Wednesday, November 14, 2007

ரஜினிக்கு ஏன் இந்த கொலைவெறி!!


'இனி தமிழகமெங்கும் சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது!' என்று ஸ்ரீஸ்ரீ அருள்மிகு ரஜினிகாந்த் சுவாமி அருள்வாக்கு கூறியுள்ளார்.

நடிகர் சரத்குமார் புதுக்கட்சி துவங்கிய பிறகு அவரை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை வாழ்த்தியதோடு, இனி சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது என்றாராம். (நம்ம ரஜினி சும்மானு இருக்க மாட்டார் போல) அப்போது ரஜினியிடம், இமயமலையில் இருக்கும் பாபாவை தரிசிக்க தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக் கொள்ள, (தம்பு செட்டி தெருவில் இருக்கிற குறுக்குசந்து வழியாகத்தான் 'பாபா' படத்தில் ரஜினி இமயமலைக்கு போனார், அங்கே போய் தேடினால் வழி கிடைக்கும்) உடனடி நிவாரணமாக சென்னையில் உள்ள பாபா கோவிலுக்கு சென்று வணங்கும்படி கேட்டுக் கொண்டாராம் ரஜினி.

ரஜினியின் உற்ற நண்பர் ஹரி என்பவர்தான் சென்னையில் இந்த பாபா கோவிலை கட்டியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்கு செல்லும் ரஜினி அங்கேயே அமர்ந்து தியானமும் செய்வாராம். இது சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பதால் என்பதால்தான் ரஜினியின் இந்த வாராவார விசிட். (சென்னையில சித்தரா!! ஓ!! நம்ம மெட்ராஸ்காரரு!! அதாங்க பட்டினத்தார்) தான் ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன் என்று ரஜினி சொல்ல, அடுத்த நாளே மேற்படி கோவிலுக்கு சென்றுவிட்டார் சரத். (விஜயகாந்த்க்கு இன்னும் விஷயம் தெரியலயோ!! அவருக்கென்ன பிரச்சனை. அவருக்குத்தான் இமயமலையில்.நிறைய தீவரவாதிகள் தெரியுமே! ஹிந்தி கூட தேவையில்ல! தமிழிலேயே அவர்களிடம் பேசிடுவார் வேற) சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து தியானமும் செய்தாராம். மிகவும் அமைதியான கோவில் என்று தன் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சரத். விரைவில் ரஜினியோடு இமயமலைக்கு சென்று வரவும் திட்டமிட்டிருக்கிறார். (கூடிய சீக்கிரத்தில் ரசிகர்கள் ரஜினியையும், சரத்தையும் தம்பு செட்டி தெரு பக்கமாக பார்க்கலாம்). சரத்குமார் மேல ரஜினிக்கு ஏன் இந்த கொலைவெறி, இனிமேல சரத் படத்துலயும் "சாயா! மாயா" என்று வசனம் வரப்போகுது. ஜாசிசங்கம் ஆரம்பிப்பாரா? இமயமலைக்கு போவாரா? என்பது தான் அடுத்த படத்தோட கிளைமேக்ஸாக இருக்கும்.

நன்றி: தமிழ்சினிமா

18 comments:

 1. \\(கூடிய சீக்கிரத்தில் ரசிகர்கள் ரஜினியையும், சரத்தையும் தம்பு செட்டி தெரு பக்கமாக பார்க்கலாம்). \\

  :-)))

  ReplyDelete
 2. என்ன கோபி, நீங்க சொன்னது போல ஒழுங்கா பதிவு எழுதுரேன் தானே!!

  ReplyDelete
 3. தம்புசெட்டி தெருவில் உள்ளது காளி கோயில்
  பாபா ஆசிரமம் படப்பை யில் இருக்கு கேள்வி

  ReplyDelete
 4. //இனிமேல சரத் படத்துலயும் "சாயா! மாயா" என்று வசனம் வரப்போகுது.//

  அந்த மாதிரி வராது குட்டி. அந்த சாயாவை அவரு எப்பவோ டிவோர்ஸ் பண்ணிட்டார்லே? (முதல் பொண்டாட்டி பேரு சாய தான்).

  ReplyDelete
 5. அனானி,

  //அந்த மாதிரி வராது குட்டி. அந்த சாயாவை அவரு எப்பவோ டிவோர்ஸ் பண்ணிட்டார்லே? (முதல் பொண்டாட்டி பேரு சாய தான்).//

  தகவலுக்கு நன்றி!!

  ReplyDelete
 6. இது உண்மை செய்தியா இல்லை சும்மா நையாண்டியா ?
  எப்படி இருப்பினும் எழுத்து நடை அருமை
  வீ எம்

  ReplyDelete
 7. உண்மை! உண்மை! உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை!!

  ReplyDelete
 8. ஹா..ஹா...


  supper naiyaadingoooooooo

  ReplyDelete
 9. குட்டி பிசாசு ரீ-எண்ட்ரிக்கு வாழ்த்துக்கள்.
  இனி கலக்கு அப்பனே
  ஆமாம் கோபியா ஒழுங்கா பதிவு போடச் சொன்னது?ஹூம் சாத்தான் வேதம்?நெலம......

  ReplyDelete
 10. Baba Koil is in Parangipettai (Porto Novo) also.

  ReplyDelete
 11. கண்மணி அக்கா,

  வாழ்த்துகளுக்கு நன்றி!!

  ReplyDelete
 12. ஆஹா வந்துட்டீங்களா?வந்ததும் நல்ல நையாண்டி பதிவு:)

  ReplyDelete
 13. இந்த நடிகர்களுக்கெல்லாம் ஒரு தன் பயம். மக்கள் மன்சிலே ஆயுளுக்கும் அமரணும்னு, அசைக்க முடியாத ஆசை...பேராசை...அதுக்குத்தான் இந்த அரசியல் பிரவேசம்,வயசான பிறகு எடுக்கிற கைத்தடி...இதுக்கு ஒரு கூட்டம் பானர் ..கோஷம்...too bad three bad four bad....

  ReplyDelete
 14. goma,

  வருகை தந்தமைக்கு நன்றி!!

  ReplyDelete
 15. \\சரத்குமார் \\ இவன் கடைசியா ஒருத்திய கல்யாணம் செஞ்சானே.......... கொடுமைடா சாமி........ எலி தானாவே போய் பொறியில தலையை விடுமாம்...........

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய