Tuesday, June 19, 2007

நினைத்தாலே கசக்கும்!!

பாலாற்றுமண்ணும் பன்றிக்கூட்டமும் மறந்து போகுமா!
தோல்பேக்டரியும் தூதுவிடும் நாற்றமும் தொலைந்து போகுமா
இதுதான் இப்ப நான் ஊருக்கு போகும்போது பாடும் பாடல்.
எங்க ஊரில் இராபின்சன் குளம் என்ற ஒன்று இருக்கும். அது பிரிடிஷ் அரசாங்கத்தால் கட்டப் பட்டதாக என்னோட அப்பா சொல்லுவார். அதோட நீர் போக்குவரத்து பற்றி வியப்பாக கூறுவார். சில ஏரிநீர் அதற்குள் பாய்ச்சப்பட்டு பிறகு வெளியேற்றப்படும் நீர் பாலாற்றில் சென்று வடியும். அந்த குளம் இப்ப ஊருடைய குப்பைகளைக் கொட்டக்கூடிய ஒரு குப்பைத்தொட்டியாகவும், கழிப்பிடமாகவும், பன்றிகளின் இருப்பிடமாகவும் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன் குளம் நல்ல நிலையில் இருக்கும்போது, நிலத்தடிநீர் வெகு குறைவான ஆழத்திலேயே கிடைத்துக்கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பத்மசாலிய நெசவாளர்களின் நெசவுத்தறி கால்குழியில் நீர் நிரம்பிவிடும். அவர்கள் இதனை தடுக்க அந்த குளத்திற்கு நீர்வரும் பாதையை மூடிவிட்டனர். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக குளம் சீர்கெட்டு, முற்றுமாக மாசடைந்துவிட்டது. அந்த காலத்தில் பிரிஷ்காரர்கள் பல நல்ல விஷயங்கள் இந்தியாவிற்கு விட்டுச்சென்றனர். அவை இன்று சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்றால் இல்லை. சென்னையில் உள்ள பக்கிம்காம் கால்வாயும் இதற்கு ஒரு உதாரணம். (இன்று ஏரிமாவட்டம் எனப்படும் செங்கற்பட்டு பகுதியின் நிலை என்ன? ஏரிகளில் தூர்வாரப்படாமல், கல்லூரிகளும், வீடுகளும் ஆக்கிரமித்துள்ளன. ஏரிப்பகுதியில் வீடுகட்ட அனுமதித்த அரசும் குற்றவாளி தான்)

இராபின்சன் குளத்தை அடுத்து நகராட்சியால் உலகவங்கியின் உதவியில் சுமார் 25 வருடத்திற்கு முன் கட்டப்பட்ட வணிகவளாகம் உள்ளது. அதுவும் 10 ஆண்டுகளுக்கு முன் போதிய மேம்பாடு இல்லாமல் தூசிபடிந்து, பொருள் சேமிப்பு களஞ்சியங்களாக மாறிவிட்டது. அதனுடைய கீழ்தள கார்பார்க்கிங் பகுதியில் உள்ள தூண்களில் சிலர் மாடுகளைக் கட்டப்பயன்படுத்துவார்கள்.பிறகு சீட்டு ஆட்டம், விபச்சாரம் புழங்கும் பகுதியாக மாறி, இப்போது முற்றிலும் இடிக்கப்பட்டுவிட்டது. இன்று இப்பகுதி குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஊருடைய அசிங்கத்துக்கு மொத்த குத்தகையாக விளங்குகிறது.
என்னத்த பேசி, என்ன செய்யறது எங்க ஊரு ரொம்பத்தான் மாறிப்போச்சு!!

2 comments:

  1. அந்த பையன் அதுல எழுதுன மாதிரிதான பண்ணீட்டிருக்கான்.

    ஆ குட்டிபிசாசு பயமுறுத்துது:)

    ReplyDelete
  2. சின்ன அம்மணி,

    நன்றி!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய