Saturday, September 29, 2012

ஆசிய சிவிங்கியும் ஒரு சூஃபிக்கதையும்



முன்பு ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். அப்படத்தில் 1910-களில் நடப்பதான கதை. அதில் ஆங்கிலத்தில் ‚சீத்தா (Cheetah)‘ எனப்படும் ஒரு வகைப்புலி காட்டப்படும். சாதாரணமாக சீத்தா வகைப்புலிகள் ஆப்பிரிக்காவில் தானே இருக்கும். எப்படி இந்தியாவில் காட்டுகிறார்கள்? என குழப்பம். இயக்குனரின் தவறாக இருக்கலாம் என விட்டுவிட்டேன். முன்பு இந்திய அரசர்கள் இதனை வேட்டைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் எனப் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்திருக்கப்படும் என நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது. இதன் பெயர் தமிழில் சிவிங்கிப்புலி. சீத்தா என்பது சம்ஸ்கிருதப் பெயர்.
 
ஒரு காலத்தில் சிவிங்கிப்புலிகள் இந்தியதுணைக்கண்டம் முழுக்க இருந்திருக்கிறது. தற்போது அரேபியா முதல் இந்தியா வரை வெறும் 70 – 100 சிவிங்கிப்புலிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஈரானில் மட்டுமே உள்ளன. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கின் பெயரால் பல சிவிங்கிப்புலிகள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. பிறகு சிவிங்கிப்புலிகளின் இருப்பிடங்களான எத்தனையோ புல்வெளிகள் மக்களின் வாழ்விடங்களாகவும், விளைச்சல் நிலமாகவும், மேய்ச்சல் நிலங்களாவும் மாற்றப்பட்டுவிட்டன. இந்தியாவில் முதன்முதலாக ஒரு விலங்கு செயற்கையாக முற்றிலும் அழிக்கப்பட்டதென்றால் அது சிவிங்கிப்புலியே. 1952ல் இவை முற்றிலும் இந்தியாவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மறுபடியும் ஆசியவகை சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டம் (Project Cheetah) இந்தியாவிற்கு உள்ளது. 2009ல் ஈரானிய அரசுடன் இது குறித்து பேச்சுவார்த்தையும் நடந்தேறியது. ஆனால் ஆசிய சிவிங்கிப்புலிஜோடிகள் அல்லது திசுக்களுக்கு (க்லோனிங் முறையில் உருவாக்க) பதிலாக ஈரான் ஆசிய சிங்கங்களை கேட்டுள்ளது. அவ்வாறு கொடுக்க இயலாது என இந்திய அரசு மறுத்துவிட்டது. வேறுவழியின்றி தென்னாப்பிரிக்காவிடமும் இந்திய அரசு சிவிங்கிப்புலிகளை கேட்டுள்ளது.

சில அதிக தகவல்களுக்கு தியோடர் பாஸ்கரன் தமிழில் எழுதிய கட்டுரை பார்க்கவும்.
****************************************************************************************
ஒரு ஊரில் ஒரு வணிகன் இருந்தானாம். ஒருநாள் அவன் வியாபாரம் எல்லாம் முடிச்சு ஒட்டகத்தில் ஊரு திரும்பிக்கொண்டு இருந்தான். வரும்வழியில் கடவுள் தொழுகைக்கு நேரமாகிவிட்டது. ஓரமாக ஒட்டகத்தை விட்டுவிட்டு, தொழுகை செய்ய ஆரம்பிச்சான். தொழுகைய முடிச்சி வந்து பார்த்தா ஒட்டகத்தை காணோம். இருட்டி வேற போச்சு. ஒட்டகத்தை தேடவும் வழியில்லை. ஒட்டகத்தில் தான் அவன் கொண்டுவந்த பணமும் இருக்கு. அவனுக்கு ஒரே கோபம். வானத்தைப் பார்த்து „கடவுளே! உன்னை தானே வணங்கிக் கொண்டிருந்தேன், இப்படி நீ செய்யலாமா? ஒட்டகம் ஓடி போச்சே! நான் என்ன செய்ய!“ எனக் கத்தி புலம்பிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியா ஒரு சூஃபி பெரியவர் வந்தராம். கடவுளிடம் புலம்பிக்கொண்டிருந்த வணிகனைப் பார்த்து „தம்பி! கடவுளை ஏன் திட்டுரே“ என்று கேட்டார். வணிகன் நடந்ததைச் சொன்னான். அதற்கு பெரியவர் „கடவுளைக் கும்பிடு! ஆனால் அதுக்கு முதல் ஒட்டகத்தை கட்ட வேண்டியது தானே!“ என்றார்.

14 comments:

  1. குட்டிப்பிசாசு,

    இப்போ இந்தியாவில் சிறுத்தைகள் மட்டும் தான் இருக்கு, அதோட வாழ்வும் பிரச்சினையாத்தான் ,நம்மாளுங்க காட்ட எல்லாம் எஸ்டேட் ஆக்கிட்டு ,எஸ்டேட்ல சிறுத்தை வருது ,கவர்மெண்ட் கண்டுக்க மாட்டேன்குதுனு ,புலம்புறாங்க,அதையும் செய்தியா பத்திரிக்கைகள் போடுது.

    அடிக்கடி வால்ப்பாறை தேயிலை தோட்டத்தில் சிறுத்தை தாக்குதல்னு செய்தி வரும்.

    இதே கதை தான் யானைக்கும், காட்டெல்லாம் அழிச்சு, விவசாயம் செய்றாங்க, ஆனால் ஊருல இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யாம தரிசா போடுறாங்க, இந்த மனுஷப்பயலுக செய்றத நினைச்சா கடுப்பா வருது.

    ---------

    ஒட்டகம் மட்டும் தான் ஓடுச்சா இல்லை ஒட்டகம் மேல உட்கார்ந்து இருந்த வியாபாரியின் இளம் மனைவியும் ஓடிடுச்சா :-))

    பேசாம ஒட்டகத்துக்கும் தொழுகை செய்ய கத்து கொடுத்திருக்கலாம் ,அதுவும் மண்டிப்போட்டுக்கிட்டு இருந்து இருக்கும் :-))

    ReplyDelete
    Replies
    1. //ஒட்டகம் மட்டும் தான் ஓடுச்சா இல்லை ஒட்டகம் மேல உட்கார்ந்து இருந்த வியாபாரியின் இளம் மனைவியும் ஓடிடுச்சா :-))//

      இதுல எதோ உள்குத்து இருக்கே!

      Delete
    2. வவ்வால் லுசு புன்ட

      Delete
  2. பதிவும் கதையும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு
    நான் சீட்டா என்றால் சிறுத்தை என நினைத்து இருந்தேன்.வேங்கைப் புலி என தெளிவு படுத்தியற்கு நன்றி. பல விலங்கின‌ங்கள் அழிவதை தடுக்க வேண்டும்.

    சூஃபிக்கள் எதார்த்த உலகை புரிந்தவர்கள்.கடவுள் போரில் தேவ தூதர்களை அனுப்பி வெற்றி தருவார்,உலகையே வெல்வோம் என நம்புவதில்லை. எனவே தத்துவ, ஆன்மீக தேடல் மூலம் தனிப்பட்ட இறைத் தேடல் செய்கிறார்.

    நன்றி

    ReplyDelete
  4. ஒரு திருத்தம்: அது சிவிங்கி புலி. வேங்கை புலி அல்ல. அதை பற்றிய ஒரு அருமையான கட்டுரை ஒன்றை தியடோர் பாஸ்கரன் எழுதி இருக்கிறார்.அக்பரிடம் சில நூறு (ஆம் உண்மையில்) சிவிங்கி புலிகளும் அதை பராமரிக்க சிலநூறு ஆட்களும் இருந்துள்ளனர். சிங்கத்தை தர முடியாதென்பது இந்திய அரசல்ல. குஜராத்தின் மாநில அரசு. அது ஈரானுக்கு மட்டும் தர முடியாதென்று சொல்லவில்லை. இந்தியாவின் வேறெந்த பகுதிக்கும் கூட தர முடியாதென்று சொல்லி இருக்கின்றனர். காரணம் குஜராத் பாரம்பரியம் போய்விடுமாம். இதனால் மரபணு குறை கொண்ட சிங்கங்கள் உருவாகி இன்னும் சில வருடங்களில் இந்திய (ஆசிய)சிங்கம் அழியப் போகிறது. அப்புறம் ஆப்பிரிக்க சிங்கங்களை இறக்குமதி செய்வோம். மாடு போன பிறகு கொட்டகையை பூட்டுவது மட்டுமே நம் நாகரீகம். - பா.சரவணன்

    ReplyDelete
    Replies
    1. பா. சரவணன் அவர்களே,

      தகவலுக்கு நன்றி.

      அகராதி, விக்கிபீடியாவில் பார்த்தேன். சில இடங்களில் சிவிங்கி என்றும், சில இடங்களில் வேங்கை என்று கொடுக்கப்பட்டுள்ளது. உயிர்மையில் தியோடர் பாஸ்கரனின் கட்டுரையைப் படித்தேன். எனினும் நான் சிவிங்கிப்புலி என மாற்றிவிடுகிறேன்.

      Delete
  5. வணக்கம் நண்பரே,

    //„கடவுளைக் கும்பிடு! ஆனால் அதுக்கு முதல் ஒட்டகத்தை கட்ட வேண்டியது தானே!“ என்றார்.//

    இன்னொரு வேடிக்கை விண்வெளி பயணத்தின் போது 'புராக்' என்கிற (கழுதையைவிட பெரியது குதிரையைவிட சிறியதுமான)வாகனத்தில் ஏறிச் சென்ற நபிகள் நாயகம்,தொழுகைக்குச் சென்ற போது குதிரை கட்டும் தொழுவத்தில் அதை கட்டிவிட்டுத்தான் சென்றார்கள். இது அல்லாவால் சிறப்பாக அமைக்கப்பட்டு நபிகளுக்கு வழங்கப்பட்ட வாகனம்,யார் கண்களுக்கும் தெரியாத வாகனம்,இருப்பினும் கட்டிவிட்டுச் சென்றார்கள் என்றால் திருடர்களுக்கு பயந்தா? கடவுளின் வாகனமே காணாமல் போய்விடும் என்று எச்சரிக்கையுடன் செயல் பட்ட நபிகள் நாயகத்தின் வழியை பின் தொடராதது அந்த வணிகனின் தவறு நண்பரே சிந்தியுங்கள்!!!!!!!!!

    இனியவன்...

    ReplyDelete
  6. வணக்கம் குட்டி பிசாசு,

    சூஃபியிசத்தை பற்றி படிக்க படிக்க, அவர்கள் கடவுள் பற்றி ஐயப்பட்டு, கடவுள் இல்லை என்று தோன்றி, இருக்கிறார் என்று நிறுவமுயல்கிறார் என்றே தோன்றுகிறது.

    இயற்கையை நாம்தான் காப்பாற்ற வேண்டும் கடவுளிடம் வேண்டி புண்ணியமில்லை என்று அந்த சூஃபி ஒட்டகத்தை பூட்டு என்று சொன்னதன் மூலம் உணர்த்தியுள்ளார். அந்த நல்ல உள்ளம்படைத்த சூஃபியை வகாபிகள் ஏன் அற்றுப்போக செய்ய முயற்சிக்கிறார்கள் என தெரியவில்லை.

    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //சூஃபியை வகாபிகள் ஏன் அற்றுப்போக செய்ய முயற்சிக்கிறார்கள் என தெரியவில்லை.//

      என்னையும் அறியாமல், அற்றுப்போகும் சிவிங்கிப்புலி, சூஃபியிசத்தையும் ஒன்றாக பதிவிட்டுவிட்டேன்.

      Delete
  7. \\கடவுளைக் கும்பிடு! \\ Start this pisaasu!!

    ReplyDelete
    Replies
    1. //Start this pisaasu!!//

      தொடங்கிய இடத்துக்கே மறுபடியும் போக முடியுமா?

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய