Tuesday, June 19, 2007

சாணி - ஓட்டம் - ஒரு சம்பவம் (2)

என்னதான்னு தெரியலிங்க! ஓட்டமும், சாணியும் என்னோட நிறையவே சம்பந்தப்பட்டு இருக்கு, இதனாலதான் என்னவோ நான் சானியா மிர்சாவோட விசிறியும் கூட.

அன்று பொங்கல் அதிகாலை சுமார் 3:00 மணி இருக்கும். எனக்கு 9 வயது என்னோட பாட்டி வீடு மெழுக சாணி கொண்டு வர சொன்னாங்க. நானும் பழைய கோணி ஒன்று எடுத்துக்கொண்டு கிளம்பினேன். பொதுவாக இது போன்ற செயல்களுக்கு செல்ல மாட்டேன். அன்று அவசரமாக தேவைப்பட்டதால் நானே போக வேண்டிய கட்டாயம். நான் போன பதிவில் சொன்ன வணிகவளாகம் அருகே மாடுகள் கட்டப்படுவதால், சாணி அங்கு எளிதாக கிடைக்கும். ஆனால் அதன் அருகில் இருக்கும் மரங்களில் காட்டேறி, முனீஸ்வரன் கும்பிடுவார்கள். ஆதலால் இரவில் அங்கு அதிகமான நடமாட்டம் இருப்பதில்லை. அந்த இடத்திற்குச் சென்றால் எளிதில்
சாணி கிடைக்குமே என நானும் சென்றுவிட்டேன். காட்டேறியும், முனீஸ்வரனும் எங்கள் குலதெய்வம் என்பதால் எங்களை ஒன்றும் செய்யாது என்ற துணிச்சலில் தான் அங்கு வந்தேன். யாரோ வெளியே உள்ளவைகளை முன்பே எடுத்துவிட்டார்கள் போல, கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்போம் என கீழ்தளத்தினுள் நுழைந்தேன். அங்கு என்னுடைய அதிர்ஷ்டம் நிறைய சாணி கிடைத்தது.

திடீரென எதோ ஒரு சத்தம். அந்த நிசப்த தருணத்தில், சத்தம் தெளிவாகக் கேட்டது. ஏற்கனவே அடிமனதில் ஒரு பயத்தில்தான் நான் சாணி அள்ளிக்கொண்டு இருந்தேன். இந்த சத்தம் என்னுடைய பயத்தை மேலும் அதிகமாக்கிவிட்டது. மனதை திடபடுத்திக்கொண்டு திரும்பினேன். எதோ ஒரு கரிய உருவம் பக்கத்தில் இருந்த தூன் அருகே நின்று என்னைப்பார்த்துக் கொண்டு இருந்தது. என்னுடைய பயம் என்னை சிலையாக்கிவிட்டது. என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த உருவம் மாடு போலவும் தெரியவில்லை. மனிதனைப்போலவும் தெரியவில்லை. கோணியைப்பிடித்தபடி குனிந்திருந்த நான் ஒட தயாரானேன். அங்கிருந்து அப்போது நான் ஓடிய வேகஓட்டத்தை என் வாழ்நாளில் இதுவரை ஓடியதில்லை.

ஓடிவந்து படுக்கையில் படுத்தவன் தான், பயத்தில் 4 நாள் காய்ச்சல். காட்டேறியைத்தான் நான் பார்த்துவிட்டேன் என என்னுடைய பாட்டி படையல் எல்லாம் வைத்தார்கள். இப்போது அந்த உருவம் ஞாபகத்தில் வரவில்லை, மறந்துவிட்டது. ஆனால் சம்பவம் நடந்த புதிதில் பயந்து இரவு நேரம் எங்கேயும் வீட்டைவிட்டு வெளியில் செல்லாமல் இருந்தேன். இப்போது கூட அந்த மரத்தைப் பார்த்தால், நான் ஓடி வந்ததை நினைத்து சிரிப்பு வரும் !! இப்ப சொல்லுங்க! என்னோட புலம்பல் அவசியம் தானே!!

8 comments:

  1. ஓடுது குட்டிபிசாசுனு பேரு வச்சி இருக்கலாம் தானே

    ReplyDelete
  2. அடுத்த முறை வைக்கிறேன்!!

    ReplyDelete
  3. //அடுத்த முறை வைக்கிறேன்!!

    என்ன இன்னும் ஒருமுறை சாணில விழலாம்னு இருக்கிங்களா? ;)

    ReplyDelete
  4. ///என்ன இன்னும் ஒருமுறை சாணில விழலாம்னு இருக்கிங்களா? ;)

    ரொம்ப தான் ஆசை!!

    ReplyDelete
  5. அந்த உருவம் உங்களப்பிடிச்சதுல இருந்துதான் குட்டிப்பிசாசு ஆனீங்களாமே

    ReplyDelete
  6. // Chinna Ammini said...

    அந்த உருவம் உங்களப்பிடிச்சதுல இருந்துதான் குட்டிப்பிசாசு ஆனீங்களாமே ///

    அது பிடிச்சிட்டு இருக்கா, நான் இல்ல பிடிச்சிட்டு இருக்கேன்

    ReplyDelete
  7. சாணிக்கும் பிசாசுக்கும் உள்ள இரு சம்பவங்களை நகைச்சுவையுடன் விவரித்த விதம் ( மொக்கைப் பதிவுக்கு இப்படி ஒரு மறு மொழி எழுதணுமா) அருமை. 10 ஆண்டுகள் கழித்தும் சாணியை மறக்க முடியவில்லையா

    ReplyDelete
  8. சீனா ஐயா,

    எப்படி மறக்க முடியும்!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய