Friday, November 07, 2008

ஜக்குபாய் கதை


1994-ல் வெளிவந்த Leon the professional என்ற படத்தை இயக்கியவர் Luc besson. இந்தப் படம் தான் தமிழில் சூரியபார்வை என அர்ஜூன் நடித்து வெளிவந்தது. பிறகு பாபிதியோல், ராணிமுகர்ஜி நடித்து 'பிச்சூ' (தமிழில் தேள் என்று பொருள்) என்று ஹிந்தியிலும் வந்தது. தமிழிலேயே ஓரளவுக்கு நன்றாக இருக்கும், ஹிந்தியில் படத்தின் கருவை குதறியிருப்பார்கள். சூரியபார்வை படத்தில் வரும் "கதவை திறக்கும் காற்றிலே.." என்ற மெலடி அருமையாக இருக்கும்.

Luc besson எடுத்த பல படங்களில் வயதான கதாநாயகன், இளம்வயது பெண் இடையே உள்ள காதல், அன்பு, பாசம் பற்றியதாகவே இருக்கும். இவருடைய திரைக்கதையில் வெளிவந்த Wasabi படமும் இதே கதைக்கரு தான். ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், ரஜினி நடிக்காமல் விட்டு, தற்போது சரத் நடித்துக் கொண்டிருக்கும் 'ஜக்குபாய்' படத்தின் கதையும் இப்படத்தின் தழுவல் தான்.
நான் சமீபத்தில் Besson திரைக்கதையில் வெளிவந்த Taken படம் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து பாரீஸ் சென்று Sex trafficing-ல் கடத்தப்பட்ட மகளை மீட்கப் போராடும் தந்தையின் கதை. படம் முழுக்க அதிரடி காட்சிகள் தான். Schindler's List படத்தில் நடித்த Liam Neeson இப்படி அடிதடியில் கலக்குவார் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதிரடியான படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.

10 comments:

  1. \\Sex trafficing-ல் கடத்தப்பட்ட மகளை மீட்கப் போராடும் தந்தையின் கதை. படம் முழுக்க அதிரடி காட்சிகள் தான். Schindler's List படத்தில் நடித்த Liam Neeson இப்படி அடிதடியில் கல்க்குவார் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதிரடியான படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.
    \\

    நோட் பண்ணிக்கிட்டேன் ;))

    ReplyDelete
  2. இதுக்குதான் நான் ஆங்கில படம் பாக்கிறது இல்லை.

    ReplyDelete
  3. நாட்டமையின் காதல்,அன்பு,பாசம் ="ஜக்கு பாய்"
    சொல்லலாங்களா?

    ReplyDelete
  4. சூரிய பார்வை நல்ல படம். அதில் கவுண்டரின் காமெடி கலக்கலாய் இருக்கும். ஜக்குபாயிலும் கவுண்டர் இருக்கிறார்.

    ReplyDelete
  5. கோபிநாத்..குடுகுடுப்பை..நசரேயன்...முரளிகண்ணன்..

    வருகைக்கு நன்றி!!!

    ReplyDelete
  6. கதவை திறக்கும் காட்டிலே ரோஜாவின் வாசம் என்ன.. உன்னிகிருஷ்ணன் பாடிய சூப்பர் பாடல்..

    ஆனால் இது அர்ஜுன் நடித்த காவலன் படமாச்சே? ;-)

    ReplyDelete
  7. //கதவை திறக்கும் காட்டிலே ரோஜாவின் வாசம் என்ன.. உன்னிகிருஷ்ணன் பாடிய சூப்பர் பாடல்..

    ஆனால் இது அர்ஜுன் நடித்த காவலன் படமாச்சே? ;-)//

    இல்லை! சூர்யபார்வை தான்! நான் youtube கொடுத்து இருக்கனே!

    ReplyDelete
  8. அட.. படம் இந்த படம்தான். ஆனா படம் பேரு காவலன்னு தப்பா நெனச்சிட்டு இருந்திருக்கேன். ;-)

    ReplyDelete
  9. படம் வருவதற்கு முன்னரே இதன் திருட்டு சி.டி வந்துவிட்டது, ஆனால் திருட்டு சி.டி போட்டவனுக்கே அது நஷ்டமாம்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய