Sunday, August 17, 2008

ரீமேக் எதுக்கு? (அ) ரஜினி vs சிரஞ்சீவி

Page 1HTML clipboard

அண்டு: 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்பதை இனிமேல் தமிழகத்தின் தாரகமந்திரமாக இருக்கவேண்டும்.

சிண்டு: ஏனெண்ணே! அப்படி சொல்லுரிங்க!!

அண்டு: குசேலன், சத்யம் என சரமாரியாக அறுவைகள் வந்து தமிழர்களை ரணகளமாக்கிக் கொண்டிருக்க, அடுத்து சுனாமியாக வரப்போவது சுந்தர்.சி C/O குஷ்பு நடிப்பில் உலகம் சுற்றும் வாலிபன். தமிழகத்தில் இருக்கும் இதர பஞ்சங்களோடு இப்போது கதைப்பஞ்சமும் வந்துவிட்டது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் இந்த கூத்துகள். இப்படியாக போனால் நல்ல படங்கள் என்று ஒன்று விடாமல் நாறடித்துவிடுவார்கள் போலப்பா!

சிண்டு: இதுக்காக தமிழில் ரீமேக் படமே எடுக்கக்கூடாதா?

அண்டு: நான் அப்படி எதுவும் சொல்ல வரல!! ரீமேக் என்று எடுத்துக்கொண்டால், நல்ல படங்களை தற்போதைய காலத்திற்கேற்றவாறு சிறந்த இயக்குனர்கள் உருவாக்கினால் அற்புதமாக வர வாய்ப்புகள்(!) உண்டு. என்னைப் பொருத்தவரை வீணை பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்தநாள்' படத்தை மணிரத்னம் இயக்கலாம் (எனோ! மணிரத்னம் தவிர எனக்கு யாரும் தோன்றவில்லை).

சிண்டு: ரீமேக் செய்யவே முடியாத தமிழ்படங்கள் உண்டா?

அண்டு: எனக்குத் தெரிந்து யாராலும் எடுக்க முடியாத தமிழ்படங்களென்றால், ஒன்று வஞ்சிக்கோட்டை வாலிபன் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன். இன்றைய நாளில் இவைபோன்ற படங்களை தமிழில் எடுப்பது மிகவும் கடினம். அப்படி எடுத்தால் தசாவதாரத்தில் முதல் பத்து நிமிடம் என பில்டப் காட்சிகளாகத்தான் இருக்குமே தவிர வேறொரு கருமமும் இருக்காது.

மேலும் ஒரு செய்தி ஆயிரத்தில் ஒருவன் ஆங்கிலத்தில் 1935-ல் வெளிவந்த Captain Blood என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படத்தில் மணிமாறனாக நடித்தவர் 'The Adventures of Robinhood' படத்தில் நடித்த Errol Flynn.

சிண்டு: இவரைப் பார்த்தால் நம்ம வாத்தியார் மாதிரியே இருக்குதுண்ணே!!

அண்டு: இவரோட படத்தைப் பார்த்துத்தான் வாத்தியார் உருவானார்.

Captain Blood பார்க்க..!! youtube link.

சிண்டு: சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சிடாரு, தெரியுமா உங்களுக்கு!

அண்டு: இது தெரியாமலா? போகப்போகத்தான் தெரியும் ஆந்திராவில் எத்தனை டிகிரி ஜுரம் என்று!!

சிண்டு: ரஜினி Vs சிரஞ்சீவி?

அண்டு: இந்த படத்தைப் பார்த்துக்கோ!!

சிண்டு: குசேலன் பத்தி எதாவது சொல்லுங்களேன்!

அண்டு: குசேலனில் ரஜினி பேசி புகழ்மிக்க வசனங்களால் (நான் அரசியலுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன! நீங்க உங்க வேலையைப் பாருங்களேன்) அவருடைய ரசிகமணிகள் கொதித்துப்போய்விட்டார்களாம். இப்போதைக்கு வசனங்களை படத்திலிருந்து நீக்கினாலும், இதனுடைய பாதிப்பு அடுத்து 'ரோபோ'வாக வரவுள்ள ரஜினிக்குத் தான்.

சிண்டு: அண்ணே! நல்ல ஆங்கிலப்படங்கள் எல்லாம் megaupload, rapidshare-ல் இருக்கு. இதை எப்படி தரவிறக்கம் செய்வது. கொஞ்சம் சொல்லுங்களேன்.

அண்டு: www.megadl.info, www.megafast.info, www.megafanatic.com இந்த தளங்களுக்கு போய் உனக்குத் தேவையான free லிங்க்-ஐ premiumlink-ஆக மாற்றிக்கொள்ளலாம். பிறகு சுலபமாக தரவிறக்கம் செய்யலாம்.

2 comments:

  1. megauploadல் பிரிமியும் உறுபினர் ஆக கிரேடிட் காட்டு உபயோகிக்க வேண்டாமா?

    ReplyDelete
  2. \\இப்படத்தில் மணிமாறனாக நடித்தவர் 'The Adventures of Robinhood' படத்தில் நடித்த Errol Flynn.\\ அவன் மணிமாறனா நடிக்கலை!! அவன் நடிச்சதைத் தான்யா இவன் மணிமாறனா மாத்திகிட்டான்!!

    \\அண்டு: www.megadl.info, www.megafast.info, www.megafanatic.com இந்த தளங்களுக்கு போய் உனக்குத் தேவையான free லிங்க்-ஐ premiumlink-ஆக மாற்றிக்கொள்ளலாம். பிறகு சுலபமாக தரவிறக்கம் செய்யலாம். \\ If you find Time pl elaborate this Psasu!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய