Thursday, May 10, 2007

திரையில் தமிழ் ஒப்பாரிபாடல்கள்...

சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி கூறுவது போல, தமிழனின் வாழ்க்கை முழுவதும் இசைமயம் தான். இறக்கும்போதுகூட இசைக்கு முக்கியதுவம் கொடுக்கும் இனம். ஒப்பாரிப்பாடல் என்பது தொன்ருதொட்டு தமிழரிடம் இருந்து வருகிறது. குறிப்பாக, திரையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டக: 1. என் தாயெனும் கோயிலை...(அரண்மனைகிளி)2.சோலை பசுங்கிளியே...(என் ராசாவின் மனசிலே)3.மாடவிளக்கே...(விருமாண்டி)...இதுபொல பலபாடல்கள் தமிழ்த்திரையில் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசை அமைத்த படங்களில் இத்தகைய பாடல்கள் அதிகமாக தோன்றியது. பழையபடங்களில் இடம்பெற்ற தத்துவபாடல்களும் ஒப்பாரிபாடல்களை ஒத்தவைகளாக இருந்துவந்துள்ளது. எ.கா. 1. போனால் போகட்டும் போட...(பாலும் பழமும்)2. பல்லக்கு வாங்க...(பணக்கார குடும்பம்).

தங்களின் மறுமொழிகளை பொருத்து மேலும் எழுத தொடர்கிறேன்...தொடரும்...

16 comments:

 1. ஹலோ குட்டிபிசாசு
  நல்ல முயற்ச்சி , கருத்தம்மா வில் கூட (அடுத்து ஒரு ஜன்மம் வந்து ஆம்பிளையாய் பிற்ந்தா) என்ற பாடல். தாட் போட் தஞ்சாவூர் என்ற படத்தில் ஒரு ஒப்பாரி பாடல் (பல்லவி பாடுவதாகவும் அதை ஒருவர் விரும்பி கேட்பதாகவும் ) இருக்கும். ஞாபகம் வந்தால் தெரிவிக்கிறேன்.

  ReplyDelete
 2. // vathilai murali said...

  ஹலோ குட்டிபிசாசு
  நல்ல முயற்ச்சி , கருத்தம்மா வில் கூட (அடுத்து ஒரு ஜன்மம் வந்து ஆம்பிளையாய் பிற்ந்தா) என்ற பாடல். தாட் போட் தஞ்சாவூர் என்ற படத்தில் ஒரு ஒப்பாரி பாடல் (பல்லவி பாடுவதாகவும் அதை ஒருவர் விரும்பி கேட்பதாகவும் ) இருக்கும். ஞாபகம் வந்தால் தெரிவிக்கிறேன். //

  நீங்க எல்லா இடுகையும் படிச்சது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கருத்தம்மா படத்தில் "யாரு பெத்த பிள்ளையினு ஊர் முழுக்க பேச்சிருக்கு, நீ பெத்த பிள்ளையினு நெஞ்சுக்குழி சொல்லலயா" என்ற பாடல் உண்டு.

  இது என்னுடைய முதல் இடுகை என்பதால் என்னால் பொறுமையாக எழுத முடியவில்லை. இனிமேல் முயற்ச்சிக்கிறேன்.

  ReplyDelete
 3. போகாதே போகாதே என் கணவா[வீரபாண்டியக் கட்டபொம்மன்]
  கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
  [சிவகெங்கைச் சீமை]
  வீடுவரை உறவு வீதிவரை மணைவி
  [பாத காணிக்கை]
  ஆகியவையும் இதில் அடங்குமா?

  ReplyDelete
 4. //போகாதே போகாதே என் கணவா[வீரபாண்டியக் கட்டபொம்மன்]
  கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
  [சிவகெங்கைச் சீமை]
  வீடுவரை உறவு வீதிவரை மணைவி
  [பாத காணிக்கை]
  ஆகியவையும் இதில் அடங்குமா?//

  ஆம். நான் இதுவும் ஒப்பாரி பாடல்வகைகள் தான். தகவலுக்கு நன்றி!!

  ReplyDelete
 5. கு.பி,
  நல்ல முயற்சி. தொடருங்கள்.

  ReplyDelete
 6. @ வெற்றி,

  வருகைக்கு நன்றி!!

  ReplyDelete
 7. ஒப்பாரி நன்றாக இருக்கு.
  ரஜினி பாடிய ஒரு ஒப்பாரியும் உண்டு
  'நண்டூறுது நரியூறுது நண்டூறுது,,,
  நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில்
  ஆடுது...' படம் காளி என்று நினைக்கிறேன். சரியா?

  ReplyDelete
 8. @ நனானி அக்கா,

  மிக்க நன்றி!!

  ReplyDelete
 9. இது என்னோட முதல் இடுகை. முரளி சார் புண்ணியத்துல, என்னோட 50வது இடுகை போடும்போது தான் இதுக்கு போதிய மறுமொழியே வந்து இருக்கிறது.

  ReplyDelete
 10. திரையில் ஒப்பாரிப் பாடல்கள்....நல்ல தலைப்பு குட்டிப்பிசாசு. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நீங்களே சொல்லியாச்சு. அப்புறம் நானெப்படிச் சொல்றது :)

  ஆங்...ஒரு பாட்டு நெனைவுக்கு வருது...

  ஆளுக்கொரு தேதி வெச்சு ஆண்டவன் அழைப்பான்....இது மெல்லிசை மன்னரே இசையமைத்துப் பாடியது. படத்தோட பேரு தீர்ப்பு அல்லது தீர்ப்புகள்னு நெனைக்கிறேன்.

  ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ...இந்தப் பாட்டை எப்படி மறக்க முடியும்? இளையராஜா இசையில ஏசுதாஸ் பாடிய பாட்டு.

  // vathilai murali said...
  ஹலோ குட்டிபிசாசு
  நல்ல முயற்ச்சி , கருத்தம்மா வில் கூட (அடுத்து ஒரு ஜன்மம் வந்து ஆம்பிளையாய் பிற்ந்தா) என்ற பாடல். //

  முரளி இந்தப் பாட்டு எம்.பி.3 கிடைக்குமா?

  ReplyDelete
 11. தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே... (நாயகன்) இது ஒரு ஒப்பாரிப் பாடலின் ராகத்தை அடிப்படையாகக் கொண்டது.

  ReplyDelete
 12. //வி.சபேசன் said...

  தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே... (நாயகன்) இது ஒரு ஒப்பாரிப் பாடலின் ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. //

  இது ஒப்பாரிப்பாடலா? இல்ல தாலாட்டுப்பாடலா? தாலாட்டு போலத்தான் தெரியுது.

  ReplyDelete
 13. //முரளி இந்தப் பாட்டு எம்.பி.3 கிடைக்குமா?//

  ராகவன் அண்ணே,

  இந்த பாடல் கிடைச்சா நானே அனுப்பரேன்.

  ReplyDelete
 14. ///ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ...இந்தப் பாட்டை எப்படி மறக்க முடியும்? இளையராஜா இசையில ஏசுதாஸ் பாடிய பாட்டு.//

  இந்த பாட்டை சொல்லவே மறந்துட்டேன். மனதை உருக்கும் பாடல்.

  ReplyDelete
 15. முதல் இடுகையா - ஒப்பாரிப்பாடல்களைப் பற்றியா - ம்ம்ம்

  தமிழனின் வாழ்வில் இசை இரண்டறக் கலந்தது. பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்றும் உணடு. தாலாட்டுப் பாடலுடன் தொடங்கும் வாழ்க்கை ஒப்பாரிப்பாடலுடன் முடியும். திரைப் படங்களில் அதிகம் உண்டு

  ReplyDelete
 16. சீனா ஐயா,
  கொஞ்சம் வித்யாசமாக இருக்கட்டுமே என்று ஒப்பாரியில் தொடங்கினேன்.

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய