Friday, June 15, 2007

பொன்ஸ் அக்கா - அலெக்ஸாண்டர் - மறுவெளியீடு

என்னுடைய முந்தைய பதிவில்் பொன்ஸ் அக்கா சொன்ன அறிவுரை!!!

//
பிசாசு,

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இந்தப் போருக்குப் பின்னால போரஸ் தன்னோட மகளையோ தங்கையையோ அலெக்ஸாண்டிருக்குக் கட்டி வைப்பாருன்னு நினைவு.. இத வச்சி உங்க தமிழைய்யா ரீமிக்ஸ் பண்ண முயன்றிருப்பாரு..

//

நம்ம திரையுலக வல்லுனர்களிடம் கிடைத்தால் எப்படி சின்னாபின்மாகி இருக்கும்! வாங்க தைரியமா பார்ப்போம்!!

(1) பி.வாசு டைரக்ஷன்-ல பாசமலர் இரண்டாம் பாகம் வெளிவருகிறது, அதுல பாசத்தை புழியமாதிரி ஒரு சீன் வச்சி இருக்காரு! தாய்க்குலம் எல்லாம் கன்ணுல தண்ணீ வச்சிக்கும். அப்படி ஒரு சீன்! நம்ம நடிகர்திலகம் தான் போரஸாக நடிச்சி இருக்கணும். அவரு இல்லாததுனால இளைய திலகம் பிரபு நடிக்கிறார். அலெக்ஸாண்டராக ‘தமிழக பெருச்சாளி’ சாரி! ‘தமிழக புரூஸ்லீ’ தனுஷ் நடிக்கிறார். (ஒரேஒரு ப்ராப்ளம் அடிக்கடி ஹெல்மெட் இறங்கி கண்ணை மூடிக்குதாம்.வேறவழியில்ல இப்ப தான் ஹெல்மெட் கட்டாயமாச்சே!!) நாயகி எதோ மும்பை நடிகையாம்.

(தாய்க்குலம் கண்ணீர் வச்சிக்கும் காட்சி)

போரஸ்: அலெகஸ்.. என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்! அதுல ஆனந்தகண்ணீர் தான் வரணும்!

அலெக்ஸாண்டர்: மாமா! ஆனந்தகண்ணீர்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க!!

போரஸ்: எதுடா பெரிய வார்த்தை! ஆனந்தகண்ணீர் தம்மாதூண்டு வார்த்தை.

(வரலாற்றுக்காட்சிகள்)

வரலாற்றுக்காட்சிகள் நிச்சயம் இருக்கணும்னு சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

கல்யாணத்தில் ஓரமாக நின்று செலுகஸ்(அலெக்சாண்டரின் தளபதி) மொய் வசூலிக்க, சாண க்கியர் மொய்ப்பணம் 101 பொற்காசு!னு சாணக்கியர் க்யூவில் நிற்க, சந்திரகுப்தன் பந்தில உட்காந்து வடை பாயசத்தோட சாப்பிட்டு கைய நக்கிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த போரஸான பிரபு என்ன கொடுமை அலெக்ஸ் இது! மொய்யே எழுதாமே இந்த கட்டு கட்டுரான் என்கிறார்.

ஜீலம் கரையோரமா ஒரு குத்துப்பாட்டு வேற இருக்காம். போர்ல செத்துட்டது தன்னோட ஆட்கள்னு தெரியாம தனுஷ் சாவுக்கு ஆடுற ஆட்டம் கண்டிப்பாக ஹிட் ஆகுமாம்.

(2) விஜய டி. ராஜேந்தர் தங்கைக்கோர்கீதம்-இரண்டாம் பாகம் அஷ்டாவதானியாக டைரக்ஷன்,நடிப்பு(அடப்பாவி நடிப்பா?),இசை,ஒளிப்பதிவு,கலை,பாடல்கள்,வசனம்,திரைக்கதை அவரே!

(டிஆர் பிராண்ட் வசன்ங்கள்)

கத்திப்பேசதடா! பேசினா என் கத்தி தான் பேசும்டா!!

டேய்! அலெக்ஸு ரிலாக்ஸு இல்லாட்டி நீ க்ளோஸு பிறகு கேட்காத ப்லீஸு

யே டண்டணக்கா டணக்குணக்கா!!!

(ஒரு உருக்கமான சீன்)

டிஆர்: இதும்மாதங்கச்சி! ஒரு ஆம்பிள வாழ்க்கையில வழுக்கினால், சமையல்கட்டுல பூனை வழுக்கின மாதிரி, ஆனா ஒரு பொண்ணு வாழ்க்கையில வழுக்கினா போர்க்களத்தில யானை வழுக்கின மாதிரிம்மா…!!

இந்த கேடயத்தையும் கத்தியையும் எடைக்கு போட்டாவது, இந்த அண்ணன் உன்னோட கல்யாணத்த நடத்திவைப்பாம்மா!!

(3) சும்மா இருப்பாரா நம்ம எஸ்.ஜே.சூர்யா, candom -னு ஒரு படத்தை ரீலீஸ் பண்ணிட்டாரு!! என்ன அது அசிங்கமா காண்டம்னு கேட்டா! அது யுத்த காண்டம் சொல்லுராரு

அலெக்ஸாண்டர் தளபதியோட ஓரினசேர்க்கைல ஈடுபடுறபோல ஏகப்பட்ட கசமுசா சீனாம். இதைப்பார்த்து சென்ஸார் கத்திரிப்பாய்ச்ச, எடுத்த எல்லாம் கட்டாகி மிச்சசொச்ச பில்ம் எல்லாம் தீப்பெட்டில போட்டு குடுத்துடாங்கலாம். டென்சனான எஸ்ஜே அந்த தீப்பெட்டியால அதிகாரி மண்டைய உடைச்ச கேஸ் இன்னும் நடக்குது.

(4) மணிரத்னம் இருவர்- இரண்டாம் பாகம் எடுத்து முடிச்சிட்டார். அதுல வர 5 நிமிட போர்க்கள காட்சி ரொம்பவே பேசப்படுமாம். ஜோ-னு(சிம்ரன், த்ரிஷா-னு எல்லாம் மழை பெய்யாது) மழை பெய்யுது. இந்த பக்கம் போரஸ், அந்தபக்கம் அலெக்ஸாண்டர். மாத்திமாத்தி காட்டுராங்க! ரெண்டு பேரும் கொட்டுர மழைல பேசிக்கிறாங்க,

போரஸ்: எதுக்கு இந்த போர்!

அலெக்ஸ்: வேண்டாமா!

போரஸ்: ஆமா!!

அலெக்ஸ்: ஏன்!!

போரஸ்: நிறுத்துங்க! எல்லாத்தையும் நிறுத்துங்க!!

அலெக்ஸ்: சரி!

செலுகஸ்: யோவ்! ஒன்னுமே புரியலயா! நீங்க முதல்ல பேசுரத நிறுத்துங்கய்யா!!

(சிறப்புக்காட்சி)

அலெக்ஸாண்டர்: (போரஸ் படையைப் பார்த்து...) ஐயரே! அது என்னய்யா! கருப்பா ஒசரமா எருமைமாடு மாதிரி!

ஐயர்:அது யானை!

அலெக்ஸாண்டர்: ம்ம்ம்யானை எவ்வளவு இருக்கும்

ஐயர்: சுமார்! ஒரு 1000 பொன் இருக்கும்

அலெக்ஸாண்டர்: 10 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 10 யானை!!!!சுமார் 10000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: 1 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 1 யானை! 1000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: யானை வாயில இருக்கே! அது என்ன?

ஐயர்: கரும்பு!!

அலெக்ஸ்: அது எவ்வளவு ஆகும்!!

ஐயர்: 1 கரும்பு ! சுமார் 1/2 பொன் ஆகும்.

அலெக்ஸாண்டர்: ஆகட்டும் எவ்வளவுனா ஆகட்டும்!! வாங்குரோம்! 10 கரும்பு வாங்குரோம்! வாங்கி ஜூஸ் போட்டு குடிக்கிறோம்! அது கிரேக்கருக்கு மட்டும் தான்! வேற எவனுக்கும் இல்ல!

பின்னணி இசை ஓவென்று சத்தமெழ பாடல்

Greece சீமையிலே

Horse ஓட்டும் வீதியிலே

Force-ஆக வந்தவனே

போரஸை அடிப்பாயோ!

போரஸை அடிப்பாயோ!

பி.கு.: உப்புமா கிண்டினது போதும் போடனு எங்க கண்மணி அக்கா திட்டுர மாதிரி இருக்கு! இதுக்கு மேல போனால் எங்க பாசக்கார மகளிரணி பட்டைய கிளப்பிடும்! வரட்டா!!!

22 comments:

  1. பொன்ஸ் அக்கா சொன்னபிறகு தான் யோசனையே வந்தது!!

    ஐடியா கொடுத்த பொன்ஸ் அக்காவிற்கும், தேர்வு எழுதி வாகையோடுவந்த என் பாசமலர் கண்மணி அக்காவிற்கும்... இந்த இடுகை அற்பணம்!!

    ReplyDelete
  2. வ்வாய்யா தம்பி குட்டி பிசாசு.நல்லாருக்கியாய்யா...என் ராசா[காந்திமதி ஸ்டைல்லில் பாடீக்கவும்] பதிவு நல்லாயிருக்கு அதிலும் டி.ஆர் ,தனுஷ் சூப்பர்.மணிரத்னம் மேட்டர் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.
    நல்லா ரசிச்சேன்.
    ஆமா என் புது கும்மி பிளாக் இன்னும் பாக்கலையா?

    ReplyDelete
  3. கன்மணி அக்கா,
    ரொம்ப நன்றி !

    மனிரத்னம் பார்ட் தானே! நீட்டீடா போகுது!!
    கும்மி ப்ளாக் பார்த்தேன்!!

    முதல்ல கொஞ்சம் கும்மி அடிச்சேன். பிறகு பார்க்கல...எங்க தலைவரும் இல்ல, இந்த மின்னலும் இல்ல!!

    ReplyDelete
  4. அடப்பாவி! கோடு போட்டா ரோடே போடுறீங்களே!!! உங்க தமிழைய்யா எவ்வளவோ தேவலை!! :)

    ReplyDelete
  5. பொன்ஸ் அக்கா,

    குருவ மிஞ்சிய சீடனை கேள்விபட்டதில்லையா?

    ReplyDelete
  6. nalla comedy pathivu!!

    ReplyDelete
  7. சிரித்தேன்!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. அற்புதமான உப்புமா பதிவு!!

    ReplyDelete
  9. டி.ஆர் காமெடி ரசித்தேன்!

    ReplyDelete
  10. போரஸ்: விட்டுடு எல்லாத்தையும் விட்டுடு!!
    அலெக்ஸ்: எதடா விடட்டும்!!

    ReplyDelete
  11. அந்த அலெக்ஸாண்டர் மட்டும் இந்த பதிவை பார்த்திருந்தார்ன்னா.... அப்புறம் போர் எங்கேயிருந்திருக்கும்... ஆனால் சரித்திரத்தில் அவருக்கென்று இடம் மட்டும் இருந்திருக்கும். சிரி சிரி .... ஹா ஹா ஹாவென்று சிரித்து போர் இருப்பதை மறந்து போயிருப்பார்.

    பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  12. "நல்ல ஆக்கம்" வாழ்த்துக்கள் பிசாசு!
    :))))

    ReplyDelete
  13. காயத்ரி,

    நல்ல ஆக்கமா? நக்கலு...இருக்கட்டும்!!

    நன்றி!!

    ReplyDelete
  14. நல்லா இருங்கப்பா. அடிக்கிர வெயில்ல நீங்க வேற.

    ReplyDelete
  15. அட்ரா சக்கை...அட்ரா சக்கை...

    ReplyDelete
  16. அற்புதம். தாமாசு...

    ReplyDelete
  17. பாட்டு நல்லா இருக்குமா :))))))))))))))))))

    ReplyDelete
  18. டி.ஆர். காமெடி கலக்கல்!!

    ReplyDelete
  19. sariyaana aruvai

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய