(தமிழ்சினிமா.காம்-இல் வெளிவந்த அக்கவிதையை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்)
மனித வணக்கம்
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.
தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.
தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?
மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.
மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!
மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.
பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.
அன்பன்
-கமல்ஹாசன்
அவரை சகலாகல வல்லவன் என்றூ சொல்வது சாலப்பொருந்த்தும்
ReplyDeleteவருடகணக்காக தமிழகத்தில் இருந்தாலும் தப்பும்தவறுமாக தமிழில் பேசும் சில சினிமாகாரர்களுக்கு மத்தியில் கவிஞர் நண்பருக்கு விழா எடுக்கும் நம்ம கமலை பாராட்டணும்.
ReplyDeleteகவிதை எவ்வளவு அறுமையாக இருக்கிறது... பக்கிட்டதிற்கு நன்றி... இந்த நன்றிய கமல் அண்ணாச்சிகிட்ட மறக்காம சொல்லிடுங்க
ReplyDeleteபதிவுக்கு மிக்க நன்றி குட்டி :)
ReplyDeleteவிக்னேஷ், கோபி..,
ReplyDeleteவருகைக்கு நன்றி!!
6 அல்லது 7 வருடங்கள்முன்பு கமல் ஒரு பேட்டியில் இந்தக் கவிதை வெளியிட்டிருந்தார்...எனக்குப் பிடித்த வரிகளின் தொகுப்பில் இது சேர்க்க முடியாமல் குறையாக இருந்தது..குறை தீர்த்த உங்களுக்கு நன்றி
ReplyDeleteபாசமபர்,
ReplyDeleteநன்றி!!
thanks for this post
ReplyDeleteமுரளி,
ReplyDeleteநன்றி!!
Thanks for sharing
ReplyDeleteபரத்,
ReplyDeleteவருகைக்கு நன்றி!!
nadigar kamalhaasanuku edhiri kavingar kamal haasan endru oru cinema-vai serndha oruvar sonnar...adhu migai alla...nijam dhaan...
ReplyDelete