Tuesday, November 04, 2008

காமிக்ஸ் to கார்ட்டூன்


நாம் எல்லோரும் சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்தவர்களாகவோ அல்லது பார்த்து ரசித்தவர்களாகவோ இருப்போம். நம்ம பதிவர் "லக்கிலுக்" கூட அடிக்கடி காமிக்ஸ் வாசிப்பைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார். அவர் பதிவுலக பெயர்கூட காமிக்ஸ் மேல் கொண்ட பாசம் தான் காரணம். நானும் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகம் படிப்பேன். ராணிகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் அப்போது வருவதுண்டு. காமிக்ஸில் வரும் வீரர்கள் என்னை அதிகமாக கவர்ந்துவிடும். அப்படிக் கவர்ந்தவை... துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட், டைகர், குதிரைவீரன் ஜோ, இரும்பு மனிதன் ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர். அப்படி காமிக்ஸ் கேரக்டர்களின் ரசிகனாக இருந்த காலத்தில், என் தந்தையிடம் தினமும் குதிரை, தொப்பி வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிப்பேன். நான் அதிகமாக நேசித்தது குதிரைவீரர்க்ளைத் தான். கட்டிலில் அமர்ந்து காமிக்ஸ் கையில் எடுத்துவிட்டால், எப்போதும் கற்பனைதான். வீட்டில் அம்மா இல்லாவிட்டால், நானும் என் அண்ணனும் காமிக்ஸ் கதையின்படி நடிக்க ஆரம்பித்துவிடுவோம். கட்டிலின் இருபுறமும் இருந்து கையை துப்பாக்கியாக வைத்துக் கொண்டு சுடுவதுண்டு. இவ்வாறு நாங்கள் இருவரும் நடிக்கும் போது, என் அண்ணனுக்கு நான் செவ்விந்தியர் வேடம் தான் கொடுப்பேன். ஒன்றுமில்லை... கோழியிறகோ / காக்கையிறகோ தலையில் சொருகிக்கொள்ளவேண்டும். கல்லூரி நாட்களின்போது குதிரைவீரர்களின் காமிக்ஸ் தாக்கம் காரணமாகவே நிறைய Western gendre படங்கள் தேர்ந்தெடுத்து பார்க்கத் தொடங்கினேன். இப்படியாக சுமார் 50 படங்களுக்கு மேல் பார்த்ததோடல்லாமல், சேமித்தும் வைத்திருந்தேன்.
லயன்காமிக்ஸில் 'ஈகிள்மேன்' என்று வெளிவந்த கதையின் திரைப்படம் தான் "Condorman", அப்படத்தின் ஒரு ஒளித்துண்டு கீழே...நான் 4-ம் வகுப்பு வந்தபின் ஒரு வழியாக காமிக்ஸ் ஆர்வம் குறைந்துவிட்டது. அதன் பின் தொலைக்காட்சியில் வரும் ஹீமேன், ஸ்பைடர்மேன் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். 1992-ல் ஸ்டார் சேனல் தொடங்கியபின், தினமும் காலை எழுந்தவுடன் கார்டூன் பார்க்கும் வேலை தான். Oscar wilde தொகுப்பில் வரும் fairytale கதைகள் அதிகமாக வரும். (Happy prince, Selfish giant போன்ற கதைகளைப் பார்த்த ஞாபகம் இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது). கிருத்ஸ்மஸ் பண்டிகை மற்றும் கோடைவிடுமுறை வந்துவிட்டால், ஸ்டார் டீவியில் நிறைய குழந்தைகளுக்கான படங்கள் காட்டப்படும், அவற்றை வெகுவாக ரசிப்பதுண்டு. சன் டீவி தொடங்கி வளர்ந்த பிறகு என்னை அப்போது யாரும் கார்டூன் சேனல் பார்க்க அனுமதிப்பதில்லை.
ஆனால் இப்போதுள்ள குழந்தைகள் கார்டூன் நெட்வொர்க், சுட்டி டிவி, போகோ என பல சேனல்கள் பார்க்கிறார்கள்.கொடுத்து வைத்தவர்கள். என்னோட அண்ணன் மகன் கார்த்திகேயன் யாரையும் மற்ற சேனல் பார்க்கவே விடுவதில்லை. அந்த அளவுக்கு இப்ப குழந்தைகள் வெறித்தனமாக பார்க்கிறார்கள். ஆனால் எப்படியோ மொக்கையான சீரியல்களும் அரைகுறையான தமிழ்படங்களைப் பார்ப்பதைவிட இந்த காட்டூங்ன் சேனல்கள் நிறைய தகவலும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

5 comments:

 1. இப்போது வெளியான படமா!
  இதை இந்தியாவில் பார்த்தீர்களா நண்பரே!

  ReplyDelete
 2. condorman படம் 1981-ல் வெளியானது

  ReplyDelete
 3. இப்ப எல்லாப் படமும் கார்டூன் மாதிரிதான் இருக்கிறது

  ReplyDelete
 4. அந்த அளவுக்கு இப்ப குழந்தைகள் வெறித்தனமாக பார்க்கிறார்கள்.\\இதைப் பார்த்திட்டு தான் வீட்டு கேபிளையே பிடுங்கிட்டேன்.............

  ReplyDelete
  Replies
  1. பாவம் குழந்தைங்க பரவாயில்லை பார்த்துட்டு போகட்டும்.

   Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய