Sunday, May 13, 2007

தமிழன் அசுரனா?


மதச்சாக்கடையில் அடைகாக்கப்படும்
புராணபுளுகுகள் எரியும்வரை

சாதிபுகட்டும் சாத்தானின்
அமிலக்கொங்கைகள் அருபடும்வரை

அறிவியல் அன்னை
தமிழ்மொழியை தத்தெடுக்கும்வரை

வெற்றிக்கு வித்திடும்
மானமும் ஞானமும் பெறும்வரை

வரலாற்று பிணங்கள்
அறுவைக்கு உட்படும்வரை

தந்திரமும் மடமந்திரமும்
தன்னுளிருந்து உமிழும்வரை

தமிழன் அசுரன் தான்!

Saturday, May 12, 2007

திருனங்கைகள்...

எனக்கும் திருநங்கைகள் பற்றி முதலில் ஓர் அவநம்பிக்கை இருந்தது. அது என்னுடைய நண்பர்கள் கூறுவதாலும், நான் தொடர்வண்டியில் சந்தித்த சில திருநங்கைகளாலும் ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் ஒருமுறை நான் தொடர்வண்டியில் பயணிக்கும்போது ஒரு ந்பர் என் அருகில் வந்து அமர்ந்தார். நான் நிமிர்ந்து பார்த்தேன். அவர் ஒரு திருநங்கை. பொதுவாக திருந்ங்கைகள் வருகை கைத்தடல்களோடு இருக்கும். அவர் என்னை பார்த்து கொஞ்சம் பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் “அப்படி எல்லாம் கூறாதே! நாங்கள் ஊனமுற்றவர்கள்! உதவி செய்யுங்கள்” என்றார். பிறகு நான் என்னால் முடிந்தவற்றை கொடுத்து உதவினேன். அந்த சம்பவத்திற்கு பிறகு, திருநங்கைகள் பற்றிய என்னுடைய மாயை விலகியது.

பின்னொரு சந்தர்ப்பம், ‘நவரசா’ என்ற படத்தைப்பார்க்க நேர்ந்தது. அப்படத்தில் ஒரு திருநங்கை “கூண், குருடு, செவிடு, பேடு” என்று அவ்வையார் கூறிய வார்த்தையை நினைவு படுத்துவார். “பேடு என்பது ஒரு உடல் ஊனமே தவிர, கேளி மற்றும் அறுவருப்புக்கும் உரிய நிலை அல்ல” என்றும் கூறுவார். “இந்தியாவின் பல்வேறு மூலைகளில் திருநங்கைகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஏன் இந்த இழிசெயல்? அவர்களை காக்க வேண்டிய சமூகம், ஏன் அவர்களை அந்நியப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அவமானப்படுத்துகிறது?” என்ற கேள்வியுடன் அந்த படத்தை பார்த்து முடித்தேன். நம்மக்களும் அரசும் உணராதவரை இந்த கொடூரம் தொடரும். அவர்கள் நம்மிடம் கேட்கும் ஒரே வேண்டுகோள் "அந்நியப்படுத்ததே!!"...

வாழ் வாழவிடு...

Thursday, May 10, 2007

திரையில் தமிழ் ஒப்பாரிபாடல்கள்...

சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி கூறுவது போல, தமிழனின் வாழ்க்கை முழுவதும் இசைமயம் தான். இறக்கும்போதுகூட இசைக்கு முக்கியதுவம் கொடுக்கும் இனம். ஒப்பாரிப்பாடல் என்பது தொன்ருதொட்டு தமிழரிடம் இருந்து வருகிறது. குறிப்பாக, திரையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டக: 1. என் தாயெனும் கோயிலை...(அரண்மனைகிளி)2.சோலை பசுங்கிளியே...(என் ராசாவின் மனசிலே)3.மாடவிளக்கே...(விருமாண்டி)...இதுபொல பலபாடல்கள் தமிழ்த்திரையில் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசை அமைத்த படங்களில் இத்தகைய பாடல்கள் அதிகமாக தோன்றியது. பழையபடங்களில் இடம்பெற்ற தத்துவபாடல்களும் ஒப்பாரிபாடல்களை ஒத்தவைகளாக இருந்துவந்துள்ளது. எ.கா. 1. போனால் போகட்டும் போட...(பாலும் பழமும்)2. பல்லக்கு வாங்க...(பணக்கார குடும்பம்).

தங்களின் மறுமொழிகளை பொருத்து மேலும் எழுத தொடர்கிறேன்...தொடரும்...