Tuesday, August 14, 2012

தொழுகை செய்யாமலே 88 வயதிலும் அயராத தாத்தா

எனக்கு தெரிந்து ஒரு தாத்தா இருக்கார்.  அவருடைய புகழைப் பற்றி சொல்லி மாளாது. தள்ளாத வயதிலும் சோம்பல் இல்லாமல் டெல்லிக்கு சொம்பு தூக்குபவர். அவர் பஞ்சமா பாதகத்திற்கே பல்பு கொடுப்பவர். அவர் தொழுகை எதுவும் செய்ததில்லை. ஆனால் எவன் காலில் தினமும் விழுகிறார் என்பது எனக்கு தெரியாது. ஏனென்றால் தினமும் விழுந்து எழுந்தால் உடலுக்கு நல்லது. உடம்பு சும்மா கின்னு இருக்கும். இந்த வயதிலும் மானாட மயிலாட நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறார் என்றால் பாருங்களேன். இவர் நாட்கணக்கில் நோன்பு இருப்பதில்லை. மணிக்கணக்கில் எப்பயாவது இருப்பார். அதுக்கே ஓவர் பில்டப் கொடுப்பார். சாமி எல்லாம் கும்பிடாத நாத்திகர். எவனாவது மாயம் மந்திரம் என்று சொல்லி மோதிரம் வரவழைத்துக் கொடுத்தால், வாங்கி உரசிப் பார்த்து ஜேபியில் போட்டுக்கொள்வார். தமிழ்நாட்டிற்கே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோவில் அரிசி போட்டவர். (அது  ஈழத்தமிழர் வாயில் போடத்தான் என்பது பிறகு தான் தெரியவந்தது.)  இருந்தாலும் அதையும் எங்க ஆளுங்க பாதி விலைக்கு கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் வித்துகிட்டு இருக்காங்க. 

இந்த வயதிலும் கட்சித்தலைவராகவே இருப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.எப்படியாவது மறுபடியும் ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் ஆகியே தீருவேன் என்று இருக்கிறார். நாங்க முடிவு பண்ணிட்டோம் இவரை அனுப்புரதுனு... டெல்லிக்கு...பிரதமராக... 

எங்க தாத்தாவுக்கு இருக்கும் ஒரே கவலை என்ன தெரியுமா? பீச்சுல இடம் கிடைக்குமா கிடைக்காதா? இல்லை கண்ணம்மாபேட்டை தானா! 

தூக்குல போடுரவன், கை காலை வெட்டுரவன், ஏசு அழைக்கிறார் கூட்டம் நடத்துரவன் எல்லாரும் கேட்டுக்குங்க. நீங்க சனங்களுக்கு கொடுக்கிறதெல்லாம் ஒரு தண்டனையா? தமிழ் மக்களை பாடுபடுத்த விதவிதமான தண்டனைகளைக் கையாள்பவர் எங்க தாத்ஸ். எதோ உலக்கையின் ஓசை, பொன்னர் புடுங்கர்  இப்படி சில படங்களுக்கு வசனம் என்ற பெயரில் எதையோ எழுதி தியேட்டர்களில் ஈயாட வைத்தவர். (தியேட்டர்காரர்கள் சிந்திச்சி பார்க்கணும் உண்மையாக தியேட்டர் பக்கம் எவனும் வராமல் போனதற்கு திருட்டு விசிடி மட்டும் தான் காரணமா, இல்லை எங்க தாத்ஸ் படம் பார்த்தவனுக்கெல்லாம் சினிமாபோபியா வந்து சீக்காகிட்டாங்களா என்று) இப்ப கூட பாருங்க ரொம்ப பொறுப்பாக எல்லாரையும் கூட்டி டெசோ என்ற பெயரில் ஈழமக்களுக்கு  ஈமகிரியை  கூட செய்து இருக்கார். இதைக் கேட்டால் உங்களுக்கு புல், செடி, மரம், ம... எல்லாம் அரிக்குமே! இப்படி சுறுசுறுப்பு சுந்திரமணியாகவும், எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமாக இருக்கும் எங்க தாத்தா யார் தெரியுமா சொல்லுங்க பார்ப்போம். அவரை தமிழ்சனங்க மு.கூ.கருணாநிதி என்று அழைப்பாங்க. நாங்க அன்பாக எப்பவும் "மஞ்ச துண்டு தாத்தா ! மஞ்ச துண்டு தாத்தா" என்று தான் அழைப்போம்.

எப்படி போஸு! நல்ல இருக்கா!
 இது!
 இது!

 வாவ்!
 மார்வலஸ்!
  உங்களுக்கு இன்னும் வயசே ஆகலை!
 பி.கு.: ஒருத்தன் எவ்வளவு நாள் வாழ்ந்தான் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம். எங்க தாத்தாவைப் பார்த்தாலாவது இதைத்  தெரிந்து கொள்ளுங்கள். 

வந்ததுதான் வந்திங்க அப்படியே ஒரு பாட்டைக்  கேட்டுட்டு போங்க!  19 comments:

 1. செம பாஸ்..
  "என் வாழ்க்கையிலே
  ஒவ்வொரு நாளும்
  ஒவ்வொரு நிமிடமும் ஏன்
  ஒவ்வொரு நொடியும்
  நானே சொதப்பினதுடா"- கலைஞர்

  ReplyDelete
 2. குட்டிப்பிசாசு,

  பதிவுல பிண்ணனி படமா நிறைய மிளகாய் இருக்கேன்னு ஏன்னு நினைச்சேன், இப்போ தான் தெரியுது ஏன்னு :-))

  எண்ணை ஊத்தாமலே வறுத்து ,பொரிச்சு எடுத்துட்டீர், என்ன ஒரு இணைய முரசொலியும் இன்னும் கொடிப்பிடிச்சுக்கிட்டு கூவ வரவே இல்லை :-))

  ReplyDelete
  Replies
  1. வரும்போது பார்த்துப்போம்!

   Delete
 3. ஹிஹி !! செம செம !!! இந்த தாத்தா யோகாவும் பண்ணல், தொழுகையும் பண்ணல.. சும்ம கின்னு கண்ணுல விரல் விட்டு ஆட்டிகினு இருக்காரே !!!

  ReplyDelete
 4. //தமிழ்நாட்டிற்கே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோவில் அரிசி போட்டவர். (அது ஈழத்தமிழர் வாயில் போடத்தான் என்பது பிறகு தான் தெரியவந்தது.) இருந்தாலும் அதையும் எங்க ஆளுங்க பாதி விலைக்கு கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் வித்துகிட்டு இருக்காங்க. //

  உண்மையை உள்ளபடி சொல்லும் உங்கள் நேர்மைக்கு ஒரு ஓ !!!

  ReplyDelete
 5. பின்னி பெடல் எடுத்திட்டிங்க கலக்கல் பதிவு.

  ReplyDelete
 6. உங்களுடைய தாத்தாவை பற்றி இவ்வளவு பெருமையான விஷயங்களா நன்றி
  உங்களுடைய பனி மேலும் சிறக்க எம்முடைய வாழ்த்துக்களும் வணக்கமும்
  சுரேந்திரன்

  ReplyDelete
 7. அசத்தலான பதிவு..

  வவ்வால் நினைத்ததையே நானும் நினைத்தேன். :))

  ReplyDelete
 8. I think because he wake-up early like real muslims wake-up early for prayer.Also he showed his guts by married morethan one instead of being hiding like cowards(cheating family as well society) and this is another reasons too.

  ReplyDelete
 9. he he நல்ல எண்ணங்கள் yellow grandpa is clever to hide all jagagala matters. But unfortunately CIT came out, but he did not say CIT is he wife ( i think recently only (because of 2G episode?) he said CIT is his wife). But he always says fruit is his daughter :)) - Who is CIT? CIT is mother my daughter Fruit Yellow Grandpa said like this. If you say he is Strong because of his jagalalam then i don't have any comment on it.

  ReplyDelete
 10. \\பி.கு.: ஒருத்தன் எவ்வளவு நாள் வாழ்ந்தான் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம். எங்க தாத்தாவைப் பார்த்தாலாவது இதைத் தெரிந்து கொள்ளுங்கள். \\ செத்தும் கொடுத்தான் சீதக்காதி, செத்தும் கெடுத்தான் கணக்குப் பிள்ளை. இவரு இரண்டாவது ரகம். Pinnitta pisaasu, sabaash!! But what is the solution for the damage they have caused to the state to make their Swiss bank account fatty? How do we retrieve the money looted by them?

  ReplyDelete
  Replies
  1. யோகா செய்வதைவிட தொழுகை செய்தால் இன்னும் பலகாலம் உயிர் வாழலாம் என சிலர் பதிவுலகில் சிலாகித்தார்கள். அதற்கான பதில் இது. பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்.

   Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய