Sunday, May 27, 2007

கம்மங்கூழு with கவுண்டமணி -- குட்டிபிசாசு

என்னோட பேட்டிக்கு “கேப்பகஞ்சி with கவிதா” புகழ் கவிதா அக்காவ தான் முதல்ல கேட்டேன். அவங்க ரொம்ப பிஸினு சொல்லிடாங்க! அதுமட்டும் இல்லாம என்னை பேட்டி எடுக்க சுடுகாட்டுக்கு எல்லாம் வரமுடியாதுனு வேற சொல்லிடாங்க!

இப்படியே விட்டுட்டா, பிறகு எப்படி என்னோட உலகத்தரம் வாய்ந்த உப்புமாக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். நம்ம கண்மணி அக்காவ இந்த ப்ரொகிராம் செய்ய சொன்னேன். அவங்களும் டைம் இல்ல, எக்ஸாமுக்கு படிக்கனும்னு சொல்லிடாங்க!

ஜாக்ஸன் பேட்டி கொடுக்க மறுத்த போது, கட்டபொம்முக்கு இருந்த கோபம் எனக்கும் வந்துவிட்டது (கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம்). உடனே இந்த ப்ரோகிராம் செய்ய நம்ம கவுண்டமணி அண்ணனுக்கு ஒரு போன்கால் செய்தேன்! அவரும் வேற வேலை இல்லாததுனால ஓகேனு சொல்லிட்டார். எங்க ப்ரொகிராம் வச்சிகலாம்னு கேட்டார். ஓட்டல் லீ மெரிடின்ல தான் வைக்கலாம்னு நெனச்சோம், பணம் ரொம்ப அதிகம்! அதனால அதுக்கு பக்கத்தில் இருக்கும் ப்ளாட்பாரத்தில வச்சிடோம்.

இடம்: ஓட்டல் லீ மெரிடின் பக்கத்தில் இருக்கும் ப்ளாட்பாரம்

இம்சைகள்: கவுண்டமணி, குட்டிபிசாசு

(ப்ளாட்பாரத்துல குட்டிபிசாசுவ கவுண்டமணி தேடிட்டு இருக்கார்)

கவுண்டமணி: டேய் குட்டிபிசாசு! குட்டிபிசாசு!

நான் இங்க கோடையிடியா குமுரிக்கிட்டு இருக்கேன், இந்த கூறுக்கெட்ட குட்டிபிசாசு எங்க போய்ட்டான்! இங்க தானே வரசொன்னான்.

(ரோட்டு ஓரமா ஒருத்தன் ஒக்காந்து இருக்கான், அவனை கேட்கிறார்)

டேய் தம்பி! இந்த பக்கமாக குரங்கு மாதிரி ஒருத்தன பார்த்தயா?

(அது வேற யாருமில்ல, நம்ம குட்டிபிசாசு தான்)

டேய் பிசாசு மண்டையா! இங்க என்னடா செய்யற!

குட்டிபிசாசு: ஒன்னும் இல்லனே மைக் ஒர்க் ஆகுதானு ஓரமா ஒக்காந்து செக் பண்ணிட்டு இருந்தேன்

கவுண்டமணி: நான் எவனோ சிட்டுகுருவி லேகியம் விக்குரவனு நெனச்சேன்

குட்டிபிசாசு: சரி அப்ப பேட்டி எடுக்கலாமா அண்ணே!

கவுண்டமணி: நான் மட்டும் வயத்துல இருந்து போட்டி எடுக்கலாம்னா சொன்னேன்!

(இரண்டு பேரும் ப்ளாட்பாரத்துல ஒரு துணி போட்டு, அதுமேல ஒக்காந்து பேட்டிய ஆரம்பிக்கிராங்க! காபி, ஜூஸ் என எதுவும் இல்லாததுனால, சட்டில கொஞ்சம் கம்ம்ங்கூழும் ஊறுகாயோட, கவுண்டமணி அவரோட ஸ்டைல பேட்டி எடுக்கிறார்)

கவுண்டமணி: நீ ஏன் குட்டிபிசாசுனு பேரு வச்சே?

குட்டிபிசாசு: ‘அர்னால்ட்’ அதான் ஹாலிவுட் அக்டர்! அவரோட அம்மா அவரை செல்லம்மா குட்டிபிசாசுனு தான் கூப்பிடுவாங்கலாம்

கவுண்டமணி: அர்னால்ட்...குட்டிபிசாசு...

குட்டிபிசாசு: ஆமாங்கண்ணே!

கவுண்டமணி: (டென்சன் பண்ணரானே) அடங்கொக்கமாக்கா! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லயாடா! சிங்கில் டீக்கு டிங்கி அடிக்கிற மொன்னநாய் என்ன பேச்சு பேசுது பார்! ஒழுங்கா மரியாதையா உண்மைய சொல்லிடு! (குட்டிபிசாசுவை அடிக்க மைக் எடுக்கிறார்)

குட்டிபிசாசு: (தயங்கியபடி) அண்ணே! ஒரு விளம்பரத்துக்கு தான் குட்டிபிசாசுனு வச்சேன்!

கவுண்டமணி: விளம்பரமா? விளக்குமாருக்கு என்னடா விளம்பரம்! ஏன் குட்டிபிசாசுனு வச்சே, குட்டிசுவர்னு வச்சுக்கேன், இன்னும் விளம்பரம் அதிகமா இருக்கும்.

(அடுத்த கேள்வி)

சரி! இன்னைக்கு நியுஸ்பேப்பர்ல என்ன படிச்சே?

குட்டிபிசாசு: வாலிப வயோதிக அன்பர்களே...

கவுண்டமணி: டேய் பேரிக்கா தலையா! நிறுத்துடா! நான் என்ன இங்க “புதிரா?புனிதமா?” நடத்தவந்து இருக்கேன்! நியுஸ்பேப்பர்ல என்ன படிச்சேனு தான் கேட்டேன்!


குட்டிபிசாசு: எலிசாமி சித்தரோட ராஜவைத்தியம் பத்தி படிச்சேன்


கவுண்டமணி: நீ என்ன வந்ததில் இருந்து வெவகார பேசிட்டு இருக்கியே! இதெல்லாம் நல்லது இல்லயே! நான் பொல்லாதவன்..கெட்டவன்.. ஒழுங்கா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!! ஓவரா எதாவது லந்து பண்ண மைக்காலயே அடிப்பேன்!

(அடுத்த கேள்வி)

கவுண்டமணி: சரி அடுத்த கேள்வி! மைபிரண்டையும் மங்கையையும் காளான்னு சொன்னயாமே!

குட்டிபிசாசு: காளான் தான் ரொம்ப காஸ்ட்லியான காய்கறி! அவங்கள புகழத்தான் அப்படி சொன்னேன்! ஆனா அவங்க தப்பா நெனச்சிட்டு ரவுண்டு கட்டி என்னை அடிச்சிட்டாங்க!

கவுண்டமணி: அடியும் வாங்கிட்டு வெட்கம் இல்லாம சொல்லிட்டு வேற திரியற! இதெல்லாம் ஒரு பொழப்பு!

(அடுத்த கேள்வி)

நீ என்னமோ கவிதையெல்லாம் எழுதரயாமே!

குட்டிபிசாசு: ஆமாண்ணே!


கவுண்டமணி: ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை! அதைதான் எவனும் படிக்கிறது இல்லயே, பிறகு ஏன் நீ எழுதிட்டு இருக்கே! தெரிஞ்சத எழுதுங்கடா! தமிழ்மணத்துல இருக்கிறவங்கல இப்படி கொடுமைபடுத்த எத்தனை பேருடா கெளம்பி இருக்கீங்க!

(அடுத்த கேள்வி)

கவுண்டமணி: உனக்கு “காக்கா புடிக்கிறதுல மன்னன்”னு பட்டம் குடுத்து இருக்காங்கலாம்!

குட்டிபிசாசு: Actually..(ரோட்டுல போற ஒரு பொண்ண பார்த்த உடனே நம்ம குட்டிபிசாசு கஷ்டப்பட்டு (வராத) இங்கிலீஷ்ல பேச முயற்சி பண்ணுது!!)

கவுண்டமணி: டேய் தேங்கா தலையா! இவ்வளவு நேரம் தமிழ்ல தானே பேசிட்டு இருந்தே! வேண்டாம் மகனே! நீ எந்தெந்த சமயத்துக்கு எப்பயெல்லாம் பேச்ச மாத்துவேனு எனக்கு தெரியும்! அடங்கு! மரியாதையா தமிழ்ல பேசு!

குட்டிபிசாசு: “காக்கா புடிக்கிறதுல மன்னன்”, அதாவது நான் ‘வானளவுக்கு உயர்ந்தவன்’ அப்படினு சொல்ல வராங்க!

கவுண்டமணி: உண்மைய சொல்லிடு! என்னை கொலைகாரன் ஆக்காதே!

குட்டிபிசாசு: சொல்லுரேனண்ணே! பயமறியா பாவையர் சங்க மாநாட்டுக்கு “காக்கா பிரியாணி” வேணும்னு கண்மணி டீச்சர் கேட்டாங்க! நான்தான் தேடி புடிச்சி வாங்கி வந்தேன்! அதனால தான் அந்த பட்டம் குடுத்தாங்க!

கவுண்டமணி: “காக்கா பிரியாணி” வாங்கிட்டு வர கம்மிநாட்டி, உனக்கெல்லாம் ஒரு பேட்டி! அதுக்கு ஒரு மைக்செட்டு!

(கவுண்டமணி மைக் எடுத்து குட்டிபிசாசு மேலே அடிக்கிறார், குட்டிபிசாசு எஸ்கேபாகி துண்டைகாணோம்துணியைகாணோம்னு ஓட...)

கவுண்டமணி: ஒங்கப்பன் மகனே! நீ எங்க போனாலும் விடமாட்டண்டா! டேய்!!!!!!

(கவுண்டமணியும் கோபமாக அடிக்கத் துறத்துகிறார்)


பி.கு.:

1. நம்ம குட்டிபிசாசுவே இதோட கலாய்த்து விட்டுவிடக்கூடாது! தொடர்ந்து எல்லோரும் வரும் வாரங்களில் குட்டிபிசாசுவை கஞ்சி காய்ச்சப்போவதை இப்போதே அறிவிக்கிறேன்!!

கேப்பசீனு with கண்மணி டீச்சர் -- குட்டிபிசாசு

தர்பூசனி ஜூஸ் with தருமி சார் -- குட்டிபிசாசு

ஹார்லிக்ஸ் with அபி அப்பா -- குட்டிபிசாசு

ஆப்பிள் ஜூஸ் with அய்யனார் -- குட்டிபிசாசு

மால்டோவா with மைபிரண்ட் -- குட்டிபிசாசு

மிக்ஸட் ஜூஸ் with மின்னல் -- குட்டிபிசாசு

ராகிமால்ட் with ராம் -- குட்டிபிசாசு

73 comments:

 1. ஸ்டாட் மீஜிக்:-))

  ReplyDelete
 2. நான் தான் பஸ்ட்

  இப்படிக்கு மை பிரண்ட்

  ReplyDelete
 3. அடப் பாவிங்களா முந்திட்டீங்களா?
  சாரி ஸ்பெல்லிங் மிஷ்டேக் அப்பாவிகளான்னு சொன்னேன்.

  ReplyDelete
 4. அபிஅப்பா,

  ஸ்டாட் மீஜிக்//

  இப்பவாவது படிச்சிட்டு மீஜிக் போடுங்க!!

  ReplyDelete
 5. அக்கா,

  நீங்களுமா!!

  படிக்காமலேயே பின்னூட்டமா?

  ReplyDelete
 6. அடடா என் தங்கமே என் கண்ணின் மணியான மாணவனே பொங்கியெழு
  புறப்படுடா செல்வமே
  மொக்கை போடும் கூட்டத்தை
  வேரறுத்து சாய்க்க
  வீறு கொண்டு எழுடா
  என் குட்டி [தம்பிப்]பிசாசே

  ReplyDelete
 7. ஆஹா வந்துட்டான்
  அபி அப்பாவுக்கு போட்டியா கெளம்பிட்டான்
  எனக்கொரு அவந்திகா
  உமக்கொரு குட்டி பிசாசு
  சூடன்டி....கைசா ஹை?

  ReplyDelete
 8. இஸ் திஸ் கும்மி?கும்மின்னா நான் போஸ்ட் எல்லாம் படிக்க மாட்டேன்.அது கும்மியின் தர்மம் படி தப்பு!!

  ReplyDelete
 9. எனக்கு மட்டும் கேப்பை அவுருக்கு ஹார்லிக்ஸ் மத்தவங்களுக்கு மால்ட்டோவா வா?நோ...............ஒத்து...லேது...முடியாது...நை....நை...

  ReplyDelete
 10. குட்டி பிசாசு ராம் அண்ணாவை interview பண்ணும் பொழுது ரஞ்சனி அண்ணி பத்தி கேட்கனும் ஒகேவா?

  ReplyDelete
 11. பிசாசு!
  மை பிரண்ட் க்கு எக்ஸாம்னு நெனைக்கிறேன்.சோ அவ பார்ட்டை துர்கா கிட்ட குடு.அப்றம் நான் லாஸ்ட்டா வர்ரேன் வரிசையில 2ஜுன் வரை டைட்ட்ட்ட்.ஓகே?

  ReplyDelete
 12. அது கேப்பை இல்லக்கா!!

  கேப்புசீனு காபி!! அந்நியன் பாட்டுல கூட வருமே..அது!

  ReplyDelete
 13. @தர்கா ...ஹி..ஹி..சந்திரமுகி ரஜினி மாதிரி...தர்கா..சாரி..துர்கா..நம்ம பதிவுலயும் ஓட்டு போடும்மா கண்ணு .

  ReplyDelete
 14. அக்கா...
  உத்தரவிடுங்கள் உருதெரியாமல் ஆக்குகிறேன்...!!!

  ReplyDelete
 15. கண்மணி அக்கா,

  ஒரே படிப்ஸ் தான்...! இதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க!! "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"னு...!!நாங்கெல்லாம் அந்த காலத்துல...

  ReplyDelete
 16. நீங்க சொன்னதுபோல..மைபிரண்டுக்கு பதில் துர்கா..

  "தூதுவளை லேகியம் with துர்கா"

  டைடில் ஓகேவா....அவ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 17. ஏன் உன் பதிவு மறுமொழியப்பட்ட பகுதியில் காட்டப் படவில்லை?

  அப்படியே உன் ஐயிடியாவை பின்னூட்டம் மூலம் கேட்டு ஒப்புதல் வாங்கி விடு.தருமி சார் பர்ஸ்ட் .....நான் லாஸ்ட்.

  ReplyDelete
 18. //"தூதுவளை லேகியம் with துர்கா"

  டைடில் ஓகேவா....அவ்வ்வ்வ்வ்வ்வ்...
  ///

  நோ மேன்.திஸ் இஸ் நொட் ஒகே!!
  என்ன இருந்தாலும் மை ஃபிரண்ட் அக்கா மாதிரி வருமா?
  அக்கா நாளைக்கு வந்து விடுவாங்க.no worries :-)

  ReplyDelete
 19. மை ஃபிரண்ட் exam எல்லாம் ஒவர்லா.அவங்க vacation போய் இருக்காங்க.

  ReplyDelete
 20. கண்மணி அக்கா,

  என்ன ப்ரொப்ளம்னு தெரியல மறுமொழி வரல..அட்மின்க்கு மெயில் பண்ணிட்டேன்!!

  நான் தருமி சாருக்கு சொல்லிடுரேன்!!

  ReplyDelete
 21. துர்கா,

  கவலை படாதீங்க!! சும்மா தமாசுக்கு தான் அந்த டைடில்..வேற நல்லதா பிறகு யொசிச்சி வைக்கிரேன்!!
  ஓகேவா?

  ReplyDelete
 22. //ஏன் உன் பதிவு மறுமொழியப்பட்ட பகுதியில் காட்டப் படவில்லை?//

  என்ன செய்யனு தெரியல
  உங்க ஐடியா என்ன?
  நேத்துல இருந்து இந்த ப்ரொப்லெம்!!

  ReplyDelete
 23. //என்ன செய்யனு தெரியல
  உங்க ஐடியா என்ன?
  நேத்துல இருந்து இந்த ப்ரொப்லெம்!! //

  coding ok va?if not mail the admin

  ReplyDelete
 24. //துர்கா,

  கவலை படாதீங்க!! சும்மா தமாசுக்கு தான் அந்த டைடில்..வேற நல்லதா பிறகு யொசிச்சி வைக்கிரேன்!!
  ஓகேவா? //

  அக்காவை(மை ஃபிரண்ட்) முதலில் பாருங்க.அவங்க தங்கச்சி கடைசியில்தான்.

  ReplyDelete
 25. durga,

  coding-la etho problem!! template total-la change seytheen! aana ethuvum tamilmanam karuththupattai pogale..ethuvum change agale

  total-la change panna enna seyyatum!!

  ReplyDelete
 26. துர்கா,

  உனக்கு லாஸ்ட். சரியா? டைம் எடுத்துக்கே!

  ReplyDelete
 27. //total-la change panna enna seyyatum!!//

  this is biotech brain.if u ask me about virus,bacteria i know.coding ellam software brain kita ketkanum pa :-)

  ReplyDelete
 28. துர்கா,

  ஓகே! பயோடெக் மூளைக்கு வேலை இருந்தா பிறகு தாரேன்!! நன்றிபா!!

  ReplyDelete
 29. துர்கா,

  நான் அட்மின்க்கு மெயில் அனுப்பி பார்க்கிரேன்!!

  ReplyDelete
 30. மக்கு குட்டி பைசாசு உன் கருவிப் பட்டை எங்கே?இதுக்கு முன்னாடி பிளாக் கலர்ல ஒரு டெம்ப்லேட் மாத்தின இல்ல?அதுக்கு பிறகு மறுபடி இது.அப்படி டெம்ப்லேட் சேஞ்ச் பன்னும்போது ஒவ்வொருமுறையும் கருவிப்பட்டை [டூல் பார்] சேர்க்கனும்.அது எப்டி தெரியும்ல.இப்ப உன் பதிவுல கருவிப்பட்டை இல்லை பாரு.அது இருந்தாத்தான் பின்னூட்டம் காட்டப் படும்.தமிழ்மன முகப்பில் தகவல் /உதவி பக்கத்தில் டூல் பார் நிறுவுதல் தேடி அதைச் செய்.சரியாகிவிடும்.பார்ட்1/பார்ட்2 ன்னூ ரெண்டு பகுதி இருக்கு உன் சிஸ்டத்தில் நோட் பேடில் அதை தனித்தனியாக ஸேவ் பண்ணிக்கொள்.ஒவ்வொருமுறை டெம்ப்லேட் மாற்றும்போதும் தேவைப்படும்.

  ReplyDelete
 31. சரிங்க டீச்சர்,

  நான் எல்லாம் செக் பண்ணுரேன் டீச்சர்!!

  நன்றி அக்கா!!

  ReplyDelete
 32. கண்மணி அக்கா,

  நீங்க சொன்னதுபோல எல்லாம் மாத்தட்ிடேன்!!

  தருமி சாருக்கும் நீங்க சொன்னத சொல்லிட்டேன்!!

  ReplyDelete
 33. நானெல்லாம் எதுவுமே வாசிக்கலையே .. எனக்கொண்ணும் தெரியாதுப்பா ...

  அதுவும் நிச்சயமா பர்ஸ்ட் இல்லப்பா .. எப்பவுமே கடைசி பெஞ்ச் ஆள மொதல்ல வான்னா எப்படிங்க, அநியாயமில்லையா .. வயசுக்கு ஏத்தமாதிரி மெல்ல வர்ரேன் .. last but one !

  சரியா, குப்பி ?

  ReplyDelete
 34. இதுல அட்லீஸ்ட் இரண்டு பேர் செய்தா போதும்! ஒரு தொடர் போல இருக்கும்! பிறகு வேற டாபிக் போயிடலாம்!!கண்மணி டீச்சர் பிஸியாம்! நான் மின்னல், அய்யனார் கேட்டுபார்க்கிறேன்!!

  ReplyDelete
 35. எப்படீங்க உங்களுக்கு எளுத நேரமும், மூளையும் இருக்கு?

  ReplyDelete
 36. டெல்பின் மேம்,

  மூளை ஒன்னும் இல்ல!! நேரம் கொஞ்சம் இருக்கு!!பேசி அரட்டை அடிக்கிறத விட, இப்படி எழுதி அரட்டை அடிச்சா ஒரு பதிவு நமக்கு கிடைக்கிறது!அந்த வகையில் லாபம்!!

  ReplyDelete
 37. சாரி லேட் நைட் அதனால பதில் சொல்லமுடியல எல்லாம் சரி ஆயிட்டு போல இருக்கு என்ன பண்ணுனிங்க மைல் அனுப்பவும்

  ReplyDelete
 38. நானும் பதிவ படிக்கனுமா..???

  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 39. minnal,
  template maaththinen, pathivar toolbar podale! athanale thaan varale! piragu kanmani akka sonnange maaththiten...

  ReplyDelete
 40. kandippa padinga! ethu ezuthinaalum yosichu time spend pannuren! atleast athukaga padinge!

  ReplyDelete
 41. குட்டிபிசாசு said...
  kandippa padinga! ethu ezuthinaalum yosichu time spend pannuren! atleast athukaga padinge!
  ///

  ஒகே ஒகே நான் படிக்கிறேன் ஆனா கும்மி கோஷ்டி வருதானு கதவுகிட்ட நின்னு பாரு வந்தா சொல்லு நான் எஸ்கேப் ஆயிடுறேன்

  :)

  ReplyDelete
 42. படிச்சிட்டேன்
  நல்லா இருக்கு

  ///
  கவுண்டமணி: ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை! அதைதான் எவனும் படிக்கிறது இல்லயே, பிறகு ஏன் நீ எழுதிட்டு இருக்கே! தெரிஞ்சத எழுதுங்கடா! தமிழ்மணத்துல இருக்கிறவங்கல இப்படி கொடுமைபடுத்த எத்தனை பேருடா கெளம்பி இருக்கீங்க
  //

  தேவையில்லாத வேலைதான் இனி கவிதை எழுதமாட்டேன்..ஹி ஹி

  ReplyDelete
 43. மின்னல்,

  ////
  மின்னுது மின்னல் said...

  தேவையில்லாத வேலைதான் இனி கவிதை எழுதமாட்டேன்..ஹி ஹி ////

  இந்த அட்வைஸ் எனக்குங்க உங்களுக்கு இல்லை! நீங்க எழுதுங்க!

  ReplyDelete
 44. பிசாசு அடங்க மாட்டியா நீ @@

  என்னம்மா சிந்திக்கிர ராசா ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழுகாச்சியா வருது

  ReplyDelete
 45. கிட்டி பிசாசு ஓடியா ஓடியா அங்கன இன்னைலேர்ந்து ஒரு எடத்துல இலவசமா சோறு போட்றாங்களாம் .சாப்பிட்டுட்டு கும்மியடிக்கனும்.அடையாளம் நட்சத்திரம் போட்டிருக்கும்.அக்க்ககாங்ங்

  ReplyDelete
 46. என்னப்பா நடக்குது இங்கே??

  ஆமாம்.. இது போலி கவுண்டரா? இல்ல ஒரிஜினலா??

  ReplyDelete
 47. 50 அடிச்சா ஜூஸ் உண்டா??

  ReplyDelete
 48. ஜூஸ் என்ன பகார்டி வித் லெமன் [தருமி சார் கரீட்டா]உண்டாம்பா.அதான் கூட்டம் அலை மோதுது.

  ReplyDelete
 49. //@தர்கா ...ஹி..ஹி..சந்திரமுகி ரஜினி மாதிரி...தர்கா..சாரி..துர்கா..நம்ம பதிவுலயும் ஓட்டு போடும்மா கண்ணு .

  //

  solli anupunga.i will come :-)

  ReplyDelete
 50. உங்க டீச்சர் கும்மிக்காகவே ஒரு புது பதிவு போட்டிருக்காக பாரு தாயீ

  ReplyDelete
 51. ayyanaar, ji, kanmani akkaa, durkaa

  ellarukkum nandari!!

  aani pidungkanum!! naan piragu varen!

  ReplyDelete
 52. கண்மணி அக்கா,
  அதிகமா அலுவல் இருக்கு!!ஆணி பிடுங்கிட்டு வரேன்!

  ReplyDelete
 53. அய்யனார்,

  ஊக்கத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 54. ஏலேய் குட்டிபிசாசு,

  டெவில் ஷோ'வே காப்பியடிச்ச மாதிரி இருக்கே.... :)

  ReplyDelete
 55. இராம்,

  இல்லாத குறைக்கு எதோ ஒண்ணு!! ஆனா மேட்டர் நம்மோடது தானே!

  ReplyDelete
 56. copy எப்படி சொல்லுரீங்க!! நான் முதல்ல கவிதா அக்காவே சும்மா தமாசுக்கு கேட்டேன்!!(லைவ் ச்மைல் வித்யாவோட-கேப்ப கஞ்சி வித் வித்யா: பின்னூட்டம் பார்க்கவும்) அப்ப தான் எனக்கு எழுத தோனிச்சு!இப்படி எழுதலாம்னு !! சொதப்பலனு நெனக்கிறேன்!!perfection ஓகேவா!!

  ReplyDelete
 57. அடடா அருண் சீரியஸ் ஆவதீங்க... நீங்க புதுசு இல்லையா? அதுதான் ஒங்களுக்கு தெரியலைன்னு நினைக்கிறேன்..... ஹி ஹி,


  இதை படிச்சி பாருங்க....

  ReplyDelete
 58. //டெவில் ஷோ'வே காப்பியடிச்ச மாதிரி இருக்கே.... :)//

  சிரிப்பானை தான் போட்டு இருக்கோமில்லே??? எதுக்கு மக்கா சீரியஸா மூனு பின்னூட்டம்??? :)

  ReplyDelete
 59. சீரியஸ் இல்லீங்க இராம்..நீங்க தவறாக எடுத்துகாதீங்க!! நீங்க காபி சொன்னீங்க!! அதனால தான் கேட்டேன்!!ஊக்கத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 60. சும்மா விளக்கம் தான் கொடுத்தேன்! சீரியஸ் இல்ல!! தவறாக எடுத்துகாதீங்க!!

  ReplyDelete
 61. அப்பாவி இந்தியன் உண்மையாக அட்டகாசமாக எழுதி இருக்கார்! லின்க் அனுப்பினதுக்கு நன்றி!!இது முதல்ல தெரிந்து இருந்தால் இன்னும் நல்லா எழுதி இருப்பேன்!!

  ReplyDelete
 62. //அப்பாவி இந்தியன் உண்மையாக அட்டகாசமாக எழுதி இருக்கார்! லின்க் அனுப்பினதுக்கு நன்றி!!இது முதல்ல தெரிந்து இருந்தால் இன்னும் நல்லா எழுதி இருப்பேன்!!///

  என்னாது?? அந்த டெவில் ஷோ எழுதினது நான் மேன்...


  BTW... உங்களோட இந்த போஸ்ட்'ம் நல்லா இருக்கு...ஆனா இன்னும் Different style'லா யோசிச்சு எழுதுங்க.... இல்லன்னா எல்லாரும் நான் சொன்னமாதிரியே காபின்னு சொல்லிருவாங்க..... ஹி ஹி

  ReplyDelete
 63. சாரி இராம்...வாழ்த்துக்கள்!! அறிவுரைக்கு நன்றி!!நல்லா அடிச்சி ஆடி இருக்கீங்க!!

  இத போடுரதுக்கு முன்ன நான் இப்படி முதல்லயே எதாவது இருக்கானு யாரையாவது அட்வைஸ் கேட்டு இருக்கனும்!!னெக்ஸ்ட் டைம் கேட்கிறேன்!!மீண்டும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 64. ஐயோ டா!!! Post was Ok!!! But as you said மொக்கை தாங்கல!!! BTW கும்மினா என்ன???

  ReplyDelete
 65. BTW - by the way

  ஊக்கத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 66. //என்னோட பேட்டிக்கு “கேப்பகஞ்சி with கவிதா” புகழ் கவிதா அக்காவ தான் முதல்ல கேட்டேன். அவங்க ரொம்ப பிஸினு சொல்லிடாங்க! அதுமட்டும் இல்லாம என்னை பேட்டி எடுக்க சுடுகாட்டுக்கு எல்லாம் வரமுடியாதுனு வேற சொல்லிடாங்க!
  //

  நான் இதை கண்டிக்கிறேன்... நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி தனியாக நிறைய "with" களை வேறு tag செய்துள்ள குட்டி பிசாசே... இது நல்லாயில்லை.. !! :))))))))

  ReplyDelete
 67. //நான் இதை கண்டிக்கிறேன்... நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி தனியாக நிறைய "with" களை வேறு tag செய்துள்ள குட்டி பிசாசே... இது நல்லாயில்லை.. !! :))))))))//

  குட்டி பிசாசே..கடைசியில..ஸ்மைலி போட்டுட்டுத்தானே போயிருக்கேன்..!!அப்புறம் என்ன...?!!

  வேணும்னா.. திருப்பியும் நல்லா போடறேன்..

  :))))))))))))))))))))))) போதுமா இந்த சிரிப்பு... :))))))))

  ReplyDelete
 68. \\கவுண்டமணி: நான் எவனோ சிட்டுகுருவி லேகியம் விக்குரவனு நெனச்சேன்\\ :))

  பொதுவா அடுத்தவங்கதான் நம்மளை கலைப்பாங்க, இங்க கொஞ்சம் வித்தியாசமா இருக்கு!!

  ReplyDelete
 69. பொதுவாச் சொனேன், உங்க கழுதை......... சாரி கவிதைன்னு குறிப்பிட்டு சொல்லலை!! [ஆர்வம் நஹி........!!]

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய