Tuesday, June 19, 2007

சாணி - ஓட்டம் - ஒரு சம்பவம் (1)

நான் சிறுவயசிலிருந்தே நல்லா ஓடுவேன், தடகள வீரன் இல்லாட்டியும் சுமாராக ஓடுவேன். ஓடுகாலி! ஓடுகாலி!னு நீங்க சொல்லுரது என்னோட காதில் கேட்குது. இதுகெல்லாம் ஒரு இடுகையானு கேட்காதீங்க! முழுசா படிச்சிட்டு சொல்லுங்க, எப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனு தெரியும்.

எனக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் தன்னுடைய விடுமுறை விண்ணப்பத்தை அவருடைய கல்லூரியில் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பினார். நான் அங்கு சென்ற பின் தான், அன்று கல்லூரி மாணவர்கள் போராட்டம் எதோ செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. நான் கல்லூரிக்குள் நுழைய முடியாமல் வெளியே நின்றேன். மாணவர்கள் கல்லூரி அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலையை தடுத்தவாறு போராட்டம் நடத்தினர். காவல்துறை வந்து மாணவர்களை விலக்கிக் கொண்டு இருந்தது. அச்சமயம் யாரோ ஒரு மாணவன் ஒரு காவல் அதிகாரி மீது கலெரிந்துவிட்டான். உடனே காவல்துறை எல்லா மாணவரையும் அடிக்க துவங்கியது. நான் அக்கல்லூரி மாணவன் இல்லையென்றாலும் கண்டிப்பாக என்னையும் அடிப்பார்கள் என்று நானும் ஓட வேண்டிய நிலை. நான் ஓடிக்கொண்டு இருக்கும் போது, ஜீப்பில் வந்த காவல்துறை என்னுடைய பின்னால் ஓடிவந்த ஒரு மாணவக்கூட்டத்தை லத்தியால் எல்லோருடைய பின்னாலும் அடித்துப் பிண்ணியது. காவலதிகாரிகள் அம்மாணவர்களை கண்டதும் மேலும் ஓடலானேன். போகும்வழியில் எந்த பேருந்தும் கைகாட்டியும் நிற்கவில்லை. கைகாட்டியதும் ஓடி ஏறமுடியாதபடி வெகுவேகமாக சென்றன. ஓடிஓடி வண்டிமாடு போல நுரை தள்ளிவிட்டது. ஓடும் வழியில் ஒரு குட்டிச்சுவரைப் பார்த்தேன்.

இனியும் இப்படியே ஓடிக்கொண்டிருந்தால் நாமும் தர்மஅடி வாங்குவோம் என முடிவு எண்ணி, வேகமாக ஓடிச்சென்று அதைத் தாண்டினேன். தாண்டிய மறுகணம் குட்டிச்சுவரின் மறுபக்கம் குவிக்கப்பட்ட சாணியில் முட்டியளவு இறங்கி இருந்தேன். பழைய சாணி போல சரியான நாற்றம், எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே வந்தேன். ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். எப்படியோ, புண்ணியவதி ஒரு குடம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். சாணி கழுவின பிறகும் என்னை சுற்றி அது விட்டுச்சென்ற மணத்தை என்னாலேயே தாங்க முடியவில்லை. பேருந்தில் ஏறினால் எல்லாரும் மூக்கை மூடி எனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று முடிவு செய்து நடந்தே வீட்டுக்கு சென்றேன்.

இப்ப சொல்லுங்க! என்னோட புலம்பல் அவசியம் தானே!!

8 comments:

 1. ச்சூ சூ....என்ன கப்பு ஒரே சாணி நாத்தம்..வருது
  நீ இன்னும் இங்கதான் இருக்கியா குட்டி பிசாசு போய் நல்லா குட்டையில விழுந்து குளிச்சிட்டு வா..உவ்வே...

  ReplyDelete
 2. ஹய்...மீ த பர்ஸ்ட்டு...

  ReplyDelete
 3. @ கண்மணி அக்கா,

  இது நடந்து 9 வருஷம் ஆச்சு!! இன்னுமா குளிக்கம இருப்பேன்!!

  ReplyDelete
 4. @கன்மணி அக்கா,

  இன்னுமொரு சாணி சம்பவம் ஸ்டாக்ல இருக்கு, அது அடுத்த போஸ்ட்...வெயிட் பண்ணுங்க!! அதுக்குள்ள குளிக்க சொல்லாதீங்க!!

  ReplyDelete
 5. சாணியில விழுந்த குட்டிச்சாத்தான்(குட்டிப்பிசாசு)னு பதிவுக்குப்பேர் வச்சிருக்கலாமே
  சூப்பரா இருந்துருக்குமில்ல‌
  :):)

  ReplyDelete
 6. @ சின்ன அம்மணி,

  நான் என்னோட சோகத்த சொன்னா உங்களுக்கு எல்லாம் கிண்டலாக இருக்குதா?

  ReplyDelete
 7. சாணியில் விழுந்து சரித்திரம் படைத்த சாதனையாளர் குட்டிபிசாசு வாழ்க

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய