Friday, October 12, 2012

மொகலாய கிசுகிசு

மொகலாய மன்னர் அக்பருக்கு இரு சந்தேகங்கள் இருந்ததாம். ஒன்று கங்கை ஆறு எங்கிருந்து தோன்றுகிறது. இரண்டு குழந்தைகள் பேசும் மழலை மொழி என்ன மொழி. முதல் சந்தேகத்தின் விடையைக் காண ஒரு கூட்டம் அனுப்பப்பட்டது. சென்று வந்தவர்கள், „ஆற்றைத் தொடர்ந்து சென்றோம், பல காடுமேடுகளைக் கடந்தோம். முடிவில் ஒரு மலைமேல் பெரிய மரத்தாலான மாட்டின் தலை இருந்தது. ஆற்றுநீர் அதன் வாயில் இருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த மலையின் பின்னே சென்று பார்க்க முடியவில்லை“ எனச் சொன்னார்கள். அவர்களுக்கு மன்னர் கொஞ்சம் பொருளுதவி செய்து அனுப்பினார்.

மன்னருடைய இரண்டாவது சந்தேகத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள் பேசும் மொழியைத்தான் ஆதிமனிதர்கள் (ஆதாம், ஏவாள்) பேசியிருக்க வேண்டும் என்பது மன்னரின் கருத்து.. அதை நிவர்த்தி செய்ய பல மொழி விர்ப்பன்னர்கள் ஒன்று கூட்டப்பட்டனர். அனைவரும் தங்களின் மொழியையே மழலை மொழியை ஒத்திருப்பதாக  கூறினார்கள். 12 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் தனியாக வளர்க்கப்பட்டார்கள். அவர்களை பல மொழி அறிஞர்கள்   கண்காணித்தார்கள். 12 ஆண்டுகள் கழித்து, யாரும் மழலை மொழிக்கும் மற்ற மொழிகளுக்கான தொடர்பை உறுதிபடுத்த முடியவில்லை. இந்த சம்பவம் நடந்திருக்குமா என நமக்குச் சந்தேகம் எழலாம். ஆனால் அக்கால மன்னர்கள் இது போல எதுவேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
அக்பர் காலத்தில் மது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஐரோப்பியர்களுக்கு மட்டும் அந்த விதி தளர்த்தப்பட்டது. மதுவகைகளை தயாரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மன்னர் ஜஹாங்கீர் நன்றாக மது அருந்துவார் என்பது ஓரளவுக்கு மொகலாய வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். ஜஹாங்கீருக்கு ஐரோப்பிய கிருத்துவ நண்பர்கள் அதிகம். ஒருமுறை சில பாதிரியார்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்றிக்கறி பற்றிய பேச்சு வந்தது. பன்றிக்கறி சமையல் எப்படி இருக்கும் என ஜஹாங்கீர் கேட்க, பாதிரியார்கள் „மிருதுவாகவும், வாசமாகவும்“ இருக்கும் என்றார். உடனே ஜஹாங்கீருக்கு பன்றிக்கறி சமையல் சாப்பிட ஆவல் வந்துவிட்டது, தன் விருப்பத்தையும் அவர்களிடம் தெரிவித்தார். பாதிரியார் ஒருவர் வீட்டில் விருந்து தயாரானது. மன்னரும் விருந்திற்கு சென்றுவிட்டு வந்தார். மன்னருக்கு நெருக்கமான சில இஸ்லாமிய அறிஞர்களுக்கு மன்னரின் புதிய உணவுப் பழக்கம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருநாள் எப்படியும் இன்று கேட்டுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இஸ்லாமிய வழக்கப்படி பன்றிக்கறி உண்பது தவறு என்று எடுத்துச் சொன்னார்கள். உடனே ஜஹாங்கீருக்கு கோபம் வந்துவிட்டது. „சரி! பன்றிக்கறி சாப்பிட அனுமதிக்கும் மதம் ஒன்றைக் கூறுங்கள்“ என்றார் மன்னர். „கிருத்துவம்“ என பதில் வந்தது. „நானும் கிருத்துவத்திற்கு மாறலாம் என நினைக்கிறேன்“ என்று மன்னர் சொன்னதுதான்,  அதற்கு பிறகு யாரும்  ஜஹாங்கீரிடம் உணவைப் பற்றியும், மதுவைப்பற்றியும் வாய் திறப்பதில்லை.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கொசுவத்தி சுத்தலாம் வாங்க

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் தமிழாசிரியர் பெயர் சங்கரன். வகுப்பில் எப்பவும் சுத்த தமிழில் பேசுவார். எங்களையும் பேசச் சொல்லுவார். அப்போது இருந்த ஒரு வழக்கம் என்னவென்றால், ஆசிரியர்கள் டீ,காபி வாங்கிவரச் சொல்லும்போது பேனா கொடுத்து அனுப்புவார்கள். டீகிளாஸுக்கு பதிலாக பேனாவை கொடுத்துவிட்டு டீ,காபி வாங்கிவருவோம். திரும்ப கிளாஸ் கொண்டுபோய் கொடுக்கும்போது பேனாவை வாங்கிக் கொள்வோம். சங்கரன் ஐயா பேனாவை பிரகாசத்திடம் கொடுத்துகொட்டைவடிநீர்(coffee) வாங்கி வாஎன்றார். பேனாவை வாங்கிச் சென்ற பிரகாசம் சற்றுநேரம் கழித்து பேனாவைக் கொண்டுவந்து கொடுத்தான். சங்கரன் ஐயாவுக்கு ஒன்று விளங்கவில்லை. பிறகு தான் தெரிந்தது, பிரகாசம் கொட்டைவடிநீரைபேனாமைஎனப் புரிந்து கொண்டு பேனாவில் மை நிரப்பி வந்தது.

15 comments:

  1. அரசு பள்ளிகளில் ஆசிரியருக்கு வேலை செய்வோம். ம்ம்........... ஏக்கமாக இருக்கு!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க எதுக்கு ஏங்குரிங்க. ஆசிரியருக்கு வேலை செய்யவா?

      Delete
    2. ஆமாம், அவருக்கு டீ வாங்கி வருவோம், இரண்டு மைல் நடந்துபோய் ரேஷன் கடைக்குப் போய் சர்க்கரை வாங்கி வருவோம். கோவைக்காய் இலைகளை பரித்து வந்து அதை விறகுக் கரியுடன் இடித்து போர்டுக்கு பூசுவோம், புத்தகங்களுக்கு நடுவே மயிலிறகு, படிப்பு இல்லை வைப்போம், வீட்டிலிருந்து ஏதாவது கைகள் தின்பண்டங்கள் கொண்டு வந்து அவற்றை பல்பத்துக்கு பண்டமாற்று வியாபாரம் செய்வோம், ஆசிரியர் இல்லாத நேரத்தில் குலுக்கு சீட்டு எழுதிப் போட்டு திருடன் விளையாட்டு விளையாடுவோம்.............. இன்னும் எத்தனையோ............ அத்தனைக்கும் ஏங்குகிறேன்!!

      Delete
    3. கரண்ட் பில் கட்டபோவென், டீகாபி வாங்கி வருவேன். நானும் கோவையிலை அரைத்திருக்கிறேன். கிராமத்தில் இருந்து வருபவர்கள் பட்டுப்பூச்சி (உண்மையான பட்டுப்பூச்சியல்ல! சிகப்பாக மேலே வெல்வெட் போல இருக்கும்) கொண்டு வந்து விற்பார்கள்.

      Delete
    4. ஒரு நாள் மதியம் தேர்வு இருந்தது. தேர்வுக்கு முன் ஒரு ஆசிரியர் டீ வாங்கிவரச்சொன்னார். நான் தேர்வுக்குச் செல்லவேண்டும், டீ வாங்கி வர இயலாது என எதிர்த்து புரட்சி செய்துவிட்டேன்.:))

      Delete
    5. தேர்வு இருக்குன்னே புரிஞ்சுக்க முடியலைன்னா என்ன வாத்தியாரோ............!!

      Delete
    6. எனக்கு வாய்த்த வாத்தியார்கள் அப்படித்தான் இருந்தாங்க!

      Delete
  2. கைகள்\\ காய்கள்-இலந்தைக் காய், நெல்லிக்காய்

    ReplyDelete
  3. Euphemism -மட்டரகமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் போகப் போக நம் மனது அந்த புதிய வார்த்தைக்கு adopt ஆகிக் கொள்ளும். அதாவது அந்த mental picture அப்படியேதான் இருக்கும், வார்த்தை மட்டும் புதியதாய் அந்த picture க்கு போட்டுக் கொள்ளும். இதனால் என்ன பலன் இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

    \\ஔவையார் திரைப்படத்தில் ஔவையாராவும், பூம்புகார் திரைப்படத்தில் கௌந்தியடிகளாகவும் நடித்தது கே.பி.சுந்தரம்பாள். அதனால் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்.\\ இப்பதான் புரியுது,
    உங்க friend லஜிக்காதான் தின்க் பண்ணியிருக்கார். ஹ.......ஹா.......ஹா.......ஹா......

    ReplyDelete
    Replies
    1. //உங்க friend லஜிக்காதான் தின்க் பண்ணியிருக்கார்//

      தியேட்டர் முதலாளி பையன் இல்லையா? அப்படித்தான் யோசிப்பான்.

      Delete
    2. it was in draft. but i published it once again.

      Delete
    3. ஆனால் ஏனோ தமிழ்மணத்தில் வரமாட்டேன் என்கிறது.

      Delete
    4. பிசாசு, நான் இப்போ அந்த போஸ்டைப் பார்த்தேன், இல்லைன்னு சொல்லுது, என்ன ஆச்சுன்னு மறுபடியும் பாரு.


      Sorry, the page you were looking for in this blog does not exist.

      Delete
    5. ஜெயதேவ்,

      எனக்கு இடுகை தெரிகிறது. தமிழ்மணத்திலும் தற்போது சேர்க்க முடியவில்லை. உரல்,திரட்டி எல்லாவற்றையும் கொஞ்சம் நோண்டி வைத்து இருக்கிறேன். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய