Sunday, May 20, 2007

ஆசிய குழந்தையர் விளையாட்டு

பிலிபைன்ஸ்

இந்தோனேசியா
இந்தோனேசியா
நேபாளம்
தமிழ்நாடு

நீங்க யாராவது இதுபோல சைக்கிள் டையர் வைத்து விளையாடினது உண்டா? என்ன விளையாட்டா?மேலே படத்த பாருங்க. ஆசிய குழந்தையர் விளையாட்டு! முன்னேறாத, முன்னேறும் மூன்றாம் தர நாடுகளில், இது போன்ற விளையாட்டுகளை சிறுவர்களிடையே அதிகம் பார்க்கலாம். நீங்க இந்த விளையாட்டை விளையாடி இருக்கிங்களா? நான் விளையாடி இருக்கேன். வீட்டிற்கு வரும்போது மட்டும், அம்மா திட்டுவாங்கனு ஒளித்து வைத்துவிடுவேன். ஒருநாள் அம்மா பார்த்துவிட்டு வீட்டுக்கூரை மேலே தூக்கியெறிந்து விட்டார். எனக்கும் நல்ல அடி கிடைத்தது. அத்தோட என்னோட இந்த வீரவிளையாட்டு முடிந்துவிட்டது. இந்த விளையாட்டுல போட்டி எல்லாம் நடக்கும். ஆனால் நான் ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. டையரை தோளில் மாட்டி கொண்டு போட்டி நடக்கும் பக்கத்துத் தெருவிற்கு வீறுநடை போட்ட ஞாபகம் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. வெற்றி என்பது முக்கியம் அல்ல. இதுபோன்ற போட்டிகளில் பங்பெறுவதே ஒரு சிறப்பு அம்சம். பொங்கல், போகி பண்டிகை வந்தது என்றால், நிறைய கஷ்டம். யாராவது என்னோட டையர கொண்டுபோய் கொளுத்திடுவாங்க. பிறகு ஒரு சோகமயம்தான், இன்னொரு டையர் கிடைக்கும்வரை.

13 comments:

  1. நடுத்தர வர்கமும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கிராம மற்றும் நகரபுறங்களில் சிறுவர்கள் விளையாடுவது. நானும் விளையாடி இருக்கிறேன்.

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. சாரி பிசாசு நாங்கெல்லாம் பல்லாங்குழி,கில்லித்தட்டுதான்.

    ReplyDelete
  4. கண்மணி அக்கா,

    சரி, பல்லாங்குழி,கில்லி பத்தி ஒரு பதிவே பொடுங்க!

    நன்றி.

    ReplyDelete
  5. திருமதி.டெல்பின்,

    நன்றி. நீங்க இந்த பெயர் மாற்றலாம்னு சொல்லுரிங்க. மங்கை, நல்ல இருக்குனு சொல்லுராங்க!

    ஊக்கத்திற்கு நன்றி!!!

    ReplyDelete
  6. படங்கள் அழகு.

    குட்டி பிசாசை பார்த்து தமிழ் குழந்தை பயந்த மாதிரி தெரிகிறது. :-)

    பகிர்ந்தமைக்கு நன்றி. அனைத்துலகிலும் ஏழை குழந்தைகளுக்கு இதே விளையாட்டுதானுங்க.

    ReplyDelete
  7. திரு.மாசிலா,

    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  8. இதெல்லாம் விளையாடமலா...

    கொஞ்சம் காசு சேர்ந்ததும்(திருடனதும்:))
    சைக்கிள் ரிம் வாங்கி விளையாடியதும்

    (டயர வச்சி விளையாடுபவன் எல்லாம் எங்கள பார்த்து அவனுவோ டயர கிழே போட்டு எங்களுக்கு வணக்கும் சொன்னதும்)

    ம்ம்ம்


    அது ஒரு ஆட்டோகிராப்

    ReplyDelete
  9. நீங்க கும்மி க்கு ஆதரவு இங்கேயும் தரவேண்டும்


    :)

    ReplyDelete
  10. ஆதரவு நிச்சயம் உண்டு...

    கிளப்புங்கள்....

    ReplyDelete
  11. மைபிரண்ட் எங்கே!!!!!!!!!!!

    ReplyDelete
  12. டயர் உருட்ட பயன்படுத்துற குச்சியை, ஒரு சைடுல வைச்சு லேசா சாய்ச்சா, டயரின் வேகத்துக்கு எந்த பங்கமும் இல்லாம திருப்பங்கள்ல திரும்பலாம். மேலும் தொழில்நுட்ப விபரங்கள் வேண்டுவோர் ரூ.5 தபால்தலை ஓட்டிய சுயமுகவரி எழுதிய கவருடன் எழுதவும்.

    ReplyDelete
  13. நானும் விளையாடி இருக்கன். இன்னுமொரு விளையாட்டும் இருக்கு. பனம் நுங்க வெட்டிக் குடிச்ச பிறகு, இரண்டு கோம்பைகளை சேர்த்து தடியால் குத்தணும் டம்பிள்ஸ் மாதிரி.அப்புறம் ஒரு கவட்டைத் தடியால நடுவில கொழுவி தள்ளிக் கொண்டு ஓடலாம்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய