Thursday, November 08, 2007

இராமாயணம் இலியடின் தழுவலா?

இராமாயணம் இந்துக்களின் புனிதமான காப்பியம். காப்பிய நாயகன் இராமன் கடவுள் அவதாரம். இத்தகைய பெருமை கொண்ட இராமாயணம் கிரேக்க காவியத்தின் வெறும் தழுவலா? சந்தேகம் வந்துட்டா சும்மா இருக்க முடியுமா? உடனே கூகிள் ஆண்டவனை அணுகினேன். இது போன்றதொரு ஆராய்ச்சி ஏற்கெனவே வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் உண்டு என்பதை அறிந்தேன்.

2004-ம் ஆண்டு பிராட் பிட் மற்றும் எரிக்பானா நடித்து வெளிவந்த ட்ராய் என்கிற திரைப்படம் கிரீஸுக்கும் ட்ராய்க்கும்(தற்போதைய துருக்கி) நடந்த ட்ராஜன் போரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். கி.மு. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் ஹோமரால் எழுதப்பட்ட 'இலியட்' என்கிற காப்பியத்தின் கதை தான் இப்படத்தின் மையக்கரு. ஹோமர் 'ஒடிஸி' என்னும் மற்றொரு காப்பியத்தையும் இக்கதையினுடைய தொடர்ச்சியாக இயற்றியுள்ளார். இந்த ட்ராஜன் போர் சம்பவங்கள் 12-13-ஆம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்போது ட்ராய் படத்தின் கதையைப்பற்றி சற்று பார்ப்போம். கிரீஸுக்கும் ட்ராய்க்கும் பல ஆண்டுகளாக போர் நடக்கும் தருவாயில், சமாதான நடவடிக்கையாக ட்ராய் இளவரசர்கள் பாரீஸ் மற்றும் ஹெக்டர் இருவரையும் விருந்திற்காக மெனிலஸ் எனும் கிரேக்கமன்னன் அழைக்கிறான். விருந்தில் பாரீஸும் மெனிலஸின் மனைவியாகிய ஹெலனும் காதல் வயப்படுகிறார்கள். ஹெக்டர் வேண்டாம் என்று கூறியபோதும், பாரீஸ் ஹெலனை ட்ராய்க்கு அழைத்துவந்து விடுகிறான். ட்ராய் மன்னனும் பாரீஸ் மற்றும் ஹெக்டரின் தகப்பனுமான ப்ரியம் ஹெலனையும் பாரீஸையும் வரவேற்று ஏற்றுக்கொள்கிறான். மனைவியை இழந்த மெலனிஸ் தன்னுடைய சகோதரன் அகமெனனின் உதவியை நாடுகிறான். ட்ராயின் மீது ஏற்கனவே படையெடுக்க காத்துக்கொண்டிருந்த அகமெனனுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமைந்துவிட, கிரேக்கப்படை முழுவதும் அகமெனனின் தலைமையில் ட்ராயை நோக்கிச்செல்லுகிறது.


தான் செய்த தவறுக்கு படையாட்கள் இழக்கவேண்டாமென்று, மெலினஸுடன் போர் புரிய துணிகிறான் பாரீஸ். போரில் வென்றவர்கள் ஹெலனை அடையலாம் என முடிவு செய்யப்படுகிறது. வாட்போரில் தோற்றுவிட்ட பாரீஸ், ஹெக்டரின் உதவியை கோருகிறான். ஹெக்டர் மெலினஸை கொன்றுவிட, போர் தொடங்குகிறது. அக்கிலிஸ், ஒடிஸஸ், எஜக்ஸ் அகமனின் தரப்பிலிருந்து போர் புரிகிறார்கள். வெகுநாட்கள் முற்றுகையிட்டும் ட்ராய் அரணை கிரேக்கப்படைகளால் நெருங்க முடிவதில்லை. போரில் ஹெக்டர் அக்கிலிசின் நண்பனை தவறுதலாக கொன்றுவிட, அதற்கு அக்கிலிஸ் ஹெக்டரைப் பழிவாங்குகிறான். இறுதியில், ஒடிஸஸின் யோசனைப்படி, கிரேக்கர்கள் "ட்ராஜன் மரக்குதிரை" தயாரித்து வைத்துவிட்டு, மறைந்து கொள்கிறார்கள். அரண் வெளியே கோவிலையிடித்த எதிரிகள் அப்போலோ கடவுளால் அழிந்து போனதாக நினைத்து, மரக்குதிரையை அரணுக்குள்ளே எடுத்துச்செல்ல ப்ரியம் மன்னன் உத்தரவிடுகிறான். அன்று வெற்றிவிழா முடிந்ததும், இரவு மரக்குதிரைக்குளிருந்த கிரேக்கர்கள் வெளிவந்து அரணை திறந்து விடுகிறார்கள். உள்ளே நுழையும் கிரேக்கப்படை ட்ராய் மக்களையும், படைவீரர்களையும் கொன்று நாட்டையே சாம்பலாக்குகிறது. அக்கிலிஸ் பாரீஸின் அம்புபட்டு உயிர் நீக்கிறான் (கணினி வைரஸுக்கும் ட்ராஜன் என வைக்கப்பட்டது, இதே காரணத்தால் தான்).

எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா? சற்று நன்றாக கவனித்தால், இராமாயணம் இந்த கதையின் மையக்கருவையொத்தே அமைந்திருக்கும் என்பது தெளிவாகப் புரியும். இராமன் - மெலனிஸ், இராவணன் - பாரீஸ், ஹெலன் - சீதை, அனுமன் - அக்கிலிஸ், சுக்கிரீவன் - அகமனன். (அகமனனைப் போல அந்தக்கால தமிழ் மன்னர்கள் இலங்கையை கைப்பற்றவே நினைத்திருந்தார்கள் என்பது உண்மை) இலியட ்இராமாயணம் எழுதியதற்கு முன் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. ட்ராஜன் குதிரை யுக்தியொன்றே போதும், கிரேக்கர்களின் போர் நுணுக்கத்தைப் பரைசாற்ற. இராமகாதை வால்மிகியால் 5-1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இராமன் வாழ்ந்த நூற்றாண்டு எதுவென்றே சொல்ல முடியாத அளவிற்கு, நம்மிடம் ஒரு தடயமும் இல்லை. மதவல்லுனர்களை கேட்டால், த்ரேதா யுகம் என்பார்கள். 20 லட்சம் வருசங்கள் கடந்த வரலாற்றை கூறுவார்கள். இதை கேட்ட மாத்திரத்தில் தலை சுற்றும். எனவே இராமகாதை ட்ராஜன் போர்கதையின் தழுவலாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், அக்கிலிஸ் பிறந்தபின் அவனுடைய தாயாகிய தீடைஸ் அவனை மரணமற்றவனாக்க 'ச்டிக்ஸ்' ஆற்றில் மூழ்கியெடுக்கிறாள். அவ்வாறு மூழ்கியெடுக்கும்போது, அவள் பிடித்திருந்த அவனுடைய கணுக்கால்பகுதி ஆற்றில் நனையாமல் பலவீனமாக இருக்கிறது. (ஆங்கிலத்தில் பலவீனத்தை 'அக்கிலிஸ் ஹீல்' என்று கூறுவதுண்டு). இது போன்றதொரு கதை, மகாபாரதத்தில் துரியோதனனுக்கும் உண்டு என்பதை அறிவீர். பாரதத்தில் கூறியதுபோல, மக்கட்தொகையை குறைக்கவே, ஜீயஸால்(கடவுள்) போர் தோற்றுவிக்கப்படுகிறது.

(குறிப்பு: எனக்கு தோன்றிய சிந்தனையைத் தான் கூறியுள்ளேன். மேலும் தகவல் தெரிந்தோர் பகிர்ந்து கொள்ளலாம்.)


13 comments:

 1. வாங்கண்ணே.. இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டீங்க. :-))

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  by the way, மி தி ஃபர்ஸ்ட்டூ.. :-)

  ReplyDelete
 2. ஏன் இதோட விட்டுட்டீங்க?

  மோசஸ் கதையும் கர்ணனின் கதையும் இருக்கே....

  கம்சனின் கதையும், யெரோது மன்னன் குழந்தைகளையெல்லாம் கொன்னதும்கூட இருக்கே....

  எல்லாம் கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்த்துச் சொல்லுங்க.

  தீபாவளிக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 3. .:: மை ஃபிரண்ட் ::. said...

  வாங்கண்ணே.. இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டீங்க. :-))

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  by the way, மி தி ஃபர்ஸ்ட்டூ.. :-)

  அக்காவ்வுக்கு ரிப்பிட்டெய்ய்ய்ய்.....

  ReplyDelete
 4. அட நான் தான் 3ர்ட்....

  ReplyDelete
 5. ட்ராஜன் குதிரை யோசனையை சொல்வது யுலிஸஸ். அவர்தான் ஓமரின் அடுத்த காப்பியத்தின் நாயகன்.

  இராமாயணத்தை பற்றிய குறிப்புகள் சங்க கால தமிழிலக்கியத்தில் கூட காண கிடைக்கிறது என்று இராம.கி. ஐயாவின் வளவில் படிக்கவில்லையா?

  பழம்பெரும் காப்பியங்கள் என்றால் இராமயணம், மகா பாரதம், ஒடிஸி, இலியாட் போன்றவைதான். இவற்றில் ஒன்றுக்கு ஒன்று பல ஒற்றுமைகள் உண்டு.

  இரண்டும் பாகனிய மதத்தை ஒட்டிய காப்பியங்கள். சொல்லப்போனால் ஒமரின் காப்பியங்கள் இந்திய காப்பியங்களின் தழுவலாக கூட இருக்கலாம்.

  நீங்க அப்படி யோசிக்காதது ஆச்சர்யமா இருக்கு. வருத்தமாகவும் இருக்கு.

  ReplyDelete
 6. அண்ணா.... ஒரு சின்ன சந்தேகம் தீபாவளி தமிழர் திருநாளா????

  ReplyDelete
 7. துளசி டீச்சர்,

  யோசிக்க வேண்டிய விடயம் தான். தீபாவளிக்கு பிறகு யோசிக்கிறேன்.

  ReplyDelete
 8. //ட்ராஜன் குதிரை யோசனையை சொல்வது யுலிஸஸ். அவர்தான் ஓமரின் அடுத்த காப்பியத்தின் நாயகன்.//

  ஒடிஸியோட நாயகன் பெயர் ஒடிஸஸ்.

  //இராமாயணத்தை பற்றிய குறிப்புகள் சங்க கால தமிழிலக்கியத்தில் கூட காண கிடைக்கிறது என்று இராம.கி. ஐயாவின் வளவில் படிக்கவில்லையா?//

  தமிழிலக்கியம்னு சொன்னீங்க, எதுவென்று சொல்லலியே? நான் ஒன்னும் அப்படி கேள்வி பட்டதில்லை. வளவில் படித்தால் கூறுகிறேன். நமக்கு கிடைத்துள்ள தமிழிலக்கியம் எல்லாம், கி.மு 5-ற்கு பிறகு் எழுதபட்டவை தான்.

  //இரண்டும் பாகனிய மதத்தை ஒட்டிய காப்பியங்கள். சொல்லப்போனால் ஒமரின் காப்பியங்கள் இந்திய காப்பியங்களின் தழுவலாக கூட இருக்கலாம்.

  நீங்க அப்படி யோசிக்காதது ஆச்சர்யமா இருக்கு. வருத்தமாகவும் இருக்கு.//

  பாகனிய மத காப்பியம் என்றால் இந்தியாவில் எப்படி நிகழும் சம்பவங்கள்? ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த பிறகு எழுதியவை தானே இவை.

  ReplyDelete
 9. துளசி டீச்சர், பவன்...

  தீபாவளி வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. இதனை தழுவல் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆதியில் பொதுவாக இருந்த இனக்குழுச் சமூகத்தில் நடந்த ஒரு கதை.. அக்குழு பிரிந்து சென்ற நாடுகளுக்கு அக்கதையை எடுத்துச் சென்று தான் குடியேறிய நாடகளுக்கு ஏற்ப அவற்றை காவியமாக்கிக் கொண்டிருக்கலாம்.

  ட்ரோஜான் குதிரை எனபது அனுமன் படையின் ஒரு குறியீடுதான். கதையின் மையம் நீங்கள் கூறியபடி பொறுத்தப்பாடு உடையதே.

  ஒரு பெண்ணுக்காக நகர் எரிந்தது என்பதே.. அடிப்படை. ஒரவனுக்க ஒரத்தி என்கிற ஒழுக்கம் இதன் அடிப்படை அறமாக போதிப்பதே அந்த இனக்குழுச்சமூக நோக்கம்.

  ReplyDelete
 11. ஜமாலன்,

  //இதனை தழுவல் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆதியில் பொதுவாக இருந்த இனக்குழுச் சமூகத்தில் நடந்த ஒரு கதை.. அக்குழு பிரிந்து சென்ற நாடுகளுக்கு அக்கதையை எடுத்துச் சென்று தான் குடியேறிய நாடகளுக்கு ஏற்ப அவற்றை காவியமாக்கிக் கொண்டிருக்கலாம்.//

  தங்களின் கருத்தோடு ஒத்துபோகிறேன். இவ்வாறான படைப்பிற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தாங்கள் கூறிய கருத்து. வேறொன்று, அடுத்தவர்களின் படைப்புகளைப் பார்க்கும் போது, நமது மொழியிலும் நமது பண்பாடோடு கூடிய இதுபோன்றதொரு கதையை படைப்பதற்கான ஆவல். (தற்போதைய ரீமேக் படங்கள் போல)

  ReplyDelete
 12. இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்!

  ReplyDelete
 13. There is reference for the western tales. Even Vatican and pope was established in 1929.Just like coca cola and pepsi cola the reach is world wide.

  Columbus after reaching America declared that he found Indian and Indians, the reason is the people in America had a culture similar or same like Hindus. In native Indian languages of all America all mountains are named xyz meru and rivers nadhi only.

  So the greek and bible , islam will have Hindu influence.

  If you can show any building old as taj mahal in the arabian world then you can call taj mahal as islamic architecture. But only old Indian buildings have such shape . Case is same for all epics.

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய