என்னுடைய பள்ளிபருவத்தில், தன்னுடைய சொற்பொழிவைப் பற்றி தானே பெருமையாக சொல்லிக் கொள்ள(கொல்ல) கூடிய ஒருவர் எனக்கு தமிழாசிரியராக இருந்தார். அவர் ஒருநாள் எங்கள் வகுப்பில் தன்னுடைய மகாபாரத சொற்பொழிவை கேட்க பலர் வருவதாகவும், தான் வருணிப்பதைக் கண்டு அனைவரும் மெய்மறப்பதாகவும் நாங்களும் அதை கண்டு களிக்க வேண்டும் என்று கூறினார். அன்று மாலை என்னுடைய நண்பன் ஒருவன் என்னுடைய வீட்டிற்கு வந்து “டேய்! நம்ம தமிழ் வாத்தி கோவிலில் சொற்பொழிவு ஆத்துராரு! போலாம்டா... நமக்கும் டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும். அவருக்கும் சோப்பு போட்ட மாதிரியும் இருக்கும்” என்று சொன்னான். நானும் சரியென்று அவனுடன் கிள்ம்பினேன்.வரம் கேட்டவளை தன்னுடைய உடன்பிறப்பாக பாவித்து, போரஸும் மறுநாள் அலெக்ஸாண்டரை கொல்லாமல் விடுகிறான். முடிவு, போரஸ் போரில் தோற்கிறான். பிறகு வருவன எல்லோருக்கும் தெரியும். போரஸ் தன்னை ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என முழங்க, அலெக்ஸாண்டரும் போரஸின் போர்வீரத்தையும் துணிச்சலையும் மெச்சி அவனுடைய தேசத்தை அவனுக்கே திருப்பி அளிக்கிறான். இவ்வாறாக அலெக்ஸாண்டர் கதையைக்கூறியபடி தமிழ் ஆசான் தன்னுடைய வதைப்படலத்தைத் தொடர்ந்தார். மறுநாள் காலை எங்களுடைய வரலாற்று ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும், தவறான வரலாற்றைக்கூறி ஒரு தமிழாசிரியர் சொற்பொழிவாற்றியதாக பொரிந்து கொண்டிருந்தார். நானும் என் நண்பனும் விஷயம் புரிந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அன்று எனக்கு எழுந்த கேள்வி இன்றும் எனக்கு உண்டு. அந்தக்கதை ஒரு வரலாற்றுப் பொய்யா? இதன் விடை ஆம்.
ஆனால் எங்க தமிழ் வாத்தியார் சொன்ன ‘தாலி செண்டிமெண்ட்’ கதை சும்மா டுபாக்கூர்தான். இதற்கு ஒரு வரலாற்று தடயமுமோ அல்லது கணிப்போ இல்லை. வரலாறு தெரிந்தால் சொல்லுணும்! இல்லாட்டி சும்மா இருக்கணும்!

