசு முதல்ல புகுந்து கும்மி அடிக்கிறதுக்குள்ள நாம முந்திக்கனும்!

மின்னுதுமின்னல்: டீச்சர்! குட்டி பிசாசு தான் உங்கள “பாசிச கண்மணி டீச்சர்”னு சொன்னான்!

குட்டிபிசாசு: டீச்சர்! டீச்சர்! நான் “பாசமான கண்மணி டீச்சர்”னு தான் சொன்னேன்! இவங்க வேண்டும்னு “பாசிச கண்மணி டீச்சர்”னு போஸ்டர் அடிச்சி ஒட்டிடாங்க!

அபிஅப்பா: அடங்கப்பா! அந்தர் பல்டிடா சாமி! போஸ்டர் எழுதி, கஞ்சி காச்சி, ஒட்டுரவரை எல்லா வேலையும் செய்துட்டு, இங்க வந்து நடிக்கிறயாடா “காக்கா”!

கண்மணி டீச்சர்: அபி! பொய் சொல்லாதே! என்னோட குட்டிபிசாசு தம்பி(சோட்டா பையா) ஒன்னும் அப்படி செய்யமாட்டான்!

மின்னுதுமின்னல்: இவனா “தம்பி” ! சென்ரல் ஜெயில்ல “கம்பி” எண்ணிட்டு வந்தவன் மாதிரி இருக்கான்!!

(தருமி சார் அங்க வர்றார்...)

தருமி சார்: (நடிகர்திலகம் ஸ்டைல்ல..) நீங்க எல்லாரும்தான் கண்டனம் தெரிவிக்க பீடி, தீக்குச்சி கொளுத்தினதா!

அய்யனார்: சார்: பொட்டிக்கடை ஓரமாதான் கொளுத்திட்டு இருந்தோம்! எதோ ஒரு மொன்னநாய் அதை எல்லாம் ஒரு செய்தியா ரெடியோல சொல்லிட்டான்!

கோபி: இப்ப பிரச்சனை இல்ல சார்! சம்பவம் நடந்த இடத்தில், இழப்பீட்டுக்கு ஒரு கட்டு பீடியும் ஒரு தீக்குச்சி பெட்டியும் தருவதா முதலமைச்சர் வேற அறிவிச்சி இருக்கார்!

தருமி சார்: பாசக்காரகுடும்பத்துல இருக்கிற மகளிரணிய விட இந்த பசங்க ரொம்ப அக்டிவா இருக்காங்க! ஐ லய்க் தெம்!

அபிஅப்பா(ரகசியமாக): இவரும் இதே ஸ்கூல்ல தான் (பெயில் ஆகி.. பெயில ஆகி..) படிச்சி இருப்பாரு போல!!

தருமி சார்: (இதுவும் நடிகர்திலகம் ஸ்டைல்ல..) இப்படி வேலவெட்டி இல்லாம தமிழ்நாட்டையே கலக்குரேன்னு தர்ம அடி வாங்கி இருக்கீங்களே...!! உங்கள நெனச்சா எனக்கு ரொ..ம்ப பெருமையா இருக்குப்பா!

அபிஅப்பா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

தருமி சார்: எதுஎப்படியோ! பாசக்கார குடும்பத்துல இருக்கிற மாணவர்கள் இப்படித்தான் உருப்படாம இருக்கணும்! வெரி கூட்...கீப்பிட் அப்...ஹஹ்ஹா...

அபிஅப்பா (ரகசியமாக): டேய்! எல்லாரும் சிரிச்சிடுவோம்! இல்லாட்டி சார் ஜோக்னு இன்னும் எதாவது சொல்லிட போறார்!! (பாசக்கார குடும்பத்தில் உள்ள அனைவரும் லூசு மாதிரி சிரிக்கிறார்கள்)

பி.கு.: இப்பதிவில் மகளிரணிக்கு வாய்ப்பு தரப்படாததற்கு மன்னிக்கவும்!

என் இனிய தமிழ்மண மக்களே! மூளையே இல்லாமல் மொக்கைபதிவு மட்டும் எழுதிய உங்கள் கழுத்துக்களை பதம்பார்த்து வந்த குட்டிபிசாசு, இனி உங்கள் உயிரைவாங்கமல், ஊருக்கு உருப்படியான உப்புமாபதிவுகளை உண்டாக்க நினைக்கிறான்! குற்றத்திற்குரிய, குட்டிபிசாசு..!!

Friday, May 25, 2007

Citizen X - தொடர்கொலை

சமீபத்தில் “citizen x” என்னும் ஆங்கில படத்தை பார்க்க நேர்ந்தது. இப்படம் தொடர்கொலைகள் மூலம் பெரிதும் அறியப்பட்ட சிக்கடிலோ என்பவனைப் பற்றியது. சிக்கடிலோ சுமார் 53 கொலைகள் செய்துள்ளான். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 16 வயதுக்குட்பட்டவர்கள். இத்தொடர்கொலைகளில் ஈடுபடும்போது, சிக்கடிலோவின் வயது 50 மேல் இருக்கும். இவனை உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் போனதிற்கு காரணம், முன்னேறிய அறிவியல் முறையில் கொலைக்கான காரணத்தைத் துப்பறியவில்லை. முதல்முறை, சிக்கடிலோவை கைது செய்து, ஆதாரமின்மையால் விட்டுவிட்டனர். 1980களில் ரஷ்யாவில், அமெரிக்கா மற்றும் மேலைநாடுகள் போல உளவியல்ரீதியாக குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டதில்லை (மார்க்சியத்தின் பொருளியல் தத்துவத்தில் மனம் என்ற ஒன்றயே ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என ஓஷோ கூறியதாக ஞாபகம்) மற்றும் தடவியல் பெரிதும் வளராத நிலை . மேலும், இத்தொடர்கொலைகளை ஆராய்ந்த ஒரு உளவியல் மருத்துவர், கொலையாளி 1.கண்ணாடி அணிந்திருப்பான், 2.ஆண்மைக் கோளாறு உள்ளவன், 3.சுமார் 50 வயது உடையவன்,4.ஓரினசேர்க்கையாலன் அல்ல,5.திருமணமானவன் என சில கண்டுபிடிப்புதீர்வுகளை பட்டியலிட்டார். அதன்படி, இப்பட்டியல் கொலையாளி என சந்தேகப்பட்டவர்களிடம் படித்துக்காண்பிக்கப்பட்டது.

எல்லாகொலைகளும் ரயில்நிலையத்திற்கு அருகாமையில் நடந்து இருப்பதால், தீவிர தேடுதல் நடைபெறுகிறது. இரண்டாவதுமுறையாக கைதுசெய்யப்பட்ட சிக்கடிலோவிடம் படிக்கப்பட்டபோது, இவரின் ஆராய்ச்சியால் வியந்து “உங்களுக்கு இதெல்லாம் எப்படித்தெரியும்” என கேட்க, விசாரணை இறுக்கப்படுகிறது. முடிவாக, சிக்கடிலோ குற்றவாளி என நிருபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப் படுகிறான். சிக்கடிலோ போன்ற தொடர்கொலையாளிகள் சிறுவயதில் உளவியல்படி அதிகமாக பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக, தொடர்கொலையாளிகள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல், வறுமை, சமுதாய புறக்கணிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய உணர்ச்சியின் கிளர்ச்சிக்காகவும் பழிக்குப்பழி வாங்கும் வெறியோடுதான் கொலை செய்ய முனைகிறார்கள். சிக்கடிலோவும் அவனது சகோதரனும் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானிய படையெடுப்பால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். பட்டினியால் இறந்த சகோதரனுடைய உடலை அவனுடைய சுற்றத்தார்கள் உண்டது, மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியதாக சிக்கடிலோ வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

சிக்கடிலோ மணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை என்பது குரிப்பிடத்தக்கது. அவனுடைய ஆண்மை கோளாறு காரணமாக மனைவியினால் அதிகமாக அவமானப்படுத்தப்பட்டான். சிக்கடிலோ கொலை செய்யும்போது மட்டும் ஆண்மை கிளர்ந்துள்ளதால், மேன்மேலும் அவனை கொலைசெய்யத் தூண்டியது. இந்த தொடர்கொலைகளை துப்பறிந்த வல்லுனர்கள் பெச்டொவ் ம்ற்றும் புர்ஸ்கோவ் ஆவார்கள்்.

தொடர்கொலை - திரைப்படங்கள்:


ஹாலிவுட்டில் தொடர்கொலை தொடர்பான படங்கள் எண்ணிலடங்காதவை. pscho, silence of lambs, saw, wrong turn, house of thousand corpse, texas chainsaw massacre, I know what you did lastsummer, என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்திரைப்படங்களில்கூட சில தொடர்கொலை சார்பான படங்கள் பல வெளிவந்துள்ளன. குறிப்பாக, pscho படத்தின் தழுவலான மூடுபனி, கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள், 1975-80 காலகட்டங்களில் வெளிவந்த மாறுபட்ட திரைப்படமங்கள். சமீபகாலங்களில் வெளிவந்த கௌதம்மேனன் இயக்கிய வேட்டையாடுவிளையாடு (திகிலில்லாத திரைக்கதை), ஆளவந்தான் (சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை), இந்தியன் (நாட்டுப்ப்ற்று என்ற பெயரில் தொடர்கொலைகள்).
(படத்தில் தொடர்கொலை தொடர்பான நிகழ்ச்சிகள் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களை தொடர்ந்து கொலை செய்யும் படமாக...நம்ம TR-ன் வீராச்சாமி)

பூரிஜகன்னாதர் மற்றும் கோனர்க் ஆலயம் - ஒரு சிறிய சுற்றுலா அறிமுகம்

கோனர்க் சூரியன் ஆலயம்
முதலில் இது ஆன்மீக அறிமுகம் அல்ல! சுற்றுலா அறிமுகம் தான்!
பூரிஜகன்னாதர் கோவிலும் கோனார்க் சூரிய கோவிலும் கண்டிப்பாக நீங்கள் பார்த்து ரசிக்கவேண்டிய இடம். ‘பூரி’ ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் அருகில் உள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், வரலாற்றில் அதிக நாட்டம் உள்ளவன் என்பதால் சென்றேன். பூரியில் குறைந்த கட்டணத்தில் விடுதிகள் கிடைக்கின்றன. நான் மற்றும் என்னுடைய நண்பனும் சென்றிருந்தோம். நாங்கள் சென்றுவர விடுதியின் உரிமையாளரரே ஏற்பாடு செய்தார். பூரிஜகன்னாதர் கோவில் நகரத்திலே உள்ளது. நான் முதலில் சென்றுவர அதிகசெலவு ஆகும் என்று நினைத்தேன். அப்படி ஒன்றும் ஆகவில்லை. கோனார்க் சூரியகோவில் சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது. நாங்கள் ஆட்டோவில் சென்றுவர ரூபாய் 350 ஆனது. மற்றும் தென்னிந்திய சாப்பாட்டு வகைகளும் ஆங்காங்கே கிடைக்கின்றன. பூரிஜகன்னாதர் கோவிலில் செல்லிடபேசி, புகைப்படகருவி அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாலயம் அவ்வளவு சுத்தமாக இல்லை. ஆலயத்தினுள் பிரவேசிக்கும்போது ‘பண்டிட்’ எனப்படும் பூசாரிகளின் தொல்லை தாள முடியவில்லை. ஆலயத்தினுள் செல்பவர்கள் அவர்கள் கூறுவதைப் கேளாமல் செல்லவும். இல்லாவிடில், எதாவது பிரசாதம் கொடுத்து பணம் பிடுங்குவார்கள் (நான் முன்கூட்டியே என்னுடைய ஒரிசா நண்பர்களால் இதுபற்றி எச்சரிக்கப்பட்டு இருந்தேன்). கங்கர்களின் கட்டிடகலை வியக்கத்தக்கதாகவும் அருமையாகவும் உள்ளது. இந்த ஆலயம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பூரிஜகன்னாத் தேர்த்திருவிழா வெகு பிரசித்தி பெற்றது.


கோனர்க் சிறந்த சுற்றுலாதலம். வெளிநாட்டவர்கள் அதிகமாக வந்து போகிறார்கள். கோனர்க்கில் விமானத்தின் உள்ளே அனைத்தும் சிதிலம் அடைந்துள்ளதால், நாற்புரமும் அடைக்கப்பட்டுள்ளது. நான் ஜகன்னாதர் கோவிலை விட கோனர்க் கோவிலையே அதிகமாக விரும்பினேன் (வெகு சுத்தமாக பாரமரிக்கப்படும் காரணத்தால்). இந்த ஆலயம் தேர்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 13ம் நூற்றாண்டில் கங்க பேரரசால் கட்டப்பட்டது. காலை தொடங்கி மாலை முடிவதற்குள் எங்கள் பயணத்தை முழுவதுமாக முடித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம்.

Wednesday, May 23, 2007

பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர்!!!

தலைப்புச்செய்திகள் வாசிப்பது சரோஜ்முனிசாமி.........
கண்மணி டீச்சர் அவர்களின் வெள்ளை அறிக்கையை எதிர்த்து தமிழகமெங்கும் பாசக்கார படையின் கண்டன ஆர்பாட்டங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளது! 3 பீடிகளும், 4 சிகரெட்களும், 5 தீக்குச்சிகளும் கொளுத்தப்பட்டுள்ளதாக சம்பவம் நடந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது!!!
(ஆளவிடுங்கடா சாமி!!...)


இடம்: பொதுக்கூட்டம், பாசக்காரகுடும்ப பயன்படா கழகம், கட்சி அலுவலகம், அண்ணாசாலை, சென்னை - 007
இம்சைகள்: அபிஅப்பா, கோபி, அய்யனார், மைபிரண்ட், குட்டிபிசாசு, மின்னுதுமின்னல் மற்றும் பாசக்கார உறுப்பினர்கள்!!

போஸ்டர்களில்: அண்ணன் அழைக்கிறார்!! அம்மா அழைக்கிறார்!! தாத்தா அழைகிறார்!!
அபி அப்பா: நாம் நடாத்திவந்த ஆணிபிடுங்கும்அலுவலை எல்லாம் விட்டுவிட்டு குழுமியிறுக்கிறோம் என்றால் காரணம் இருக்கிறது!! பாசக்கார குடும்பத்தைப் பற்றி அவதூறாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட “பாசிச” கண்மணி டீச்சர் அவர்கள் அதற்கான ஆதாரங்களை நிருபிக்கவேண்டும்!! இல்லாவிடில் உச்சநீதிமன்றம் முதல் ஐநா சபை வரை செல்வோம்!!கண்மணி டீச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு முதலாவதாக கண்டனம் தெரிவிக்க பாசகாரகுடும்பத்தின் கொள்கை பரப்பு செயலாளர் குட்டிபிசாசு வருகிறது!!

கோபி: இவனையா பேச சொன்ன!! இவன் மைக்க கண்டா விடமாட்டானே! பேசியே கூட்டதை கலச்சிடுவான்பா!! கஷ்டப்பட்டு பிரியானி, கட்டிங் (என்னனு தெரியும்னு நெனைகிறேன்) எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டத கூட்டிவந்து இருக்கேன்பா!!

அபி அப்பா: இவன் நல்லா பேசுரானோ இல்லயோ!! நல்லா உதைய தாங்குவான்!! பாசக்காரகுடும்ப மகளிர் அணி செம டென்சன்ல இருக்காங்க! இன்னைக்கு குட்டிபிசாச கஞ்சி காச்ச போராங்க!! நாம எதுக்கும் ஓடிப்போக தயாரா இருப்போம்!!

(குட்டி பிசாசு பேசுது...)

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!! பாசக்கார படையே!!

குட்டிபிசாசு: சோடா குடுப்பா!!!
மின்னல்: என்னடா பேசிட்டே, உனக்கு சோடா! இன்னும் நீ பேசவே இல்ல!
குட்டிபிசாசு: கலைஞர் மாதிரி (தொண்டை கட்டின மாதிரி) பேச முயற்சி பண்ணிரேன்! அதுதான் தாகமா இருக்குது!!
அபி அப்பா: கட்சிநிதி எல்லாம் சோடா குடிச்சே காலி பன்ணிடுவான் போல!!

(குட்டி பிசாசு மறுபடியும் பேசுது...)

எங்களுடைய எதிர்ப்பை அமெரிக்க ஏகதிபத்தியதிற்கும், ரஷ்யகம்யுனிசத்திற்கும், இந்திய துணைக்கண்டத்திற்கும், தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்!!

எங்கள் இயக்கத்தின் மூத்த தோழர் (அவர் பேரு என்னபா!!...அபிஅப்பா...) அபி அப்பா அவர்களைப்பற்றி தவறான வதந்திகள்(இரண்டு இட்லி...இரண்டு சட்டி சாம்பார்) கூறியது முதல் குற்றம்!! மூன்று வருடம் 9 வகுப்பிலேயே படித்தார்! எதற்காக! பாடங்கள் சுலபமாக இருக்கிறது என்றா? இல்லை மேற்கொண்டு படிக்க நல்ல அடித்தளம் வேண்டுமென்று, இது குற்றமா?

அபி அப்பா: இன்னும் விலாவரியா சொல்லி என்னோட மானத்த வாங்குடா! டேய்! பேசி முடிடா!!

எங்கள் கொள்கைவீரர் கோபியைமேல் கொடுமையான பழிசுமத்தியது இரண்டாவது குற்றம்!! ஜொள்ளூ, லொள்ளூ என ஏளனமாக பேசியிருக்கிறார்!!
எங்கள் கூர்முனைப்போர்வாள் மின்னலை ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி எங்கள் இயக்கத்தை பலகீனம் அடையச்செய்யப்பார்க்கிறார்!!
மின்னல்: இங்கிருந்து எஸ்ஸாகிரதுக்கு நல்ல சான்ஸ் அதையும் கெடுத்துடுவான்போல இருக்குதே!!

எங்கள் அஞ்சநெஞ்சன் அய்யனார்மீது அனியாயமாக புரளி கூறுகிறார்!! அவர் கவிதைனடைமேல் ஏற்ப்பட்ட பொறாமை காரணமாக!!

அய்யனார்: நான் என்ன எழுதுரேன்னு எனக்கே தெரியல; அவங்களுக்கு இதபார்த்து பொறாமையா!!

ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞன் குட்டிபிசாசுவை, வால் என்னும் வரலாற்றுப்பொய் கூறி கிண்டலடித்துள்ளார்!!
வீரசாகசங்கள் புரிந்த எங்கள் பாசக்காரபடையைக் கண்டித்துவிட்டு, ‘தேமே’ என்று நின்றவர்களுக்குத் தேவாரம் பாடுகிறார்!!

மைபிரண்ட்: இவன பேசவிட்ட போதுமே! மைக்க முழுங்கிடுவான்! சும்மாவா பேரு வச்சாங்க, பிசாசுனு!! சாவுகிராக்கி!!
டென்சன் ஆகாத மங்கை (டென்சன் ஆகி): கண்மணி டீச்சர திட்டுர இவன் கைய ஒடிக்கனும்!!
மைபிரண்ட்: டேய்!! பேசினது போதும் மேடையவிட்டு இறங்குடா மாங்கா!!

(குட்டி பிசாசு மறுபடியும் பேசுது...)
மகளிர் அணியில் முளைத்திருக்கும் சில காளான்கள் கண்மணி டீச்சருக்கு கவரி வீச புரப்பட்டு இருக்கிறார்கள்!! இதனால்தான் கேட்கிறேன்...!

மேலும் டென்சன் ஆன பாசக்கார குடும்ப மகளிரணி மேடைக்கு வந்து... குட்டிபிசாசுக்கு தர்ம அடி குடுத்து பின்னி எடுக்க...
அடுத்த அடி நமக்குதான்னு மத்த பாசக்கார உறுப்பினர்கள் எஸ்கேபாகி ஓட...
பாசக்காரகுடும்ப பயன்படா கழக அலுவலகம் கலவரபூமி ஆகிறது!!!)

Monday, May 21, 2007

ஆயிரம் பின்னூட்டமிட்ட அபூர்வ பாசக்கார குடும்பம்

இடம்: அரண்மனை
இம்சைகள்: குட்டிபிசாசு(அரசர்), கண்மணி டீச்சர் (புலவர்), மைபிரண்ட் (அமைச்சர்), வீரர்கள் (பாசக்கார குடும்பம்)


குட்டிபிசாசு: என்ன அமைச்சரே! இன்று எதாவது என்னைப்பற்றி பதிவு வந்துள்ளதா?


மைபிரண்ட்: வந்துள்ளது மன்னா! கண்மணி டீச்சர் எனும் பன்மொழி கற்ற பெண்புலவர் தங்களை பற்றி பாடல் ஒன்று எழுதியுள்ளார்

குட்டிபிசாசு: ஹாஹா! அப்படியா! என்ன வந்துள்ளதென்று படியுங்கள்

மைபிரண்ட்: நாய் மன்னா!

குட்டிபிசாசு: என்ன அமைச்சரே! மரியாதை தேய்கிறது!

மைபிரண்ட்: அப்படித்தான் எழுதி இருக்கிறது மன்னா!

குட்டிபிசாசு: சரி மேலே படியுங்கள்!

மைபிரண்ட்: நாய் மன்னா!

குட்டிபிசாசு: அதையே என்னைய்யா படிக்கிறீர்! அதற்கு பிறகு படியும்!

மைபிரண்ட்: நீ அறிவில்லாதவன்

குட்டிபிசாசு: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மைபிரண்ட்: யு கேனபேம்மானி

குட்டிபிசாசு: அவ்வ்வ்வ்வ்வ்

மைபிரண்ட்: ‘சோ’மாரியா கீற!

குட்டிபிசாசு: நிறுத்தும்...யாரந்த பெண்புலவர்! ஏன் என்னை இப்படி கேவலமாக திட்டியுள்ளார் என்று தெரியவேண்டும்

மைபிரண்ட்: அவர் இந்தவார தமிழ்மண நட்சச்சதிரமாம். அந்த புலவர் சரியாகத்தான் எழுதி இருப்பதாக பின்னூட்டத்தில் என்னிடம் கூறினார்.

குட்டிபிசாசு: நாய் என்று கூறினாரே?

மைபிரண்ட்: நா + அய்... நா என்றால் நாக்கு; அய் என்றால் கண். நாவையும் கண்ணையும் போன்றவர் என்று பொருளாம்

குட்டிபிசாசு: அப்போது அறிவில்லாதவன்

மைபிரண்ட்: உம்மை அறிவில் ஆதவன் அதாவது சூரியன் என்று கூறியுள்ளார்

குட்டிபிசாசு: கேன பேம்மானி என்பது?

மைபிரண்ட்: you can be ambani என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளாராம்! பன்மொழிவித்தகரல்லவா!

குட்டிபிசாசு: அப்ப சோமாரி ?

மைபிரண்ட்: தாங்கள் எழுத்தாளர் சோ போல இருக்கிறீர்கள் என்பதை சென்னைதமிழில் எழுதியுள்ளார்.

குட்டிபிசாசு: திட்டுவதை திட்டிவிட்டு வெட்டிப்பேச்சா! நட்சத்திரவாரத்தில் அவர் ஜல்லியடிக்க நானா கிடைத்தேன்!! இனி பொறுப்பதில்லை!!அவதூறாக பதிவு செய்த கண்மணி டீச்சர்க்கு ஆயிரம் பின்னூட்டங்கள் இடுங்கள்! அனைத்தும் டோண்டு மாமா பின்னூட்டம் போல டொக்கு பின்னோட்டமாக இருக்கட்டும். தமிழ்மணமே டரியலாக வேண்டும். உள்குத்துபதிவிட்டவரின் பதிவை உருதெரியாமல் ஆக்குங்கள். அடிக்கிற கும்மியில் பதிவுகள் கிழிந்து தொங்க வேண்டும். கிளம்புங்கள்!!! கிடேசன் பார்க்கில் உள்ள அனைவரையும் கிளப்புங்கள்!!! பாசக்கார குடும்பமே படையைத் திரட்டுங்கள்!! ஆணி பிடுங்கியது போதும் அணிதிரண்டு வாருங்கள்!!

மைபிரண்ட்: பின்னோட்டமிட்டு எதிரிகளை பிடரியில் பட ஓட வைப்பதால், 'பின்னோட்டமிட்ட பிசாசு' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்!


(பாசக்கார குடும்பம் படைதிரட்டி கிளம்பி, வீரவசனம் பேச ஆரம்பித்துவிட்டது) கொலைவெறிப்படை அய்யனார்: குள்ளநரி போல குறுகுறு என்று இருக்காமல் கொலைவெறியுடன் குதித்து கும்மியிட வேண்டும்.
அபி அப்பா: பதிவைபடிக்காமலே கும்மி எடுக்க வேண்டும்

கோபி: பின்னூட்டத்திற்கு காரணம் கேட்டால் அயல்நாட்டுசதி என்று கூறவேண்டும்

மின்னுது மின்னல்: கும்மி அடிக்காமல் அடங்க மாட்டோம்

மங்கை: டென்சன் ஆகாமல் டேக்வோவர் செய்யவேண்டும்

குட்டிபிசாசு: வெட்டிவேல்..சே! வெற்றிவேல் வீரவேல்!


(எல்லோரும் கொதித்து எழ, மைபிரண்ட் மட்டும் அழுது கொண்டு இருக்க)
குட்டிபிசாசு: அமைச்சரே! ஏன் அழுகிறீர்! என் இனம் தாங்கள்! கூறுங்கள்! என்ன நடந்தது?

மைபிரண்ட்: மன்னா! கண்மணி டீச்சர் மாடரேட் செய்து பின்னூட்டம் அனுமதிப்பதாக செய்தி வந்துள்ளது.


(இந்த அதிர்ச்சியான செய்தி கேட்டதும், பாசக்கார குடும்பமே சோகத்தில் மூழ்கிவிடுகிறது. மைபிரண்ட் ஒரு சேஞ்சுக்கு ரேடியோவை இயக்க ‘ஏன் பிறந்தாய் மகனே!’ என்ற பாடல் ஒலிக்க குட்டி பிசாசு தேம்பி தேம்பி அழ, பாசக்கார குடும்பமும் அழுகிறது)

Sunday, May 20, 2007

ஆசிய குழந்தையர் விளையாட்டு

பிலிபைன்ஸ்

இந்தோனேசியா
இந்தோனேசியா
நேபாளம்
தமிழ்நாடு

நீங்க யாராவது இதுபோல சைக்கிள் டையர் வைத்து விளையாடினது உண்டா? என்ன விளையாட்டா?மேலே படத்த பாருங்க. ஆசிய குழந்தையர் விளையாட்டு! முன்னேறாத, முன்னேறும் மூன்றாம் தர நாடுகளில், இது போன்ற விளையாட்டுகளை சிறுவர்களிடையே அதிகம் பார்க்கலாம். நீங்க இந்த விளையாட்டை விளையாடி இருக்கிங்களா? நான் விளையாடி இருக்கேன். வீட்டிற்கு வரும்போது மட்டும், அம்மா திட்டுவாங்கனு ஒளித்து வைத்துவிடுவேன். ஒருநாள் அம்மா பார்த்துவிட்டு வீட்டுக்கூரை மேலே தூக்கியெறிந்து விட்டார். எனக்கும் நல்ல அடி கிடைத்தது. அத்தோட என்னோட இந்த வீரவிளையாட்டு முடிந்துவிட்டது. இந்த விளையாட்டுல போட்டி எல்லாம் நடக்கும். ஆனால் நான் ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. டையரை தோளில் மாட்டி கொண்டு போட்டி நடக்கும் பக்கத்துத் தெருவிற்கு வீறுநடை போட்ட ஞாபகம் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. வெற்றி என்பது முக்கியம் அல்ல. இதுபோன்ற போட்டிகளில் பங்பெறுவதே ஒரு சிறப்பு அம்சம். பொங்கல், போகி பண்டிகை வந்தது என்றால், நிறைய கஷ்டம். யாராவது என்னோட டையர கொண்டுபோய் கொளுத்திடுவாங்க. பிறகு ஒரு சோகமயம்தான், இன்னொரு டையர் கிடைக்கும்வரை.

பறக்குது பார்...


வறுமையில் வாடிய

முகத்தில் வெளுப்பு

அமைதியின் குறிப்பா?

மதபேதத்தில் பெருகிய

குருதியில் சிகப்பு

தியாகத்தின் குறிப்பா?

ஊழலில் உதிர்ந்த

பணத்தின் பச்சை

வளமையின் குறிப்பா?

இந்தியக் கொடிக்கு

மேலே பறக்குது பார்

மானமும் வேலையின்மையும்

சில வெத்துவேட்டுப்

படிப்பறிவு பட்டங்கள்!!

தலைப்புச் செய்திகள்... !


விஞ்ஞான வளர்ச்சி

நஞ்சாகும் பிஞ்சுவிரல்கள்

ஆயிரம்கோடியில் அணுசோதனை

அன்னமின்றி திண்ணைவாசிகள்

மாற்றானுக்குச் சலுகைகள்

மைந்தனுக்குச் சிலுவைகள்

இயற்கையின் இறுதிநாள்

செயற்கைக்கோள் சாகசம்

வல்லரசாக நாடு

பல்லில்லாத மக்களாட்சி

உபச்சார விழாக்கள்

விபச்சார கைதிகள்

முன்னேற்றப்பாதையில் இந்தியா

முற்றுப்பெறாத மரணஓலங்களுடன்!!

Saturday, May 19, 2007

தேவதாசிமுறை - ஒரு கண்ணோட்டம்

சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் ஒரு மும்பை விலைமகளிரிடம் கேட்ட கேள்வி "இந்த விபச்சாரம் இழிவாக தோன்றவில்லையா?". அதற்கு அந்த பெண் "அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்" என்றாராம்.முதலில் ஞாநி கேட்ட கேள்வியே சரியில்லை என்பேன். வாழ்க்கைச்சூழலும் வறுமையும் விரக்தியும் அவர்களை எப்படியொரு பதிலுக்கு ஆட்படுத்திருக்கிறது எந்த பகுத்தறிவுடைய பெண்ணும் (இன்றைய உலகில் சுகபோகமாக வாழவேண்டி சிலர் விபச்சாரம் செய்கிறார்கள், ஆதலால் தான் பகுத்தறிவுடைய பெண் என்று கூறுகிறேன்) வேண்டும் என்று விபசாரம் செய்யமாட்டாள். இன்றும் பம்பாய், கொல்கத்தா, ஹைத்ராபாத் போன்ற பல நகரங்களில் தெரிந்தே விபச்சாரம் நடக்கிறது. அரசுநிறுவனங்கள் எல்லாம் தெரிந்தும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. சமுதாயம் பொருளாதாரரீதியாக பெண்களை புறந்தள்ளுவதால் தான் பெரும்பாலும் இத்தகைய அவலநிலை. இதைவிட கொடுமையானது தேவதாசிமுறை. நான் இப்படி கூறக்கூடாது! தூக்கு போட்டு சாவது கொடுமையானதா? விஷம்குடிப்பது கொடுமையானதா? என்றால் தற்கொலையே கொடுமையானது என்று தான் கூறவேண்டி இருக்கும்.
பண்டைய காலங்களில் சில சமுதாயத்தினர் மட்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் தேவதாசிமுறை பற்றி விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டிருந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது என்னால் நம்பமுடியாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக ஆந்திரமாநிலத்தில் சுமார் 16000 என்றும், கர்நாடகாவில் சுமார் 22000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. என்ன அநீதி? அக்கிரமம்? இந்துகடவுளுக்கு அர்ப்பணிக்கப்ப்ட்டவர்களாக கூறி நடனமங்கைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் வாழ்பவர்கள் மேல்தட்டுசாதியினரால் உரிமையும் மானத்தையும் இழந்தவர்களாக வாழ்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களே இத்தகைய இழினிலைக்கு ஆளாகியுள்ளனர். எடுத்துக்காட்டாக கர்நாடகத்தில் உள்ள தேவதாசிகள் எல்லம்மா என்னும் பெண்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவில் உள்ள தேவதாசிகள் அனைவரும் மதத்தின் பெயரால் விபச்சாரத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள். இந்துமதத்தின் பழம்பெருமை பேசும் பலர், இந்த இழினிலையை உணர்ந்தால் நிச்சயம் தலைகுனிவர். இதற்கு எந்தவித காரணங்கள் கூறியும் ஜல்லியடிக்க முடியாது. மத அடிப்படையில் விபச்சாரம் சகிக்க முடியாதது. இது நடந்த, நடக்கின்ற அநீதி. வேதகாலம் சங்ககாலம் தொட்டே இந்நிலை இந்தியாவில் தொடர்ந்து வந்துள்ளது. இப்போதும் நடந்துகொண்டுதான் உள்ளது. எனவே இந்துமத காப்பாளர்கள் தேவதாசிமுறை போன்ற விஷச்செடிகளை மத அடிப்படையிலிருந்து வேரோடு பிடுங்கவேண்டும்.

மனிதாவலம் நீங்கவேண்டும்; பெண்ணடிமை ஒழியவேண்டும்.

கற்பு என்பதை பொதுவில் வைப்போம்

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் தான் என்ற மடத்தனம் மாறவேண்டும். பாரதி சொன்னதுபோல கற்பு என்பதை பொதுவில் வைப்போம். கோவலன் செய்த வேலைக்கு அவனை துறந்து செல்வதை விட்டு தொடந்து சென்ற கண்ணகிக்கு memory loss என்று நினைக்கிறேன். சீதையை அக்னிகரிக்ஷை செய்த இராமன் புருஷோத்தமன் என்று புராணங்கள் திரிக்கும் சங்கதி எத்தனைஎத்தனை! சந்திரமதி, நளாயினி, சாவித்திரி என்று புராணபுளுகுகளில் இவர்கள் கதை நீளும். வேதகாலத்திலும் சங்ககாலத்திலும் பெண்கள் சமுதாயப்பணியாற்றியதாகக் கூறினாலும், ஒன்றிரண்டு சான்றுகள் வைத்து ஒரு இனத்தின் பெண்கள் நிலையை கூறிவிட இயலாது. இந்தியத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், பொதுவாக ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. அரிதாஸ் காலம் முதல் இன்றைய சில்லென்று ஒரு காதல் வரை பெண்டிரை மூடர்களாகவும் அலங்கார பொம்மைகளாகவும் காட்டிவந்துள்ளன. ஆண்கள் எவ்வித தவறு வேண்டுமானாலும் செய்யலாம். பெண்கள் செய்யகூடாது என்பது ஒருதலைபட்சம். ஆண்கள் பெண்கள் இருவருமே அப்படி செய்யலாம் என்ற வாதம் நம்மை விலங்குகளாக்குவது. வாழ்க்கைக்கு துணைவன் துணைவியின் புரிதல் அவசியம். அப்படி புரிதல் இல்லாத வாழ்வு தேவையற்றது. ஒரு செழுமையான வருங்கால சந்ததி உருவாக, தற்கால சந்ததி ஒரு எடுத்துக்காட்டான வாழ்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

'திருவருட்செல்வர்' படத்தில் ஒரு காட்சி. அரசராக சிவாஜியும் நாட்டியமங்கையாக பத்மினியும் நடித்திருப்பார்கள். நாட்டியமங்கையின் அழகில் மயங்கிய அரசன் அவளை கட்டியணைக்க எத்தனிப்பான். அவள் என்ன கூரியும் கேட்காத அவனை தடுத்து நிறுத்தி சில பலகாரங்களைக் காட்டி உண்ணச் சொல்வாள். அப்பலகாரங்கள் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் இருக்கும். அவற்றை சுவைத்த அரசனை பார்த்து, ‘பலகாரம் எப்படி இருந்தது’ என்று நாட்டிய மங்கை கேட்பாள். ‘அனைத்திற்கும் சுவை ஒன்றுதான் ஆனால் நிறம்தான் வேறு’ என்று அரசன் கூறுவான். உடனே ‘நானும் பெண்தான் அரசியும் பெண்தான், உருவம் மட்டுமேவேறு தாங்கள் காணும் சுகம் ஒன்றுதான்’ என்று நாட்டியமங்கை கூறுவாள். இதனைக்கேட்ட அரசன் திருந்துவான்.

இது கதையோ? கற்பனையோ? சிலருக்கு இது ஆபாசமாககூட தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. இதை உணர்ந்தால் ஆண்களின் ஜொள்ளும் செயல் முடிவுக்கு வரும்.

இந்தியப்பெண்ணிற்கு விழிப்புண்ர்வு அவசியம்


பெண்கள் முன்னேற்றம் என்றால் என்ன? இந்திய சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது? இது போன்ற கேள்விகள் நம்மிடையே தோன்றுவதுண்டு. இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்தில் மூன்று பரிமாணம் உள்ளது. அவை படிப்பு, குடும்பம் மற்றும் சமூகம். இத்தகைய முன்னேற்றத்திற்கு தடைக்கல் படிப்பு, குடும்பம், சமூகம் சார்ந்த கொடுமைகள். இன்றைய சூழலில் பல பெண்கள் படித்திருந்தும் வேலையிலிருந்தும் சமூக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். சமூகத்தில் படிப்பறிவை தவிர்த்து குடும்பமும் குடும்பம் சார்ந்த சமூக அறிவும் அவசியம் பெண்களுக்குத் தேவை. பெரும்பாலும் இந்தியவிலுள்ள தாய்மார்கள் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பொறுப்புடன் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் குடும்ப தந்தையின் பொறுப்பின்மையாகவும் இருக்கலாம். (என்னுடைய பார்வையில், இதனால் தான் இந்தியாவில் அதிகப்படியானோர் தந்தையைவிட தாயைத்தான் அதிகமாக நேசிக்கிறார்கள்). ஆகவே இன்னிலை மாற குடும்ப பராமரிப்பிற்கு ஆண்களின் பங்கு அவசியம். குடும்ப பிரச்சனைகளில் வரதட்சனைகொடுமை தலையாயது. 1997-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி ஆண்டிற்கு 5000 பெண்கள் வரதட்சனை கொல்லப்படுகிறார்கள். 1985-லேயே சட்டங்கள் இயற்றப்பட்டும் பயனில்லாமல் இருப்பது போல தோன்றுகிறது. ஒரு பெண் படித்து, வேலையில் இருந்தால் குடும்ப சூழ்னிலை சீராக அமைய வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் சமூகவலையில் இந்திய பெண்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. 2000ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்தியாவில் 1மணிநேரத்திற்கு ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுகூட குறைவான புள்ளிவிவரமா? என்பது என் சந்தேகம். இதுபோன்ற குற்றங்கள் பற்றி யாரும் சரியாக புகார் செய்வதில்லையா? இதுபோன்ற கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப் படுகிறதா? என்பதே கேள்விகள். மேலை நாடுகளில் கணவன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் கூட மனைவியர் புகார் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே சட்டம் இருந்தும் கூட சமூகத்திற்கு பயப்படும் நிலையில் தான் நம் பெண்டிர் உள்ளனர். இத்தகைய சூழ்னிலையில் 1. சட்டம் இளகுவான சீரான ஒத்துழைப்பை தரவேண்டும், 2. பெண்கள் இத்தகைய சீர்கேடு நடவாமல் தடுக்க முன்வந்து தங்கள் புகார்களை பதிவு செய்யவேண்டும், 3. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க படவேண்டும். இக்காலத்தில் வன்புணர்ச்சிகள் அதிகமாவதர்க்கு முக்கிய காரணியாக ஆபாச படங்களையே குறிப்பிடுகிறார்கள். அதைவிட முக்கியம் முறையான பாலியல்கல்வி. பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் கூட முறையான பாலியல் கல்வி மூலம் தவிர்க்கலாம். இரண்டாவதாக குறிப்பிடப்படவேண்டியவை வேலையிடத்தில் நிகழும் பாலியல் தொல்லைகள். சில வருடத்திற்குமுன் தொலைக்காட்சி நிலையங்களில் நேரும் பாலியல் தொல்லைகள் பற்றியும், அங்கே அதிகாரிகளாக பணிபுரியும் கிழடுகள் ஜொள்ளுவதையும் கிழித்திருந்தார்கள். இதிலே கொடுமை என்னவென்றால், வேலை போகக்கூடதென்று பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நடக்கும் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை தடுக்க மேலே கூறிய அனைத்து முயற்சிகள் பொருந்தும்.

முடிவாக, சமுதாயத்தில் மேன்மை பெற முதலில் மகளிருக்கு தன்மானம் விழிப்புண்ர்வு தேவை. தனக்கு நேரும் கொடுமைகளைக்கண்டும் பொறுத்துக்கொண்டும் சும்மா இருக்கக்கூடாது. சட்டத்தின்முன் கொடுமைக்காரர்களின் முகமூடியை கிழிக்கவேண்டும். அப்படிச்செய்யாவிடில், விட்டில் பூச்சி போல தினம்தினம் நெருப்பை நோக்கிய மரணம் தான்.

Wednesday, May 16, 2007

திரைப்பார்வை - 2 (Sergio Leone)

திரைப்பார்வையில் நாம் அடுத்ததாக பார்க்கவிருப்பது, Sergio leone-ன் A few dollars more என்ற திரைப்படம். இந்த படத்திலும் Clint eastwood மற்றும் Gian maria முறையே கதாநாயகன் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் இன்னொரு நாயகனாக Lee van cleef நடித்து இருந்தார். படத்தின் முதல்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை படம் விறுவிறுப்பாக இருக்கும். Clint eastwood மற்றும் Lee van cleef இருவரும் bounty killer-கள்(பணயபணத்திற்காக கொள்ளையர்களை கொல்வதை தொழிலாக உடையவர்கள்). Lee van cleef தன் தங்கையின் குடும்பத்தை அழித்த Gian maria-ஐ பழிவாங்க காத்துக்கொண்டு இருப்பவர். Gian maria-வின் கொள்ளைகும்பலுக்கு அரசு அதிகபணயத்தொகை அறிவித்து இருக்கும். Gian maria வருகையை எதிர்பார்த்து elpaso நகரில் Clint eastwood மற்றும் Lee van cleef காத்திருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பவசமாக கொள்ளையர்கள் தப்பிவிடுவார்கள். பிறகு இருவரும் கொள்ளையர்களை தொடர்ந்து சென்று அழிப்பதே இறுதிக்காட்சி.

Sergio leone-ன் எல்லாப்படங்களிலும் வசனம் இல்லாமல் சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். இப்படத்திலும் அதுபோன்ற காட்சிகள் உண்டு. ஒரு சிறந்த இயக்குனர் கதையை நாடகபாணிவசனம் இல்லாமல் காட்சியைக்கொண்டு உணர்த்துதல் வேண்டும். எடுத்துகாட்டாக பாலசந்தரின் நாடகபாணி காட்சியமைப்பும், பாரதிராஜாவின் காட்சியின் மூலம் கருத்தும் கூறலாம். இவ்விஷயங்களில் Sergio leone கைதேர்ந்தவர். இப்படத்தில் கொள்ளையர் Elpaso நகரில் திருடும் போது வசனம் இல்லாமல் சுமார் 10 நிமிடம் படமாக்கப்பட்டு இருக்கும் (இதுபோன்ற வசனமில்லாக் காட்சியமைப்பு once upon a time west படத்தில் உச்சத்தை எட்டியிருக்கும்). படத்தின் முதல் 15-20 நிமிடம் வசனமில்லாக்காட்சிகள் தான், வெகு நேர்த்தியானவை. கொள்ளையர்களை நகரினுள் வரவழைக்க தங்கள் திட்டத்தை செயல்படுத்தும் பொது, பின்னணியில் ennio morricone காட்சிகளுக்கு தன் இசை மூலம் உயிர் கொடுத்திருப்பார்.Sergio leone-ன் 90% படங்கள் அகில உலக திரைபட பட்டியலில் முதல் 50-க்குள் வந்துவிடுகின்றன. 1966-ல் வெளியிடப்பட்டு திரை உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம் the good, the bad, and the ugly. Clint eastwood, Leevan cleef, மற்றும் Eli wallach சேர்ந்து இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒரு சுடுகாட்டில் இருக்கும் புதையலைத்தேடி அலையும் மூவருக்குள் சுற்றிசுழலும் திரைக்கதை. Leevan cleef இப்படத்தில் வில்லன்வேடம் ஏற்றிருப்பார். Eli wallach தன் நகைசுவை நடிப்பால் அசத்தியிருப்பார். அவர் செய்யும் கோமாளிதனங்கள் எல்லாம் வெகு இயல்பாக அமைந்திருக்கும். Herosim என்ற பெயரில் கேலிகூத்தாக ஜல்லியடிக்கும் இந்தியதிரைப்படங்கள் போல் அல்லாமல், Clint eastwood-ன் ஸ்டைல் படத்திற்கு ஒரு பலம்.

(தொடரும்)

கடவுள் மறுப்பா? பகுத்தறிவா?

கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கடந்தநூற்றாண்டில் அம்பேத்கார், பெரியார் போன்றோர்கள் இந்தியாவில் கடவுள்மறுப்புகொள்கைகளை பெரிதும் உறுதிபடுத்தினர். மார்க்ஸிய தத்துவமும் கம்யுனிசமும் கடவுள்மறுப்புகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் கடவுள்மறுப்பை மேலும் உறுதிபடுத்தியது. புத்தர் மற்றும் சக்கிரடிஸ்-ன் தத்துவங்கள் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த சாத்திரங்களை எதிர்த்தன.

பொதுவாக, கடவுள்மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஆனால் பகுத்தறிவு முழுமையாக செயல்படாவிட்டால், கடவுள்மறுப்பு நிச்சயமாக நீர்த்துவிடும். உதரணத்திற்கு, கடவுளை மறுத்த புத்தரை கடவுளாக பாவிக்கும்தன்மை, அந்த சித்தாந்தம் நீர்த்ததன் விளைவு. எனவே கடவுள்மறுப்பைவிட, பகுத்தறிவே ஒரு சித்தாந்ததில் முதன்மை இடம் பெற வேண்டும். ரஷ்யாவில் மார்க்ஸ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிச ஆட்சியில் கடவுள் மற்றும் மதங்கள் முற்றிலும் மறுக்கப்பட்டன. இவை பகுத்தறிவால் தோன்றியவை அல்ல. சட்டதினால் மாற்றப்பட்டவை. எனவே இவை காலப்போக்கில் செயலளவில் பலகீனம் அடைந்தன.

எனவே ஒரு மனிதன் கண்மூடித்தனமாக கடவுளை பின்பற்றுவதாலும், கடவுளை மறுப்பதாலும் ஒரு பயனும் இல்லை. எவன் ஒருவன் தன் பகுத்தறிவின் மூலம் உணர்கின்றானோ அவனே அப்பாதையில் செழுமை அடையமுடியும். கடவுள் மறுப்பு விட கடவுள் நம்பிக்கையை ஆதரிப்போர் அதிகம் ஆகவே கடவுள் நம்பிக்கை பற்றி நம்மக்களிடையே தோன்றும் சில கேள்விகளை பற்றி அலசுவோம்.

1. கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?
முற்றிலும் இல்லை, இன்றைய காலகட்டத்தில் தவறு (கொலை, கொள்ளை...) செய்பவர்களில் அதிகமானோர் இறைனம்பிக்கை உடையோர்தான். கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை ஒருவனை முட்டாள் ஆக்குகிறது. ஆகவே பகுத்தறிவு இங்கு முக்கியம். எடுத்துகாட்டாக இந்தியாவில் சென்ற தோன்றிய முக்கிய பிரச்சனைகள் (மசூதி இடிப்பு, பம்பாய் குண்டுவெடிப்பு) எல்லாம் மத அடிப்படையில் உண்டானவை.

2. குழந்தைகளுக்கு பகுத்தறிவு என்றால் புரியுமா?
இது ஒரு வரட்டுவாதம். மதம், கடவுள் என்றால் மட்டும் குழந்தைகளுக்கு புரியப் போகிறதா? நிச்சயமாக இல்லை. பொதுவாகவே, குழந்தைகள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன்னென்றால், அவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணங்களை ஆராய்வார்கள். ஆனால் நாமோ, அவர்களை பயமுறுத்தி கேள்விகளை தவிர்ப்போம். இது ஆரோக்கியமானது அல்ல. முதலில் பகுத்தறிவோடு கூடிய கருத்துக்களை அவர்களின் மனதில் பதிக்க வேண்டும். முடிந்தவரை கண்மூடித்தனமாக அவர்களை எதையும் செய்ய பயிற்ச்சிக்க கூடாது.

3. கடவுள்னம்பிக்கையால் லாபம் என்ன?
எனக்கு தெரிந்து நட்டம் தான் அதிகம். அது திருப்பதி ஆகட்டும், சபரிமலை ஆகட்டும், வாடிகன் ஆகட்டும், மக்கா ஆகட்டும். பணவிரயம் தான் கடவுளால் மிஞ்சுகிறது. நம்மக்கள் இங்கே நிம்மதியை விட்டுவிட்டு வேறெதயோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். “மதம் மலர்களால் மறைக்கப்பட்ட விலங்கு” என்று மார்க்ஸ் கூறினார். மதம் மாறுவதால் மட்டும் மனிதநேயம் தழைத்துவிடாது என்பது. மார்க்ஸின் உறுதியான கொள்கை. எந்த மதமானலும் பகுத்தறிவுக் கருவியின் பயன் கொள்ளவேண்டும்.

4. எதோ ஒரு ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை செயல்படுத்துகிறதா?
செயல்படுத்தட்டும். அப்படி ஒரு ஆற்றல் இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். நாம் அதை நம்புவதாலோ (அ) பூஜிப்பதாலோ, அது இயற்கை பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிடப்போவதில்லை. அப்படி காப்பாற்றும் என்று நம்பினால், அதுவே உலகமகா மூடத்தனம். நம்முடைய தேவை 1. மக்கள் நன்மை மற்றும் 2. தேவையில்லாத பிரச்சனைகளை அகற்றுவது.

5. நன்மைசெய்வோர் கடவுளா?
இன்று நம்மக்கள் எந்த கடவுளை சொல்லி அடித்துக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் முந்தைய காலங்களில் தத்துவஞானிகளாக (யேசு, முகமதுநபி, புத்தர், மகாவீரர்), அரசர்களாக (ராமர், கிருஷ்ணர்), மக்களுக்காக உயிர்நீத்த வீரர்கள் (கிராம கடவுள்கள்) இருந்தவர்கள். எனவே ஒரு மனிதனை கடவுளாக்குவதும் பிரச்சனையின் அடிப்படை.

‘கடவுளால் எல்லாம் நடைபெறுகிறது’ என்று சூழ்நிலைக்கைதியாகமல், மக்களின் நன்மைக்குரிய காரியங்களில் ஈடுபடவேண்டும். கடவுள் மறுப்போ அல்லது பகுத்தறிவோ என்பதன் காரியம் மக்களின் நலனாக இருக்கவேண்டும். வெறும் பேச்சளவில் இல்லாமல் செயலவில் இருக்கவேண்டும். “இன்று நான் கூறுவது, நாளைய சமுதாயத்திற்கு பொருந்தாமல் போகலாம். நான் கூறியவை தவறாகவும் இருக்கலாம், ஆதலால் நான் கூறியவற்றை பகுத்தறிவு கொண்டு சிந்தனை செய்து முடிவெடுக்க வேண்டுங்கள்” என்று சாக்கிரடிஸ் கூறினார். அதுபோல ஒவ்வொறு மனிதனும் கடவுள், மதம், மதசாத்திரங்களை தூக்கியெறிந்து பகுத்தறிவுடன் வாழ்ந்து உலகம் வளம் பெற மனிதநேயம் தழைத்தோங்க வாழவேண்டும்.

என்னுடைய கருத்துகளை யாரும் தவறாக கொள்ளவேண்டாம். இந்த கருத்துகள் யாரையும் யாருடைய மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கம் அல்ல. தங்களுடைய சிறந்த கருத்துகளை விவாதத்திற்கு கொண்டு வரலாம். வாழ்த்துக்கள்.

தாங்கலடா சாமி


இடம்: கல்லூரி விடுதி
நேரம்: மாலை, 6:00 மணி
கதாபாத்திரங்கள்: ஆவி (எ) சங்கர், நெட்டை (எ) முருகேசு

ஆவி: டே நெட்டை! இங்க வாடா!
நெட்டை: என்னடா ஆவி!
(புலம்பி கொண்டே வருகிறான் நெட்டை)
நெ: என்னடா டோங்கு!
ஆ: டே மச்சான்! காதுசரியா கேட்கலடா!
நெ: எப்பபாரு பேசிட்டு இருக்க, உனக்கு வாய்பேசம போனா நல்லா இருக்கும்
ஆ: டே மாங்கா! மொக்கை போடதே. உண்மையா காது சரியா கேட்கலடா!
நெ: அதுக்கு என்ன இப்ப!
ஆ: டாக்டர்கிட்ட போகணும்.
நெ: சரி போகலாம்
ஆ: சைக்கிள் நீதாண்டா மிதிக்கணும்
நெ: அடப்பாவி! இதுக்குதான் என்னை கூப்பிட்டயா! சைக்கிளுக்கு ட்ரைவர் வச்சிட்டு இருக்கிற ஒரே ஆள் நீதாண்டா
(இருவரும் புறப்பட்டனர்)
ஆ: நல்லா மிதிடா! பாஸ்டா போடா!
நெ: நீ நல்ல நாலுபேரு சாப்பாடு சாப்பிட்டு உட்கார்ந்தா எப்படி மிதிக்கிறது. இங்க எனக்கு நுரை தள்ளிடும் போல இருக்குது. உனக்கு போய் ஆவினு பேரு வச்சான்பாரு அவனை அடிக்கனும், பார்க்கிறதுக்குதான் எலும்புகூடு மாதிரி இருக்கே, ஆனா பூதம் மாதிரி வெய்ட்டு.
ஆ: என்னடா சொன்னே. காது சரியா கேட்கலடா
நெ: இதுவேறயா! சரிதான்!
(டாக்டர் வீடு வந்ததும், சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்)
ஆ: நெட்டை! பணம் கொண்டுவரலடா. நீ கொண்டுவந்தயா!
நெ: உன்கூட வந்தனே, என்ன!! உன்னை மாதிரி இம்சை பண்ணுறவனுகள காது ரெண்டு குபகுபனு சொல்ல குமுறுகஞ்சி காச்சணும். போ! போ! கொடுக்கிறேன். இல்லாட்டி நீ இன்னும் இம்சை கொடுப்ப!
(ஆவியும் நெட்டையும் டாக்டரின் அறை உள்ளே சென்றனர்)
டாக்டர்: உட்காருங்க!
டா: என்னப்பா பிரச்சனை!
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை!
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை! (சத்தமாக கூறுகிறார்)
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை! (இன்னும் சத்தமாக கூறுகிறார்)
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: ஹலோ! என்னங்க பிரச்சனை! (கோபமாக)
நெ: சார்! அவனுக்கு அதுதான் பிரச்சனை! அவனுக்கு காது சரியா கேட்கல சார்!
டா: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...(ஆச்சர்யத்தில்)
டா: ஒரு சொட்டுமருந்து எழுதி தரேன். காதுல விடுங்க.
ஆ: எப்பெல்லாம் விடனும் சார்
டா: எப்ப விடனும்ங்கிறதவிட எங்க விடனும்ங்கிறதுதான் முக்கியம்
காதுல விடு (ஆவியும் நெட்டையும் தலைய சொறியராங்க) காலை 1முறை; மாலை 1முறை விடாதிங்க. நைட் மட்டும் விடுங்க போதும்.
(நம்ம மொக்கையவிட இது பெரிய மொக்கையா இருக்கும்போலனு, ஆவியும் நெட்டையும் காசு குடுத்துட்டு எஸ்கேப்!!!!!!!)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆண்டனி: முபாரக் பாட்ஷா பாய்!!
பாட்ஷா: ஏ...ஏ...ஏ...ஆண்டவன் கெட்டவங்கல அதிகமா மொக்க போடுவான், சிரிக்க வைக்கமாட்டான்! ஆன நல்லவன்கல கொஞ்சமா மொக்கபோடுவான், சிரிக்கவச்சிடுவான்...

Tuesday, May 15, 2007

களம் கண்டேன்

காதல்களம் கண்டேன்

இளைப்பாற விடவில்லை!

இதழுடைந்த புன்னகையில்

போர்முரசு கொட்டி

இளக்கிவிட்டாய் மனதை

பருவ சாக்காட்டில்

பட்டறிவு ஏதுமின்றி

விழுப்புண் பெற்றுவிட்டேன்!

நிலைமை துறந்து

நெடுங்கனவை மறந்தேன்

உன்னினைவின் எச்சம்

கண்களில் கசிய

நின்னை சரணடைந்தேன்

Monday, May 14, 2007

திரைப்பார்வை - 1 (Sergio leone)


இந்தியபடங்கள் போல அல்லாமல் மேற்த்தியபடங்கள் காதல், நகைச்சுவை, அடிதடி, திகில் என வகையாக தயாராவது உண்டு. இவற்றில் 1960,70-களில் வந்த cowboy படங்களை ஒருவகையாக கொள்ளும் அளவிற்கு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவை. திரைபடவுலகில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியவை. குறிப்பாக Sergio leone (ஆஸ்கார் விருது பெற்ற Benhur படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது) இயக்கிய Fistful of dollars, Few dollars more, Good bad and ugly, Once upon a time in west, My name is nobody போன்ற படங்கள் திரைவுலகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. Sergio leone-ன் இப்படங்கள் வெளிவருவதற்கு முன் cowboy படத்தின் கதாநாயகர்கள் அழகாக காட்டபடுவார்கள். ஆனால் Sergio leone படங்களில் அனைவரும் அழுக்கு உடைகளுடனும் முரடர்களாகவும் இயல்பாகவும் காட்டபட்டார்கள். இப்படங்களுக்கு இசைஅமைத்தவர் Ennio morricone. இவரின் பின்னனிஇசை படத்திற்கு பெரும்பலம் சேர்த்தது (நிறைய தமிழ்ப்படங்களில் குதிரையில் கதாநாயகன் செல்லும்போது Good bad and ugly படத்தின் theme இசை வரும்).

இனி முதலாவதாக Fistful of dollars படத்தை பற்றி பார்ப்போம். இப்படம் Akiro kurosawa-வின் Yojimbo (the body guard) என்ற படத்தின் தழுவல் (அதற்காக இப்படத்தின் Akiro kurosawa வழக்கு தொடர்ந்தது வேறு கதை). கதாநாயகனாக நடித்த Clint eastwood-க்கு (unforgiven, mystic river, million dollar baby போன்ற படங்களை இயக்கி ஆஸ்கார் விருதுகள் பெற்றவர்) இப்படம் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். கொள்ளைகாரர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் நிறைந்த ஒரு ஊருக்குள் கதாநாயகன் பிரவேசிப்பார். படத்தின் தொடக்கத்தில் சில முரடர்கள் ஒரு சிறுவனை விரட்டுதல், குதிரைமீது பிணம், கதாநாயகனை வம்பு செய்யும் கும்பல் என விறுவிறுப்பு் அதிகம் ஆகும். கதாநாயகன் ஒரு உணவுவிடுதி நடத்தும் முதியவர் மூலமாக, அந்த ஊர் கடத்தகாரர்கள் மற்றும் கொள்ளையர்களால் என இருவேறு கும்பல்களால் ஆளப்படுகிறது என்பதை அறிவான். இரு கும்பலுக்கும் இருக்கும் பகையைப் பயன்படுத்தி பகையை அதிகப்படுத்தவும், பணம் ஈட்டவும் முதலில் கதாநாயகன் முயற்சிப்பான். பிறகு நாயகனின் சூழ்ச்சி தெரியவர, கொள்ளையர்களால் அடித்துச் சின்னாபின்னாக்கப்பட்டு முதியவரால் காப்பாற்றப்படுவான். நாயகன் தப்பியதையடுத்து இருதரப்பிற்கும் ஏற்படும் மோதலின் இடையில், கடத்தல்காரர்கள் முற்ரிலும் அழிப்பட்டுவிடுவார்கள். நாயகன் இருக்கிமிடத்தைக் கேட்டு முதியவரை அடித்து சித்திரவதை செய்யப்படுவார். முடிவில் முதியவரைக் காப்பாற்ற வரும் நாயகன் கொள்ளையர்கள் அனைவரையும் அழிப்பதோடு படம் நிறைவு பெரும். கதாநாயகனும் வில்லனும் சந்திக்கும் இடங்கள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, வில்லன் ஒரு மெக்ஸிகன் பழமொழி கூறுவார். “Winchester முன் pistol வைத்திருப்பவன் இறந்தவனுக்கு சமம்” (வில்லன் Winchester பயன்படுத்துபவர், கதாநாயகன் pistol பயன்படுத்துபவர்). இறுதிகாட்சியில் கதாநாயகன் இந்த பழமொழியை நினைவுபடுத்தி வில்லனுடன் மோதுவார். இந்த காட்சிஅமைப்பு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். வில்லன் ஆட்கள் கதாநாயகனை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெகு இயல்பாக படமாக்கபட்டு இருக்கும்.

கதாநாயகன் clint eastwood-ன் நடை, உடை, பாவனை அனைத்தும் மறக்கமுடியாதவை. அவருடைய ஆளுமையோடு கூடிய நடிப்பு அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்த ஒன்று ("இன்றைய சூப்பர் ஸ்டார்கள் இவரது ஸ்டைலைத்தான் காப்பி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?" என்று எண்ணத் தோன்றும்). இப்படம் கதைக் களத்திற்கு ஏற்ப அருமையான முறையில் தழுவல் செய்யப்பட்டு இருக்கும். இப்படத்திற்கு இசையமைத்த எனியோ மொரிகான் பின்னணி இசையில் ஒலிக்கும் ஸ்பானிய கிட்டார்கள் திரைப்படத்தின் கதையோடு குதிரை வேகத்தில் பயணிக்கும். மறுபடியும் ஹாலிவுட்டில் கூட எடுக்கமுடியாத அளவிற்கு அமைந்த இப்படத்தை இத்தாலியில் தான் உருவாக்கினார்கள்.

(தொடரும்)


Sunday, May 13, 2007

தமிழன் அசுரனா?


மதச்சாக்கடையில் அடைகாக்கப்படும்
புராணபுளுகுகள் எரியும்வரை

சாதிபுகட்டும் சாத்தானின்
அமிலக்கொங்கைகள் அருபடும்வரை

அறிவியல் அன்னை
தமிழ்மொழியை தத்தெடுக்கும்வரை

வெற்றிக்கு வித்திடும்
மானமும் ஞானமும் பெறும்வரை

வரலாற்று பிணங்கள்
அறுவைக்கு உட்படும்வரை

தந்திரமும் மடமந்திரமும்
தன்னுளிருந்து உமிழும்வரை

தமிழன் அசுரன் தான்!

Saturday, May 12, 2007

திருனங்கைகள்...

எனக்கும் திருநங்கைகள் பற்றி முதலில் ஓர் அவநம்பிக்கை இருந்தது. அது என்னுடைய நண்பர்கள் கூறுவதாலும், நான் தொடர்வண்டியில் சந்தித்த சில திருநங்கைகளாலும் ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் ஒருமுறை நான் தொடர்வண்டியில் பயணிக்கும்போது ஒரு ந்பர் என் அருகில் வந்து அமர்ந்தார். நான் நிமிர்ந்து பார்த்தேன். அவர் ஒரு திருநங்கை. பொதுவாக திருந்ங்கைகள் வருகை கைத்தடல்களோடு இருக்கும். அவர் என்னை பார்த்து கொஞ்சம் பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் “அப்படி எல்லாம் கூறாதே! நாங்கள் ஊனமுற்றவர்கள்! உதவி செய்யுங்கள்” என்றார். பிறகு நான் என்னால் முடிந்தவற்றை கொடுத்து உதவினேன். அந்த சம்பவத்திற்கு பிறகு, திருநங்கைகள் பற்றிய என்னுடைய மாயை விலகியது.

பின்னொரு சந்தர்ப்பம், ‘நவரசா’ என்ற படத்தைப்பார்க்க நேர்ந்தது. அப்படத்தில் ஒரு திருநங்கை “கூண், குருடு, செவிடு, பேடு” என்று அவ்வையார் கூறிய வார்த்தையை நினைவு படுத்துவார். “பேடு என்பது ஒரு உடல் ஊனமே தவிர, கேளி மற்றும் அறுவருப்புக்கும் உரிய நிலை அல்ல” என்றும் கூறுவார். “இந்தியாவின் பல்வேறு மூலைகளில் திருநங்கைகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஏன் இந்த இழிசெயல்? அவர்களை காக்க வேண்டிய சமூகம், ஏன் அவர்களை அந்நியப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அவமானப்படுத்துகிறது?” என்ற கேள்வியுடன் அந்த படத்தை பார்த்து முடித்தேன். நம்மக்களும் அரசும் உணராதவரை இந்த கொடூரம் தொடரும். அவர்கள் நம்மிடம் கேட்கும் ஒரே வேண்டுகோள் "அந்நியப்படுத்ததே!!"...

வாழ் வாழவிடு...

Thursday, May 10, 2007

திரையில் தமிழ் ஒப்பாரிபாடல்கள்...

சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி கூறுவது போல, தமிழனின் வாழ்க்கை முழுவதும் இசைமயம் தான். இறக்கும்போதுகூட இசைக்கு முக்கியதுவம் கொடுக்கும் இனம். ஒப்பாரிப்பாடல் என்பது தொன்ருதொட்டு தமிழரிடம் இருந்து வருகிறது. குறிப்பாக, திரையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டக: 1. என் தாயெனும் கோயிலை...(அரண்மனைகிளி)2.சோலை பசுங்கிளியே...(என் ராசாவின் மனசிலே)3.மாடவிளக்கே...(விருமாண்டி)...இதுபொல பலபாடல்கள் தமிழ்த்திரையில் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசை அமைத்த படங்களில் இத்தகைய பாடல்கள் அதிகமாக தோன்றியது. பழையபடங்களில் இடம்பெற்ற தத்துவபாடல்களும் ஒப்பாரிபாடல்களை ஒத்தவைகளாக இருந்துவந்துள்ளது. எ.கா. 1. போனால் போகட்டும் போட...(பாலும் பழமும்)2. பல்லக்கு வாங்க...(பணக்கார குடும்பம்).

தங்களின் மறுமொழிகளை பொருத்து மேலும் எழுத தொடர்கிறேன்...தொடரும்...